Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Yesterday at 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
தற்குறிப்பேற்ற அணி
4 posters
Page 1 of 1
தற்குறிப்பேற்ற அணி
உங்களிடம்
ஒன்று
சொல்லிப்போவதற்காக
வந்திருக்கிறேன்.
என் காலடித்தடங்கள்
எங்கேனும்
தெரிய
வாய்ப்பில்லை.
கல்லடித்தடங்கள்
நிரம்பிய
சாத்தான் நான்
வறுமை தின்ற
நாட்களின்
எஞ்சிய
வேளைகளில்
நான்
கனவுகள்
வேட்டையாடித்
திரிந்தேன்.
ஒரு பனித்துளி
விரயமாவதை
வியர்வை
வழிய
ரசித்திருந்தேன்.
கூட்டுக்குள்
நானிருந்த
நாள்களில்
புழுவொன்று
பட்டாம்பூச்சியாய்
பரிணமித்ததில்
பரவசமானவன்
நான்.
கண்ணடிகள்
சொல்லடிகள்
முகத்திலும்
முதுகிலும்
துப்பிய
அப்பிய
அசிங்கங்கள்.
தூக்கிச்சுமக்கிறேன்
மூட்டையென
உணர்வுகளை.
ரத்தமும் சதையும்
உள்ள மனிதர்களில்
நானும் ஒருவன்.
உணர்வெனும்
உப்பு மட்டும்
ஒருகல் தூக்கலாய்
திகட்டத்திகட்ட
காதல் செய்கிறேன்
என்னை.
உருகும்
தார்ச்சாலையில்
ஒற்றைச்செருப்புடன்
பொதி சுமப்பவன்
நான்.
மொழியின்
தீண்டலில்
சில வரிகள் செய்கிறேன்.
உறங்கா வேளைகளில்
வார்த்தைகள்
கொண்டு
அடுக்குகிறேன்
என்
வாழ்க்கையை.
என்னை
கவிஞன்
என்று
கர்வப்படுத்திப்
போகாதீர்கள்.
நான்
வார்த்தைகளின்
கஞ்சன்.
என்
எழுத்துக்கள்
என்
விரல்வழிப்
பிரசவங்கள்.
கவருமாயின்
கரம் குலுக்குங்கள்.
புரியவில்லை
எனில்
ஒரு புன்னகையோடு
போய்விடுங்கள்.
இல்லை
இது
கவிதைதானென்றால்.
சொல்லிவிட்டுப்போங்கள்.
ஒரு மீள்பதிவு தான்...
பொதுவாய் மீள்பதிவுகள் நான் இடுவதில்லை...
இதை சுய அறிமுகமாவும் அறியலாம் என்பதால்..
மன்னிக்கவும்..
இனி ஒருபோதும் மீள்பதிவுகள் வாராது..
http://naanselva.blogspot.in/2015/10/blog-post_27.html?m=1
ஒன்று
சொல்லிப்போவதற்காக
வந்திருக்கிறேன்.
என் காலடித்தடங்கள்
எங்கேனும்
தெரிய
வாய்ப்பில்லை.
கல்லடித்தடங்கள்
நிரம்பிய
சாத்தான் நான்
வறுமை தின்ற
நாட்களின்
எஞ்சிய
வேளைகளில்
நான்
கனவுகள்
வேட்டையாடித்
திரிந்தேன்.
ஒரு பனித்துளி
விரயமாவதை
வியர்வை
வழிய
ரசித்திருந்தேன்.
கூட்டுக்குள்
நானிருந்த
நாள்களில்
புழுவொன்று
பட்டாம்பூச்சியாய்
பரிணமித்ததில்
பரவசமானவன்
நான்.
கண்ணடிகள்
சொல்லடிகள்
முகத்திலும்
முதுகிலும்
துப்பிய
அப்பிய
அசிங்கங்கள்.
தூக்கிச்சுமக்கிறேன்
மூட்டையென
உணர்வுகளை.
ரத்தமும் சதையும்
உள்ள மனிதர்களில்
நானும் ஒருவன்.
உணர்வெனும்
உப்பு மட்டும்
ஒருகல் தூக்கலாய்
திகட்டத்திகட்ட
காதல் செய்கிறேன்
என்னை.
உருகும்
தார்ச்சாலையில்
ஒற்றைச்செருப்புடன்
பொதி சுமப்பவன்
நான்.
மொழியின்
தீண்டலில்
சில வரிகள் செய்கிறேன்.
உறங்கா வேளைகளில்
வார்த்தைகள்
கொண்டு
அடுக்குகிறேன்
என்
வாழ்க்கையை.
என்னை
கவிஞன்
என்று
கர்வப்படுத்திப்
போகாதீர்கள்.
நான்
வார்த்தைகளின்
கஞ்சன்.
என்
எழுத்துக்கள்
என்
விரல்வழிப்
பிரசவங்கள்.
கவருமாயின்
கரம் குலுக்குங்கள்.
புரியவில்லை
எனில்
ஒரு புன்னகையோடு
போய்விடுங்கள்.
இல்லை
இது
கவிதைதானென்றால்.
சொல்லிவிட்டுப்போங்கள்.
ஒரு மீள்பதிவு தான்...
பொதுவாய் மீள்பதிவுகள் நான் இடுவதில்லை...
இதை சுய அறிமுகமாவும் அறியலாம் என்பதால்..
மன்னிக்கவும்..
இனி ஒருபோதும் மீள்பதிவுகள் வாராது..
http://naanselva.blogspot.in/2015/10/blog-post_27.html?m=1
selvakumarm- புதுமுகம்
- பதிவுகள்:- : 33
மதிப்பீடுகள் : 10
Re: தற்குறிப்பேற்ற அணி
வரிகள் ஒவ்வொன்றும் வலிகளாகத் தெரிகிறது எனக்கு
ஏன் இப்படி இவைகள் உங்கள் சுய அறிமுகமென்பதாகவும் சொல்லி விட்டீர்கள் நிச்சயமாக இவைகள் வெறும் கற்பனையாக இருக்காது மனதில் ரணமாக உள்ளது மகிழ்வாக தொடருங்கள்
மீள்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் தொடருங்கள்
மாறா அன்புடன் நண்பன்
ஏன் இப்படி இவைகள் உங்கள் சுய அறிமுகமென்பதாகவும் சொல்லி விட்டீர்கள் நிச்சயமாக இவைகள் வெறும் கற்பனையாக இருக்காது மனதில் ரணமாக உள்ளது மகிழ்வாக தொடருங்கள்
மீள்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் தொடருங்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்குறிப்பேற்ற அணி
அனைத்தினையும் மூட்டை கட்டி போகியில் போட்டு விடுங்கள். யாருக்கிங்கில்லை போராட்டம்.தூக்கிச்சுமப்பதனால் தான் வலிகள் அதீதமாய் தோன்றுகின்றதோ என்னமோ? தூக்கிப்போட்டு விடுங்கள், சோகம் வருடிச்செல்லும் வரிகளை பிரவிக்கும் போது படிப்பவர்களையும் அதே சோகத்தினை உணரச்செய்யும் எழுத்தாற்றல் உங்களது!கண்ணடிகள்
சொல்லடிகள்
முகத்திலும்
முதுகிலும்
துப்பிய
அப்பிய
அசிங்கங்கள்.
தூக்கிச்சுமக்கிறேன்
மூட்டையென
உணர்வுகளை.
கவிஞர்கள் தம்மை தாமே மேதைகளென சொல்லிப்பெருமை காட்டும் இந்த நாட்களில் இப்படியும் சிலர், இதைத்தான் நிறை குடம் தளம்பாது என்பதோ?உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்ளும் உங்களுக்கு என் நன்றிகள் செல்வா சார்!என்னை
கவிஞன்
என்று
கர்வப்படுத்திப்
போகாதீர்கள்.
நான்
வார்த்தைகளின்
கஞ்சன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தற்குறிப்பேற்ற அணி
அருமையான கவிதை....
என்னை கவிஞன் என்று கர்வப்படுத்திப் போகாதீர்கள் நான் வார்த்தைகளின் கஞ்சன்...
அப்படிப்போடு....
உண்மையை உரக்கச் சொன்ன வரிகள்...
தற்குறிப்பேற்ற அணி அருமை.
என்னை கவிஞன் என்று கர்வப்படுத்திப் போகாதீர்கள் நான் வார்த்தைகளின் கஞ்சன்...
அப்படிப்போடு....
உண்மையை உரக்கச் சொன்ன வரிகள்...
தற்குறிப்பேற்ற அணி அருமை.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum