Latest topics
» பல்சுவை தொகுப்புby rammalar Yesterday at 20:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 20:23
» ரசித்த கவிதைகள்
by rammalar Yesterday at 16:48
» வெற்றி வந்தால் பணிவு அவசியம்!
by rammalar Yesterday at 16:45
» காடு – உவமைக் கவிஞர் சுரதா
by rammalar Yesterday at 16:30
» வெற்றி மொழிகள்
by rammalar Yesterday at 16:20
» பெண்ணுக்கு கல்வி கொடுப்போம்!
by rammalar Yesterday at 13:43
» அவளே சாமி..! - கவிதை
by rammalar Yesterday at 10:32
» ஒரு மொழிபெயர்ப்பு கவிதை
by rammalar Yesterday at 10:30
» அடிமைப்பெண்ணும் அலுமினிய குண்டானும்!- கவிதை
by rammalar Yesterday at 10:28
» செவி சாய்த்துக் கேட்கும் ஈசன்!
by rammalar Yesterday at 8:31
» நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள் -
by rammalar Yesterday at 7:40
» மீனாட்சியின் கிளி
by rammalar Yesterday at 3:41
» சாய்பல்லவி படம் தாமதம்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:57
» திரிகடுகம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:54
» திருமூலரின் திருமந்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» ஸ்ரீமத் பகவத்கீதை அறிவுரை
by rammalar Mon 19 Apr 2021 - 16:48
» நாலடியார் நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:47
» மஹாபாரதத்தில் இடம் பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:45
» அன்னை சாரதாதேவியின் அன்புமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:42
» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:41
» புத்தரின் போதனைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:40
» மஹா பெரியவாவின் அறிவுரைகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:39
» சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்
by rammalar Mon 19 Apr 2021 - 16:38
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:37
» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Mon 19 Apr 2021 - 16:35
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by rammalar Mon 19 Apr 2021 - 16:07
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by rammalar Mon 19 Apr 2021 - 16:02
» எனக்கு குடிப்பழக்கம் இல்லீங்க...!
by rammalar Mon 19 Apr 2021 - 15:40
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by rammalar Sun 18 Apr 2021 - 13:14
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by rammalar Sun 18 Apr 2021 - 13:05
» நாட்டில், பாலியல் தொல்லை அதிகமாகி விட்டது மந்திரி!
by rammalar Sun 18 Apr 2021 - 13:04
» சல்மான் ருஷ்டியின் "நள்ளிரவுக் குழந்தைகள்"
by rammalar Sun 18 Apr 2021 - 4:48
» கடவுளின் விளையாட்டு!
by rammalar Sat 17 Apr 2021 - 18:20
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by rammalar Sat 17 Apr 2021 - 18:15
கே.ஜே. யேசுதாஸ்
கே.ஜே. யேசுதாஸ்
புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகரும்,
கர்னாடக இசைக் கலைஞருமான கே.ஜே. யேசுதாஸ்
( கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸ்) பிறந்த நாள் இன்று
(ஜனவரி10)
கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்
துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப்
பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும்
ஆவார்.
தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின்
இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ர
சிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்
படுகிறார்.
திரைப்படத்துறையில் சுமார் அரை
நூற்றாண்டு க்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும்
அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்,
குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா,
சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய
மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில்
திரைப்படப் பாடல்களைப் பாடி யுள்ளார்.
சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள
இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான
“பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்
பட்டது.
மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில்,
ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்ப துக்கும்
மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா
மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில
விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்து உள்ளார்.
அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில்
புகழ்பெற்று விளங்குபவர் கே.ஜே. யேசுதாஸ்.
கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை
பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து
வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை
தந்தையிடம் கற்றார்.
திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார்.
சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய
அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும்
இசை பயின்றார்.
முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத்
திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில்
எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில்
‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம்
அறிமுகமானார்.
1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்
தொடங்கினார்.
மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட
12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன்,
ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும்
சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப்
பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.
இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட
பல விருதுகளை பெற்றுள்ளார். .
கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க
மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை
மொத்தம் 45 முறை பெற்றுள்ளார்.
ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா,
சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற
பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும்
நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப்
பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும்
வழங்கியுள்ளார்.
ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என்
அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது
குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர்,
குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே
முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம்
அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல்
திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும்
தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை
தொடங்கி நடத்திவருகிறார்.
இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும்
பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில்
ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில்
16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை
நிகழ்த்தியவர்!
நன்றி-வாட்சப்
====

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 17760
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|