சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம். Khan11

உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Go down

Sticky உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by Nisha on Sun 1 Mar 2015 - 1:19

உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம். 10646845_953312854679065_8698148474413878382_n-1
கோடம்பாக்கம் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் அமுதா (35). இவர் விக்னேஸ்வரன் (14), விஜய நாராயணன் (10) என்ற இரண்டு குழந்தைகளின் தாய்.

மண்ணினால் செய்யப்படும் விதவிதமான வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். திடீரென்று அமுதா இந்த நிலைக்கு ஆளானது ஒரு தவறான ஆபரேசனால்.
நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க விவரித்தார் அமுதாவின் கணவர் கவுரி சங்கர்.

நான் கொல்கத்தா, உ.பி., ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று மண் சிற்பங்களை வாங்கி வருவேன். இந்த சிற்பங்களுக்கு நல்ல மவுசு இருக்கிறது. கடை வியாபாரத்தை அமுதா கவனித்து கொண்டார்.
விலை உயர்ந்த மண் சிற்ப அலங்கார பொருட்களை வாங்குவதற்காக எங்கள் கடைக்கு ஏராளமான திரை நட்சத்திரங்களும் வருவார்கள். அப்போது பிரபல நடிகை ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘ஒபிசிடி’ (வயது பருமன்) ஆபரேசன் செய்து கொண்டால் உடல் ஸ்லிம் ஆகி அழகு கூடும் என்று கேள்விப்பட்டிருக்கிறார்.

அன்று முதல் ஒபிசிடி ஆபரேசன் செய்து கொள்ள அமுதாவுக்கும் ஆசை வந்தது. அந்த ஆபரேசன் செய்யும் அளவுக்கு என் மனைவி உடல் பருமன் இல்லை. எனவே நான் வேண்டாம் என்று தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை.

ஜி.என்.செட்டி ரோட்டில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களும் ஒபிசிடி ஆபரேசன் சாதாரணமானதுதான். இதை செய்து கொண்டால் உடல் மெலிந்து ஐஸ்வர்யாராய் மாதிரி ஆகிவிடலாம். வாழ் நாள் முழுக்க சர்க்கரை வியாதியும் வராது என்று ஆசை காட்டி இருக்கிறார்கள்.

டாக்டர்களின் ஆலோசனையில் மிகுந்த நம்பிக்கை கொண்ட அமுதா தனியாகவே சென்று அட்மிட் ஆகிவிட்டார். பிறகு என்னை கட்டாயப்படுத்தி ஆபரேசனுக்கு சம்மதம் கேட்டார்.

பின்விளைவுகள் ஏதாவது வந்துவிடும். வேண்டாம் என்று நான் பலமுறை எடுத்து கூறியும் அவள் கேட்க வழியில்லை. வேறு வழியில்லாமல் ஆபரேசனுக்கு சம்மதித்தேன்.

ரூ.3 லட்சம் செலவு செய்து ஆபரேசன் செய்தோம். வீடு திரும்பிய பத்து பதினைந்து நாளில் மீண்டும் வயிறு வலி ஏற்பட்டதால் அதே ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம்.

ஆபரேசன் செய்த இடத்தில் ஓட்டைகள் சரியாகவில்லை. அதன் வழியே சீழ் கொட்டுகிறது. அதை அகற்றினால் சரியாகிவிடும் என்று 2–வது முறையாக ஆபரேசன் செய்து சீழை எடுத்தனர்.

இனி பிரச்சினை இருக்காது என்ற நம்பிக்கையில் வீடு திரும்பினோம். அதன் பிறகு மீண்டும் வயிறு வலி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டது. மீண்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். வயிற்றில் வேறு கோளாறு இருக்கிறது. ‘ஓபன் சர்ஜரி’ செய்துதான் ஆக வேண்டும் என்றனர். அதையும் செய்தனர்.
அதன் பிறகுதான் நிலைமை மிகவும் மோசம் ஆனது. மூச்சுவிட முடியவில்லை. உடல் வீங்கியது. மீண்டும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்றபோது எங்களால் முடியாது. வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு செல்லுங்கள் என்று கையை விரித்துவிட்டனர்.

உடனே அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு டாக்டர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வயிற்றுக்குள் ‘ஸ்பாஞ்ச் பேட்’ ஒன்றை வைத்து தைத்து விட்டிருக்கிறார்கள்.
உடனே ஆபரேசன் செய்தாக வேண்டும் என்று டாக்டர்கள் ஆபரேசன் செய்து அதை அகற்றினார்கள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததால் உயிரை காப்பாற்றினார்கள்.

ரூ.20 லட்சத்துக்கு மேல் செலவு செய்து உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறோம். இப்போதைக்கு எழுந்து நடமாட முடியாது. இன்னும் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை வாய் வழியே உணவு சாப்பிட முடியாது. வயிற்றில் துவாரம் போட்டு டியூப் போட்டு இருக்கிறார்கள். அதன் வழியே திரவ உணவை செலுத்தி வருகிறோம்.

நான் தவறான முடிவெடுத்து விட்டேன் என்று இப்போது என் மனைவி கண்ணீர் வடிக்கிறாள். மீண்டும் அவள் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் என்ற அவரின் வேதனை குரலோடு ஆவேசமும் தெரிந்தது.

ஆஸ்பத்திரி செய்த தவறுக்காக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அகில இந்திய மருத்துவ கவுன்சில், தமிழக மருத்துவ கவுன்சில் ஆகியவற்றுக்கும் புகார் மனுக்களை அனுப்பி உள்ளார்.

எனக்கு என் மனைவி உயிர் காப்பாற்றப்பட வேண்டும். வேறு எந்த பெண்ணுக்கும் இது போன்ற நிலைமை ஏற்பட கூடாது என்றார்.

கடவுளுக்கு அடுத்ததாக மக்கள் டாக்டர்களை நம்புகிறார்கள். பணத்தின் மீது மட்டும் குறியாக இருக்கும் ஒரு சில டாக்டர்கள் மக்களின் உயிர் மீது இவ்வளவு அசிரத்தையாக இருப்பது ஜீரணிக்க முடியாதது.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by நண்பன் on Sun 1 Mar 2015 - 12:31

மன வேதனையாக உள்ளது படிக்கும் போது 
இப்போது வைத்தியர்களையும் நம்ப முடிய வில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by சே.குமார் on Sun 1 Mar 2015 - 17:15

வருத்தமான விஷயம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by சே.குமார் on Sun 1 Mar 2015 - 17:29

வணக்கம் அக்கா...
எனது வலைப்பூவில் வந்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் முகநூல் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்தமைக்கும் ரொம்ப நன்றி அக்கா...

அலைனில் இருந்து அபுதாபிக்கு மாற்றலாகி வந்ததால் இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி... அதான் சேனைப் பக்கம் வரவில்லை....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by *சம்ஸ் on Sun 1 Mar 2015 - 18:04

சே.குமார் wrote:வணக்கம் அக்கா...
எனது வலைப்பூவில் வந்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் முகநூல் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்தமைக்கும் ரொம்ப நன்றி அக்கா...

அலைனில் இருந்து அபுதாபிக்கு மாற்றலாகி வந்ததால் இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி... அதான் சேனைப் பக்கம் வரவில்லை....

உங்கள் முகநூல் பக்கதில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் ஐயா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by Nisha on Sun 1 Mar 2015 - 19:27

சே.குமார் wrote:வணக்கம் அக்கா...
எனது வலைப்பூவில் வந்து கருத்துப் பகிர்ந்தமைக்கும் முகநூல் பக்கத்தில் கருத்துப் பகிர்ந்தமைக்கும் ரொம்ப நன்றி அக்கா...

அலைனில் இருந்து அபுதாபிக்கு மாற்றலாகி வந்ததால் இரண்டு நாட்களாக கொஞ்சம் பிஸி... அதான் சேனைப் பக்கம் வரவில்லை....

அட பரவாயில்லை குமார். 

கண்ணதாசன், சித்தப்பாவிடம் பேசுவதும், கண்ணனிக்க்ஜு கண்ணதாசம் சொல்லும் விளக்கமும் மனதை தொட்டு சென்றதுப்பா. அதுதான்  இத்தனை கஷ்டப்பட்டு சிந்தித்து எழுதுபவரை ஊக்கம் செய்யணும் என அங்கும் இங்கும்  பதிவிட்டேன். 

  ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும்  உறவுகளின் முன் நல்லவனாய் இருந்து நல்லது செய்தும் நஷ்டப்பட்டும் மனம் உடைந்தும்  ஒதுங்கி இருக்கும் சூழலில்  வீட்டுக்கொரு கண்ணதாசன்  போன்றோர் இருக்க மாட்டார்களா என மனசுக்கும் தவிப்பு வரும்படியாய் சில சூழல்கள்.


இயன்ற பொழுதில் வாருங்கள் குமார். 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by நண்பன் on Mon 2 Mar 2015 - 9:12

இலங்கையில் நான் கண்டது ஒரு சில மருத்துவர்கள்தான் திருடர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள் ஒரு சின்ன பிரச்சினையைக் கொண்டு சென்றாலும் பல்லாயிரம் ரூபாய் பில் கொடுக்கிறார்கள் 

ஒரு வைத்தியரை நான் ஒதுக்கி விட்டு வந்தேன் 
வெளி நாட்டிலிருந்து வைத்தியத்திற்காக நாடு செல்லும் உறவுகளிடம் பணத்தை அப்படியே கறக்கிறார்கள் இரக்கமில்லாமல் 

சில வைத்தியர்களைப் பற்றி வரும் நகைச்சுவைகள் உண்மை என்பது இப்போதுதான் புரிகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by *சம்ஸ் on Mon 2 Mar 2015 - 9:15

நண்பன் wrote:இலங்கையில் நான் கண்டது ஒரு சில மருத்துவர்கள்தான் திருடர்கள் போன்று நடந்து கொள்கிறார்கள் ஒரு சின்ன பிரச்சினையைக் கொண்டு சென்றாலும் பல்லாயிரம் ரூபாய் பில் கொடுக்கிறார்கள் 

ஒரு வைத்தியரை நான் ஒதுக்கி விட்டு வந்தேன் 
வெளி நாட்டிலிருந்து வைத்தியத்திற்காக நாடு செல்லும் உறவுகளிடம் பணத்தை அப்படியே கறக்கிறார்கள் இரக்கமில்லாமல் 

சில வைத்தியர்களைப் பற்றி வரும் நகைச்சுவைகள் உண்மை என்பது இப்போதுதான் புரிகிறது

அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
ஆஹா... பொன்னான கைபட்டு புண்ணான கண்ணங்களே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by பானுஷபானா on Tue 3 Mar 2015 - 15:17

உடம்பை குறைக்கும் அளவுக்கு இந்த பெண் குன்டாயில்லையே...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum