Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
பேசவும் வேண்டுமோ!
Page 1 of 1
பேசவும் வேண்டுமோ!
வசியப்படுத்துகிற வார்த்தைகள் இல்லை.காதல் வழிகிற கவிதைகள் இல்லை. செல்லச் சண்டைகளும், சிதறும் சிரிப்புமாக ஒவ்வொரு நிமிடமும் வளர்கிறது ராஜேஸ்வரி - மோகன் தம்பதியின் காதல். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி - மோகன் தம்பதியிடம் பேசும் போது, ‘கேளடி கண்மணி’ படத்தின் ரீமேக் பார்க்கிற உணர்வு. யெஸ்...
ராஜேஸ்வரி - மோகன் இருவருக்கும் பேசும் திறனோ, கேட்கும் திறனோ இல்லை. ஆனாலும், இந்த உலகின் மிகச்சிறந்த, மிக மகிழ்ச்சியான தம்பதி நாங்கள்தான் என மார்தட்டிச் சொல்லிக் கொள்கிற அன்யோன்யம் நிறையவே இருக்கிறது. அவர்கள் இருவருக்குள்ளும் மொழி தடையாக இல்லை. உதட்டசைவும், பார்வையும், உடல் மொழியுமே ஒருவர் நினைப்பதை இன்னொருவருக்கு உணர்த்துகிறது. மற்றவரிடம் பேசும் போது, தமிழிலும் இந்தியிலுமாக எழுதிக் காட்டிப் புரிய வைக்கிறார்கள்.
‘‘என்னோட 3 வயசுலதான் என் குறையையே கண்டுபிடிச்சிருக்காங்க. அந்தக் காலத்துல இத்தனை மருத்துவ வசதிகள் இல்லைங்கிறதால என் பிரச்னைக்குத் தீர்வே இல்லைனு சொல்லிட்டாங்களாம். என்னோட குறை என்னை அழுத்திடாம, என்னை முடக்கிடாம இருக்கணுங்கிறதுல எங்கப்பா ரொம்ப மெனக்கெட்டார். ஸ்பீச் தெரபி கொடுத்தார். படிக்க வச்சார். கல்யாணம் பண்ணணுங்கிற பேச்சு வந்தப்ப, வீட்ல எல்லாருக்கும் எனக்கு எந்தக் குறைகளும் இல்லாத பெண்ணா பார்க்கணுங்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அப்படியொரு பெண்ணா இருந்தா, என்னை நல்லா பார்த்துப்பாங்கிற சராசரி மனோபாவம்... ஆனா. எனக்கு அப்படியொரு பெண் வேண்டாங்கிறதுல நான் தெளிவா இருந்தேன்.
என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்க, என்னை மாதி ரியே பாதிக்கப்பட்ட ஒருத்தியாலதான் முடியும்னு நினைச்சேன். எனக்காகவே அப்படியொரு பெண்ணைத் தேடிக் கண்டுபிடிச்சாங்க அம்மா, அப்பா. அவதான் ராஜி. அவளைப் பார்த்த முதல் கணமே எனக்குப் பிடிச்சுப் போச்சு. நானாவது வெளியுலக அனுபவங்கள் தெரிஞ்சு வளர்ந்தேன். ஆனா, ராஜிக்கு வீடுதான் உலகமா இருந்திருக்கு. என் குறையைப் பொறுத்துக்கிட்டு, என்னை நல்லா பார்த்துக்க ஒருத்தி வேணும்னு நினைச்சது மாறி, ராஜியை ராணி மாதிரி வச்சுப் பார்த்துக்கணும்னு மனசு சொன்னது. கல்யாணம் பண்ணிக்கிட்டோம். என்னால வெளியில ரொம்ப தூரம் வேலைக்குப் போக முடியாதுனு வீட்டுக்குப் பக்கத்துலயே ஒரு ஆவின் ஃப்ரான்சைஸி எடுத்துப் பார்த்துக்கறேன்.
வீட்லயும் கடையிலயும் எனக்கு உதவியா இருக்கிறது ராஜி. நினைச்சது போலவே நான் அவளை நல்லபடியா பார்த்துக்கறேன்னு நினைக்கிறேன்... எதுக்கும் அதைப் பத்தி அவகிட்டயே கேட்டுப்பாருங்க...’’ என ராஜி பக்கம் பேச்சை திசைத் திருப்ப, அத்தனை நேரமும் கணவரின் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தவருக்கு முகம் மலர்ந்திருக்கிறது.‘‘என்னால பேச முடியாது... சராசரி மனுஷங்களைப் போல நான் இல்லைங்கிறதை உணரவே எனக்குப் பல காலம் ஆச்சு. உண்மை தெரிஞ்சதும், பேச முடியாத துக்கம் பல காலம் என்னைத் துரத்தியிருக்கு.
இதுதான் யதார்த்தம்னு உணர்ந்ததும், வாழ்க்கையை அதன் போக்குல ஏத்துக்கப் பழகிட்டேன். மும்பையில நான் உண்டு, என்னோட தையல் வேலை உண்டுனு என்னோட சின்ன உலகத்துக்குள்ள சந்தோஷமா இருந்தேன். பரதநாட்டிய டிரெஸ் தைக்கிறதுல நான் எக்ஸ்பர்ட். என்னோட குறைகளை மறக்க வெறித்தனமா தைப்பேன். எனக்கு என் கல்யாணத்தைப் பத்தியோ, எதிர்காலத்தைப் பத்தியோ எந்தக் கனவுகளும் ஆசைகளும் இருந்த தில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமலே கல்யாணமும் முடிஞ்சது. ஒரு மனிதரால இத்தனை அன்பைக் காட்ட முடியுமா, இவ்வளவு பாசத்தைப் பொழிய முடியுமாங்கிறதை நான் என் கணவர்கிட்டதான் முதல் முதல்ல உணர்ந்தேன்.
கல்யாணமான நாள்லேருந்து, இதோ 9 வருடங்கள் தாண்டியும் எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு சின்ன விஷயத்துக்குக் கூட சண்டை வந்ததில்லை. நிறைய விஷயங்கள் பேசிப் பேசித்தான் பிரச்னைகளா முடியுதும்பாங்க... எங்களுக்குள்ள வார்த்தைப் பரிமாற்றங்கள் இல்லைங்கிறதாலயோ என்னவோ, வாக்குவாதங்களுக்கும் இடமில்லை. சந்தோஷமோ, துக்கமோ அதை எங்க கண்களும், சிரிப்பும், முகமும்தான் காட்டிக் கொடுக்கும். சண்டை போடற தம்பதிகளைப் பார்க்கிறப்ப எனக்கு வியப்பாவும் வித்தியாசமாகவும்தான் இருக்கும். கணவன்-மனைவிக்குள்ள எதுக்கு இத்தனை சண்டை... இத்தனை விரோதம்னு தோணும்... அன்பும் அக்கறையும் இருக்கிற எந்த உறவுக்குள்ளயும் சண்டை வராதுங்கிறது என் எண்ணம்’’ என்கிற ராஜிக்கு, அன்பும், அறிவும், அழகுமாக பெண் குழந்தை பிறந்ததில் பேரானந்தம்.
‘‘ஸ்ருதிக்கு இப்ப 6 வயசு. அவ என் வயித்துல இருந்தப்ப, எங்களை மாதிரிப் பிறந்துடக் கூடாதேங்கிற பயம் இருந்தது. தினம் கிருஷ்ணருக்கு பூஜை பண்ணுவேன். எல்லாத்தையும் அந்த கிருஷ்ணன் பார்த்துப்பாங்கிற நம்பிக்கை எனக்கு. என் பொண்ணு என்னை அம்மானு கூப்பிட்ட அந்தத் தருணம்தான் என் வாழ்க்கையோட உன்னதம். அவளுக்கு என்னையும் அவ அப்பாவையும் பத்தி நல்லாவே தெரியும். நாங்க பேசறது மத்தவங்களுக்கு வேணா புரியாமப் போகலாம். ஆனா, எங்க பொண்ணுக்கு நல்லா புரியும்.
குழந்தையும் தெய்வமும் ஒண்ணுனு சொல்றது இதைத்தான் போல...’’ - நெகிழ்ந்து உருகுகிற ராஜிக்கு தன் குழந்தையிடம் வாய்விட்டுப் பேச முடியாத வருத்தம் துளியும் இல்லை.‘‘வார்த்தைகளாலதான் அன்பை வெளிப்படுத்தணுமா என்ன? என் குழந்தையைக் கட்டியணைப்பேன். முத்தம் கொடுப்பேன். கைகளை அழுத்திப் பிடிச்சுப்பேன். வார்த்தைகளால விவரிக்க முடியாத அன்பை அதெல்லாம் காட்டும் தெரியுமா?’’ - என்கிறவரின் கரங்களை அதே அன்புடன் பற்றிக் கொள்கிறார் மோகன்.
தினகரன் (சிப்புக் கட்டுரை)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» முதுகை மறைக்கவும் வேண்டுமோ?
» "நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்
» "நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்
» "நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்
» "நினைத்தாலே போதும்" யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அழைப்பு சென்று விடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|