சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

மண் வாசனை Khan11

மண் வாசனை

Go down

Sticky மண் வாசனை

Post by anuradha on Wed 5 Aug 2015 - 13:36

மண் வாசனை

மண் வாசனை Palar_2474835f

காலாகலமாக மனிதன் மண்ணோடு ஒன்றிவாழ்ந்த காலம் போய் மண் வாசனையே இல்லாத நவீன கண்டுபிடிப்பான இரசாயணக் கலவையால் உருவாக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கத் துவங்கிவிட்டான். நாளடைவில் அதன் ஆதிக்கம் பல்வேறு வடிவங்களாகவும், உருவங்களாகவும் உருமாறி நம்மோடு ஒன்றிப்போயிற்று. உண்ணும் பாத்திரங்கள் முதல் உட்காரும் நாற்காலி வரை அதன் சாம்ராஜ்ஜியம் விரிவடைந்து நம்மை அடிமை படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
 
மண் வாசனை 14201346080
மண் வாசனை 14201346104
மண் வாசனை 14201346117
மண் வாசனை 14201346131

கால் நூற்றண்டுகளுக்கு முன்பு வரை மண்பாண்டங்கள் புழக்கத்தில் இருந்து வந்ததை நம்மால் மறுக்க இயலாது. சிறுபிள்ளைகளுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வீட்டில் வாங்கித்தரும் மண் உண்டியல், மண்சட்டிகளில் மணக்க மணக்க தாளித்து தளதளக்கும் மீன் குழம்பு, புளியாண சட்டிகள், ஆப்பச்சட்டிகள், கோடை வெப்பத்தை தணிக்க குடம் மற்றும் பானைகள், விருந்து வைபவங்களில் தண்ணீர் அருந்த வைத்திருக்கும் மண்கலயங்கள், கறி, கத்திரிக்காய் என கமகமக்கும் மண் சிட்டிகள், நோன்பு காலங்களில் கஞ்சி குடிப்பதற்காக பரத்தப்பட்டிருக்கும் மண் சிட்டிகள், இவைகள் யாவும் பக்க விளைவுகளோ பாசாணங்களோ இல்லாத பாரம்பரியமான மண் பாண்டங்கள். நம் மண்ணில் உருவாகும் இயற்கையின் இதமான அன்பளிப்பே அன்றி வேறேது?
பல வகை வேதிப்பொருட்களாலும் உலோகக் கலைகளாலும் உருவாக்கப்படும் பாத்திரங்கள் வித விதமான வடிவங்களில் அன்றாடம் நம் வாழ்வில் உணவுப் பொருட்களை வேக வைத்து உண்ணுவதற்கும், குளிர்வித்து பருகுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம். இதனால் ஏற்படும் இரசாயண மற்றங்களால் வேண்டாத வேதியல் மாற்றங்கள் ஏற்படுவதுடன் நம் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகி நோய்வாய் பட்டு மருத்துவரை அணுகும் நிலை. அவசர காலத்தில் உழலும் மனிதன் தன் அவசியத்தை உடனே நிறைவேற்ற ஆவி பறக்கும் குக்கர்களைக் கையாண்டு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உஸ்... எனும் ஓசை மூலம் வெளியாக்கி வெறும் சக்கையை மட்டுமே உண்பது விநோதமாகவே உள்ளது. உழவர் திருநாளில் சமைக்கும் பொங்கல் பானைகள் ஒரு போதும் உலோகத்தால் ஆனவை கிடையாது. மண்ணுடன் வாழ்ந்து வரும் ஒவ்வொரு விவசாயிகளும் பழைய சோற்றை மண் கலயங்களில் வைத்துதான் உண்டு வருகின்றனர். மண்பாண்டங்களில் சமைக்கும் உணவு வெகு சீக்கிரத்தில் கெட்டுப்போவதில்லை. மேலும் சமைக்கும் பதார்த்தங்கள் சுவை, மணம், ஆரோக்கியம் நிறைந்ததாகவே இருக்கும். இதில் சமைக்கும் உணவுகள் யாவும் நம் செரிமானத்திற்கு ஏற்றதகவும் எளிதில் வெந்துவிடக்கூடியதாகவும் இருக்கும். மீன் குழம்பு அல்லது புளியாணம் அலுமினிய சட்டிகளில் இருந்தாலே மறு நாளே பாத்திரங்களில் கரும்புள்ளிகள் விழுந்து அரித்து ஓட்டையாகி விடும்.

மண் வாசனை 14201346144
மண் வாசனை 14201346165

களி மண்ணால் செய்யப்படும் இந்த மண்பாண்டப் பொருட்கள் வெயிலில் காய வைக்கப்பட்டு சுள்ளைகளில் வைத்து சிகப்பு நிறம் வரும் வரை சுடவைத்து பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு மண்பாண்டப் பொருட்களாக வருகிறது. இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் பூமிக்கடியிலிருந்து கிடைக்கும் பண்டைய காலப் பழக்கத்தில் இருந்து வந்த மண்பாண்ட பொருட்களும், பரண்கள், பானைகள் முதுமக்கள் தாழியும், மண்ணால் ஆன ஆயுதங்களும் கண்டெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு மண் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் நமது அரசு பத்திரமாக பாதுகாத்தும் வருகின்றது. முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த விதமும், பயன்படுத்திய பொருட்களும், உட் கொண்ட உணவுகளும் தான் அவர்கள் வயதை நூற்றண்டுகளுக்கு மேல் உயர்த்தியது என்பது மறுக்க இயலாத உண்மை. வேகமாக சுழழும் இவ்வுலகில் நாம் நமது நேரத்தை மிச்சம் பிடிப்பற்காக அரைவேற்காடான அதுவும் முற்கூட்டியே வேகவைத்து பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட பல்வேறு துரித உணவுகளை ஃபாஸ் ஃபுட் எனும் பெயரில் பயன்படுத்தி வருகின்றோம். இது ஒரு புறமிருக்க மறு புறத்தில் சில நகர, கிராம பகுதிகளில் மண்பானை சமையல் என்று போர்டு போட்ட உணவகங்கள் செயல்பட்டும் வருகின்றன. மேலும் கேரள மாநில மக்கள் மண்பாண்ட சமையலையே விரும்பி சாப்பிடுகின்றாகள். இதனால்தான் இன்றளவும் அவர்களது ஆரோக்கியமும் ஆயுளும் பிற மாநிலத்தவர்களை விட உயர்வாகவும் உறுதியாகவும் இருந்து வருகின்றது. புகையிறின்றி, கரிக்கறையின்றி துரிதமாக சமைக்க நாம் பயன்படுத்தி வரும் உலோகத்தினாலான பாண்டங்கள் மற்றும் மண்ணோடு மக்காத மாபெரும் அசுரனான ப்ளாஸ்டிக் பொருட்கள் இவைகளின் வரவால் ஆயுள் குறைந்து அவதிப்படுவது மனித குலம் மட்டுமின்றி பறவைகள், கால்நடைகள் அக்கழிவுகளை உட்கொண்டு செத்து மடியும் காட்சியை நாள் தோறும் நாம் பார்த்து வருகின்றோம். காலத்தின் மாற்றத்திற்கேற்ப மண்பண்டங்கள் மெல்ல சாகும் நிலை அதிகரித்து வருவது கவலைக்குரியதே!

மண் வாசனை 14201346221
மண் வாசனை 14201346238
மண் வாசனை 14201346257
மண் வாசனை 14201346272
மண் வாசனை 14201346187
மண் வாசனை 14201346207

கோடை காலங்களில் மட்டும் தான் குளிர்ந்த நீருக்கவும் மோருக்கவும் பானைகள் வாங்குகின்றோம். இன்னும் மீன் சட்டி ஆப்பச் சட்டிகள் விரல் விட்டு எண்னக்கூடிய வீடுகளில் மட்டுமே காண முடிகின்றது. பூந்தொட்டிகள் கூட தற்போது மண்ணின் நிறத்தாலான ப்ளாஸ்டிக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மண்ணோடு ஒன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் தம் இல்லங்களில் அன்றாடம் பயன்படுத்தி வந்த மண்பானைகளின் பெயர்பட்டியலைக் கேட்டால் நமக்கு வியப்பாகவும் வினோதமாகவும் இருக்கும், இதோ அவர்கள் கையாண்டு வந்த மண்பானைகளின் பெயர்கள் சில...

மண் வாசனை 07-1389096684-potters-pin-hopes-on-pongal4-600
மண் வாசனை 12-1421047259-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt6-600
மண் வாசனை 12-1421047290-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt3-600
மண் வாசனை 12-1421047311-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt1-600
மண் வாசனை 12-1421047280-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt4-600
மண் வாசனை 12-1421047270-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt5-600
மண் வாசனை 12-1421047300-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt2-600
மண் வாசனை 12-1421047248-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt7-600
மண் வாசனை 12-1421047270-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt5-600
மண் வாசனை 07-1389096711-potters-pin-hopes-on-pongal2-600
மண் வாசனை 07-1389096654-potters-pin-hopes-on-pongal6-600
மண் வாசனை Paanai%201
மண் வாசனை 12-1421047259-pongal-pot-manufacturing-on-full-swing-in-nellai-dt6-600
மண் வாசனை 13406996821-600x450

 1) அஃகப் பானை – தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
2) அஃகுப் பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
3) அகட்டுப் பானை – நடுவிடம் பருத்த பானை
4) அடிசிற் பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
5) அடுக்குப் பானை – நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
6) அரசாணிப்பானை – திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
7) உசும்பிய பானை – உயரம் மிகுந்த பானை.
8) உறிப் பானை – உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
9) எஃகுப் பானை – இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
10) எழுத்துப் பானை – எழுத்துகள் வரையப் பெற்ற பானை
11) எழுப்புப் பானை – உயரம் வாய்ந்த பானை
12) ஒறுவாயப் பானை – விளிம்பு சிதைந்த பானை
13) ஓதப் பானை – ஈரப் பானை
14) ஓர்மப் பானை – திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
15) ஓரிப் பானை – தனிப் பானை, ஒல்லியான பானை
16) ஓவியப் பானை – ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
17) கஞ்சிப் பானை – கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
18) கட்டப் பானை – அடிப்பகுதி வனையப்படாத பானை
19) கட்டுப் பானை – மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை
20) கதிர்ப் பானை – புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
21) கரகப் பானை – கரவப்பானை – நீர்க்கரகம்
22) கரிப்பானை – கரி பிடித்த பானை
23) கருப்புப் பானை – முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
24) கருப்பு – சிவப்பு பானை – உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
25) கலசப் பானை – கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
26) கழுநீர்ப் பானை – அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை
(கொச்சை வழக்கில் கழுனிப் பானை என்னப் பெறுகின்றது)
27) காடிப் பானை – கழுநீர்ப் பானை
28) காதுப் பானை – விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
29) குண்டுப் பானை – உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
30) குறைப் பானை – அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி
(கொச்சை வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
31) கூடைப் பானை – கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
32) கூர்முனை பானை – அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
33) கூர்ப் பானை – கூர் முனைப் பானை
34) கூழ்ப் பானை – கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
35) கோளப் பானை – உருண்டு திரண்ட பானை
36) சருவப் பானை – மேற்புறம் அகற்சியாகவும் – கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
37) சவப்பானை – சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
38) சவலைப் பானை – நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
39) சன்னப் பானை – மெல்லிய பானை, கனமில்லாத பானை
40) சாம்பல் பானை – கையால் செய்யப் பெற்ற பானை
41) சொண்டுப் பானை – கனத்த விளிம்புடைய பானை
42) சோற்றுப் பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை
43) சில்லுப் பானை – மிகச் சிறிய பானை
44) சின்ன பானை – சிறிய பானை
45) தவலைப் பானை – சிறிய வகைப் பானை
46) திடமப் பானை – பெரிய பானை (திடுமுப் பானை)
47) திம்மப் பானை – பெரும்பானை (திம்மம் – பருமம்)
48) துந்திப் பானை – தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
49) தொண்ணைப் பானை – குழிவார்ந்த பானை
50) தோரணப் பானை – கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
51) தோள் பானை – தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற் கேற்றவாறு உருவமைந்த பானை
52) நாற்கால் பானை – நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
53) பச்சைப் பானை – சுடப்பெறாத பானை
54) படரப்ானை – அகற்ற – பெரிய பானை
55) பிணப் பானை – சவப்பானை, ஈமத்தாழி
56) பொள்ளற் பானை – துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
57) பொங்கல் பானை – பொங்கல் விழாவிற்குரிய பானை
58) மங்கலக் கூலப் பானை – திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
59) மடைக் கலப் பானை – திருமண வீட்டில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
60) மிண்டப் பானை – பெரிய பானை
61) மிறைப் பானை – வளைந்து உயர்ந்த பானை
62) முகந்தெழு பானை – ஏற்றப் பானை (திவ்வியப் பிர – 3406 – 4)
 63) முடலைப் பானை – உருண்டை யுருவப் பானை
64) முரகுப் பானை – பெரிய பானை – திரண்டு உருண்ட பானை
65) மொங்கம் பானை – பெரும் பானை (மொங்கான் பானை)
66) மொட்டைப் பானை – கழுத்தில்லாத பானை
67) வடிநீர்ப் பானை – நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
68) வழைப் பானை – வழ வழப்பார்ந்த புதுப்பானை
69) வெள்ளாவிப் பானை – துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை.

மண் வாசனை Kmeen-8
மண் வாசனை Kmeenkast
மண் வாசனை Tamil%20culture01
மண் வாசனை 5091979d39ee05be6dbde6a320c7fa4a_h
மண் வாசனை Onam-sadya
மண் வாசனை Onam_sadya_th_2091641f
மண் வாசனை Ona-Sadya

பானையில் சோறு பொங்கி வாழையிலையில் பரிமாறி மண்சட்டியில் மீன் குழம்பும், கலையத்தில் தெளிமோரும், பந்தியில் அமர்ந்து சாப்பிடும் பாரம்பரிய வழக்கம் நம் தமிழர்களின் பழக்கம்! இனியேனும் இயன்ற வரை மண்பாண்டங்களைப் பயன்படுத்தி நம் வாழ்வாதாரங்களை வளப்படுத்தி உடல் நலத்தைப் பேணுவதோடு மண்ணின் பெருமையக் காப்பாற்றும் மண்ணின் மைந்தர்களாய் நாம் வாழ்வோமாக!

anuradha
புதுமுகம்

பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: மண் வாசனை

Post by Nisha on Thu 6 Aug 2015 - 12:05

அறியாத, அருமையான பகிர்வு இது. 
மண்பாண்டங்கள் பயன் குறித்தறிய முடிந்ததில் மகிழ்ச்சி. நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum