சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை
by rammalar Today at 19:09

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:05

» சமையல் குறிப்புகள்
by rammalar Today at 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Today at 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Today at 11:14

» கவிதை கஃபே
by rammalar Today at 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Yesterday at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Yesterday at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Yesterday at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Yesterday at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..? Khan11

பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?

Go down

Sticky பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..?

Post by சே.குமார் on Sat 25 Mar 2017 - 8:52

ன்று காலை எழுந்த போது இடி, மின்னலுடன் மழை அடித்துப் பெய்து கொண்டிருந்தது. வெளியில் ஒரு சில வேலைகள் இருந்தாலும் மழை பெய்யும் போது எங்கு வெளியில் செல்வது என்ற யோசனையோடு இங்கு எதாவது கிறுக்குவோம் என்றும் வாசிப்பதும் விட்டுப் போச்சே என்பதால் சில பதிவுகளையாவது வாசிப்போமே என்றும் நினைத்த வண்ணம் லேப்டாப்பை எடுத்து அமர்ந்த போது 'ஏன் நெருஞ்சியும் குறிஞ்சியும் தொடர்கதையை மீண்டும் தொடரக் கூடாது' என்ற எண்ணம் மனசுக்குள் ஏறி உக்கார, கடைசியாக எழுதிய பகுதியை எடுத்து ஒரு முறை வாசித்து அடுத்த பகுதியை எழுதிப் பதியலாம் என்று முடிவு செய்து அடுத்த பகுதியை எழுதி வைத்துவிட்டு, முகநூலில் ஒரு ரவுண்ட்ஸ் போய் வரலாம் என இங்கிருந்து அங்கு தாவ, இன்றைய பிறந்தநாள் காண்பவர்கள் பட்டியலில்.... அட நம்ம அண்ணாச்சி... 'என்னைப் பற்றி நான்'  பகுதியைப் போல் என் நட்பு வட்டத்தில் இருக்கும் உறவுகளின் பிறந்தநாள் எனக்குத் தெரியும் பட்சத்தில்  பிறந்தநாள் பகிர்வு ஒன்றை தற்போது பகிர்ந்து வருகிறேன் என்பது எல்லாருக்கும் தெரியும். அட நம்ம அண்ணனுக்குப் பிறந்தநாள்... கண்ணன், பார்த்தசாரதி, சுபஸ்ரீ, அபியை எல்லாம்... அதாங்க நம்ம நெருஞ்சியும் குறிஞ்சியும்ல்ல முக்கியமானவங்க... இந்த முக்கியமானவங்களை அப்புறம் பாத்துப்போம்... முதல்ல இவங்களைவிட முக்கியமானவரைப் பற்றி கொஞ்சம் பேசுவோம்ன்னு பதிவை மாத்தியாச்சு.
ஆமா... எந்த அண்ணாச்சிக்குப் பிறந்தநாள்ன்னுதானே கேக்குறேள்... யோசிக்கிறேள்... சை...தொடர்கதையை தொடர்ந்து எழுதிய பாதிப்புல ஐயர் ஆத்துப்பாஷைக்குள்ள போகுது மனசு... சரி வாங்க எப்பவும் போல நம்ம எழுத்துக்குள்ள இறங்குவோம்.
யார் அந்த அண்ணாச்சி...? அப்படின்னு யோசிக்கிறீங்கதானே... அட அதாங்க... இந்த இரட்டையர்... என்னாது எழுத்தாளர்கள் சுரேஷ்-பாலா (சுபா)... இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி... நாதஸ்வர வித்வான்கள் வி.கே.கானமூர்த்தி-வி.கே.பஞ்சமூர்த்தி... இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு... அப்படின்னு நிறையப் பேர் ஒவ்வொரு துறையிலும் ஜெயித்திருக்கிறார்களே... அப்படி வலைத்தளத்தில் இரட்டையர்களாய்... மிகச் சிறப்பாக எழுதி வரும் நம்ம தில்லையகத்தாரில் ஒருவரான துளசிதரன் அண்ணன் அவர்களுக்குத்தான் இன்று பிறந்தநாள்.
பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..? 10372540_629543003839055_6838782966829482119_n
(பிறந்தநாள் கொண்டாடும் துளசி அண்ணனின் போட்டோ முகநூலில் இருந்து திருடப்பட்டது)
தில்லையகத்து க்ரோனிக்கல்ஸ் (THILLAIAKATHU CHRONICLES) என்னும் தளத்தில் கீதா அக்காவும் துளசி அண்ணாவும் மிகச் சிறப்பாக எழுதி வருவதுடன் எல்லாருடைய தளத்துக்கும் வந்து கருத்திட்டு வாழ்த்துவதிலும் சிறப்பானவர்கள். இவர்களின் எழுத்துக்கு எல்லாரும் நீளமான கருத்துக்களை இட, இவர்கள் பதில் சொல்ல... என பதிவை விட கருத்து இன்னும் விரிவான கருத்துக்களைச் சொல்லும். நானெல்லாம் அங்க போனாலும் ரெண்டு வரிக்குள்ள எதாச்சும் சொல்லிட்டு வந்திருவேன். ஆனா அவங்க நம்ம தளம் வந்தா ரசிச்சி... ருசிச்சு... விரிவா... கருத்துச் சொல்வாங்க... சில சமயங்கள்ல ரெண்டு பேரோட கருத்தும் இருக்கும்... சில சமயங்கள்ல அண்ணன் வர முடியலைன்னா அக்காவோட கருத்தும் அக்கா வரமுடியலைன்னா அண்ணனோட கருத்தும் இருக்கும்... அதனோடு அவங்க ஏன் வரமுடியலைங்கிற காரணமும் இருக்கும்.
ஜோதிஜி அண்ணன் எழுதிய 'என்னைப் பற்றி நான்'  பகுதியில் கருத்துத் தெரிவிக்கும் போது அவரின் பதிவுகளை வாசிப்போம்... ஆனால் அதற்கு ஆழ்ந்து சிந்தித்து கருத்திட முடியுமா என்ற யோசனையில் கருத்து இடாமல் வந்துவிடுவோம்... இப்ப இப்ப கருத்து இடுகிறோம் என்று சொல்லியிருப்பார்கள். ஜோதி அண்ணாவின் பகிர்வுக்கு விரிவாய் கருத்து இட முடியாமல் வருபவர்களில் நானும் ஒருவனே... :) அதே நிலைதான் பலரின் பகிர்வுகளுக்கும்... 
கேரளத்தில் ஆங்கில ஆசிரியர் பணி... குடும்பத்தை விடுத்து தனியாக தங்கி இருப்பதாகவும் வார விடுமுறையில் ஊருக்கு வருவதாகவும்... சினிமா பார்ப்பதில் ஆர்வம் அதிகம் என்றும் அவரைப் பற்றி வாசித்திருக்கிறேன். சினிமாவில் நாட்டம் உண்டு என்பதை அவரின் குறும்படங்கள் சொல்லும்... நல்லா நடிக்கத் தெரிந்தவர் (வாழ்வில் இல்லை என்பதைச் சொல்லிக்கிறேன்... இல்லேன்னா மதுரைத் தமிழன் அவர்கள் இந்த வரிகளை எடுத்து அதகளம் பண்ணிடமாட்டார்) என்பதை குடந்தை சரவணன் அண்ணன், கோவை ஆவி போன்றோரின் குறும்படங்களைப் பார்த்திருந்தால் தெரிந்து கொள்ளலாம். ஆம் நடிப்பில் அசத்தியிருப்பார்.
ஆங்கில ஆசிரியர்... பெரிய மனிதர்... என்பதாலும் பதிவு மூலமே பழக்கம்... இன்னும் நெருக்கமான பழக்கமில்லை என்பதாலும் 'சார்' என்றும் 'மேடம்' என்றும் அழைக்க... (இப்ப முத்துநிலவன் ஐயா, ஜெயக்குமார் ஐயாவெல்லாம் தமிழ்வழி ஆசிரியர்கள் என்பதால் ஐயா போடுறோமுல்ல... இவர் ஆங்கில வாத்தியார்ல்ல அப்ப ஆங்கிலத்தில் சார்ன்னு சொல்றதுதானே சிறப்பு) எங்களுக்குள் மின்னஞ்சல் தொடர்பு வந்த போது 'குமார்... இனி சார்ன்னு சொல்லாதீங்க... பேரைச் சொல்லுங்க... இல்லேன்னா அண்ணன்னே சொல்லுங்க' என்று சொன்னார். நம்மளைவிட ஒரு வயசு கூடன்னாலே அண்ணன் போடுறவன்... இவரைப் பேர் சொல்லி அழைப்பதா என அண்ணன் போட்டாச்சு... அண்ணன், அக்கா, அம்மா, ஐயா, தம்பி, தங்கைன்னு அழைப்பது ஒரு சுகம்தான் இல்லையா...
'என்னைப் பற்றி நான்' பகுதிக்கு எழுதக் கேட்டபோது இருவரும் சேர்ந்து மிக அழகாக எழுதிக் கொடுத்தார்கள். அதில் குடும்பம், குணம் என இருவரும் மாற்றி மாற்றிச் சொல்லி நாம் அறியத் தந்தார்கள். மிகச் சிறப்பான குடும்பம்... சந்தோஷமான வாழ்க்கை... இதைவிட வேறென்ன வேண்டும் என்பதாய் இருந்தது இருவரின் பேச்சு வடிவிலான என்னைப் பற்றி நான்.
சரிங்க... ஊருக்குப் போகும்போது வாய்ப்பிருப்பின் சந்திக்க நினைக்கும் பலரில் இந்த தில்லையகத்து உறவுகளும் இருக்கிறார்கள். அப்படியே குடும்பத்தோட கேரளாவுக்கு ஒரு விசிட் அடிச்சிடலாம்....
துளசி அண்ணனைப் பிடிக்காத வலையுலக நட்புக்கள் இல்லை என்றே சொல்லலாம்... அவரை வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன். வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழவும்... இந்த அன்பு என்றும் தொடரவும்... தில்லையகத்தில் இன்னும் சிறப்பான பகிர்வுகளை இருவரும் எழுதவும் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...
துளசிதரன் அண்ணாச்சி இன்றைய பிறந்தநாளை சந்தோஷமாய்... மகிழ்வாய்... கொண்டாடுங்கள்.
நாளை எங்கள் செல்ல மகளின் பிறந்தநாள்... அதற்கான பதிவு நாளை...
எனக்கென்னவோ ஜீனியஸ் எல்லாம் மார்ச்ல... நல்லா வாசிங்க மார்ச் மாதத்தில் பிறந்திருப்பாங்களோன்னு தோணுது.. :)... நீங்க என்ன சொல்றீங்க..?
வாங்க மக்களே... உங்கள் வாழ்த்துக்களால் அண்ணனின் மனசைக் குளிர வையுங்கள்... இங்கே மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டி குளிர வைக்குது... ஊர்ல வெயில் அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்... வாழ்த்தால் குளிர வையுங்கள்....
முகநூலில் 55 வயசு காட்டுது... அப்பன்னா நமக்கு ரொ....ம்...ப.... மூத்தவர்...  எனவே அவரோட பிறந்தநாள்ல நான் அவருக்கிட்ட ஆசி வேண்டிக்கிறேன்.
பாலக்காட்டுத் தமிழரைப் பார்த்து வருவோமா..? Happy-Birthday-Brother

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum