சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் Khan11

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன்

2 posters

Go down

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் Empty புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன்

Post by *சம்ஸ் Fri 11 Mar 2011 - 21:29

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் Dsc_4

பரதநாட்டியத்தை நாம் தொழில் ரீதியாகக் கற்பிக்கின்றோம்.என்றாலும் வருமானத்தினை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுதல் முறையாகாது. புனிதமான பரதக் கலையை பழுது படாமல் பேண வேண்டியது எமது தலையாய கடமையாக இருக்கிறது'' என்ற கருத்தினைத் தெரிவித்தவர் நிர்த்தனா நடனப் பள்ளியின் ஆசிரியர் திருமதி. சிவானந்தி ஹரிதர்சன்.

கொழும்பின் பெயர் பெற்ற நடன ஆசிரியர்களில் ஒருவராக விளங்குபவர் பரத கலாநிதி திருமதி சிவானந்தி ஹரிதர்சன். கலை அரசி, கலைச் செம்மல் போன்ற பட்டங்களையும் பெற்ற இவர் புங்கா விருதையும் பெற்றிருக்கிறார். சக்தி தொலைக்காட்சியினால் இவருக்கு 2009 இல் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.

அண்மையில் இவரது இல்லத்தில் சந்தித்து பரத கலையில் நுட்பங்கள் குறித்து உரையாடினோம். அவ்வேளை இவர் தெரிவித்த கருத்துக்களை இங்கு தருகின்றோம். தனது பரதநாட்டியக் கலைப் பிரவேசத்தை நினைவு கூருகையில் பின்கண்டவாறு தெரிவித்தார் :

""யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் நான் பிறந்தாலும் வளர்ந்தது, படித்தது எல்லாம் கொழும்பில்தான். கொழும்பு சென்ற். லோறன்ஸ் கொன்வென்டில் கல்வி கற்றேன். அதாவது 1963 64 ஆம் ஆண்டில் சிறிது காலம் திருமதி பாலசுந்தரி ப்ராதலிங்கத்திடம் பரதம் கற்க ஆரம்பித்தேன். நான் பரதக் கலையைக் கற்கப் பெரிதும் ஊக்கமாக இருந்தவர் எனது தந்தையார் சம்பந்தன் அவர்கள்தான். நடன வகுப்பிலும், சங்கீத வகுப்பிலும் அவர் என்னைச் சேர்த்து விட்டார். சிறிது காலம் இடைவெளியின் பின் எட்டு, ஒன்பது வயதில் பாலசுந்தரி அவர்களிடம் மீண்டும் பரதம் கற்றேன். அதன் பின்னால் கமலா அவர்களிடம் கற்க ஆரம்பித்து 3 வருடங்கள் படித்தேன். எனது நடன ஆர்வத்தை கண்டறிந்த அவர், நான் தமிழ் நாடு சென்று கலாஷேத்ராவில் பரதக் கலையைக் கற்க வேண்டும் என வற்புறுத்தினார். தேவையான ஒழுங்குகளைத் தாமே செய்து தருவதாகக் கூறி அவ்விதமே செய்து தந்தார்.

அங்கு கற்க ஆரம்பித்த நான் திறம்படவே நடனத்தைக் கற்றுக் கொண்டேன். எனவே எனக்கு "டபிள் பிரமோஷன்' தந்தார்கள். மேலும் 3 வருடங்கள் அங்கு கற்று டிப்ளோமா பட்டம் பெற்று 1975ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியேறினேன். கலாஷேத்ராவில் "அத்தை' என நாம் அன்போடு அழைக்கும் திருமதி ருக்மணி அருண்டேலின் ஆசியைப் பெற்றது என் பாக்கியமாகும்.

1975 ஆம் ஆண்டு ஜுன் மாதம் எனது நடன வகுப்பினை ஆரம்பித்தேன். இதனை ஆரம்பித்து வைத்தவர் எனது ஆசிரியர் திருமதி கமலா ஜோன்பிள்ளைதான். அவர்தான் எனது பள்ளிக்கு "நிருத்தனா நடனப் பள்ளி' என்ற பெயரையும் சூட்டினார். முப்பத்தைந்து வருடங்கள் இந்த நடனப் பள்ளியை நடத்தி வருகின்றேன். தற்போது என்னிடம் 60க்கு மேல் பிள்ளைகள் நடனம் கற்கின்றனர்'' எனக் கூறினார். இதுவரை எத்தனை பிள்ளைகளுக்கு அரங்கேற்றம் செய்து வைத்திருப்பீர்கள்? வேறு என்ன நிகழ்ச்சிகளை அரங்காற்றுகை செய்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ""42 பிள்ளைகளுக்கு அரங்கேற்றம் செய்துள்ளேன். இது தவிர நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கின்றோம். முன்னர் வெளிஊர்களுக்கும் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன்.

சகுந்தலை, பாஞ்சாலி சபதம், சீதா கல்யாணம், தேவி தரிசனம், அனுசூயா, கண்ணனின் லீலைகள், கைகேயி வரம், நர்த்தனகாளி, அநார்க்கலி உட்பட பல நாட்டிய நாடகங்களையும் நிர்த்தனா தயாரித்திருக்கிறது'' என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் Empty Re: புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன்

Post by *சம்ஸ் Fri 11 Mar 2011 - 21:29

நாட்டிய நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றிருக்கிறீர்கள். இவை ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கப்படுபவையாக உள்ளன. இதன் சிறப்பம்சம் என்ன என்று கூறுவீர்களா?

என்ற கேள்விக்கு இவர் பதில் தருகையில், ""நாட்டிய நாடகங்களில் கூடுதலான கதாபத்திரங்கள், வெவ்வேறு குணாம்சங்களுடன் தோன்றுகின்றன. அத்துடன் இதில் கதையம்சம் இருக்கின்றது. ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு விதமான பாவத்தை வெளிப்படுத்தும். இவை அழகாக இருக்கும். ரசிகர்களுக்கு இலகுவில் புரியும். அத்துடன் இடையிடையே இசையும் ஒலிக்கும். கூடுதலான பாவம், அடவுகளும் வெளிப்படும். இதனால் ரசிகர்கள் வரவேற்கிறார்கள் எனக் கூறினார்.

"அனார்க்கலி'யை எவ்விதமாகத் தயாரித்தீர்கள்? என்றதற்கு, ""பரதநாட்டியமாகவேதான் தயாரித்து வழங்கினோம். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொலைக்காட்சியிலும் அதனை நாம் செய்தோம்'' எனக் குறிப்பிட்டார் சிவானந்தி.இவரிடம் நாம் கேட்ட கேள்விகளும் பதில்களும் வருமாறு, பரதநாட்டியம் கற்கவென வருகின்ற பிள்ளைகள் அனைவரையும் மாணவர்களாக ஏற்றுக் கொண்டு விட முடியுமா? ஒரு மாணவி அரங்கேற்றம் காண சாதாரணமாக எத்தனை வருடங்கள் கற்க வேண்டும்?

""ஆரம்பத்தில் தாளம் தான் முக்கியமானது. எல்லாவற்றிற்கும் மேலாக நடனம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் முக்கியமானது. ஒரு மாணவி நடனத்தைக் கற்பாரா? இல்லையா? என்பதனை அவரது செயற்பாட்டினால் எம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு மாணவியால் அதனைப் பின்பற்றிக் கற்க முடியாது என்பது எமக்கு விளங்கினாலும் உடனடியாக நிறுத்திவிடுவதில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்கள் அவதானித்த பின்னர்தான் எனது கருத்தை மாணவிக்கு விளங்க வைத்து நிறுத்தி வைப்பதுண்டு. ஆனால் அப்படிப் பெரும்பாலும் இல்லை. அரங்கேற்றம் எப்போது செய்யலாம் எனக் கேட்டீர்கள். நிச்சயமாக ஒரு மாணவி ஆறு அல்லது ஏழு வருடங்கள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்துக் கற்க வேண்டும். அப்போதுதான் ஒரு தராதரம் வரும். ஏழு அல்லது எட்டு வருடங்கள் கற்பது மிகவும் நல்லது. அவசரமாக அரங்கேற்றம் செய்வது சரியாகாது. அரங்கேற்றம் என்பது ஒருவர் அரங்கில் ஏறுவதற்கு ஒரு தகுதியைப் பெறுகிறார் என்பதுதான். அது ஓர் ஆரம்பந்தான். அதற்கு மேல் படிப்படியாகப் பல விடயங்களை ஆழ்ந்து கற்றுப் பயிற்சி பெற வேண்டியிருக்கிறது என்பதை மறக்கக் கூடாது.

பிள்ளைகளுக்கு நடனத்தைக் கற்பிக்கும் போது உங்கள் அனுபவம் எப்படி?

"நடனம் கற்க வருபவர்களுக்கு அந்தப் புனிதக் கலையைத் திறமையாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மகா முக்கியமானது. பிள்ளைக்குப் படிப்பு முக்கியமானதுதான் என்றாலும் நடனத்தையும் ஆர்வம் குன்றாமல் கற்க பெற்றோர் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

நான்கு வருடங்கள் அடவுகளைப் படிக்க வேண்டும். சிலர் இதனைக் கற்கும் போது சலிப்புக் கொள்வதுமுண்டு. ஆனால் சிலர் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். அடவை முறையாகக் கற்றுக் கொண்டால் அலாரிப்பு, ஜதீஸ்வரம், வர்ணம், தில்லானா ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள இலகுவாக இருக்கும். அது போன்று நிருத்தியம், பாவம் ஆகியனவும் முக்கியமாகும். பரதக் கலை சிறக்க திறமையும் உண்மையான உழைப்பும் அர்ப்பணிப்புச் சிந்தனையும் கட்டாயமான தேவையாகும். பரத அரங்கேற்றத்தை எல்லாப் பிள்ளைகளாலும் செலவழித்துச் செய்ய முடியாதிருக்கிறது என்றொரு கருத்து இருக்கிறது. இதற்கு என்ன செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்? அப்படியான பிள்ளைகள் வேறு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுடன் சேர்ந்து அரங்கேற்றத்தைச் செய்யும் போது செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். 1982இல் நானும் மூன்று பிள்ளைகளுக்கு இப்படி ஒரே மேடையில் அரங்கேற்றம் செய்து வைத்திருக்கிறேன். அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம் போன்றவற்றைக் குழுவாகவும் பதத்தைத் தனித்தும் தில்லானாவைக் குழுவாகவும் அப்போது ஆடலாம்.

""பரதக் கலையைக் கற்றவர்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறார்கள். இவர்கள் ஆசிரியர்களாகும் வாய்ப்பு எவ்விதமாக உள்ளது?''

""முதலில் பரத நாட்டியக் கலை ஆசிரியர்களாக விரும்புகின்றவர்கள் அத்துறையில் மேலும் மேலும் கற்று, உயர் பரீட்சைகளிலும் சித்தி கண்டு பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் ஆசிரியராக முடியும். தற்போது பாடசாலைகளிலும் நடன ஆசிரியப் பதவிகளைப் பெற வாய்ப்புண்டு. சொந்தமாகவும் நடனப் பள்ளிகளை அமைத்து ஆசிரியராகச் செயற்பட முடியும். சிலர் வேறு நடனப் பள்ளிகளில் சேர்ந்தும் நடன ஆசிரியராகச் செயற்படுகிறார்கள். இதில் ஒரு வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் கலாஷேத்திரத்துக்குச் சென்று பட்டம் பெற்று வந்த சிலர் தாங்களாகவே இயங்க முடியுமாக இருக்க, வேறு ஆசிரியர்களின் கீழ் நடன ஆசிரியராகச் செயற்படுவது.

தற்போது பரதநாட்டியத்துடன் வேறு வகையான நடனக் கலையும் சேர்த்துக் கொள்வதைக் காணக்கூடியதாக உள்ளதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஆமாம். இதை ஊதண்டிணிண என்கிறார்கள். இதை என்னால் ஏற்க முடியாது. பரதநாட்டியக் கலை என்பது சாஸ்திரியமானது. புனிதமானது. தொன்மையானது. அந்த புனிதத்துவத்துக்கு களங்கம் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டியது பரதநாட்டியக் கலைஞர்களாகிய எங்களது கடமை. வெறும் வருமானத்துக்காக மட்டும் நாம் செயற்படுதல் தகாது. அதை அர்ப்பணிப்புடன் நாம் பாதுகாக்க வேண்டும்.

உங்களது குடும்பத்தில் வேறு யாராவது பரதநாட்டியத் துறையில் ஈடுபாடு காட்டுகின்றார்களா? '

""எனது தாய் தந்தையர் கலையில் ஈடுபாடு உள்ளவர்கள். தற்போது எனது மகள் நிர்த்தனா எனது மாணவியாக பரதநாட்டியம் கற்று கடந்த 2000ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்திருக்கிறார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் பார்க்கின்றார். எனது மகனும் கர்நாடக சங்கீதத்தை கற்று வருகிறார். அதேவேளை எனது தகப்பனாரைப் போன்று கணவரும் என் பரதநாட்டியப் பணிக்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவராக இருக்கின்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்'' என சிவானந்தி ஹரிதர்சன் குறிப்பிட்டார்.

சந்திப்பு : அன்னலட்சுமி இராஜதுரை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் Empty Re: புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன்

Post by மீனு Fri 11 Mar 2011 - 22:52

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் 331844 புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் 331844
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன் Empty Re: புனிதமான பரத கலையை பழுது படாமல் பேண வேண்டும்- பரத கலாநிதி சிவானந்தி ஹரிதர்சன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum