சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Khan11

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

3 posters

Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by சே.குமார் Thu 9 Jul 2015 - 6:54

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் DLMS019-20

சிறுகதைகள் எனக் கிறுக்கும் எனக்கு தொடர்கதை எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை... அப்படி எழுதப் பிடிப்பதும் இல்லை... சிறுகதை என்றால் எடுத்த கருவை வைத்து நாலுபக்கம் கிறுக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வந்திடலாம். தொடர்கதை என்றால் நீளமாக எழுதிக் கொண்டே போகவேண்டும். கதாபாத்திரங்களும் நிறைய இருக்க வேண்டும். அவர்களை கதையுடன் இணைத்துக் கொண்டு போகவேண்டும். ஒரு கதாபாத்திரத்தையும் விட்டு விட்டு செல்ல முடியாது. அப்படி விட வேண்டும் என்றால் மெகா சீரியலில் வருவது போல் வெளிநாட்டுக்கு விரட்ட வேண்டும் இல்லை என்றால் ஆளைக் கொல்ல வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம்... வலையில் எழுத ஆரம்பித்தும் சினிமா, கவிதை, கட்டுரை, சிறுகதை என கலந்து கட்டி ரெய்னா போல் சிக்ஸரடித்தாலும் தொடர்கதை என்ற ஒரு பந்தை மட்டும் ரஹானே மாதிரி தொடாமல் விட்டு விட்டு பேசாமல் இருந்தேன். அதற்கு காரணமும் இருக்கு... அது என்னன்னா... கல்லூரியில் படிக்கும் போது ஒரு குறுநாவல் போட்டியை ஒரு பத்திரிக்கை (சுபமங்களாவோ / காலச்சுவடோ ஞாபகத்தில் இல்லை) அறிவித்திருந்தது. சரி நாமளும் முயற்சிக்கலாம் என எழுத ஆரம்பித்து பக்கம் பக்கமாக எழுதி வைத்து பின்னர் அதை அடித்தல் திருத்தல் எல்லாம் செய்து ஒரு குறுநாவலாக்கினேன்.

கதை என்னன்னா... ஏறக்குறைய இளவரசன் - திவ்யா காதல் கதைதான்... அனுப்புவதற்கு முதல் நாள் படித்துப் பார்த்தேன். எனக்கு ஏதோ குறைவது போல் தெரிய, என்ன என்று யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஐயாவிடம் கொண்டு சென்று கேட்கலாம் என்றால் இதென்னய்யா கதை என்று திட்டிவிட்டால்... யோசித்தேன்... யோசனையின் முடிவில் அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்து பேசாமல் வைத்து விட்டேன்.

ஆரம்பத்தில் எனது சிறுகதைகள் கூட வசனங்கள் நிறைந்து சாதாரணக் கதைகளாகத்தான் இருக்கும். இங்கு வந்த பிறகுதான் கொஞ்சம் வாழ்க்கையைப் பேசலாமே என எழுத்தில் மாற்றம் கொண்டு வந்தேன். இதுவரை நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். சில கதைகள் சாதாரணமாக இருந்தாலும் பல கதைகள் எனக்குப் பிடித்த விதத்தில் வந்திருக்கின்றன என்பதே சந்தோஷம்தானே. சிறுகதைகளில் மாற்றம் கொண்டு வந்த பிறகுதான் முதலில் கிறுக்கிய நாவலை எவ்வளவோ மோசமாக எழுதியிருக்கிறோம் என்று தெரிந்தது, ஆம் அந்தக் கதை படிப்பவரை ஈர்க்கும் விதமாகவோ, ஒரு தொடர்ச்சியாய் நகரவோ இல்லை. அதன் காரணமாகவே தொடர்கதை ஏரியாவுக்குள் நுழைவதே இல்லை.

சரவணன் அண்ணன் இளமை எழுதும் கவிதை நீ என்னும் தொடரை எழுதும் போது எனக்கும் ஒரு நப்பாசை... சரி நாமளும் எழுதுவோம் என்று முயற்சித்த முதல் தொடர்கதைதான் 'கலையாத கனவுகள்'. இந்தக் கதை வாசிப்பவர்களைக் கவர்ந்ததோ இல்லையோ எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என்றாலும் மேல்சாதி கீழ்சாதி பிரச்சினை, கல்லூரிச் சண்டைகள், காதல் திருமணம் என பயணித்து எண்பது பகுதிகளாக வலையில் எழுதினேன். ஒரு சிலர் தொடர்ந்து வாசித்து என்னை உற்சாகப்படுத்தினார்கள்.

தொடர்ந்து வாசித்து என்னை உற்சாகப்படுத்தியவர்களில் சகோதரி மேனகா சத்யா அவர்களும் ஒருவர். அவர் ஒருமுறை கிரைம் தொடர் ஒன்று எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். பின்னர் பலமுறை ஞாபகமும் படுத்தினார். கிரைம் கதை எல்லாம் நம்மால எழுத முடியுமான்னு அதைப் பற்றி யோசிக்காமல்... பின்னர் முயற்சிக்கலாம் என ஒரு கிராமத்து வாழ்க்கையை மையமாக்கி ஆரம்பித்த இரண்டாவது தொடர்கதைதான் வேரும் விழுதுகளும்... இதுதான் கதை... இப்படி எழுதப் போறேன் என்று சொன்னதும் என்னோட நண்பன் தமிழ்க்காதலன்சொன்னதுதான் தொடருக்கான தலைப்பு... ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் உறவுகளுக்குள் இருக்கும் பாசத்தையும் வைத்து பிண்ணப்பட்டதுதான் கதை.

தொடர்ந்து 25 வாரங்கள் பதியப்பட்ட தொடர்கதை... பலரைக் கவர்ந்தது என்பது சந்தோஷமே... இங்கு குடும்பம் வந்தது... நான் ஊருக்குப் போனது போன்ற காரணங்களால் மனசு தூங்கியதில் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கும் கதையும் நின்றுவிட்டது. ஊரில் இருந்து வந்து மூன்று வாரங்களாகிவிட்டாலும் இன்னும் எழுத எண்ணம் வராததால் தொடர்கதையை தொடராமல் விட்டிருந்தேன். இனி தொடரலாம் என்று நினைத்திருக்கிறேன். முன்பே சொல்லியிருக்கிறேன்... என்னைப் பொறுத்தவரை தொடர்கதை என்பதும் சிறுகதை போல்தான் எழுதுவேன். பதியப் போகிறேன் என்றால் அன்றைக்குத்தான் அந்தப் பகுதியை எழுதுவேன். எனவே 26வது பகுதியை சனிக்கிழமை எழுதி அன்றே பதியலாம் என்று எண்ணம்... பதிவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சென்ற தொடரைவிட இதை இன்னும் நல்லாக் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் வட்டாரப் பேச்சு வழக்கில் எழுத நினைத்த கதையில் ஒரு பெரியவர் பேருந்தில் பயணிக்கும் போது அவரது நினைவுகளாய் மலரும் கதையாக மூன்று நான்கு பத்திகள் எழுதி... இதை இப்படி மாற்றலாமே என மாற்றி எழுத ஆரம்பித்ததுதான் வேரும் விழுதுகளும்... கதையின் ஆரம்பம் இப்படித்தான் இருக்கும்.

//... "இரண்டு நாட்களாகப் விடாது பெய்த பேய் பெய்த மழை கொஞ்சம் குறைந்திருந்தாலும் இன்னமும் கருமேகம் கூடுவதும் லேசாகத் தூறுவதுமாகத்தான் இருந்தது. வாயில் நிஜாம் லேடி புகையிலையை அதக்கியபடி கட்டிலில் அமர்ந்திருந்த கந்தசாமி, புகையிலை எச்சில் ஒழுகாதவாறு முகத்தை சற்றே தூக்கி வாயை அஷ்ட கோணலாக்கி "மழ கொஞ்ச விட்டாப்ல இருக்குல்ல' என்றார்.


"அந்த போயிலய துப்பிப்பிட்டு வந்து பேசுறது. வாயில இருந்து மேலுல வடியணுமாக்கும்... எப்பப்பாரு அந்தக் கருமத்தை வாயில ஒதக்கிக்கிட்டு... ஆமா அதுல அப்புடி என்னதா இருக்கோ... தெரியல.. ஒண்ணு துப்பிப்பிட்டு பேசுங்க... இல்ல பேசாம அந்தக் கருமத்த மொண்ணு குடிச்சிட்டு மோட்டு வலயப் பாத்துக்கிட்டு வூட்டுக்குள்ளய கெடங்க..." கத்தினாள் காளியம்மாள்....// 

என வயதான நாயகன் நாயகியின் அறிமுகத்தோடு ஆரம்பித்த கதை, அதன்பின் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள், மாப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், அன்போடு பார்க்கும் அண்ணன் மகன், அவனது குடும்பம் என பாச நிகழ்வுகளோடு நகரும் கதை, கடைசியாக பதிந்த 25வது பகுதியில் கீழே இருக்கும் பத்திகளோடு முடிந்திருந்தது.

//.... "மாப்ள... உலகம் புரியணும்... எனக்கு நீ வேற... மணி வேற இல்லை.... எல்லாரும் நல்லாயிருக்கணும் அதுதான் எனக்கு வேணும்... சித்ரா கணக்கு வேற மாதிரி... நீ பேசாம உனக்கு உள்ள பத்துச் செண்டை வச்சிக்க... பின்னால பாக்கலாம்... இன்னைக்கி தூக்கிக் கொடுத்துட்டு பின்னால அவங்க அதன் மூலம் பலன் அனுபவிக்கும் போது நீயோ அபியோ மனசு வருந்தி எதாவது சொல்லப்போயி முட்டிக்கிட்டு நிக்கக் கூடாது.... நம்ம குடும்பம் கந்தசாமிங்கிற சிற்பி செதுக்குனது... அதுல ஒச்சம் விழக்கூடாது... செய்யணுமின்னு நினைச்சியன்னா... மகா கல்யாணத்துக்கு நீயே நின்னு செய்யி... அவனுக்கும் உதவியா இருக்கும்... என்னடா அத்தான் இப்படிப் பேசுறாரேன்னு நினைக்காதே... உலகம் புரிஞ்சி வாழக் கத்துக்க... ஏன்னா உன்னையப் புரிஞ்ச அபிக்கு நம்ம குடும்பந்தான்  உலகம்... அவ மனசுல இதுவரைக்கும் வராத வருத்தங்கள் வந்தா பின்ன கூட்டுக் குடும்பம் சின்னா பின்னமாயிரும்... சித்ரா... குலைக்கிற நாய்... அது கடிச்சிடாது... ஆனா... யோசிச்சிக்க..."


"சரித்தான்... இப்ப பிரிச்சது அப்படியே இருக்கட்டும்... அப்புறம் பாத்துக்கலாம்..." 


"சரி.. மாப்ள... மாமாக்கிட்ட பேசினியா... என்னதான் சந்தோஷமா சொத்தைப் பிரிச்சிக் கொடுத்தாலும் ரெண்டு பேரு மனசுக்குள்ளயும் எதோ சஞ்சலம்... அதை முகத்துல பார்த்தேன்... கொஞ்சம் பிரியாப் பேசுங்க... மணிக்கிட்டயும் சொல்லி பேசச் சொல்லு... ஏன்னா அவரு எதையாவது நினைச்சி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிடாம..."


"சரித்தான்... நாளைக்கு கூப்பிட்டுப் பேசுறேன்... உடம்பைப் பாத்துக்கங்க..." என்றான் குமரேசன்....//"

சரி ரொம்ப போரடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்... வேரும் விழுதுகளின் 26வது பகுதியில் சந்திக்கிறேன். அதற்கு முன்னர் தொடர்கதையை படிக்காத நட்புக்கள், படிச்சிட்டு வாங்க... வந்து உங்களோட உண்மையான கருத்துக்களைச் சொல்லுங்கள்... தொடர்கதைகளைத் தொடரலாமா வேண்டாமா என முடிவெடுக்க ஏதுவாயிருக்கும் அல்லாவா?
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by Nisha Thu 9 Jul 2015 - 11:31

அதெல்லாம் எப்படா தொடருவிங்க என காத்திருக்கின்றோம்! கேள்வியெல்லாம் கேட்டு நேரத்தினை வேஸ்ட் செய்யாமல் சீக்கிரம் தொடருங்கள். 

சொத்தைப்பிரித்தாகி விட்டது!யாரையும் ஏற்றாமல், தாழ்த்தாமல் கதையின் பாத்திரங்களை அவரவர் இயல்பை சொல்லி   எல்லோரும்   நல்லவர்கள் தான் எனவும் யாருமே வில்லன்கள் வில்லிகள் இல்லை எனவும்  சொல்ல முனையும் உங்கள் நல்ல மனசுக்கு ஒரு சல்யுட்!

ம்ம் தொடருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by பானுஷபானா Thu 9 Jul 2015 - 13:15



குமார் உங்க சைட்ல கதை இருக்கா??????????அதை இங்கே பதியலாமே .
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by Nisha Thu 9 Jul 2015 - 13:35

அவர் இங்கே வந்த போது 17  பாகம்  முடிந்து விட்டது பானு. 17ம் பாகம் இங்கே பதிந்தார். நானும் ஹாசிமும்  ஆரம்பத்திலிருந்து முழுமையாக பதியுங்களேன்பா.. எல்லோரும் படிக்க  தொடர வசதியாய் இருக்கும்னோம்.   ம்ம் பதிகின்றேன்க்கா என்றார். நேரம் கிடைக்கல்ல போலும். 

குமார் மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள். தொடரை இங்கேயும் ஆரம்ப முதல் பதியுங்களப்பா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by சே.குமார் Fri 10 Jul 2015 - 9:10

Nisha wrote:அதெல்லாம் எப்படா தொடருவிங்க என காத்திருக்கின்றோம்! கேள்வியெல்லாம் கேட்டு நேரத்தினை வேஸ்ட் செய்யாமல் சீக்கிரம் தொடருங்கள். 

சொத்தைப்பிரித்தாகி விட்டது!யாரையும் ஏற்றாமல், தாழ்த்தாமல் கதையின் பாத்திரங்களை அவரவர் இயல்பை சொல்லி   எல்லோரும்   நல்லவர்கள் தான் எனவும் யாருமே வில்லன்கள் வில்லிகள் இல்லை எனவும்  சொல்ல முனையும் உங்கள் நல்ல மனசுக்கு ஒரு சல்யுட்!

ம்ம் தொடருங்கள்!
வணக்கம் அக்கா...

தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி அக்கா..
நாளை எழுதுகிறேன் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by சே.குமார் Fri 10 Jul 2015 - 9:11

பானுஷபானா wrote:

குமார் உங்க சைட்ல கதை இருக்கா??????????அதை இங்கே பதியலாமே .
வணக்கம் அக்கா...
இரண்டு தொடர்கதைகள் எழுதியிருக்கிறேன்.
கலையாத கனவுகள் - 80 பாகம்.
வேரும் விழுதுகளும் - 25 பகுதி எழுதியாச்சு... இன்னும் 5,6 பகுதிகளில் முடிக்க எண்ணம்.
இப்போது மனசில் வந்து வாசியுங்கள்....
விரைவில் இங்கு பகிர்கிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by சே.குமார் Fri 10 Jul 2015 - 9:12

Nisha wrote:அவர் இங்கே வந்த போது 17  பாகம்  முடிந்து விட்டது பானு. 17ம் பாகம் இங்கே பதிந்தார். நானும் ஹாசிமும்  ஆரம்பத்திலிருந்து முழுமையாக பதியுங்களேன்பா.. எல்லோரும் படிக்க  தொடர வசதியாய் இருக்கும்னோம்.   ம்ம் பதிகின்றேன்க்கா என்றார். நேரம் கிடைக்கல்ல போலும். 

குமார் மீண்டும் மறுபரிசீலனை செய்யுங்கள். தொடரை இங்கேயும் ஆரம்ப முதல் பதியுங்களப்பா.
கண்டிப்பாக பதிகிறேன் அக்கா...
ஒரு சில காரணிகளும்... மனசில் தேடி எடுத்து பதிய வேண்டுமே என்ற சோர்வுமே காரணம்...
விரைவில் பதிகிறேன்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம் Empty Re: வேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum