Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு
3 posters
Page 1 of 1
மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு... எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்...
பதிவின் ஆரம்பத்திலேயே சொல்லிக்கொள்கிறேன் இது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதிவு என்பதைவிட இது எங்களின் உரிமை என்ற ஆணித்தரமான பதிவு. இது தென்தமிழகத்தில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு என்று சொல்லி எதிர்க்கும் வடதமிழகத்து நண்பர்களே... குறிப்பாக சென்னை நண்பர்களே... இது தமிழனின் வீர விளையாட்டு... பாரம்பரிய விளையாட்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளம் வந்தபோது அது வடதமிழகத்தில்தான் பெய்தது என்று எந்தத் தென்மாவட்டத்துக்காரனும் நினைக்கவில்லை... என் மக்கள்... என் இனம்... பாதிக்கப்பட்டிருக்கு என்றுதான் ஓடோடி வந்தான்... நம் உரிமையை அழிக்க நினைப்பவருக்கு ஜால்ரா அடிப்பதை விடுத்து நாம் தமிழர்கள் என ஒன்று கூட முயலுங்கள்.
ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளையை சிறிய கன்றிலிருந்தே பார்த்துப் பார்த்து வளர்ப்பவன் விவசாயி. அவன் அதை துன்புறுத்துகிறான் என்று ஏதோ சில பதியப்பட்ட காட்சிகளை வைத்துக் கொண்டு தடை செய்து... அந்த வீர விளையாட்டையே... எம் இனத்தின் பாரம்பரியத்தையே அழிக்கத்துடிக்கும் அற்பப் பதர்களுக்கு அந்த மாட்டை பராமரிக்கும் முறை தெரியுமா...? அதன் கண்களில் துன்புறுத்திய வேதனை தெரியும் என்று ஏதோ ஆராய்ந்து பார்த்தது போல் சொல்லியிருக்கிறார்கள்... அதன் கண்களில் எங்கே வேதனை தெரிந்தது... என்னை வளர்க்கும் எஜமானன் தோற்கக்கூடாது என்ற வெறியே தெரியும்... என் வீரம் நான் என் எஜமானனுகு அளிக்கும் பரிசு என்ற வெறியே தெரியும்.. மாட்டுக்கறியைச் சாப்பிடுவோம்... வண்டி வண்டியாக கேரளாவுக்கு அடிமாட்டுக்கு அனுப்புவதற்கு உதவுவோம்... ஆனால் வருடமெல்லாம் வயலில் கிடந்து உழன்று அந்த ஒருநாள் சந்தோஷமாக இருக்கும் விவசாயியை மட்டும் சந்தோஷமாக இருக்க விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கியிருக்கும் இவர்கள் எல்லாம் யார்..? இவர்கள் மாட்டின் நலம் விரும்பிகளா...? அல்லது மாட்டு இறைச்சி விரும்பிகளா...?
தென் தமிழகத்தில் விவசாயம் செய்யும் எல்லாரிடமும் மாடுகள் இருக்கும்... பால் வியாபரத்துக்கு மட்டுமின்றி... உழவுக்கு என்றும்... பந்தய மாடுகள் என்றும்.. மஞ்சுவிரட்டு மாடுகள் என்றும் தரம் வாரியாக வைத்துப் பராமரிப்பார்கள். அவற்றை அவர்கள் பராமரிக்கும் முறையை இவர்கள் அறிவார்களா? வீட்டு விலங்காக இருக்கும் காளைகளை வன விலங்கு என்று சொல்லி வாதிடுகிறார்கள். வருடம் பூராம் உழைக்கும் வர்க்கம் தங்களின் பிள்ளைகளோடு பிள்ளைகளாக வைத்து வளர்த்து வரும் ஒரு உயிரினத்தை காட்டு விலங்கு என்று சொல்லும் இந்தக் காட்டுமிராண்டிகளை ஆதரிக்கவும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் கூட்டம் இது மனிதாபிமானம் அற்ற செயல்... இது மாடுகளை துன்புறுத்தும் செயல்... இது மகா பாதகமான செயல்... என்று கூப்பாடு போடுகிறது. இவர்களுக்கு என்ன தெரியும் விவசாயியின் வாழ்க்கையும் அவனது வாழ்வாதாரமும்.. இந்த மாடுகளோடு பின்னிப் பிணைந்து கிடப்பது...
நாங்கள் அடுக்கடுக்காய் பேனர் வைப்போம்... நடிகனின் கட் அவுட்டுக்கு அண்டாக்களில் பால் வாங்கி அபிஷேகம் செய்வோம். எவனோ ஒரு நடிகன் சாகக்கிடந்தால் மொட்டை அடிப்போம்... என்று இன்னமும் திருந்தாமல் திரியும் நீங்கள் இந்த தமிழனின் பரம்பரை விளையாட்டை இது தென்தமிழகத்தில் ஒரு சாரார் நடத்தும் விளையாட்டு... இது தமிழர்களின் விளையாட்டு அல்ல என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை... ஏனென்றால் நீங்கள் எல்லாம் தமிழனாய் வாழ நினைக்காதவர்கள்... ஏதோ மேற்கத்திய நாகரீகத்தில் ஒன்றி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி வாழ நினைக்கும், வாழ்ந்து வரும் மேல்த்தட்டு வாசிகள். தமிழன் என்றால் அதில் வீரம் இருக்கும்... தன்மானம் இருக்கும். அதை மறந்த உங்களுக்கு ஏழைகளின் வீரமிக்க இந்த விளையாட்டு எம் தமிழினத்தின் விளையாட்டு.. இது அழியக் கூடிய விளையாட்டு அல்ல.... பாதுகாக்க வேண்டிய விளையாட்டு என்பது எப்படித் தெரியும்.
தமிழனின் விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று முதன் முதலில் வழக்குத் தொடந்த மேனகா காந்திக்கு இதைப் பற்றி என்ன தெரியும். தமிழ்நாட்டிற்கு வந்து அரைகுறை ஆடையில் இளைஞர்களை எல்லாம் கவர்ச்சி உலகில் மயங்க வைத்து பணம் சம்பாரிக்கும் மேற்கத்திய எமிக்கு மாட்டை எப்படி பாராமரிப்பார்கள் என்பது தெரியுமா..? உடலில் எல்லா இடத்திலும் பச்சை குத்தி, அதை வெளிச்சம் போட்டுக்காட்டும் திரிஷாவுக்கு, காளைகள் விவசாயியின் குழந்தையோடு பேசும், விளையாடும் என்பது தெரியுமா...? கத்திச் சேவல் சண்டையை வைத்து படமெடுத்து தேசிய விருது பெற்ற... தென் தமிழக கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பில் முன்னுக்கு வந்த... ரஜினியின் மருமகன்... ஒல்லிப்பிச்சான் தனுஷ்க்கு மாடுகள் தங்கள் எஜமானனைப் பார்க்கவில்லை என்றால் உணவு உண்ணாது என்பது தெரியுமா...? ஏன் கிரிக்கெட்டில் கோடிகளைக் குவித்து அனுஷ்காவோடு சுற்றும் விராட் கோலிக்கும், இதை எதிர்க்கும் மற்ற பிரபலங்களுக்கும் என்ன தெரியும் இதைப் பற்றி...? பந்தை விரட்டி அடிப்பது போல் எங்கள் மாடுகளை அவிழ்த்துவிட்டால் இவர்களால் விரட்டி பிடிக்கத்தான் முடியுமா... அல்லது அடிக்கத்தான் முடியுமா... தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசும் இவர்கள்... தமிழனின் பாரம்பரியத்தை... வீரவிளையாட்டை தடைசெய்ய வேண்டும் என்று சொல்வதன் காரணம் என்ன...?
இந்த பெடா(PETA) அமைப்பு அமெரிக்காவில் தோன்றிய அமைப்பு... இவர்களால் ஜரோப்பியா, தென் அமெரிக்கா நடுகளில் நடக்கும் காளைச் சண்டைகளை நிறுத்த முடியுமா..? ரோட்டில் கிடக்கும் விலங்குகளை பிடித்து பதினைந்து நாட்கள் வைத்திருந்து யாரும் உரிமை கொண்டாடவில்லை என்றால் அதை கொலை செய்யும்... அதற்குப் பெயர் கருணைக் கொலையாம்... இவர்கள் உண்மையிலேயே மாட்டின் நலனில் கொண்ட அக்கறையால்தான் இதற்கு தடை கோருகிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் நகரங்களில் பசுக்களில் மார்க்காம்புகளில் மிஷினை வைத்து பாலை உறிஞ்சி எடுப்பதையும், ஒவ்வொரு தெருவிலும் மாட்டை நிறுத்தி ஊசி போட்டு பால் கறந்து கொடுப்பதையும் இவர்கள் எதிர்ப்பதில்லை... காரணம் அந்தப் பாலில்தானே இவர்கள் காபி சாப்பிடுகிறார்கள்... இந்த இனத்தின் மீதான அடக்குமுறைக்குப் பின்னே ஏதோ ஒரு அந்திய சக்தியும் அதன் பணமும் இருக்கிறது. அதற்கு இவர்கள் மூலமாகவும் இவர்களுக்கு அதன் மூலமாகவும் ஆக வேண்டிய மிகப்பெரிய காரியம் கண்டிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இவர்களால் மற்ற மாநிலங்களில்... மற்ற நாடுகளில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை நிறுத்தத் திராணி இருக்கிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
அதை விடுங்க... நம் பக்கத்து மாநிலமான கேரளாவில் பூரம் திருவிழாவில் யானைகள் பயன்படுத்துவதால் அவை துன்புறுத்தப்படுகின்றன என்று இவர்களால் அதற்கு தடைவாங்க களமிறங்க முடியுமா...? முடியாது... முடியவே முடியாது... காரணம்... கேரளாவின் பாரம்பரியத்து ஒரு பிரச்சினை என்றால் அங்கு சாதி, மதம் பார்ப்பதில்லை... வடக்கு, தெற்கு பார்ப்பதில்லை..., ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பார்ப்பதில்லை... மாநிலமே ஒன்று கூடும்.. தங்கள் உரிமையை விடாமல் போராடுவார்கள். அதனால் அங்கு கால் வைக்க இந்த காவாளிக்கூட்டத்துக்குப் பயம்...? இதே தமிழன் என்றால் சாதியும் மதமும் முதலில் பார்ப்பான்... அப்புறம் வடக்கு தெற்கு என வியாக்கியானம் பேசுவான், ஆளும் அரசும் எதிர்கட்சிகளும் பேனர்கட்டி கொடிப்பிடித்து எதிர்எதிர் கருத்துக்களைப் பேசியே கொல்வார்கள்... எவனும் ஒன்று கூட மாட்டான்... அவனுக்குத்தானே ரத்தம் வருதுன்னு இவன்பாட்டுக்கு வேலைக்குப் போவான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு... தங்களின் வயிற்றை நிரப்ப ஏதோ ஒரு பெரிய திட்டத்தோடு இந்த பெடா களம் இறங்கியிருக்கிறது.
ஒரு கலந்துரையாடலில் பெடா அமைப்பைச் சேர்ந்த முதிர்ந்த அம்மணியை சீமான் மடக்கினார். இது தமிழர்களின் வீரவிளையாட்டு இதைத் தடைசெய்ய நீங்கள் யார் என்று கேட்டார். அதற்கு அந்த அம்மா காளைகள் துன்புறுத்தப்படுகின்றன... இதை நடத்தவே கூடாது என்றார். அப்ப கேரளாவில் யானைப் பந்தயம், கர்நாடகாவில் குதிரைப் பந்தயம் எல்லாம் நடக்குதே அதையெல்லாம் நிறுத்துங்கள் என்று சொன்னதும் அவற்றை ஏன் நிறுத்தணும் என்றவர், குதிரை ஓடுவதற்கு என்றே பிறந்தது என்றார். அப்ப மாடு ஓடாதா..? என்றதும் நான் சொன்னது தவறுதான் என்று அந்த அம்மையார் ஒத்துக்கொண்டார். உங்கள் எதிர்ப்பு மாடுகளைக் காக்கும் என்றால் அந்த எதிர்ப்புக்கு எல்லாருமே ஆதரவு தருவோம். ஆனால் நாங்கள் மாடுகளை வெட்டிச் சாப்பிடுவோம்... ஆனால் விளையாட விடமாட்டோம்.. என்று நீங்க சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது படித்த மாக்களே.
வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது என்பதை எல்லாரும் அறிவோம். அரபு நாட்டுக்கு வரும் மாட்டிறைச்சிகளை அனுப்பும் நாடுகளில் இந்தியாவுக்கே முதலிடம்... இருக்கும் மாடுகளை எல்லாம் கொன்று விற்றுக் கொழிப்போம்... ஆனால் தான் வளர்த்த மாட்டை தன் இனத்தின் முன் பெருமையுடன் அவிழ்த்து விட்டு முடிந்தால் பிடித்துப் பாருங்கடா... என்று மார்த்தட்டிச் சந்தோஷிக்கும் தமிழனை சந்தோஷமாக இருக்க விடமாட்டோம். தொன்மை மொழியாம் தமிழை அழிக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு அலைவோம் என்று சிந்திப்பவர்களே... நன்றாக இருக்கிறது உங்கள் இரக்க குணம். குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் செயலைச் செய்யும் அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டுக்குறியதுதான்.
எது எப்படியோ இது எங்களின் பாரம்பரியம்... வீர விளையாட்டு... இதில் குத்துப்படுவனும்... அடிபடுபவனும் விரும்பித்தான் ஏற்கிறானே ஒழிய... யாரும் கட்டாயப்படுத்தி அவர்களை களம் இறக்குவதில்லை... இது எங்களின் வீரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விளையாட்டு... நாங்கள் மாடுகளுக்கு பொங்கல் வைத்துக் கொண்டாடும் மரபினர்... எங்கள் சிவன் கோவில்களில் மூலவரை தரிசிக்கச் செல்லும் முன்னர் நந்தியை வணங்கிச் செல்பவர்கள் நாங்கள்... நீங்கள் மாட்டை இறைச்சியாகப் பார்க்கிறீர்கள்.. நாங்களை அதை இறைவனாகப் பார்க்கிறோம். எங்கள் இறைவனுடன் நாங்கள் பேச, மகிழ, ஓடிப்பிடித்து விளையாட யாரோட அனுமதிக்காக காத்திருக்க வேண்டும்...? பிள்ளையோடு விளையாட அம்மா அனுமதி வாங்க வேண்டுமா என்ன... எங்கள் மாடுகளை நாங்கள் அவிழ்த்து விடுவோம்... முடிந்தால் பிடித்துப் பாருங்கள் பெடா தோழர்களே...
முகநூலில் ஒரு டிரண்ட் இருக்கு... கமலஹாசன் ஊரை விட்டுப் போறேன்னு சொன்னா 'ஐ சப்போர்ட் கமல்'... அம்மா ஜெயிலுக்குப் போன 'ஐ சப்போர்ட் அம்மா'... இப்படி எல்லாத்துக்கும் எல்லாருக்கும் சப்போர்ட் பண்ணுவோம் நாம்... இப்ப 'ஐ சப்போர்ட் ஜல்லிக்கட்டு' அப்படின்னு பலர் போடுறாங்க... இதுல சப்போர்ட் என்ற வார்த்தைக்கே வேலையில்லை... இது நம் பாரம்பரியம்... தமிழக மண்ணுக்கே உரிய வீரவிளையாட்டு... இது நம் உரிமை... உரிமை வேறு... ஆதரவு வேறு... நம்மளோட சொத்தைக் காப்பாற்றுவது உரிமை... ஆதரவு அல்ல... இது எங்கள் உரிமை... உடமை என்று குரல் கொடுப்போம் நண்பர்களே...
இங்கே நீதி செத்து நாளாச்சு... பெண்ணைக் கொடுத்தோடு மட்டுமில்லாமல் இரும்புக் கம்பியை சொருகியவனுக்கு மைனர் என விடுதலை... குடித்து விட்டு காரை ஓட்டி ரோட்டோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்றவனுக்கு விடுதலை... தீவிரவாதிகளுக்கு உதவினான் என்றாலும் அவனுக்கும் ஜாமீன்.... கோடிக் கோடியாக கொள்ளை அடித்தாலும் பதவியில் இருந்தால் சட்டம் ஒன்று செய்யாது... பத்து ரூபாய் கட்டாத விவசாயிடம் கறாராக பேசும் வங்கிகள் ஆடம்பரமாய் இருப்பவன் எல்லாம் இழந்தேன் என்றால் கோடிகளில் கொடுத்த கடனை தள்ளுபடி செய்யும்... இந்தியாவில் நீதி தேவதை செத்து ரொம்ப நாளாச்சு.... தமிழன் என்றால் எல்லாமே செத்துப் போகும்... நாம் அழியும் வரை அவர்கள் விடமாட்டார்கள்... ஆரம்பிப்போம் நம் ஆட்டத்தை... அப்பத்தான் அவர்கள் அடங்குவார்கள்... அடக்கு முறை எதிர்ப்போம்... அடிபணிய மறுப்போம்.
வீட்டு விலங்கை வன விலங்கென பட்டியலில் சேர்த்து மாட்டுக்கறியும் முயல்கறியும் மான் கறியும் தின்று கொக்கரிக்கும் கூட்டத்துக்கு முன் நம் தென்தமிழக கிராமங்களில் நடக்கும் மாட்டுப் பொங்கலில் நாம் மாட்டுக்குச் செய்யும் மரியாதை என்ன என்பதைக் காட்டுவோம் தமிழர்களே... தமிழன் என்று ஒரு இனம் உலகெங்கும் பரவிக்கிடப்பதைப் போல அவனையும் அவனது பாரம்பரியத்தையும் அழிப்பதற்கென்றே ஒரு இனம் நம்மோடு கள்ளிச் செடியாக பரவிக்கிடக்கிறது. அந்த விஷச் செடிகளை வேரோடு களைந்து நம் இனம்... நம் பாரம்பரியம்... நம் பண்பாடு காப்போம் நண்பர்களே...
பொங்கல் கொண்டாடுவோம்... அதுவும் நம் அன்புக் காளைகளுடன் கொண்டாடுவோம்....
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்... எதையும் நினைத்து வருத்தம் கொள்ளாமல் நம் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய மாடுகளோடு இந்தப் பொங்கலை சிறப்பாக கொண்டாடுங்கள். இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
உங்களின் உண்மையான கருத்துக்களைப் பகிருங்கள்... தாயும் தாரமும் போல் மீண்டும் ஒரு ஆரோக்கியமான விவாதம் செய்வோம்.
ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம் என்பதை தென்தமிழகத்து சிவகங்கை மாவட்டத்துக்காரன் என்ற முறையில் உணர்வோடு சொல்லிக்கொள்கிறேன்.
நன்றி.
மனசு தொடர்ந்து பேசும்.
-'பரிவை' சே.குமார்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு
அடடடடா? சாட்டையடிதான் போங்க!? இத்தனை தான் இத்தனையும் எங்கிருந்ததுப்பா? ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து சொல்லணும் என் நினைப்பவர்களும் ஓட்ட்ட்ட்ட்ட்ட்ட்டீருவாங்கப்பா! நான் வரல்லப்பா இந்த பக்கம்! ஜல்லிக்கட்டும் வேண்டாம் கிள்ளித்திட்டும் வேண்டாம். நிஷா எஸ்கேப்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு
கட்டுரை அருமை...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனசு பேசுகிறது : அ...ம்...மா..!
» மனசு பேசுகிறது : கரும்புனல்
» மனசு பேசுகிறது : கடிதங்கள்
» மனசு பேசுகிறது : மாற்றாந்தாய்
» மனசு பேசுகிறது : கூத்து
» மனசு பேசுகிறது : கரும்புனல்
» மனசு பேசுகிறது : கடிதங்கள்
» மனசு பேசுகிறது : மாற்றாந்தாய்
» மனசு பேசுகிறது : கூத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|