சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

நெஞ்சின் அலைகள். Khan11

நெஞ்சின் அலைகள்.

Go down

நெஞ்சின் அலைகள். Empty நெஞ்சின் அலைகள்.

Post by ஹம்னா Sun 3 Jul 2011 - 13:42

காலை நேரத் தென்றல் சிலு சிலுவென ஜன்னல் வழியே வீசி தூக்கத்தை கலைத்தது. மெல்ல கண்விழித்த நர்மதா கண்களை கசக்கி விட்டுக்கொண்டு வெளியில் பார்த்தாள். தோட்டத்து மலர்கள் பனித்துளி பட்டு சிலிர்த்துக் கொண்டிருந்தன. பரவாயில்லை , புகுந்த வீடு அழகாகவே இருந்தது. வீட்டை சுற்றி இந்தத் தோட்டமும் மிகவும் அழகு.

அறைக்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. ஒரு வேளை நேற்றிலிருந்து காணாமல் போயிருந்த கணவனாக இருக்குமோ? ஆவலுடன் ஓடி கதவைத் திறந்தால் மாமியார் ராஜேஸ்வரி அம்மாள் நின்று கொண்டிருந்தார்.

"நர்மூ, இந்த வீடு உனக்கு புடிச்சிருக்கா? " என்று கேட்டபடி உள்ளே வந்தார் மாமியார்.

"பிடிச்சிருக்குங்க அத்தை " என்றாள் புன்னகைத்தபடி.

ஒரு நிமிடம் அவளது முகத்தையே பார்த்தபடி இருந்த ராஜேஸ்வரி "நர்மு அவனுக்கு ஏதோ வேலை கொஞ்சம் அதிகம் போல, ராத்திரி பன்னண்டு மணிக்கு வந்தவன் விடியறதுக்கு முன்னமே கிளம்பிட்டான். நீ குளிச்சுட்டு வா, சாப்பிடலாம்" என்று கூறிவிட்டு வெளியேறினாள்.

"ச்சே , என்ன வாழ்க்கை இது' நினைத்தபடி அறைக்குள் திரும்பி நடந்தாள் நர்மதா.

சுவரில் அவள் கணவன் ஆனந்தின் பெரிய புகைப்படம் அவளைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.

புகைப்படத்தில் சிரித்தால் மட்டும் போதுமா? நேரில் சரியாக பார்ப்பது கூட கிடையாது. திருமணமான இந்த ஒரு வாரத்தில் இரண்டு வார்த்தைகள் பேசியிருந்தால் அதுவே அதிகம்.

திருமணத்திற்கு முன்பே அவள் கேள்விப்பட்டது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். இதே தெருவில் வசிக்கும் அவளது தோழி வசந்தி தான் சொன்னாள். அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்பியதாகவும் அவனது வீட்டில் ஒப்புக்கொள்ளாமல் அவனுக்கு இவளை திருமணம் செய்வதாகவும்.

அதாவது கட்டாய கல்யாணம்.

"ஏய் பாத்துடீ அவர் கிட்ட எதையும் கேட்டு வைக்காதே. பொதுவாவே அவருக்கு இந்த விஷயத்தப் பத்தி யாரும் பேசினா பிடிக்காதாம். முடிஞ்ச அளவுக்கு நீ ஒதுங்கி இருந்தா கூடிய சீக்கிரம் அவரே மாறிடுவார், எதையாவது கேட்டு அவருக்கு வேண்டாத மனைவி ஆயிடாதே" என்று அக்கறையாய் அறிவுரை செய்தாள் வசந்தி.

அவள் கூறிய மாதிரிதான் இருந்தது அவனது நடவடிக்கைகளும். இல்லையென்றால் திருமணமான மறுநாளே யாராவது அலுவலகத்தில் போய் உட்கார்ந்து கொள்வார்களா?

இத்தனைக்கும் நான் ஒன்றும் அழகில் குறைந்தவள் அல்லவே.

மனம் வேதனையாக இருந்தது. இதைப் போய் யாரிடம் சொல்வது?

இயந்திரம் போல குளித்தாள் சாப்பிட்டாள். பொழுது போவது மிகவும் சிரமமாக இருந்தது. அவனோடு இருக்கும்போது இறக்கை கட்டிக்கொண்டு பறக்கும் மணித்துளிகள் இப்போது நகராமல் அடம் பிடிப்பதுபோல் இருந்தது. இன்றாவது அவனைப் பார்க்க முடியுமா? இப்போதெல்லாம் அவனை ஒருமுறை பார்த்தாலே போதும் என்பதுபோல இருந்தது மனது.

மாலை ,அழைப்பு மணியோசை கேட்டது. ஓடிப்போய் கதவைத் திறக்கலாமா? ஒருவேளை அவன் முகம் சுளித்தால் அதை தாங்கும் சக்தி நமக்கில்லையே?

அறைவாசலிலேயே ஒளிந்துகொண்டு பார்த்தாள். உள்ளே வந்தது அவன்தான், அவன் கண்கள் எதையோ தேடுவதுபோல இருந்தது,


" ராமண்ணா..எங்கே அம்மாவைக் காணோம்?"

ஓஹோ ,அவன் தேடியது அவன் தாயைத்தான். ஏமாற்றமாக இருந்தது.

"அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க சின்னையா, நா போயி சின்னம்மாவைக் கூப்பிடவா? "

"வேணாம் அண்ணே, ஒரு கப் காபி கொடுங்க போதும் ஒரே தலைவலி" என்றபடி சோபாவில் களைப்புடன் சாய்ந்தான்.

தலைவலித் தைலம் தேய்த்து மெல்லப் பிடித்துவிடவேண்டும் என்று எழுந்த ஆவலை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டாள் நர்மதா.

வேலைக்காரன் காபி கொடுக்கலாம், நான் கொடுக்கக்கூடாதா? அந்த அளவிற்கா என் மேல் வெறுப்பு? யோசித்து யோசித்து அவளுக்கும் தலைவலி வந்தது. கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டாள்.

அந்த சமயம் உள்ளே நுழைந்த ஆனந்த் அவள் படுத்திருப்பதைப் பார்த்ததும் மனதுக்குள் அலுத்துக்கொண்டான். என்ன பெண் இவள், புது மணப்பெண்ணின் உற்சாகம் சிறிதுகூட இல்லையே? நான் வந்தால் ஓடிவந்து கதவைத் திறக்க வேண்டும் என்றும் தோன்றவில்லை. அட வரும்போது விழித்திருக்கவாவது வேண்டாமா? இப்படித் தூங்கினால் என்ன செய்வது. ஒருவேளை இவளது தோழி வசந்தி சொன்னதுபோல் இவளுக்கு நம்மை பிடிக்கவில்லையோ?

இல்லையென்றால் இந்தப் பத்து நாட்களில் நான் இவள் மீது பைத்தியமாக அலைய இவளால் மட்டும் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது?. யோசித்தவண்ணம் வெளியேறினான்.

காலை நேரம்.


"அம்மா ..நா நாளைக்கு சாயங்காலம் ஆபீஸ் விஷயமா டெல்லிக்கு போகணும். வர்றதுக்கு பதினஞ்சு நாளாகும்" என்றான் ஆனந்த்

"ரொம்ப நல்லதாப்போச்சு, நம்ம நர்மதாவையும் கூட்டிட்டுப் போயிடு , அவ இங்கே தனியா என்ன பண்ணப்போறா?" என்றாள் ராஜேஸ்வரி பெரிய புன்னகையுடன்.

'அவள் தானாக வருகிறேன்னு சொல்லாமல் எப்படி அழைத்துப்போவது? கேட்டுப்பார்க்கலாமா? அவள் முடியாது என்று சொல்லிவிட்டால் அதை என்னால் தாங்க முடியுமா?' அவனின் சிந்தனையை கலைத்தது ராஜேஸ்வரியின் குரல்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நெஞ்சின் அலைகள். Empty Re: நெஞ்சின் அலைகள்.

Post by ஹம்னா Sun 3 Jul 2011 - 13:48

"என்னடா பேசாம இருந்தா என்ன அர்த்தம்?"

"அவ ஏன் தனியா இருக்கப்போறா? அதான் நீங்கல்லாம் இருக்கீங்கல்ல" சொல்லிக்கொண்டிருக்கும்போதே

அறைவாசலில் இதை கவனித்துக் கொண்டிருந்த நர்மதா உள்ளே சென்றுவிட்டது தெரிந்தது.

தாயிடம் வேகமாக பேசி முடித்துவிட்டு உள்ளே வந்த ஆனந்த் லேசான விசும்பல் சத்தத்தை கேட்டு திகைத்தான்

நர்மதா தான் ஒரு மூலையில் அமர்ந்து விசும்பிக்கொண்டிருந்தாள்.

"என்னாச்சு நர்மதா..ஏன் அழறே"

பதில் இல்லை .வெறும் விசும்பல் மட்டுமே .

“நர்மதா உனக்கு இங்கே பிடிக்கலின்னா நீ வேணா உங்க அம்மா வீட்டுக்குப் போயி இந்த பதினஞ்சு நாளும் இருந்துக்கலாம்”. என்றான்

கண்கள் சிவக்க எழுந்து நின்றாள் அவள் "உங்களுக்கு என்னைப் புடிக்கலைன்னா ஒரு துளி விஷம் குடுத்து கொன்னுடுங்க. இப்படி வார்த்தையால கொல்லவேணாம்"

"என்னது? எனக்கு உன்னைப் புடிக்கலைன்னாவா...." திகைத்தான் ஆனந்த்


“ஆமாம். இந்தப் பத்துநாளா நானும் பாத்துக்கிட்டு தானே இருக்கேன்.
உங்களுக்கு என்னை சுத்தமா புடிக்கலை. உங்க காதலி வீணா அளவுக்கு இல்லாம இருக்கலாம். ஆனா நா உங்க மனைவி. உங்கள விட்டுட்டு எங்கேயும் போகமாட்டேன். அதனாலதான் சொல்றேன். நீங்க புடிக்கலைன்னு சொன்னா நா செத்துப்போகவும் தயாரா இருக்கேன்”.

ஆனந்துக்கு தன காதுகளை நம்ப முடியவில்லை.

"நர்மூ நீ என்ன சொல்றே, உனக்கு என்னை இந்த அளவுக்குப் பிடிக்குமா? இப்படீன்னு தெரிஞ்சிருந்தா நா முன்னமே உண்மைய சொல்லியிருப்பேன்".

"எந்த உண்மையை?"

"ஆமா, கல்யாணத்தன்னிக்கு உன் பிரண்டு வசந்தி என்கிட்டே உனக்கு நான் வேறு பெண்ணை காதலிச்ச விஷயம் தெரிஞ்சுட்டதாவும் அதனால நீ என்னை வெறுப்பதாவும் முடிஞ்ச அளவுக்கு உன்கிட்டேர்ந்து விலகியிருந்தா நீ தானா சரியாயிடுவேன்னும் சொன்னா. அதால தான் நா அப்பிடி நடந்துக்கிட்டேன்".

"அப்படீன்னா நீங்க யாரையும் காதலிக்கலையா?"

"இப்போ நெனைச்சுப் பாத்தா அதைக் காதல்ன்னு சொல்ல முடியல. என் கூட வேலை செய்யற வீணா என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்டா. சரி ஒரே ஆபீஸ் ன்னா வசதியா இருக்குமேன்னுதான் நானும் வீட்டுல சொன்னேன். அதைத்தான் யாரோ திரித்து இந்த தெரு முழுக்க சொல்லி வச்சிருக்காங்க. உண்மையை சொல்லனும்ன்னா உன்னைத் தவிர நா வேற யாரையும் காதலிக்கவில்லை. சத்தியமா".

நர்மதாவுக்கு தவறிப்போய் பூக்குவியலின் மேல் விழுந்த மாதிரி இருந்தது.

திகைத்துப்போய் நின்றவளின் காதுகளில் ஆனந்தின் குரல் மென்மையாய் ஒலித்தது

"நர்மூ...இப்படியே நின்னுக்கிட்டு இருந்தா எப்படி? டெல்லிக்கு கிளம்ப வேணாமா..நீ வர்றே தானே"


"ம்ம் ...கண்டிப்பா வருவேன் ,ஆனா அதுக்கு முன்னாடி அந்த வசந்தியப் போயி பாத்து நாலு கேள்வி நறுக்குன்னு கேக்கணும்".

மறுநாள் வசந்தியைத்தேடி அவர்கள் போனபோது அவள் முன்பே வீட்டை காலி செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டது தெரிந்தது.



நெஞ்சின் அலைகள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum