சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...
by rammalar Tue 14 Jan 2025 - 14:08

» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44

» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45

» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44

» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48

» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08

» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06

» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48

» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41

» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39

» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38

» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36

» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35

» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01

» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21

» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10

» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34

» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15

» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00

» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42

» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10

» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17

» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47

» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57

» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29

» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06

» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! Khan11

நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !

Go down

நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! Empty நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !

Post by rammalar Tue 10 Dec 2024 - 13:38

நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் ! Main-qimg-a32f6f43e02c9a23bda513cea6f5d3e8
--
ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.


போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார்.


 இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்..


அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது “அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்.
சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்” என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். 


சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது.


அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்.


அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்.


அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி
வெடவெடவென நின்றான்.


பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. “பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்”. அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில்
கண்கள் அரண்டு போய் இருந்தது. 


பின், ஒருவித வெறியுடன் “அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்..” என்றான்.
ஜோக்கு ! ஜோக்கு!


சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்!


1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.)


2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..)


3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்.


4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)


நன்றிகள் – முக நூல் Mohan Krishnasamy
-உமர்ஷெரீப் ஹபிபுல்லா-தமிழ் கோரா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum