Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
கோடை வெயிலால் அதிகரிக்கும் அம்மைநோய்
கோடை வெயிலால் அதிகரிக்கும் அம்மைநோய்
கோடை வெயிலால் அதிகரிக்கும் அம்மைநோய் குழந்தைகளை தாக்கும் அபாயம்

கோடை வெயிலில் பொதுமக்களை தாக்கும் அம்மை நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள, திரவ உணவுகளை அதிகளவில் உட்கொள்ள வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கோடை காலம் தொடங்கி பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து 90டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உள்ளது. விரைவில் 100ஐ தாண்டும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாட முடியாமல் தவிக்கின்றனர்.
வெயிலின் தாக்கத்தால், கோடை காலங்களில் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு பொதுமக்கள் ஆளாக வாய்ப்புள்ளது. குறிப்பாக அம்மை நோய்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றை முன்கூட்டியே தவிர்க்க, திரவ வகை உணவு பொருட்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். இதுகுறித்து தோல் மருத்துவரும், மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியருமான டாக்டர் கருணாகரன் கூறியதாவது:
கோடை காலத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால், மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு, வெயிலில் அலைபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இந்த காலத்தில் காற்றின் மூலம் எளிதாக நோய்கள் பரவும். பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது தான் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் ஆகியவை அதிகமாக பெருகும். மேற்குறிப்பிட்டுள்ள இந்த மூன்று காரணங்களால் தான், பல நோய் தொற்றுகள் பொதுமக்களை தாக்குகின்றன.
இவற்றில் சிக்கன் பாக்ஸ் என கூறப்படும் கொத்தமல்லி அம்மை, தட்டம்மை மற்றும் உடலில் தோன்றும் கொப்பளங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மாத்திரை (நோய் எதிர்ப்பு திறன் அதிகமுள்ளவர்கள் உட்கொள்ளும் மாத்திரை) உட்கொள்பவர்களை இந்த கொத்தமல்லி அம்மை எளிதில் தாக்கும். குழந்தைகளை அம்மை தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற, வெயில் நேரங்களில் வெளியில் சென்று விளையாட அனுமதிக்க கூடாது. குறிப்பாக கிரிக்கெட் விளையாட அனுமதித்தால், அவர்கள் அதிக நேரம் வெயிலில் உலவ வாய்ப்புள்ளதால், அவற்றை தவிர்க்க வேண்டும். ஜீன்ஸ் போன்ற மொத்தமான ஆடைகளையும், மிக இறுக்கமான ஆடைகளையும் அணிவதை அறவே தவிர்க்க வேண்டும்.
வெயில் காலங்களில் உடலின் உள் வெப்பநிலை அதிகமாகி வியர்வை சுரபி அதிகமாக வேலை செய்யும். வெயில் நேரத்தில் சூடான உணவை எடுத்துக்கொள்ளுதல், குறைந்த அளவு தண்ணீர் பருகுதல், காற்றோட்டம் இல்லாத இடங்களில் இருப்பது போன்றவை உள் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் வியர்வை அதிகமாக சுரந்து, வியர்வை வெளியேறும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உண்டாகிறது. உடல் வெப்பநிலையை தணிக்க, திரவ உணவு வகைகளை அதிகமாக எடுத்துக்கொண்டு, காற்றோட்டம் மிகுந்த குளிர்ச்சியான இடங்களில் இருப்பது நல்லது.
இதற்காக ஏசியில் தான் இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க தினமும் காலை, மாலை வேளைகளில் ஈரத் துணிகளை கொண்டு வீட்டை சுத்தம் செய்யலாம். வீட்டின் கொடிகளில் குளிர்ச்சியான நீரில் நனைய வைத்த துணிகளை காய வைக்கலாம். ஜன்னல்களுக்கு திரைகள் கட்டுவதுடன், வெயில் படும்படி உள்ள ஜன்னல்களை மூடி வைத்திருக்கலாம். வெயிலில் சுற்றும் போது தலைக்கு தொப்பி அணிவது, குடை பிடித்து செல்வது, முகத்தை கைக்குட்டையால் மறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கோடை காலம் முடியும் வரை இளநீர், மோர், நுங்கு, பழச்சாறு, பழ வகைகள், கம்மங்கூழ், ஆகிய இயற்கை திரவ உணவு பொருட்களை அதிகளவில் உட்கொள்ள வேண்டும்.
உப்பு, புளி, காரம், எண்ணை ஆகியவற்றை அதிகமாக கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை அறவே தவிர்க்க வேண்டும். வேரிசெல்லா என்ற வைரஸ் காரணமாக சிக்கன் பாக்ஸ் எனப்படும் கொத்தமல்லி அம்மை உண்டாகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி பின்னர் கொப்பளங்கள் உண்டாகுதல் இதன் அறிகுறிகளாகும். இதுபோன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி, அவர்கள் பரிந்துரை செய்யும் சிகிச்சை முறைகளை பின்பற்ற வேண்டும்.
இதற்கு உரிய ஆரம்பகட்ட சிகிச்சை பெறத்தவறினால், தோல் மட்டுமல்லாது கல்லீரல், மூளை போன்ற பிற உறுப்புகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். அம்மை நோய்களுக்கு கிராமப்புற வைத்தியங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வெயிலில் சுற்றுவதால் தொடை, இடுக்கு போன்ற பகுதிகளில் வியர்வை அதிகமாக சுரந்து, அங்கு வட்ட பூஞ்சையின் தாக்குதல் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். கோடையில் வெயில் தாக்குதலால், பலரது முகம் கருப்பாக மாற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கையாக புற ஊதா கதிர்கள் தோலின் உள்பகுதியில் ஊடுருவதை தடுக்கும் மருந்துகளை உபயோகப்படுத்துவது நல்லது. இவ்வாறு மருத்துவர் கருணாகரன் தெரிவித்தார்.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3373&Cat=500

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

» கோடை வெயிலால் பொலிவிழந்த சருமத்திற்கான சிறந்த ஃபேஸ் பேக்குகள்!!!
» கோடை வந்துருச்சு.....உஷாரு
» அழகு குறிப்புகள்:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?
» வெயிலால் சருமத்தின் நிறம் மாறுதா? கவலைய விடுங்க...
» கோடை வெயில்..

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|