Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
இலவசங்கள் - ஒரு பார்வை.
Page 1 of 1
இலவசங்கள் - ஒரு பார்வை.
*
அரசின் இலவசங்கள் மக்களை இருபிரிவினராகப் பிரித்து வைத்துள்ளது.
1.இலவசம் வாங்குபவர்கள்
2.இலவசம் பெறாதவர்கள்.
இவர்களில் தொடர்ந்து இலவசங்களை வாங்குபவர்களைப் பார்த்து இலவசங்களை வாங்காதவர்கள் பொறுமைப்படுவது இயல்பான செயலாகும். இலவசம் வாங்குபவர்கள் எவ்வளவு பேர் அதற்கு தகுதியானவர்கள். பத்து பனிரெண்டு ஆண்டு காலமாக தொடர்ச்சியாக இலவசங்களைப் பெற்று வருவதால் மற்றவர்களுக்கு பொறாமை ஏற்படாதா? அரசின் மீது வெறுப்பு ஏற்படாதா? மேலும் மேலும் இலவசங்களை அளித்து மக்கள் வரிப்பணம் ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுக்கே போய் சேர்ந்துக் கொண்டிருக்கின்றன என்பதை அரசும் அதிகாரிகளும் அறியாத ஒன்றா? மக்கள் மத்தியில் இலவசங்களைப் பற்றி விமர்சனங்கள் என்னவென்று யாருமே அறியாதவர்களா என்ன? வாக்கு வங்கியை மையமாக வைத்து செயல்பாடும் இந்த இலவசம் என்று ஆசை ஒரு தூண்டில் தான். அதில் சிக்கியிருப்பது மக்கள் என்கின்ற மீன்கள். அதிலும் ஒரு பகுதியைச் சார்ந்த மக்கள் மட்டுமே. அவர்களால் அப்பொருள்களை யாராலுமே வாங்கி உபயோகிக்க முடியாததா? பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பான இருந்த அவர்களின் வருமானம் இன்றைக்கும் அதே வரம்பில் தானிருக்கிறதா? அவர்களில் எத்தனை பேர் தனிக்குடும்பாகி விட்டிருப்பார்கள். வேலையில் சேர்ந்து தனிவருவாய் சம்பாதிப்பார்கள். இதுபோன்று ஏராளமாக பிரச்சினைகள் இலவசங்களில் உள்ளடங்கியிருக்கிறது. தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே அதிகமாக இலவசங்களை அளித்து வரும் மாநிலமாகும்.
இலவசங்களுக்கு செலவிடும் வருவாயில் வேலைவாய்ப்பு. சிறுதொழில் வளர்ச்சி, போன்றவற்றை செய்து கொடுத்தால் என்ன? மக்கள் யாரும் இதுவரை எந்த அரசாங்கத்திடமும் எங்களுக்கு இலவசமாகப் பொருள்கள் கொடுங்கள் என்று கேட்பதே இல்லை. அரசியல்கட்சிகள் தான் தேர்தல் நேரங்களில் இலவசம் வாக்குறுதிகளை அளித்து வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றன. இதுபோன்ற அரசின் செயல்பாடுகள் இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு முன்னேற்றமாக அமையாது. இதனால் கடன் சுமையும், டாஸ்மாக் வருமானமும் தான் வீணாக்கப்பட வேண்டியதாயிருக்கும். டாஸ்மாக் வருமானம் இல்லையெனில், வேறு திட்டங்களிலிருந்து பணம் எடுத்து தானே இலவசத்திற்காகச் செலவு செய்ய வேண்டடிலயிருக்கும். இதையெல்லாம் அரசியல்கட்சிகளும் மக்களும் உணராமல் இல்லை. எதிர்காலத்தில் இப்போக்கு தொடரும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. மக்களும் விழிப்புணர்வு பெற்று வருகிறார்கள். எனவே, டாஸ்மாக் எதிர்த்து மக்கள் போராடுவது போன்று இன்னும் சில ஆண்டுகள் கழித்து அரசின் இலவசங்களை எதிர்த்து மக்கள் போராடும் காலம் ஒன்று கனிந்து வரும் என்றே எதிர்ப்பார்க்கலாம்.
ந.க.துறைவன்.

ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|