சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Yesterday at 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Khan11

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

5 posters

Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by Nisha Wed 14 Oct 2015 - 18:40

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?
 
 ஒரு ஆணுக்கு, ஒரு பெண் உயிர் தோழியாக இருந்தால் அவனது வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையல்ல.
ஏனெனில், தனது நண்பனின் வாழ்க்கைக்கு தேவையான பாதைகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் உறுதுணையாக இருப்பாள்.
ஆனால், பெண் தோழியை வைத்திருப்பது என்பது சில நேரங்களில் மன வலியையும் ஏற்படுத்தும்.
ஒரு ஆணுக்கு என்னதான் ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்தாலும், ஒரு பெண் தோழி இருப்பது அவசியம்.
ஏனெனில், பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் வேலைகளில், அதனை சரியாக புரிந்துகொண்டு அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வை ஏற்படுத்திக்கொடுப்பார்கள்.
"உண்மையான நண்பனை ஆபத்தில் அறிவாய்" என்ற பழமொழி பெண் தோழிகளுக்கு நிச்சயம் பொருந்தும், நீங்கள் உயிருக்காகவோ, அல்லது பண உதவி இல்லாமல் சிக்கித்தவிக்கும்போது கண்டிப்பான முறையில் உங்கள் சூழ்நிலையை உணர்ந்து உதவுவார்கள்.
நீங்கள் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டுவிட்டீர்கள் என்பதை சரியான முறையில் கண்டுபிடிப்பது உங்கள் பெண் தோழியாகவே இருப்பாள்.
அது மட்டுமின்றி நீங்கள் காதலிக்கும் பெண், உங்களுக்கு பொருத்தமானவளா அல்லது உங்கள் குடும்பத்திற்கு சிறந்த மருமகளா என்பதை கச்சிதமாக கூறிவிடுவாள்.
ஏனெனில் அவளும் ஒரு பெண் என்பதால், நீங்கள் காதலிக்கும் பெண்களை பற்றி உங்கள் தோழியிடம் கூறி கொஞ்சம் அறிவுரை கேட்டுக்கொள்ளுங்கள்.
ஆனால், இந்த அறிவுரை அளவுக்கு மீறி சென்றால் ஆபத்தே, உங்கள் காதலியை பற்றி அவள் அதிகமாக விமர்சிக்கும்போது அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆனால், இதனை வெளியில் சொல்ல முடியால் தவிக்க வேண்டி வரும், தப்பித்தவறி வெளியில் சொல்லிவிட்டால் அது இருவருக்குமான பிரிவினை ஏற்படுத்திவிடும்.
இந்த சமுதாயத்தில் பார்வையில் ஆண் பெண் நட்பு சில நேரங்களில் புனிதமாகவும், பல நேரங்களில் தவறான விமர்சனத்திற்கும் ஆளாகின்றது.
எதுவாயினும், ஆண் பெண் நண்பர்கள் தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே எல்லாவற்றிற்கும் பதில் கூற முடியும் என்பது மட்டுமல்லாமல், தங்கள் நட்பினையும் இறுதிவரை தொடரலாம்.
http://www.lankasritechnology.com/view.php?22SAld0bdN30Qd403cMC322cBn53bdeZBPJ403egAA2ecMo9race2JO443

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by நண்பன் Wed 14 Oct 2015 - 20:36

ஆண் பெண் உயிர் நட்பு என்பது இந்தக்காலத்தில் இல்லை எந்தக்காலத்திலும் இருந்துதான் இருக்கிறது ஆனால் அது அரிதாகத்தான் இருக்கும்.

காரணம் சமுதாயத்தின் பார்வை அப்படித்தான் இருக்கிறது சமுதாயத்திற்கு பயந்து கொண்டுதான் ஒரு ஆண் பெண் நட்பு கொள்ள வேண்டிய நிலை என்றும் உள்ளது  

சமுதாயத்தின் தவறான கண்ணோட்டம் சமுதாயம் எப்படி வேண்டுமானாலும் எண்ணிட்டு போகட்டும் நாம் புனிதம் நமது நட்பு புனிதம் என்றும் ஒரு சிலர் பழகத்தான் செய்கிறார்கள்

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சமுதாயத்திற்கு பயந்து ஒரு சில நல்ல நட்புகளும் பிரிய வேண்டிய சூழலும் ஏற்படத்தான் செய்கிறது   ஒரு ஆணைப் பொறுத்த மட்டில்  கொண்டு செல்ல முடியும் அந்த ஆணின் திருமணம்  தடை இல்லாத வரைக்கும் பெண்ணோடு புரிந்து கொண்டு பழகி கடைசி வரை களங்கம் இல்லாமல் 

அதே போன்றுதான் பெண்ணுக்கும் எனது பெண் தோழி கல்யாணம் பண்ணி விட்டால் கணவன் என்னை தப்பாக எண்ணி விடக்கூடாது என்பதற்காகவும் சில நட்புகள் பிரிந்திருக்கின்றது  அதையும் தாண்டியும் சில நட்புகள் இன்னும் நம்மில் நிலைக்கத்தான் செய்கிறது

சரியான முடிவு சொல்ல முடியா விட்டாலும்
இந்த சமுதாயத்தின் பார்வையில் ஆண் பெண் நட்பு சில நேரங்களில் புனிதமாகவும், பல நேரங்களில் தவறான விமர்சனத்திற்கும் ஆளாகின்றது.
எதுவாயினும், ஆண் பெண் நண்பர்கள் தாங்கள் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே உயிர் நட்பாகிறது.

நானும் பெண் தோழிகளுடன் பல ஆண்டுகளாக பழகி வருகிறேன் இது வரை புனிதமாக!
நன்றியுடன் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by Nisha Wed 14 Oct 2015 - 22:47

இப்ப இந்த பதிவு  ஆண் பெண் நட்பு அவசியமா? சாத்தியமா? என்பதை குறித்து அல்ல!
ஒரு ஆணுக்கு என்னதான் ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்தாலும், ஒரு பெண் தோழி இருப்பது அவசியம்.
ஏனெனில், பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் வேலைகளில், அதனை சரியாக புரிந்துகொண்டு அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வைஏற்படுத்திக்கொடுப்பார்கள்.

"உண்மையான நண்பனை ஆபத்தில் அறிவாய்" என்ற பழமொழி பெண் தோழிகளுக்கு நிச்சயம் பொருந்தும், நீங்கள் உயிருக்காகவோ, அல்லது பண உதவி இல்லாமல் சிக்கித்தவிக்கும்போது கண்டிப்பான முறையில் உங்கள் சூழ்நிலையை உணர்ந்து உதவுவார்கள்.

பிரச்சனைகள் வரும் போது ஒரு ஆணை விட பெண் சட்டென முடிவெடுப்பவளாயிருப்பதால்... தோழமை எனும் போது இன்னும் சற்று மேம்பட்டு சிந்தித்து  தன் பிரச்சனை அதுவென  உணர்தலோடு அணுகசெய்யும் படி இருக்கும் என நான் நினைக்கின்றேன். 

அடுத்தது நல்ல நட்புக்குக்கு சாத்தியம்.  சாத்தியமில்லை. திருமணம் தடை என்பதெல்லாம்  சும்மா சாக்கு போக்குத்தான். மனதளவில் உணரும் நட்புக்கு தடைகள் இருக்க முடியாது எனவும் நான் நினைக்கின்றேன். 

அதே நேரம்... காதல் புனிதமானது என்பது போல் நம்மாட்கள் பல விடயங்களை இந்த புனிதமானதிற்குள் அடக்கி விடுகின்றார்கள் அதனுள் நட்பையும் புகுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.  அதான் நட்பு என சொல்லியாச்சில்லை. அதில் என்ன புனிதம் புனிதமில்லாமை வரும்.

அதெல்லாம் சரி இந்த உயிர் நட்பு உயிரில்லா நட்பு எனில் என்ன? அதற்கான் வரைமுறை என்ன!?  

எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by *சம்ஸ் Thu 15 Oct 2015 - 9:17

Nisha wrote:இப்ப இந்த பதிவு  ஆண் பெண் நட்பு அவசியமா? சாத்தியமா? என்பதை குறித்து அல்ல!
ஒரு ஆணுக்கு என்னதான் ஏராளமான ஆண் நண்பர்கள் இருந்தாலும், ஒரு பெண் தோழி இருப்பது அவசியம்.
ஏனெனில், பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் வேலைகளில், அதனை சரியாக புரிந்துகொண்டு அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வைஏற்படுத்திக்கொடுப்பார்கள்.

"உண்மையான நண்பனை ஆபத்தில் அறிவாய்" என்ற பழமொழி பெண் தோழிகளுக்கு நிச்சயம் பொருந்தும், நீங்கள் உயிருக்காகவோ, அல்லது பண உதவி இல்லாமல் சிக்கித்தவிக்கும்போது கண்டிப்பான முறையில் உங்கள் சூழ்நிலையை உணர்ந்து உதவுவார்கள்.

பிரச்சனைகள் வரும் போது ஒரு ஆணை விட பெண் சட்டென முடிவெடுப்பவளாயிருப்பதால்... தோழமை எனும் போது இன்னும் சற்று மேம்பட்டு சிந்தித்து  தன் பிரச்சனை அதுவென  உணர்தலோடு அணுகசெய்யும் படி இருக்கும் என நான் நினைக்கின்றேன். 
சராசரியாக, ஆணோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள்.

அடுத்தது நல்ல நட்புக்குக்கு சாத்தியம்.  சாத்தியமில்லை. திருமணம் தடை என்பதெல்லாம்  சும்மா சாக்கு போக்குத்தான். மனதளவில் உணரும் நட்புக்கு தடைகள் இருக்க முடியாது எனவும் நான் நினைக்கின்றேன்.

கண்டிப்பாக திருமணமான பின் எந்த ஒரு நட்பும் சரிவர தொடர முடியாது!காரணம் திருமணத்தின் முன் எந்த ஒரு தேவைக்கும் எந்த நேரமும் அழைக்க  முடியும் திருமணம் ஆன பின் அப்படி செய்ய முடியாது அவள் முழுமையாக கணவனின் கட்டுப் பாட்டுக்குள் இருக்கிறாள்.நண்பனுடன் பேசுவதற்கும் கணவனுடன் பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது கணவன் எனும் போது மதிப்பு, மரியாதை ,அச்சம், என்று அங்கு வகைப்படுகிறாள். அதனால் நினைப்பதை கணவனிடம் பேசமுடிவதில்லை. நண்பன் எனும் போது எதை நினைக்கிறாளோ அதை அப்படியே பேசுவாள். இதை பார்க்கும் கணவனுக்கு நாளடைவில் பிரச்சினையாக தெரியும். பிடிக்காமல் போய்விடும்.அங்கு முரண்பாடும் புரிந்துணர்வு அற்றுப் போய்விடும்!இது ஆசியனானவர்களின் பண்பாக இருக்கிறது.இதோ மேற்கத்திய நாடுகளில் அப்படி இல்லை.

அதே நேரம்... காதல் புனிதமானது என்பது போல் நம்மாட்கள் பல விடயங்களை இந்த புனிதமானதிற்குள் அடக்கி விடுகின்றார்கள் அதனுள் நட்பையும் புகுத்துவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.  அதான் நட்பு என சொல்லியாச்சில்லை. அதில் என்ன புனிதம் புனிதமில்லாமை வரும்.

நண்பர்கள் எனும் போது அதிகமானவர்கள் இருப்பார்கள் ஒரு பிரச்சினை என்று வந்தால் அவர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை யார் சரி ஒருவரிடன் பகிர்ந்து கொள்வோம்! காரணம் அங்கு அவரைத்தான் அதிகமாவும் நம்பப் படுகிறது. அது மற்றும் அன்றி எது நடந்தாலும் எந்த நிலையிலும் யாரிடமும் இதைப் பத்தி சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை வருகிறதோ அப்பதான் அந்த நட்பு புனிதமாகிறது.

அதெல்லாம் சரி இந்த உயிர் நட்பு உயிரில்லா நட்பு எனில் என்ன? அதற்கான் வரைமுறை என்ன!?  

எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by நண்பன் Thu 15 Oct 2015 - 10:39

Nisha wrote:

அதெல்லாம் சரி இந்த உயிர் நட்பு உயிரில்லா நட்பு எனில் என்ன? அதற்கான் வரைமுறை என்ன!?  

எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.

எனக்குத் தெரிந்த விளக்கம் தருகிறேன் சரியாயின் சரி எனவும் பிழையாயின் பிழை எனவும் எடுத்துக்கொள்ளவும்
உயிர் நட்பு என்பது தன் நண்பனுக்கு ஏதாவது ஆபத்து வரும் போது தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னைப் பற்றி சிந்திக்காமல் தன் நண்பனைக் காப்பாற்ற களத்தில் குதிப்பான் யோசிக்கவே மாட்டான்

உயிர் நட்பிற்கு தாய்ப்பாசம் பொருந்தும் தன் மகனுக்கு ஒரு ஆபத்து என்று அறிந்தால் முன்னால் ஒரு ஆபத்து வருகிறது என்று அறிந்தால் ஒரு தாய் தன் மகனை கட்டிப்பிடித்து வரும் ஆபத்து அனைத்தையும் தன் முதுகில் ஏற்றுக்கொள்வார் உயிரைக் கொடுத்து சரி தன் மகனைக் காப்பாற்றுவாள் ஆகவே உயிர் நட்பும் அப்படித்தான்

உயிர் நட்பிற்கு தன்நலம் இருக்காது சுயநலம் இருக்காது நண்பனுக்காக எதையும் செய்யத்துணிவான் அப்படியான நண்பர்கள் சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் உயிர் நண்பர்கள் என்று.
இது வரை நான் நான் அப்படி அதிகமானவர்களிடம் சொல்லியதில்லை உயிர் நண்பன் என்று
ஓரிருவரைத்தவிர நான் அறிந்திருக்கிறேன் எனக்கு யார் உயிர் நண்பன் என்று
பல முறை உணர்ந்திருக்கிறேன் அதில் இன்னொரு விடயம் உயிர் நண்பன் என்றால் நண்பனுக்கு மட்டும் நண்பன் இல்லை நண்பன் சார்ந்த உறவுகளுக்கும் அவன் நண்பனாக இருப்பான் அப்படி எனக்கும் நண்பன் இருக்கிறான்

தன்னையும் தன் உயிரையும் பெருசு படுத்தாமல் நண்பனுக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவன் உயிர் நண்பன் உயிர் நண்பன் என்றால் உயிரை மட்டும் கொடுப்பவன் என்று அர்த்தம் இல்லை ஆபத்தில் உதவுபவனும் உயிர் நண்பன்தான் இன்னும் மேலதிக கருத்திற்காக காத்திருக்கிறேன்
நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by *சம்ஸ் Thu 15 Oct 2015 - 16:53

ம்! இதை நானும் ஆமோதிக்கிறேன் நண்பா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by பானுஷபானா Sat 17 Oct 2015 - 15:02

அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by *சம்ஸ் Sat 17 Oct 2015 - 15:32

பானுஷபானா wrote:அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

பதில் சொல்லிட்டு போங்க அக்கா..

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Oct 2015 - 7:26

பலரும் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள் அருமையானதே ....

ஆணுக்கு ஒரு பெண் உயிர்த்தோழியாக இருப்பது நண்மையா தீமையா என்பதுதான் தலைப்பு 
இது இருவேறாக பார்க்கலாம் ஒன்று ஒரு ஆணின் திருமணத்தின் முன்பு மற்றயது திருமணத்தின் பின்பு என காலத்தினை பிரித்துத்தான் இதை ஆராய வேண்டியிருக்கிறது. 
உயிர்த்தோழியாக இருத்தல் என்பது அனைத்து உறவுகளுக்கும் மேலான ஒரு விடயம் அவளுக்கு என்ன நேர்ந்தாலும் எம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது உடனடியாக உதவக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் இது நாம் தனி நபராக இருந்தால் மாத்திரம் சாத்தியமாகும் எமக்கான துணை ஒன்று வந்ததன் பின்னர் இவ்வாறான உயிர்த்தோழமை என்று எவ்வாறுதான் விபரித்தாலும் எடுபடாது அது பல பிரச்சினைகளைத் தாங்கி நிற்கும் நன்மை என்று நோக்கினால் ஆணை விட அந்த தோழிக்குத்தான் அதிகமான பாதுகாப்பும் அரவணைப்பும் கிடைக்குமே தவிர ஆணுக்கு பல பிரச்சினைகள்தான் இருக்கும் பார்ப்பவர்கள் கூட வேறு கண்ணோட்டத்தில்தான் பார்ப்பார்கள் அவர்களின் சந்தேப் பார்வையிலிருந்தும் எம்மால் தப்பிக்க முடியாது எவ்வளவு தூரம் நாம் உண்மையான நட்புடன் சகோதரத்துவத்துடன் நடந்தாலும் எம்மை ஒரு குற்றவாளிகாத்தான் பார்ப்பார்பார்கள் என்பது எனது கருத்து 
இந்த விடயம் கூட நாட்டுக்கு நாடும் பிரதேசத்திற்கு பிரதேசமும் வேறுபடுவதையும் நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது மேலே நான் சொன்ன கருத்து எமது பிரதேசங்களுக்கு பொருத்தமாகும் இதையே மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிட முடியாது அங்குள்ள சுதந்திரமும் கலாச்சாரமும் எந்த விதத்திலும் எதையும் கட்டுப்படுத்துவதில்லை அங்குள்ளவர்களுக்கு எல்லாவகையிலும் ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் நண்மைதான் அமையும் எந்தவித பிரச்சினைகளையும் தாங்கி வருவதில்லை வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் காரணம் பழக்கப் படுத்திக்கொண்ட சமுகச் சூழல் அதற்கு இந்த உயிர்த்தோழமை பொருத்தமானதும் நண்மையானதுமே

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Oct 2015 - 7:27

எழுதித் தீர்த்திட முடியாத ஒரு தலைப்பு நன்றி அக்கா sorry அதிகம் எழுத நேரம் பத்தவில்லை

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by நண்பன் Mon 19 Oct 2015 - 7:24

நேசமுடன் ஹாசிம் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by பானுஷபானா Tue 20 Oct 2015 - 13:31

ஹாசிம் உங்க பதில் சூப்பர்... பனை மரத்துக்கு கீழ நின்னு பால்குடிச்சாலும் கள் என்று தான் நினைப்பாங்க...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by *சம்ஸ் Tue 20 Oct 2015 - 16:14

பானுஷபானா wrote:ஹாசிம் உங்க பதில் சூப்பர்... பனை மரத்துக்கு கீழ நின்னு பால்குடிச்சாலும் கள் என்று தான் நினைப்பாங்க...
அது சரி உங்க கருத்து என்ன அதைச் சொல்லுங்க அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா? Empty Re: ஆணுக்கு....ஒரு பெண் உயிர் தோழியாக இருப்பது நன்மையா? தீமையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum