சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழங்களின் பயன்கள்
by rammalar Yesterday at 13:43

» பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
by rammalar Yesterday at 3:59

» காதல் பிசாசே காதல் பிசாசே ...!
by rammalar Yesterday at 3:43

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by rammalar Thu 6 May 2021 - 15:54

» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
by rammalar Mon 3 May 2021 - 8:57

» மீம்ஸ்
by rammalar Sun 2 May 2021 - 16:33

» தவல வடை
by rammalar Sun 2 May 2021 - 16:27

» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
by rammalar Sun 2 May 2021 - 16:03

» தமிழ்நாடு - தேர்தல் - மக்கள் தீர்ப்பு நிலவரம்
by rammalar Sun 2 May 2021 - 10:39

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா
by rammalar Sun 2 May 2021 - 4:06

» அனுபவ மொழிகள்-தொடர் பதிவு
by rammalar Sat 1 May 2021 - 16:57

» ‘குக்-வித் ஏமாளி!’
by rammalar Sat 1 May 2021 - 15:20

» மே-1 உழைப்பாளர் தின வாழ்த்துகள்
by rammalar Sat 1 May 2021 - 3:23

» திருப்பம் - சிறுகதை
by rammalar Fri 30 Apr 2021 - 15:36

» நடிகர் செல்லத்துரை காலமானார்
by rammalar Fri 30 Apr 2021 - 15:30

» விநாயகன் - பக்தி பாடல்
by rammalar Fri 30 Apr 2021 - 15:26

» பெங்களூரூக்கு சவால் அளிக்குமா பஞ்சாப்?
by rammalar Fri 30 Apr 2021 - 9:37

» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
by rammalar Fri 30 Apr 2021 - 9:34

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 29 Apr 2021 - 18:17

» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
by rammalar Wed 28 Apr 2021 - 16:57

» இலக்கியம் படித்த கௌரி..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:56

» சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் ..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:55

» அது அவன் இல்லை – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:53

» பெண்மனம் – ஒரு நிமிடக் கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:51

» நிழல் நிஜமாகிறது – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:50

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
by rammalar Tue 27 Apr 2021 - 15:23

» உணவுதான் மூலத்துக்கு தீர்வு.
by rammalar Mon 26 Apr 2021 - 17:00

» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
by rammalar Mon 26 Apr 2021 - 15:41

» வாரியாரைக் காக்க வைத்த சாய்பாபா!
by rammalar Mon 26 Apr 2021 - 15:23

» தோஷத்துக்கு பரிகாரம் பண்ணணும்...!
by rammalar Mon 26 Apr 2021 - 15:18

» எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி
by rammalar Mon 26 Apr 2021 - 6:27

» அனுமன் ஜெயந்தி
by rammalar Mon 26 Apr 2021 - 6:18

» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
by rammalar Mon 26 Apr 2021 - 5:32

» சீன கடற்படையில் 3 நவீன போர் கப்பல்கள் இணைப்பு
by rammalar Mon 26 Apr 2021 - 4:40

» விளையாட்டு செய்திகள் - சில வரிகளில்...
by rammalar Mon 26 Apr 2021 - 4:37

கம்பரும் ஔவையாரும்… Khan11

கம்பரும் ஔவையாரும்…

Go down

Sticky கம்பரும் ஔவையாரும்…

Post by rammalar Tue 16 Aug 2016 - 9:25

கம்ப இராமாயணம் எழுதிய பிறகு கம்பர் மிகச்சிறந்த
புலவராக கருதப்பட்டு போற்றப்பட்டார். அரசரும்
கம்பரின் கவி திறமையை மட்டுமே பாராட்டிக்
கொண்டிருந்ததால் மற்ற புலவர்களை அரசன் கண்டு
கொண்டதாக தெரியவில்லை.

இதன் காரணமாக கம்பர் மற்ற புலவர்களை மரியாதை
குறைவாக நடத்த ஆரம்பித்தார். அவருடைய உடையிலும்
ஆடம்பரம் கூடியிருந்தது.

இதை கண்ட ஔவையார், பின்வருமாறு கவி புனைந்தார்.

விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று.


வஞ்சக எண்ணம் கொண்ட இரண்டு பேர் புகழ்ந்து
பேசிடவும், விரல்கள் முழுவதும் மோதிரங்கள் மற்றும்
பட்டாடை உடுத்தி இருக்கும் கவிஞர் எழுதிய பாடல்
நஞ்சினை போல தீயதாக அல்லது வேம்பினை போல
கசந்தாலும் நன்றாக இருப்பாதாகவே கூறுவர்.

ஒருவர் தான் எழுதிய கவி மூலமாக பெயரும் புகழும்
அடைந்திருந்தாலும் அவர் தன்னடக்கத்துடன் இருந்திட
வேண்டும் என்று ஔவையார் கூறுகிறார்…

மேற்கூறிய ஒளவையாரின் பாடலினை கேள்விப்பட்ட
அரசன், கம்பரின் நடவடிக்கையின் மேல் ஔவையார்
அவர்கள் கொண்டிருந்த கோபத்தினை கண்டு,
கம்பருக்கு ஆதரவாக, வேறு எந்த புலவரும் செய்திடாத
ஒரு செயலினை (கம்ப இராமாயணம் எழுதியது) கம்பர்
செய்திருப்பதாக புகழ்ந்தார்.

இதை கேட்ட ஔவையார், பின்வருமாறு பாடினார்.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 17982
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: கம்பரும் ஔவையாரும்…

Post by rammalar Tue 16 Aug 2016 - 9:26


தூக்கணாங்குருவி கட்டுகின்ற எளிதற்ற மற்றும்
நுண்மையான கூடு, கரையான் கட்டுகின்ற உறுதியான
மண்மேடு, தேனீக்கள் கட்டுகின்ற தேன் கூடு,
சிலந்தி கட்டுகின்ற வலை வேறு எவராலும் அவ்வளவு
எளிதாக செயலன்று.

அதைப்போல் தாம் செய்த செயல்களை வைத்து
தற்புகழ்ச்சி பேசுவதில் பயனில்லை.

அதுமட்டுமல்லாமல், தம்மால் சுலபமாக செய்யக்கூடிய
மற்றவருக்கு கடினமான ஒரு செயலினை செய்துவிட்டு
மற்றவரைவிட உயர்வானவர் என்று கூறமுடியாது.
தூக்கணாங்குருவி அதன் கூட்டை சுலபமாக கட்டிவிடும்,
ஆனால், கரையான் கட்டுகின்ற உறுதிமிக்க மண்மேடினை
கட்ட இயலாது.

ஆகையினால் ஒருவர் தம்மால் எளிதாக செய்யக்கூடிய
செயலினை செய்துவிட்டு தாம் பெரியவர் என்று கூற
இயலாது என்று கூறினார்…

————————————–
-சஞ்சய் கோவிந்தசாமி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 17982
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum