Latest topics
» பூஜை அறை பராமரிப்புby rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
திருமண வாழ்த்து !
+5
kalainilaa
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
நண்பன்
யாதுமானவள்
9 posters
Page 1 of 1
திருமண வாழ்த்து !
இன்று ஒரு திருமண Reception க்குச் செல்கிறேன். அங்கு அந்த மணமக்களை வாழ்த்திப்பாட எழுதிய கவிதை...
சேனை நண்பர்களுக்காக அதை இங்கு பதிக்கிறேன்.
திருமண வாழ்த்து !
இல்லறத்தில் இணைகின்ற இளையோரே வாழியவே !
இவ்வுலகம் புகழ்ந்திடும்போல் இனிமையாய் வாழியவே!
நல்லறத்தோடு நீர்நலமுடன் வாழ்ந்திடத் தமிழ்ச்
சொல்லெடுத்து வாழ்த்துகிறேன் சிறப்புடனே வாழியவே!
பெற்றவர் உற்றவர் பெருமையாய் வாழ்த்தவும்
கற்றவர் மற்றவர் களிப்புடன் வாழ்த்தவும்
சுற்றமும் நட்பும் சுகமாய் வாழ்த்தவும்
உற்றதாய் இணைந்தது உவந்தயென் வாழ்த்தும்
ஆன்றோர் சான்றோர் காண்போர் வாழ்த்த
ஆகாயம் பூமியும் ஆனந்தமாய் வாழ்த்த
ஆழ்கடலும் அங்கிருந்து ஆர்ப்பரித்து வாழ்த்த
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
தோழியர் எல்லாம் தொடர்ந்து வாழ்த்திட
தோழர்கள் எல்லாம் தோதாய் வாழ்த்திட
வாழிய என்றே வந்தவர் வாழ்த்திட
ஏழிசை கீதமென இணைந்தென் வாழ்த்தும் !
தேவர்கள் வாழ்த்த திண்ணியோர் வாழ்த்த
மண்ணிலுள்ள மாமனித குலமெலாம் வாழ்த்த
பாரெங்கும் வீசிடும் பரிதியொளி வாழ்த்த
இவரோடு இணைந்துநான் இனிமையாய் வாழ்த்துகிறேன்
மணமகள் ஆகிநின்று புதுமனம் புகுந்தவளே
குணமகள் இவளெனக் கொண்டவர் கூறிடுமாறு
இணையிலா இல்லறத்தை இனிதெனக் காத்திட
உனையின்று வாழ்த்தினேன் வாழ்த்துமாறு வாழ்ந்திடுக!
இருவரின் உள்ளத்தில் இனிமைகள் பொங்கிட
இருமையே இல்லாது ஒருவராய் வாழ்ந்திட
இருப்பதை விருப்புடன் இருவரும் ஏற்றவாறு
பொறுப்புடன் புதுமையைப் புகுத்தியே வாழ்க!
நீங்காத செல்வங்கள் நிறைவாகப் பெற்று
நீர்பெற்ற செல்வங்கள் நீடூழி வாழ
நிலமகளின் பல வளங்கள் உமைவந்து சேர
வாழ்க பல்லாண்டு இவ்வையகம் போற்ற!
செய்வதும் தவிர்வதும் தெரிந்து வாழ்கவே!
கைவரும் பொருட்களைக் காத்து வாழ்கவே!
மெய்யென்ற மேனியைப் போற்றி வாழ்கவே!
மெய்ஞானம் பெற்றுஇம் மீதினிலே வாழ்கவே!
எண்ணிய பொருளெலாம் ஈட்டி வாழ்கவே
கண்ணெனக் கடமையைக் காத்து வாழ்கவே
மண்ணின் பெருமையை மதித்து வாழ்கவே
மங்களம் பொங்கிட மகிழ்ந்து வாழ்கவே
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்
யாதுமானவள் (எ) லதாராணி
சேனை நண்பர்களுக்காக அதை இங்கு பதிக்கிறேன்.
திருமண வாழ்த்து !
இல்லறத்தில் இணைகின்ற இளையோரே வாழியவே !
இவ்வுலகம் புகழ்ந்திடும்போல் இனிமையாய் வாழியவே!
நல்லறத்தோடு நீர்நலமுடன் வாழ்ந்திடத் தமிழ்ச்
சொல்லெடுத்து வாழ்த்துகிறேன் சிறப்புடனே வாழியவே!
பெற்றவர் உற்றவர் பெருமையாய் வாழ்த்தவும்
கற்றவர் மற்றவர் களிப்புடன் வாழ்த்தவும்
சுற்றமும் நட்பும் சுகமாய் வாழ்த்தவும்
உற்றதாய் இணைந்தது உவந்தயென் வாழ்த்தும்
ஆன்றோர் சான்றோர் காண்போர் வாழ்த்த
ஆகாயம் பூமியும் ஆனந்தமாய் வாழ்த்த
ஆழ்கடலும் அங்கிருந்து ஆர்ப்பரித்து வாழ்த்த
அறிவோடும் அன்போடும் ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
தோழியர் எல்லாம் தொடர்ந்து வாழ்த்திட
தோழர்கள் எல்லாம் தோதாய் வாழ்த்திட
வாழிய என்றே வந்தவர் வாழ்த்திட
ஏழிசை கீதமென இணைந்தென் வாழ்த்தும் !
தேவர்கள் வாழ்த்த திண்ணியோர் வாழ்த்த
மண்ணிலுள்ள மாமனித குலமெலாம் வாழ்த்த
பாரெங்கும் வீசிடும் பரிதியொளி வாழ்த்த
இவரோடு இணைந்துநான் இனிமையாய் வாழ்த்துகிறேன்
மணமகள் ஆகிநின்று புதுமனம் புகுந்தவளே
குணமகள் இவளெனக் கொண்டவர் கூறிடுமாறு
இணையிலா இல்லறத்தை இனிதெனக் காத்திட
உனையின்று வாழ்த்தினேன் வாழ்த்துமாறு வாழ்ந்திடுக!
இருவரின் உள்ளத்தில் இனிமைகள் பொங்கிட
இருமையே இல்லாது ஒருவராய் வாழ்ந்திட
இருப்பதை விருப்புடன் இருவரும் ஏற்றவாறு
பொறுப்புடன் புதுமையைப் புகுத்தியே வாழ்க!
நீங்காத செல்வங்கள் நிறைவாகப் பெற்று
நீர்பெற்ற செல்வங்கள் நீடூழி வாழ
நிலமகளின் பல வளங்கள் உமைவந்து சேர
வாழ்க பல்லாண்டு இவ்வையகம் போற்ற!
செய்வதும் தவிர்வதும் தெரிந்து வாழ்கவே!
கைவரும் பொருட்களைக் காத்து வாழ்கவே!
மெய்யென்ற மேனியைப் போற்றி வாழ்கவே!
மெய்ஞானம் பெற்றுஇம் மீதினிலே வாழ்கவே!
எண்ணிய பொருளெலாம் ஈட்டி வாழ்கவே
கண்ணெனக் கடமையைக் காத்து வாழ்கவே
மண்ணின் பெருமையை மதித்து வாழ்கவே
மங்களம் பொங்கிட மகிழ்ந்து வாழ்கவே
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்
யாதுமானவள் (எ) லதாராணி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
அழகான அருமையான வாழ்த்து மாலை அக்கா
இலக்கியம் படித்தால் இப்படியும் வாழ்த்தலாம்
என்பதை அறிந்து கொண்டேன் அக்கா மிகவும் அருமை
அந்த தப்பதிகளுக்கும்
சேனை தமிழ் உலா சார்பாக நாமும் வாழ்த்துகிறோம்
வாழ்க பல்லாண்டு
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
இலக்கியம் படித்தால் இப்படியும் வாழ்த்தலாம்
என்பதை அறிந்து கொண்டேன் அக்கா மிகவும் அருமை
அந்த தப்பதிகளுக்கும்
சேனை தமிழ் உலா சார்பாக நாமும் வாழ்த்துகிறோம்
வாழ்க பல்லாண்டு
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமண வாழ்த்து !
இருவரின் உள்ளத்தில் இனிமைகள் பொங்கிட
இருமையே இல்லாது ஒருவராய் வாழ்ந்திட
இருப்பதை விருப்புடன் இருவரும் ஏற்றவாறு
பொறுப்புடன் புதுமையைப் புகுத்தியே வாழ்க!
வாவ் சூப்பர் சூப்பரான வாழ்த்து தோழிக்கும் வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+:
இருமையே இல்லாது ஒருவராய் வாழ்ந்திட
இருப்பதை விருப்புடன் இருவரும் ஏற்றவாறு
பொறுப்புடன் புதுமையைப் புகுத்தியே வாழ்க!
வாவ் சூப்பர் சூப்பரான வாழ்த்து தோழிக்கும் வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+:
Re: திருமண வாழ்த்து !
ஆஹா,, அருமையான வாழ்த்து,, ரொம்ப நல்ல இருக்கு லதா,,
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: திருமண வாழ்த்து !
தமிழோடு சொன்ன வாழ்த்துக்கள் .
பாராட்டுக்கள் !
உங்களுடன் சேனை உறவுகளும் வாழ்த்தும் !
இல்வாழ்வில் இணையும் ,இருவருக்கும் .
பாராட்டுக்கள் !
உங்களுடன் சேனை உறவுகளும் வாழ்த்தும் !
இல்வாழ்வில் இணையும் ,இருவருக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: திருமண வாழ்த்து !
நண்பன் wrote:அழகான அருமையான வாழ்த்து மாலை அக்கா
இலக்கியம் படித்தால் இப்படியும் வாழ்த்தலாம்
என்பதை அறிந்து கொண்டேன் அக்கா மிகவும் அருமை
அந்த தப்பதிகளுக்கும்
சேனை தமிழ் உலா சார்பாக நாமும் வாழ்த்துகிறோம்
வாழ்க பல்லாண்டு
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க
என்றும் நன்றியுடன்
நண்பன்
#heart
நன்றி நண்பன்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
முனாஸ் சுலைமான் wrote:இருவரின் உள்ளத்தில் இனிமைகள் பொங்கிட
இருமையே இல்லாது ஒருவராய் வாழ்ந்திட
இருப்பதை விருப்புடன் இருவரும் ஏற்றவாறு
பொறுப்புடன் புதுமையைப் புகுத்தியே வாழ்க!
வாவ் சூப்பர் சூப்பரான வாழ்த்து தோழிக்கும் வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+: :!+:
நன்றி முனாஸ் !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
sikkandar_badusha wrote:ஆஹா,, அருமையான வாழ்த்து,, ரொம்ப நல்ல இருக்கு லதா,,
நன்றி பாதுஷா!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
kalainilaa wrote:தமிழோடு சொன்ன வாழ்த்துக்கள் .
பாராட்டுக்கள் !
உங்களுடன் சேனை உறவுகளும் வாழ்த்தும் !
இல்வாழ்வில் இணையும் ,இருவருக்கும் .
நன்றி கலைநிலா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
வாவ் அருமையான வாழ்த்து அக்கா தமிழ் கொண்டு வாழ்த்திய வரிகள் அனைத்தும் அருமை.
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.சேனை உறவுகள் நாங்களும்.
எங்களின் வாழ்த்தும் அவர்களை சேரட்டும்.
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.சேனை உறவுகள் நாங்களும்.
எங்களின் வாழ்த்தும் அவர்களை சேரட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண வாழ்த்து !
*சம்ஸ் wrote:வாவ் அருமையான வாழ்த்து அக்கா தமிழ் கொண்டு வாழ்த்திய வரிகள் அனைத்தும் அருமை.
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.சேனை உறவுகள் நாங்களும்.
எங்களின் வாழ்த்தும் அவர்களை சேரட்டும்.
நன்றி சம்ஸ்..
தங்கள் அனைவரின் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
*சம்ஸ் wrote:வாவ் அருமையான வாழ்த்து அக்கா தமிழ் கொண்டு வாழ்த்திய வரிகள் அனைத்தும் அருமை.
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.சேனை உறவுகள் நாங்களும்.
எங்களின் வாழ்த்தும் அவர்களை சேரட்டும்.
நன்றி சம்ஸ்..
தங்கள் அனைவரின் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
யாதுமானவள் wrote:*சம்ஸ் wrote:வாவ் அருமையான வாழ்த்து அக்கா தமிழ் கொண்டு வாழ்த்திய வரிகள் அனைத்தும் அருமை.
வாழ்க பல்லாண்டு வளங்கள் பலபெற்று! என்று வாழ்த்தி மகிழ்கிறோம்.சேனை உறவுகள் நாங்களும்.
எங்களின் வாழ்த்தும் அவர்களை சேரட்டும்.
நன்றி சம்ஸ்..
தங்கள் அனைவரின் வாழ்த்தையும் தெரிவிக்கிறேன்
கண்டிப்பாக அக்கா உங்களின் உறவுகளான சேனை உறவகளின் வாழ்த்து என்றைக்கும் இருக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண வாழ்த்து !
கண்ணெனக் கடமையைக் காத்து வாழ்கவே
மண்ணின் பெருமையை மதித்து வாழ்கவே
கவிதை வடித்து, அதன் சாரத்தை, இவ்விரண்டு வரிகளில் வடித்திட்ட உங்களின் மதி நுட்பம் பாராட்டுக்குரியது...... :!+: :!+: :!+:
மண்ணின் பெருமையை மதித்து வாழ்கவே
கவிதை வடித்து, அதன் சாரத்தை, இவ்விரண்டு வரிகளில் வடித்திட்ட உங்களின் மதி நுட்பம் பாராட்டுக்குரியது...... :!+: :!+: :!+:
Re: திருமண வாழ்த்து !
mravi wrote:கண்ணெனக் கடமையைக் காத்து வாழ்கவே
மண்ணின் பெருமையை மதித்து வாழ்கவே
கவிதை வடித்து, அதன் சாரத்தை, இவ்விரண்டு வரிகளில் வடித்திட்ட உங்களின் மதி நுட்பம் பாராட்டுக்குரியது...... :!+: :!+: :!+:
தங்கள் ஆழ்ந்த ரசனைக்கு நன்றி!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
ஆஹா என்ன அற்ப்புதமான வாழ்த்து.
இந்த வாழ்த்து ஒன்றும் போதுமே...
அந்த மணமக்கள் சிறந்து வாழ.
வாழ்த்துக்கள் அக்கா.
சூப்பர் வாழ்த்து.
இந்த வாழ்த்து ஒன்றும் போதுமே...
அந்த மணமக்கள் சிறந்து வாழ.
வாழ்த்துக்கள் அக்கா.
சூப்பர் வாழ்த்து.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: திருமண வாழ்த்து !
ஹம்னா wrote:ஆஹா என்ன அற்ப்புதமான வாழ்த்து.
இந்த வாழ்த்து ஒன்றும் போதுமே...
அந்த மணமக்கள் சிறந்து வாழ.
வாழ்த்துக்கள் அக்கா.
சூப்பர் வாழ்த்து.
நன்றி ஹம்னா
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
எந்த வரி என்றில்லை அனைத்து வரிகளும் அவர்கள் உள்ளம் மகிழும் படி வரைந்துள்ளீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அவர்களுக்கும்
அன்பு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அவர்களுக்கும்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: திருமண வாழ்த்து !
மீனு wrote:எந்த வரி என்றில்லை அனைத்து வரிகளும் அவர்கள் உள்ளம் மகிழும் படி வரைந்துள்ளீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அவர்களுக்கும்
தேங்க்ஸ் மீனு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: திருமண வாழ்த்து !
போனீங்களா எப்படி விசேஷம் நல்லமா,?யாதுமானவள் wrote:மீனு wrote:எந்த வரி என்றில்லை அனைத்து வரிகளும் அவர்கள் உள்ளம் மகிழும் படி வரைந்துள்ளீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அவர்களுக்கும்
தேங்க்ஸ் மீனு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: திருமண வாழ்த்து !
மீனு wrote:போனீங்களா எப்படி விசேஷம் நல்லமா,?யாதுமானவள் wrote:மீனு wrote:எந்த வரி என்றில்லை அனைத்து வரிகளும் அவர்கள் உள்ளம் மகிழும் படி வரைந்துள்ளீர்கள் அக்கா
அன்பு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் அவர்களுக்கும்
தேங்க்ஸ் மீனு
நல்ல இருந்தது நிகழ்ச்சி. நிகழ்ச்சியை நானே தொகுத்தும் வழங்கினேன்.. கவிதை மிக அருமை என்று சொன்னார்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|