சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by rammalar Yesterday at 20:55

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by rammalar Yesterday at 19:38

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by rammalar Yesterday at 19:35

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by rammalar Yesterday at 18:02

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by rammalar Yesterday at 17:56

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by rammalar Yesterday at 17:51

» மீண்டும் நவ்யா யார்
by rammalar Yesterday at 17:46

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by rammalar Yesterday at 16:44

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by rammalar Yesterday at 16:42

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by rammalar Yesterday at 16:39

» இந்த வார சிரிப்பு
by rammalar Yesterday at 13:39

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by rammalar Yesterday at 13:31

» கொரோனா- குறுங்கதைகள்
by rammalar Yesterday at 13:21

» துணைவி!- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 8:29

» நன்றி! -ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 8:28

» கேள்வி! - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 8:27

» நகைச்சுவை
by rammalar Fri 30 Oct 2020 - 19:09

» சமையல் குறிப்புகள்
by rammalar Fri 30 Oct 2020 - 13:52

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 30 Oct 2020 - 13:23

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Fri 30 Oct 2020 - 11:14

» கவிதை கஃபே
by rammalar Fri 30 Oct 2020 - 10:55

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Thu 29 Oct 2020 - 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Thu 29 Oct 2020 - 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Thu 29 Oct 2020 - 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Thu 29 Oct 2020 - 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..? Khan11

மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..?

Go down

Sticky மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..?

Post by சே.குமார் on Sat 1 Apr 2017 - 21:15

ரு சில காரணங்களால் கதைகளை இங்கு பகிர்வதில்லை என்ற முடிவில் இன்னும் மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் ஏதாவது தளங்களிலோ மின்னிதழ்களிலோ எனது கதைகள் வெளிவந்தால் அதை இங்கு பகிர்கிறேன் என்பதை எல்லாரும் அறிவீர்கள். மற்ற பகிர்வுகளுக்கு இருக்கும் வரவேற்பு கதைகளுக்கு அதிகமிருப்பதில்லை அதிலும் குறிப்பாக தொடர்கதைகள் என்றால் வாசிக்காமல் விலகிச் செல்பவர்களே அதிகம். அப்படியிருக்க நான் இனிப் பதிவதில்லை என கதைகளை நிறுத்திய போது மனசு தளத்தில் வந்து கொண்டிருந்த எனது நான்காவது தொடர்கதையும் 17 பகுதிகளுடன் நிலைக்குத்தி நின்று விட்டது. அந்தத் தொடரை நிறுத்தி சரியாக ஏழு மாதம் ஆகிவிட்டது. அதன் பின் அந்தத் தொடரை எழுதி முடிக்காமல் அப்படியே இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தொடர்கதையை அவ்வப்போது எழுதித்தான் வெளியிடுவது வழக்கம். அதனால் அந்தக் கதை அப்படியே கிடக்கிறது... அதை எழுதி முடிக்க வேண்டும் என்ற காரணத்தால் மீண்டும் இங்கு பதியலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்... எழுதி முடிக்கணுமே அதுக்காக வேணும் இங்கு பகிரவேண்டும்.
'நெருஞ்சியும் குறிஞ்சியும்' என்னும் தொடர் இரண்டு களங்களில் பயணித்தது என்பதை அறிவீர்கள்.
மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..? 3046d050ca2418e94ae78e42931f982b

ஒரு களம் 'குறிஞ்சியாய்'... கல்லூரி, காதல் எனப் பயணிக்கிறது...  இதில் முக்கியமாய் சுபஸ்ரீ, பார்த்தசாரதி, கண்ணன்... நாயகி சுபஸ்ரீயை அவளின் மாமா மகன் பார்த்தாவுக்கு கட்டி வைப்பது என்பது வீட்டில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு. அதனால் அவர்கள்  இருவருக்குள்ளும் கேலி, கிண்டல் சில நேரங்களில் எலியும் பூனையுமாய் சண்டை... பார்த்தா வீட்டிற்கு வரும் கல்லூரி நண்பன் கண்ணன் மீது சுபஸ்ரீக்கு காதல் வர, நண்பனுக்கு மனைவியாகப் போறவளின் மனசுக்குள் நானா...? என்ற கவலையோடு ஆரம்பத்தில் விலகி, மெல்ல மெல்ல காதலுக்குள் விழுகிறான் கண்ணன்.  தங்கள் காதலை எப்படி வீட்டில் சொல்லி சம்மதம் பெறுவது...? குறிப்பாக பார்த்தாவிடம் இதை எப்படிச் சொல்வது...? என்பது குறித்த குழப்பத்தின் பின் பார்த்தாவின் தங்கை அபியின் மூலமாக விஷயத்தை வெளிக் கொண்டு வர கண்ணன் முயல, பார்த்தாவிடம் சொல்லி சம்மதம் பெற சுபஸ்ரீ முயற்சிக்கிறாள். இவர்களின் முயற்சி வென்றதா என்பதற்கு முன்னர் கதை நின்றது.
மற்றொரு களம் 'நெருஞ்சியாய்'... வேலாயுதம் என்னும் கிராமத்து விவசாயியின் வாழ்க்கைக்குள் பயணிக்கிறது. தீவிர சாதீய வெறியர் அவர்... சாதி.... சாதி... எனப் பேசக்கூடியவர். அவரின் மூத்த மகன் காதல் திருமணம் என்பதால் அவனை ஒதுக்கி வைத்திருக்கிறார். அவனுடன் குடும்பத்தில் யாரும் பேசக்கூடாது என்பது அவரின் கட்டளை. அதை யாரும் மீறக்கூடாது என்பதிலும் அவர் தீவிரவாதியாக இருக்கிறார். சின்னவனுக்கு அண்ணனை வீட்டில் சேர்க்க வேண்டும் என்று ஆவல்... அக்காவும், அத்தானும் கூட மூத்தவனுக்கு ஆதரவாய் பேச... பக்கத்து வீட்டு பஞ்சநாதனுக்கும் இந்த சாதி மாறிய காதல்... அதனால் வீட்டை விட்டே ஒதுக்கி வைத்தல் என்பதில் துளியும் விருப்பமில்லை. பலமுறை சொல்லியும் பாத்துட்டார். ஆனாலும் வேலாயுதம் செத்தாலும் அவன் இங்க வரக்கூடாது என்ற கருத்தில் இருந்து மாறவில்லை. சின்னவன் அண்ணன் விவரங்குறித்து பேச ஊருக்கு வந்திருக்கிறான். அப்பாவிடம்  அதற்கான பேச்சை ஆரம்பித்தான்... ஆனால் முடிவு...? அதுதான் கிடைக்கலையே... அதுக்கு முன்னாலதான் கதை நின்று போச்சே...
ஆக மொத்தம்  இந்த இரண்டு களத்துக்கும் முடிவு கிடைக்க... கதையை எழுதி முடிக்க இங்கு மீண்டும் தொடர வேண்டும்... எனவே அடுத்த வாரம் முதல் தொடரலாம் என்று நினைக்கிறேன்... ஊருக்குப் போகுமுன்னர் முடிய வாய்ப்பில்லை... இருப்பினும் தொடர்ந்து சனிக்கிழமைகளில் பதிந்து முடிக்கலாம்ன்னு நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க...? தொடர்வோமா வேண்டாமா..?
சிற்றிதழ் உலகம் என்னும் சிற்றிதழை நடத்தும் பெரம்பலூர் ஐயா. திரு. கிருஷ் ராமதாஸ் அவர்கள் (வலைத்தளம் : சிற்றிதழ் உலகம்) . சிற்றிதழை அச்சுப்பிரதியாக மாற்றி இரண்டாவது இதழ் முதல் வெளியிடுகிறார். இந்த அச்சுப் பிரதி வியாபார நோக்கிலானது அல்ல... சிற்றிதழ்கள் பல தொடங்கி, தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் வேர் விட்டு கிளை பரப்ப வேண்டிய நிலையில் முளையிலேயே கருகிவிடுகின்றன. சிற்றிதழ்கள் அருகி வரும் நிலையில் தான் ஆரம்பித்த சிற்றிதழ் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அச்சுப் பிரதியாக மாற்றியிருக்கிறார். சந்தாதார்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பத்திரிக்கையின் அச்சுப் பிரதி தயாரிக்கப்பட்டு சந்தாதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மிகச் சிறந்த முயற்சியாளர்... சிற்றிதழ்களை ஊக்குவிப்பதுடன் புதியவர்களின் எழுத்துக்கு களம் அமைத்துக் கொடுக்கும் ஐயா ராமதாஸ் அவர்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால் குறைந்தபட்சம் ஆறு இதழுக்கு ரூ.120 அவரது வங்கிக் கணக்கில் இட்டு விவரம் அனுப்பினால் இதழ் உங்கள் வீடு தேடி வரும். விருப்பமுள்ளாவர்கள் இணைந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்கள் வேண்டுமெனில் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
சந்தா தொகை அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்...
மனசின் பக்கம் : தொடரலாமா..? சந்தாதாரர் ஆகலாமா..? 17440385_1257513240968672_2012168118_n

நாளை சிறப்புப் பதிவாக மற்றொரு பதிவு வர இருப்பதால் இது அவசரமாக எழுதப்பட்ட பகிர்வு. தொடர்கதை பதியலாமா... வேண்டாமா என்பதைச் சொல்வதுடன் விரும்பினால் சிற்றிதழ் உலகத்துடன் இணைந்து கொள்ளுங்கள்.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum