சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Khan11

மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

3 posters

Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:34

மௌலவி, A.முஹம்மது இஸ்மாயீல் ஃபாஜில்பாகவி,

முதல்வர், ஜாமிஆ மிஸ்பாஹுல்ஹுதா, நீடூர்.

'ஒரு மனிதன் பாவியாகிவிட, அவன் உணவளிக்க கடமைப்பட்டவரு(மனைவி)க்கு உணவளிக்காமல் கடமை தவறுவது போதுமாகும்.' (நூல்: அபூதாவூது.)
ஒரு பெண்ணுக்கு திருமணமாகிவிட்டால் அவள் கரம்பிடித்த கணவனுக்கு கட்டுப்பட்டு நடந்து அவனது கௌரவத்தையும், குடும்ப கண்ணியத்தையும் காப்பது அவளது கடமை என்பதில் இருகருத்தில்லை.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற, "நல்ல பெண் எவரென்றால், கணவன் அவளைக் காணும்பொழுது மகிழ்விப்பாள். அவன் கட்டளையிட்டால் கீழ்படிந்து நடப்பாள். தனது விஷயத்திலும்; தமது பொருள் விஷயத்திலும் கணவனுக்கு விருப்பமில்லாத போக்கை கடைப்பிடிக்க மாட்டாள்!' என்ற நபிமொழிக்கொப்ப, ஒரு பெண் பணிந்து வாழ்ந்தால்தான் அவள் சிறந்த பெண்மணி என்ற நற்பெயரை அடைய முடியும்.
கண்ணியம் வாய்ந்த கணவனை அவமதிக்கும் வகையிலும் பெற்ற பிள்ளைகளை நிராதரவாக விட்டும் ஒரு பெண் வாயடித்துக்கொண்டும், வம்பளத்துக்கொண்டும், அடங்காப்பிடாரியாக சுற்றியளைந்தாள் என்றால்…ஊர்மக்கள், இவளா? ராட்சசியாயிற்றே! வாயாடியாயிற்றே பெண்ணுருவில் நடமாடும்…ஆயிற்றே! என்றெல்லாம் (அவள் காதில் விழாதவாறு) பேசத் தலைப்படுவர். இத்தகைய பெண்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்துரைத்துள்ளார்கள்.

'கணவனுக்கு மாறு செய்வதன் மூலமும் வந்தபடி பிறரை சாபமிடுவதன் மூலமும் அனேக பெண்கள் நரகம் புகுத நான் கண்டேன்' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஆக, ஒரு கணவன் தமது மனைவியுடன் இன்புற்று வாழ அப்பெண் நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்க முறைகள், சட்டமுறைகள், வழிபாட்டு முறைகள் பற்றி இஸ்லாம் நன்குரைத்துள்ளது. இதன்படி வாழ்வது இஸ்லாமிய பெண்ணின் கடமையாக இருக்கிறது.
ஆயினும் ஒரு பெண்ணுக்கு இஸ்லாம் கூறிய அளவு அறிவுரைகளை, அவளைக் கரம்பிடித்த கணவனுக்கு எடுத்துரைக்கவில்லையா? என்ற கேள்விக்கணை பல ஊர் முஸ்லிம் பெண்கள் தரப்பிலிருந்து எழுந்தவாறுள்ளது. இவ்வாறு இவர்கள் கேள்வி எழுப்ப நியாயமான காரணங்களும் உள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty Re: மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:34

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒரு பெண் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்? ஒழுக்கம் பேண வேண்டும்? கணவனையும், குழந்தைகளையும், அண்டை அயலாரையும் அவள் எப்படி ஆதரிக்க வேண்டும் என்பதற்கான பெண்ணுபதேசங்கள் நிறைய உள்ளன. அவை ஒவ்வொரு ஊரிலும் பிசங்கங்களில் உபதேசிக்கப்படுகின்றன. ஆனால், இவைபோன்ற அறிவுரைகள் கணவனுக்கும் அதிகம் இருந்தும் கணவனுக்கு செய்யும் உபதேசங்கள் குறைவாக உள்ளன.! இது ஏன்? ஏன்ற கேள்வியை பேண்கள் கேட்கின்றனர்.

தவிர, ஒரு சில குடும்பங்களில் சில கணவன்களால் குடும்பப்பெண்கள் கடும் பிரச்சனைக்கும் தொல்லைக்கும் ஆளாகி, அவனது கொடும்பிடியில் நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நிலை. ஒரு சில கணவன்கள் பெண்களை அடிமைகளைப்போலெண்ணி இழிவுபடுத்துகின்றனர். இன்னும் பலர் தமது குடும்பப்பொறுப்பை எண்ணி சம்பாதிக்காமல் மாமனார் வீட்டை உறிஞ்சிக்கொண்டு மிடுக்குடன் பவனி வருகின்றனர். மற்றும் சிலர் மணமுடித்த கையோடு பெண்ணை அந்தரத்தில் விட்டு திரும்பிப்பாராமல் தலைமறைவாகி விடுகின்றனர். வேறு சிலரிடம் சொல்ல முடியாத உடல்கூறு நோய்கள், கடும் பிணிகள் இருப்பதால் பெண்கள் தமது சுகமான வாழ்வை இழக்கும் நிலை!

இப்படி எத்துனையோ வெகு மோசமான குற்றங்கள் குறைகள் பல கணவன்களிடம் உண்டு. இதில், தந்தை, நாத்திகளின் அவதூறுகளையும் கிசுகிசுப்புகளையும் காதில் போட்டுக்கொண்டு அமைதியின் வடிவங்களாகத் திகழும் பெண்மணிகளை அணுஅணுவாக இம்சித்து சித்ரவதை செய்யும் கொடும்பாவிகளும் உண்டு. ஊர்தோறும் இப்படிப்பட்ட அவஸ்தைகளால் மனம் குமைந்து குமுறி அவதியுறும் அபலைப் பெண்களின் ஈனஸ்வரங்கள்தான் சில சமயம் கேள்விக்கணைகளாக மாறுகிறது.

அதாவது, பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்லாம் இவர்களைப்போன்ற கொடுமைக்கார கணவன்களுக்கு ஒன்றும் கூறவில்லையா? என்பதுதான் அந்தக் கேள்விக்கணைகள்! உண்மையில் கணவன்மார்களுக்கும் இஸ்லாம் நிறைய அறிவுரைகள் நல்கியுள்ளன. இதோ, ஒரு பெண்ணை கரம்பிடித்து விட்டால், அந்த நிமிடமே கணவனின் கடமையென்னவென்பதை தெளிவுபடுத்துகிறது.

நீங்கள் அப்பெண்களை நல்ல முறையில் வாழச்செய்யுங்கள். இது சுருக்கமான திருக்குர்ஆன் வசனமாகும். இதைத்தொடரந்து இவ்வாறு உபதேசிக்கிறான் அல்லாஹ்.

'அவர்களை நீங்கள் வெறுத்தால்; நீங்கள் அவர்களை வெறுக்கலாம்-ஆனால் அல்லாஹ் அவர்களில்தான் உங்களுக்கு பெரும் நன்மைகளை வைத்திருப்பான்.' - அல்குர்ஆன் 4:19
பெண்ணினத்தின்மீதே நல்லபிப்ராயத்தை விதைக்கும் வகையில் இவ்வசனங்களை அல்லாஹ் கூறியுள்ளான். இனிய வாழ்க்கை, இரணவிருத்தி, மன அமைதி போன்ற பாக்கியங்கள் ஒருவன் மணமுடித்தபின் கரம்பிடித்தவள் மூலம் பெறவியலும்-அதை முறையாகப் பெறுவது கணவனின் கடமை என்பது இவ்வசனங்களின் நோக்கம்.

ஒரு மனிதன் பதவி பட்டங்கள் சொத்து செல்வங்கள் குழந்தைப்பேறுகள் மூலம் அடையாத அமைதியை தமது இல்லாள் மூலம் அடைய முடியும். தமது மனைவி மூலம் அவன் காணும் அன்பும் ஆதரவுமே முக்கியமானது, நீடித்தது, கலங்கலில்லாதது! என்பதை இதோ இன்னொரு வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

'நீங்கள் சேர்ந்து வாழும்) மனைவிகளை அவர்களிடம் நீங்கள் நிம்மதி பெறுவதற்காகவே உங்களிலிருந்து அல்லாஹ் அவர்களைப் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும், நேசத்தையும் உண்டுபண்ணினான் - அல்குர்ஆன் 30:21

இந்தளவு பெண்ணின் பெருமையை அல்லாஹ் கணவன்களுக்கு அறிவித்துள்ளான். ஒரு பெண்ணுக்குரிய கடமைகளை தனது திருமறையில் விபரித்துள்ளதுபோல், ஆணுக்கும் தெளிவாக உபதேசித்துள்ளான். இஸ்லாமியப் பெண்களில் பலர் குர்ஆன், ஹதீஸ் அறிவுரைகளை கற்பதிலும் மார்க்க நூல்களை படிப்பதிலும் அக்கறையில்லாமல் இருப்பதால், கணவன்மீது தங்களுக்குரிய உரிமைகளைப் பெறத் தெரியாமல் இருக்கிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty Re: மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:34

பெண்ணுரிமை நிலைநிறுத்தும் உபதேசங்கள் திருக்குர்ஆனில் நெடுகேயுள்ளன. குர்ஆனில் எங்கெல்லாம் பெண்களுக்கான உபதேசங்கள் இடம்பெற்றுள்ளனவோ அங்கெல்லாம் ஆண்களுக்கும், உபதேசிக்கப்பட்டுள்ளன. சுpல எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.

'நபியே! விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறும்!அவர்களும் தமது பார்வையை கீழ் தாழ்த்தி தமது கற்பை அரட்சித்துக் கொள்வார்களாக! அதுவே அவர்களுக்கு பரிசுத்தமானதாகும். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாகும்.' - அல்குர்ஆன் 24:30

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: 'ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக் குரியதாகும். பெண்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே உரியதாகும்.' - ஆல்குர்ஆன் 4:32

இப்படி ஆண்களுக்கும் பெண்ணுரிமைகளை போதிக்கும் பொன்மொழிகள் குர்ஆனிலும், ஹதீஸிலும் சட்ட அமைப்பிலும் நிறையவுள்ளன.
அதேபோல், பெண்கள் விஷயத்தில் ஆண்களுக்கு சற்று அதிகமான அறிவுரைகள் உள்ளன. அதில் முத்தாய்ப்பாக

'அப்பெண்களுக்கு உரிமைகள் உள்ளன! கடமைகள் உள்ளதுபோல்!' என்ற திருக்குர்ஆன் வசனத்தை அறிஞர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். இவ்வசனத்தில் பெண்களின் கடமைகளை காட்டும் சொல்லைவிட அவர்களது உரிமைகளுக்கு குரல் எழுப்பும் சொல் முதன்மை இடம் பெற்றுள்ளது. பெண்களின் நியாயமான உணர்வுகளுக்கு இஸ்லாம் முழுமையாக செவி சாய்த்துள்ளதற்கு இவ்வசனம் ஒன்றே பலமான சான்று!
ஒரு கணவனால், தமது மனைவிக்கு நியாயமான முறையில் வாழ்க்கையை தரவில்லையெனில் அவளுக்கு அன்பான முறையில் விவாக விடுதலை அளித்து விடுவதே அவனது மனுஷத்தன்மைக்கும் மனித நேயத்துக்கும் அடையாளமாகும்.

அண்டை அயலாருக்கும் தமது பணியாட்களுக்கும்-ஏன் முஸ்லிம அல்லாதோருக்கும்-இன்னும் சொல்வதெனில் வாயற்ற ஜீவன்களுக்கும் புற்பூண்டுகளுக்கம் அத்துணை படைப்புகளின் உரிமைகளையும் போற்றச்சொல்லும் இஸ்லாம்-கணிசமான மஹரீந்து கண்ணியமான முறையில் ஒரு பெண்ணை கரம் கோர்க்கச் செய்யும்போது-அவளது பெண்ணுரிமையை எந்தளவு போற்றும்ஃ என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty Re: மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:35

ஒரு பெண்ணை ஆதரித்து பாதுகாக்கும் முறையை அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விளக்கினார்கள்:

'நீங்கள் உண்ணும்பொழுது மனைவியையும் உண்ணச்செய்யுங்கள். உங்களுக்க உடை வாங்கும்போது அவருக்கும் வாங்குங்கள். அவரது முகத்தில் அடிக்காதீர்கள். அசிங்கமாக பேசாதீர்கள். வீட்டில் தவிர (வெளியில்) அவரை கண்டிக்காதீர்கள்.' (ஆதாரம்: அபூதாவூது)
இதுபோன்ற ஹதீஸ்களெல்லாம், ஒரு பெண்ணை இரக்கமின்றி தண்டிப்பதையும், அவளது பாசம் மிக்க பெற்றோரிடமிருந்து அரக்கத்தனத்துடன் அவளை பிரித்து வைப்பதையும், அனாதையாக அவளை விட்டு விட்டு ஒதுங்கி பதுங்கி விடுவதையும், தமது அக, புற நோய்கள் காரணமாக அவளுக்கு வாழ்வளிக்க முடியாத பொழுது, இதமான முறையில் விவாக விலக்களித்து அவளது மறுவாழ்வுக்கு இடந்தராதிருப்பதையும் பெரிதும் கண்டிக்கின்றன.

'ஒரு மணிதர் அவரது மனைவி மக்களை நேர்மையுடன் பராமரிக்க வேண்டியவராக இருக்கின்றார். அது பற்றி அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்!' (ஆதாரம்-புகாரி) என்ற ஹதீஸை சம்மந்தப்பட்ட கணவன்கள் சிந்திக்க வேண்டும். தமது மனைவியை எந்தவொரு வகையில், இம்சித்தாலும், தமக்கு விளையும் இறை முனிவுகள் தண்டனையிலிருந்து எந்த ஆணும் தப்பிக்கவியலாது.
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வில் சமுதாயத்துக்கு அவர்கள் வழங்கிய ஆயிரக்கணக்கான பிரசங்க நிகழ்ச்சிகளில் ஹிஜ்ரீ 9-ஆம் ஆண்டு அவர்கள் நிகழ்த்திய அரஃபாத் பிரசங்கம் வரலாற்று சிறப்பு கொண்டதாகும். இக்காலம் இஸ்லாம் முழுமை பெற்றிருந்த காலமாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறையோனைக் காணச்செல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருந்த காலமாகும். லட்சக்கணக்கான சஹாபாக்கள் குழுமியிருந்த அந்த சபையில் அவர்களின் பெரும்பகுதி பேச்சு பெண்ணினத்துக்கே பெருமை சேர்ப்பதாகவும், அவர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பதாகவும் அமைந்தது.

'மக்களே! பெண்களுடன் நியாயமான முறையில் நடந்து கொள்ளுங்கள்! அவர்கள் உங்களிடம் சிறைக்கைதிகள் நிலையிலுள்ளனர். அவர்கள் உங்களிடம் தப்பாக நடந்து கொள்ளும்பொழுது மட்டும்தான் நீங்கள் அவர்களிடம் கண்டிப்புக் காட்டலாம். அவர்கள் உங்கள் சொல்லைக் கேட்டு நடந்தால், அவர்களை இம்சிக்க நீங்கள் எந்த வழியும் தேடவேண்டாம்.தெரிந்து கொள்ளுங்கள்! உங்கள்மீது உங்கள் மனைவியர்க்கு நியாயமான பல உரிமைகள் உண்டு-அதனைக் காப்பாற்றுங்கள்! முக்கியமாக அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும், உடையும் அளிக்க வேண்டும்.' (ஆதாரம்-புகாரி)

'உங்களில் சிறந்தவர் உங்களின் மனைவியிடம் சிறந்தவராகும்! நான் எமது மனைவியரிடம் நல்லவனாக இருக்கிறேன்'. என்ற நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிக்கிணங்க- ஒவ்வொரு ஆண் மகனும் தனது துணைவியின் உரிமைகளையும், அந்தஸ்துகளையும் காப்பாற்றுவது புனித கடமையாகும்.

நன்றி நீடூர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty Re: மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by gud boy Wed 6 Jul 2011 - 6:33

##* :”@:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty Re: மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 6:42

கண்டிப்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய விடயம்
நன்றி நண்பன் :];:


மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனைவிக்கு மட்டுமா உபதேசம்? Empty Re: மனைவிக்கு மட்டுமா உபதேசம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum