Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆரோக்கியம் அ(ளி)ழிக்கும் அழகிய கனிகள்!
Page 1 of 1
ஆரோக்கியம் அ(ளி)ழிக்கும் அழகிய கனிகள்!
நமது வாழ்வியல் இன்று மாறிவிட்டது. நமது பண்டைய உணவு முறையில் அறுசுவைகளும் இருந்திருக்கின்றன. இன்று நாம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் பெரும்பாலான காய்கள் மற்றும் விரும்பி உண்ணும் கனிகளே, நம் ஆரோக்கியத்துக்கு எதிரியாக - ஏன் எமனாகவே இருக்கின்றன. சரி... நாம் இன்றைக்கு உட்கொள்ளும் காய்கள் மற்றும் பழங்கள் எந்த அளவு பாதகம் விளைவிப்பதாக உள்ளன?
“திராட்சைக் கொத்துகள் ரசாயன உரங்களில் முக்கி எடுக்கப்படுவதால்தான் திராட்சை மீது வெள்ளைப் படிமம் இருக்கிறது. இது உடல்நலத்துக்கு கேடானது. திராட்சை மட்டுமல்ல... இன்றைய சூழலில் நாம் சாப்பிடுகிற அத்தனை உணவுப் பொருட்களுமே விஷம்தான்’’. - ‘நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவ’த்தின் ஒருங்கிணைப்பாளர் ம.குமார் சொல்வதைக் கேட்டால் இதயத்துடிப்பே நின்றுவிடும் போலிருக்கிறது. ‘மக்களின் வாழ்க்கையில் இப்படி எல்லாமா விளையாடுகிறார்கள்’ என்கிற பேரதிர்ச்சியும் ஏற்படுகிறது.
வாழைகண்ணைப் பறிக்கும் அளவு மஞ்சள் நிறத்தில் காட்சி தரும் வாழைப்பழங்களை விரும்பிச் சாப்பிடுகிறோம். வாழை விரைவில் பழுக்க வேண்டும் என்பதற்காகவும், மஞ்சள் நிறம் மற்றும் பளபளப்புக்காக மேற்கொள்ளப்படும் சித்து வேலைகளை அறிவீர்களா? எத்திலின் வாயுதான் வாழையை இயல்பாகப் பழுக்க வைக்கிறது. அடைக்கப்பட்ட ஒரு அறைக்குள் வாழைப் பழங்களை வைத்து, அதனுள் எத்திலினை செயற்கையாகத் திணிக்கிறார்கள். எத்திலின் வாயு அங்குள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து வாழையைப் பழுக்க வைப்பதோடு, நல்ல மஞ்சள் நிறத்தோடு பளபளப்பாக்கித் தருகிறது.
இதற்கு முன் வேறொரு யுக்தி கையாளப்பட்டது. வாழைத்தார்கள் நிரம்பிய அறையினுள் ஊதுபத்தியைப் பற்ற வைத்து விட்டு காற்று உட்புகாதபடி அடைத்து விடுவர். அதனால் உள்ளிருக்கும் ஆக்சிஜன் வாயு, கார்பன் டை ஆக்ஸைடாக மாறிவிடும். கார்பன் டை ஆக்ஸைடுக்கு ஒரு பழத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் தன்மை இருப்பதால், வாழை பழுத்துவிடும். பழ விற்பனை வணிகமயமாக்கப்பட்ட இக்காலச்சூழலில், ‘சீக்கிரம் பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும்’ என்கிற எண்ணத்தில் இது போன்ற நாசக்கேடுகளை செய்கிறார்கள்.
மாமாம்பழம் வெளியே பார்ப்பதற்கு நல்ல மஞ்சள் நிறத்தில் பளபளப்புடன் இருக்கும். வெட்டிப் பார்த்தால் உள்ளே வெள்ளையாகவும் புளிப்பாகவும் இருக்கும். கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதன் விளைவுதான் இது. இயற்கையாக மாம்பழத்தில் முதிர்ச்சியடையும்போது எத்திலின் வாயு உற்பத்தியாகி அதனை பழுக்க வைக்கும். பிஞ்சிலேயே பழுக்க வைக்க வேண்டும் என்றால் அசட்டலின் வாயு தேவைப்படுகிறது. அசட்டலின் வாயுவை வெளியிடும் தன்மை கார்பைட் கல்லுக்கு உண்டு. அடைக்கப்பட்ட அறையினுள் மாம்பழக் கூடைகளை வைத்து, அதனுள் சிறிதளவு கார்பைட் கல்லை பொட்டல மாக்கி வைத்து விடுவர்.
கார்பைட் கற்களி லிருந்து வெளிப்படும் அசட்டலின் வாயு மாம்பழத்தை பழுக்க வைக்கிறது. அசட்டலினும் எத்திலின் குடும்பத்தைச் சேர்ந்த வாயுதான். இப்படிச் செயற்கையாக பழுக்க வைப்பதனால் அதை உட்கொள்வோருக்கு புற்றுநோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன. அதனால், உலக நாடுகள் பலவும் இம்முறைக்கு தடை விதித்துள்ளன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆரோக்கியம் அ(ளி)ழிக்கும் அழகிய கனிகள்!
மாதுளை
குறைந்தபட்சம் 20 முறையாவது பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட பிறகுதான் மாதுளை பறிக்கப்படுகிறது. மாதுளைகளின் நல்ல அடர் சிவப்பு நிறத்துக்கும் கவர்ச்சியாக தெரிவதற்கெனவும் பியூரிடான் போன்ற அதி விளைவை ஏற்படுத்தும் நச்சு ரசாயனங்களைத் தெளித்தே பேக்கிங் செய்கின்றனர்.
ஆப்பிள்
சத்து நிறைந்த பழம் என்று அதிக அளவில் பரிந்துரைக்கப்படும் ஆப்பிள் குளிர்பிரதேசங்களில் விளையக்கூடியது. பழம் அழுகுவது என்பது இயற்கை எய்துதல். எல்லா பழங்களுக்கும் குறிப்பிட்ட வாழ்நாள் உண்டு. குளிர்பிரதேசங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு நமது சந்தைகளுக்கு வந்து விற்கப்படும் ஆப்பிள் பறிக்கப்பட்ட நாளிலிருந்து பல நாட்களானாலும் அழுகாமல் இருக்கிறதே... எப்படி? குளிர்பிரதேசத்திலிருந்து வெப்பமண்டலப் பகுதிக்கு வரும்போது, அந்த தட்பவெப்ப நிலையை சமாளிப்பதற்காகவும் குறிப்பிட்ட நாட்களுக்கு அழுகாமல் இருப்பதற்காகவும் ஆப்பிள் மீது மெழுகு பூசப்படுகிறது. அந்த மெழுகு தரும் பளபளப்பைக் கண்டுதான், நாம் நல்ல பழம் என்று வாங்கி உண்கிறோம். அந்த மெழுகு உள்ளே செல்லும்போது வயிற்றுக்குள் என்னென்னவெல்லாம் நிகழும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
தர்பூசணி
தர்பூசணியின் இயல்பான அளவும், அதன் இளம் பச்சை நிறமும் நமக்குத் தெரிந்ததுதான். இன்றைக்கு கடையில் விற்கும் தர்பூசணிகளோ, கரும்பச்சை நிறத்தில் பூசணிக்காய் அளவில்தான் இருக்கின்றன. அதை வாங்கிச் சாப்பிடும் நமக்கு தர்பூசணிக்கான சுவையும் கிடைப்பதில்லை. ஏனெனில், அவை வீரிய ஒட்டுரக தர்பூசணிகள். ஒரு ரகப் பயிரின் மகரந்தத்தூளை இன்னொரு ரகத்துடன் இணைத்து மகரந்தச் சேர்க்கை நடக்க வைப்பதன் மூலம் புதிதாக ஒரு ரகம் கிடைக்கும். அதுவே ஒட்டு ரகம். இது இயற்கையாகவே நடக்கும் நிகழ்வு என்றாலும், லாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற இரண்டு ரகங்களை தேர்ந்தெடுத்து அவற்றுள் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்தி விளைவிப்பதே வீரிய ஒட்டுரகம். இயற்கை சுழற்சிப்படி ஒவ்வொரு பருவத்துக்கும் அதன் தட்பவெப்பத்தை சமன் செய்யும் விதத்திலான பழங்கள்தான் விளையும்.
கோடை காலத்தில் மட்டும் விளையக்கூடிய சீசன் பழமான தர்பூசணி இன்று எல்லா பருவங்களிலும் விளைவித்து விற்கப்படுகிறது. தர்பூசணி நம் மண்ணைச் சார்ந்த பழம் இல்லையென்றாலும், அதன் விதை ஒரு காலத்தில் விவசாயிகளிடம் இருந்தது. அவர்களும் அந்தந்தப் பருவத்தின்போது பயிரிட்டு வந்தனர். இன்றோ தர்பூசணியின் விதைகள் தனியார் நிறுவனங்களின் வசம் உள்ளது. அதனால், எல்லா சீசனிலும் தர்பூசணியை பயிரிடுமாறு அவை நிர்ப்பந்திக்கின்றன. கோடை காலத்தில் மட்டுமே விளையும் தர்பூசணியை வேறு பருவத்தில் விளைவிக்கும்போது, அது தட்பவெப்பநிலையை தாங்கி வளர வேண்டும். அதற்காக ரசாயனத் தெளிப்பு மூலம் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இப்படி யாக பயிரிட்ட நாள் தொடங்கி அறுவடை செய்யும் நாள் வரை ரசாயனங்கள் துணையால் மட்டுமே அவை விளைவிக்கப்படுகின்றன. ஐஸ் பாக்ஸ், சுகர் பேபி என்பது போன்ற கவர்ச்சிகரமான பெயர்களை தாங்கி வரும் தர்பூசணிகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது.
பப்பாளி
பழங்களிலேயே தர்பூசணி மற்றும் பப்பாளி பழங்கள்தான் அதிக அளவில் ரசாயனத் தெளிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. இப்போது புழக்கத்தில் இருக்கும் ரெட் லேடி ரக பப்பாளி தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டு ரகமாகும். தைவான் தட்பவெப்ப சூழலுக்கான ரகம், நம் மண்ணில் விளைவிக்க வேண்டுமானால் ரசாயனத்தை அள்ளித் தெளிப்பதைத் தவிர்த்து வேறு என்ன வழி இருக்க முடியும்? விதை அரசியல் இன்றைக்கு நிறைய பழங்கள் சீட்லெஸ் என்கிற பெயரில் விதையற்ற பழங்களாகவே வருகின்றன. விதைகளை அகற்றி விட்டு உண்ணுவதற்கு சோம்பேறித்தனப்படும் நாம் அதனை ஒரு வரப்பிரசாதமாக எண்ணி வாங்கி உண்பதுண்டு.
விதையற்ற பழங்களை இருவிதமாகப் பார்க்கலாம். முதலாவது நாம் உட்கொள்ளும் எந்த ஒரு உணவுப் பொருளு க்கும் வித்தாற்றல் இருக்க வேண்டும். அதன் மூலம்தான் நமக்கு வித்தாற்றல் கிடைக்கும். விதையில்லாத பழங்கள் வித்தாற்றலற்றவை, அவற்றை உண்ணும் நமக்கு மலட்டுத்தன்மைதான் ஏற்படும்.

நம்மிலிருந்தே தொடங்க வேண்டும்!
நாம் உட்கொள்கிற அனேக உணவுப்பொருட்கள் விஷம் என்பதை உணர்ந்து ரசாயனங்களற்ற இயற்கை முறையில் விளைவித்த விளைப்பொருட்களை வாங்குவதென உறுதி கொள்ள வேண்டும். கண்ணுக்குக் கவர்ச்சியாகத் தெரிவதெல்லாமே ஆபத்தானது என்பதை உணர வேண்டும். பசுமைப் புரட்சி நடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் - 1985ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள விளைப்பொருட்கள், அவற்றை உண்ணும் உயிரினங்களின் தாய்ப்பால் ஆகியவற்றில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பரிசோதனையில் குழந்தை பெற்ற பெண்களில் பத்தில் 8 பேருடைய தாய்ப்பால் விஷமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை மூடி மறைக்கப்பட்டு, பல ஆண்டுகள் கழித்துதான் வெளியானது. இன்றைய நிலை பற்றி சொல்லவா வேண்டும்? நஞ்சற்ற விவசாயத்துக்கு வித்திடும்படியாக அரசின் கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அது மட்டுமே இதற்கு முழுத்தீர்வாக அமையும் என்கிறார் ம.குமார்.
விஷமாகிப் போன இதுபோன்ற காய் கனிகளை உண்ணும் நமக்கு என்னவெல்லாம் ஆகும்?
குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் சுகுமார் விவரிக்கிறார்...
‘‘எனக்கு புகைப்பிடிக்கிற பழக்கமோ மது அருந்தும் பழக்கமோ கிடையாது. ஆனால், எனக்கு எப்படி புற்றுநோய் வந்தது? இப்படி பலர் கேட்பதை நாம் பார்க்க முடியும். புகையிலை பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் விகிதத்தை விடவும், விஷமாகிப்போன உணவை உட்கொள்வதால்தான் அதிக அளவில் புற்றுநோய் ஏற்படுகிறது. வயிறு, உணவுக்குழாய், கணையம், பெருங்குடல் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு விஷம் தெளிக்கப்பட்ட உணவுகளே காரணம். நரம்பு சம்பந்தப்பட்ட றிணீக்ஷீளீவீஸீsஷீஸீவீsனீ, சரும நோய்கள், குழந்தையின்மை, ஆண் மலட்டுத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. பூச்சிக்கொல்லி தெளிப்பவர்களுக்கும் 100 நாட்களைத் தாண்டி தெளிக்கும்போது ரத்தப்புற்றுநோய், லிம்போமா மற்றும் சார்கோமா ஆகிய புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உண்டு. பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் மற்றும் ஆண்களுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்பட பூச்சிக்கொல்லித் தெளிப்பே மூலக் காரணம்.
உலகின் வளர்ந்த நாடுகளில் உணவுப்பொருட்களில் ரசாயனத் தெளிப்பின் அளவைக் குறிப்பதற்காக பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என 3 நிற சின்னங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். பச்சை சின்னம் இருந்தால் வாங்கி சாப்பிடலாம். ஆரஞ்சு சின்னம் கொஞ்சம் பாதிப்பானது... சிவப்பு நிற சின்னம் குறியிடப்பட்டால் அதை வாங்கவே கூடாது. இதுபோன்ற முறை நம் நாட்டில் இல்லை. பழங்கள், காய்களை சுத்தமாக ஓடும் நீரில் கழுவி உட்கொள்ள வேண்டும். தோல் உரிக்கக் கூடிய வகைகளை தோலை உரித்து உண்ணலாம். வீட்டுத் தோட்டம் மூலம் இயற்கை முறையில் காய்கறி, பழங்களை வளர்த்து பயன்படுத்துவதுதான் சரியான தீர்வாக இருக்கும்...’’
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3408

Similar topics
» உலகின் பல பகுதிகளிலிருந்து கனிகள் மக்காவிற்கு வந்து சேரும்
» அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
» அழகிய சிங்கப்பூரில் அழகிய மரங்கள்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
» ஆரோக்கியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum