Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
2 posters
Page 1 of 1
ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
‘ஆஹா! ஆடி வந்துவிட்டது. அனைத்தையும் தள்ளுபடியில்
வாங்கிக் குவிப்போம் என்று பலருக்கும் மனதில் உற்சாகம்
துள்ளல் நடை போடும் நேரம் வந்துவிட்டது.
-
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பதற்கு தக்கபடி விவசாய
வேலைகளைத் துரிதப்படுத்த விவசாயிகள் புறப்படுகிறார்கள்.
‘ஆடியில் தேடிக் குளி’ என ஆடி 18-ம் பெருக்கை வரவேற்க
தயாராகிவிட்டனர் பெண்கள். ஆடி வந்துவிட்டது,
-
அம்மனுக்கு கூழ் ஊற்றி மனம் குளிர ஏற்பாடு செய்கின்றனர்
ஆன்மிக அன்பர்கள். இப்படி எல்லோரும் ஆடியின் வருகையை
ஆரவாரமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கும்போது,
அடடா… ஆடியல்லவா வந்துவிட்டது என மனம் ஏங்குகின்றனர்
புதுமணத் தம்பதிகள்.
-
இத்தனைச் சிறப்புகள் இருக்கும்போது, புதிதாகத் திருமணம்
ஆன பெண் ஏன் முதல் ஆடி மாதத்தில் தன் கணவரைப்
பிரிந்திருக்கவேண்டும்? ‘ஆடி மாதம் புதுமணத் தம்பதியை
ஏன் பிரிக்கிறார்கள்? என்பது பற்றி வாஸ்து மற்றும் ஜோதிட
நிபுணர் யோகஸ்ரீ மணிபாரதியிடம் கேட்டோம்.
–
ஆடியும் புனிதமும்
–
சூரியனை பூமி சுற்றி வரும் 360 டிகிரி வட்டப் பாதையில்,
பூமி சூரியனைக் கடக்கும் ஒவ்வொரு 30 டிகிரியும் ஒவ்வொரு
மாதமாகின்றன. இந்த 12 மாதங்களும் உத்தராயணம்,
தட்சிணாயணம் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன.
-
இதில் ஆடி மாதம் தட்சிணாயணத்தின் தொடக்க மாதமாக
அமைகின்றது. வெயில் கொடுமையில் இருந்து பூமி விடு
படுகிறது. எனவே ஆடி மாதம் சிறப்பு பெறுவதுடன்,
அம்மனுக்கு உகந்த மாதமாகவும் வழிபடப்படுகிறது.
-
ஜோதிட சாஸ்திரப்படி, பூமியின் வடகிழக்குப் பகுதி கன்னி
வீடாக அமைகின்றது. பூமிக்கும் ஆகாயத்துக்கும் உள்ள
தொடர்பில் கன்னியிலிருந்துதான் காஸ்மிக் அலைகள்
மீனத்தை நோக்கி வருகின்றன.
-
ஆனால், காந்தப் புயலோ கும்பம், மகரத்திலிருந்து கடகம்,
சிம்மம் நோக்கி பாய்கின்றது. இந்த வகையில், வடக்கில் இருந்து
தெற்கு நோக்கிச் செல்லும் காந்தப் புயல் கடக வீட்டில்
அதாவது ஆடிமாதத்துக்கு அதிக ஆற்றலுடன் வருகின்றது
-
இதனையே, கடகம் ஆடி முதல் மேல் வரிசையாக ஆனி,
வைகாசி, சித்திரை, பங்குனி, மாசி ஆகிய மாதங்கள்
சக்தியான பராசக்தியாகவும், சிம்மம், கன்னி, துலாம்,
விருச்சிகம், தனுசு, மகரம் சிவன் எனும்
பரமேஸ்வரராகவும் கொள்ளப்படுகிறது.
–
————————–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
–
திருமணம் செய்கிறார்களே?
ஆடிமாதத்தில் புது மணத்தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால்,
அவர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தைகள் பிறக்கும்.
அப்போது வெயில் உக்கிரமாக இருக்கும், போதாக்குறைக்கு
அக்னி நட்சத்திரமாக இருக்கும். அதனால்தான் புது மணத்
தம்பதியைப் பிரித்து வைத்தனர்.
-
ஆனால், ‘பஞ்சாங்கங்களில் ஆடியில் முகூர்த்தம் உள்ளதே,
சில வகுப்பினர் ஆடியில் திருமணம் செய்கின்றார்களே’,
என்றெல்லாம் பலர் கேள்விகளைக் கேட்கின்றனர்.
-
இதில் மனக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றும்
சமூகத்தினர் அல்லது மனக் கட்டுப்பாடு உள்ளவர்கள்,
ஆடியில் திருமணம் செய்யலாம். சாந்தி முகூர்த்தத்தை
ஆவணியில் சுபநாள்களாகப் பார்த்துத்தான் அமைப்பார்கள்”
என்று ஆடியைப் பற்றி பலவிதமான தகவல்களை அடுக்கினார்.
-
புனித நீராடல்
-
ஆடி 18-ம் பெருக்கு நாள் என்பது தட்சணாயன காலத்தில்
முதல் 18 நாள்கள் சிறப்பானதாக அமைகின்றது. இந்த நாளில்
புது மணத்தம்பதிகள் ஆறு, குளம், கடலில் நீராடி மனக்கட்டுப்
பாட்டுடன் முன் 18 நாள்களும் பின் 18 நாள்களுமாக விரதம்
இருந்தால், வம்சம் தழைத்தோங்கும்.
-
வம்சம் என்பதே ஆணை மையமாக வைத்துத்தான் கணக்கு
எடுக்கப்படும். இதில் பெண் புறக்கணிப்புக்கு இடமில்லை.
ஏனெனில், பெண் கட்டிக் கொடுத்து, கணவன் வீட்டுக்குச்
சென்று விடுகின்றாள். அதன்பின் அவளுக்குத் தன் வீடு,
வம்சம் என்பது எல்லாம் கணவனை அடிப்படையாக
வைத்துத்தான்.
-
வணங்கும் குலதெய்வமும் மாறும். அதனால்தான், திருமணம்
ஆனவுடன் தான் ஒரு பெண்தான் என்பதையும் மறந்து,
ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள்.
–
————————————-
எஸ்.கதிரேசன்
நன்றி = விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
நன்றி அண்ணா.....ஆடியும் முடியும் தருவாயில் உள்ளது..
Similar topics
» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
» தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
» குர்ஆனிய மாதம்
» உலக சர்வமத மாதம்...!!
» ரமழான் அல்குர்ஆனின் மாதம்
» தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
» குர்ஆனிய மாதம்
» உலக சர்வமத மாதம்...!!
» ரமழான் அல்குர்ஆனின் மாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|