சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 7
by rammalar Today at 16:31

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

யோகாசனம் ( சலபாசனம் ) Khan11

யோகாசனம் ( சலபாசனம் )

5 posters

Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty யோகாசனம் ( சலபாசனம் )

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 14:31

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை.

ஆசனங்கள் பலவகை:

1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.

ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.

***

1. சலபாசனம்:

‘சலபம்’ என்ற வடசொல்லுக்கு ‘வெட்டுக்கிளி’ என்று பொருள். நோய்கள் அனைத்தையும் வெட்டி எறிவதால் இவ்வாசனம் ‘சலபாசனம்’ என்று பெயர் பெற்றது. மேலும் இந்த ஆசனத் தோற்றம் வெட்டுக்கிளி வடிவில் இருப்பதாலும் இப்பெயர் கொள்ளலாம். இருதய நோயுள்ளவர்களும் இரத்த அழுத்த நோயுள்ளர்களும் இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது.

*
செய்முறை:
யோகாசனம் ( சலபாசனம் ) 2157741090_d3c198fdab

1. தரை விரிப்பின் மீது முதலில் குப்புறப்படுக்க வேண்டும். கால்கள் சேர்ந்து இருக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக் கொள்ளவும்.

*

2. முகவாய்க்கட்டை தரையில் படும்படி முகத்தை சற்று உயர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

*

3. கை விரல்களை நன்கு மடக்கி தொடைகளுக்குக் கீழே வைத்துக்கொள்ள வேண்டும்.

*

4. பின்னர் மூச்சை இழுத்துக் கொண்டே கைகளைத் தரையில் அழுத்திக் கொண்டு தலை, நெஞ்சுப் பகுதி இரண்டு கால்களையும் சேர்ந்த மாதிரி ஒரே சமயத்தில் மேலே உயர்த்த வேண்டும்.

5. கால்களை வளைக்காமல் 45 டிகிரி வரை உயர்த்த வேண்டும்.

*

6. இதே நிலையில் பத்து முதல் இருபது வினாடிகள் வரை இருக்கலாம். இப்போது உடலின் எடை தரையோடு தரையாக இருக்கின்ற மார்பு, கைகள் இவற்றின் மீதுதான் விழும். தொடைப் பகுதிகள், கால்கள், முன் பாதங்கள் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போல் நீட்டியிருக்க வேண்டும். 20 வினாடிகள் வரை இந்த ஆசனத்தில் இருக்கலாம்.

*

7. பின்பு மெதுவாக மூச்சை விட்டபடி கால்களை மெல்லக் கீழே இறக்க வேண்டுத். தரையில் படியும்படி கால்கள் வளையக்கூடாது. களைப்பு வரும் வரை இந்த ஆசனத்தைச் செய்யக் கூடாது. முதலில் கால்களை பின்புறமாக அதிக உயரம் தூக்குவது கடினமாக இருக்கும். தொடர்ந்து பயிற்சியில் எளிதாகச் செய்ய முடியும்.

*

8. இப்படி மூன்று முதல் ஐந்து தடவைகள் செய்யலாம்.

*

9. கால்களை மேலே தூக்கும் போது தொப்புளுக்குக் கீழேயுள்ள பாகம் மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். உடம்பின் அடிவயிற்றின் முன்பகுதி மட்டும் தரையில் படிந்தவாறு இருந்து உடல் எடையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

*

10. உள்ளங்கால்கள்¢வளையாமல் ஆகாயத்தை நோக்கி இருத்தல் வேண்டும்.

*
11. பிட்டத்தைச் சுருக்கி, இறுக்கமாக வைக்கவும். தொடை தசைகளை விரித்தவாறு வைக்கவும்.

*

12. கால்கள் விரைப்பாகவும், சேர்ந்தும், ஒன்றோடு ஒன்று தொடை, முட்டி மற்றும் கணுக்கால் பகுதியில் சேர்ந்திருக்க வேண்டும்.

*

13. உடல் எடையைக் கைகளால் தாங்கக் கூடாது. கைகளை நன்கு பின்புறம் நீட்டிக் கொள்ள வேண்டும்.

*

14. முடிந்த அளவுக்கு இயல்பாகச் சுவாசித்தவாறு இருக்கவும். ஆரம்பத்தில் நெஞ்சுப் பகுதியையும் தொடைகளையும் தரையிலிருந்து உயர்த்துவது சிரமமாகத்தான் இருக்கும். அடிவயிற்றுத் தசை நார்கள் உறுதி அடைந்து விட்டால் இரு கால்களையும் நெஞ்சுப் பகுதியையும் நன்கு உயர்த்த முடியும்.

**பலன்கள்:

1. சிறுநீரகம் நன்கு செயல்படுவதற்கும் சிறுநீரக நோய்கள் நீங்குவதற்கு துணை புரிகிறது.

2. வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதால் உடலின் கீழ்ப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன. பெருவயிறு எனப்படும் தொந்தி கரைகிறது.

3. வயிற்றுப் பகுதிக்கு அதிகமான இரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும். இல்லறத்தில் நீடித்த இன்பம் துய்க்க வழிவகுக்கும்.

4. கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகளின் கோளாறு நீங்கும்.

5. மூலம் என்கிற கொடிய வியாதியை அறவே அழித்து ஒளிப்பதில் இந்த சலபாசனம் முன் நிற்கிறது.

6. நுரையீரல் நன்கு விரிவடைந்து பலமடைவதுடன் ஆஸ்துமா போன்ற நோய்களை நீக்கும்.

7. முதுகுவலி, இடுப்புவலி போன்றவற்றை நெருங்க விடாது.

8. குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு நீங்கும்.

9. என்றும் இளமையுடன் இருக்க வைக்கும் ஆசனம் இது. இந்த ஆசனம் முதுகெலும்பை பின்னால் வளைக்கக்கூடிய தன்மை பெற்றிருப்பதால் சோம்பேறித்தனத்தை ஒழித்துக் கட்டுகிறது.

***

நன்றி உங்களுக்காக

யோகாசனம் ( சலபாசனம் ) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 14:40

யோகாசனம் ( சலபாசனம் ) 2157741090_d3c198fdab

அந்த மாணவன் நான்தான் எப்படி சும்மா அதிருதுல்ல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by jasmin Mon 1 Aug 2011 - 16:01

யோகாஷனத்தைப் பற்றி இவ்வளவு அருமையாக விளக்கும் ஹம்னா .. நம் தொழுகையில் எல்லா ஆசனங்களின் அம்சங்களும் அடங்கி விடுகின்றன என்பது தெரியுமா...

நபி அவர்கள் சொல்லித்தந்த முறையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் ஒரு நாளில் ஐந்து முறை குளித்து ஐம்பது ஆசனங்கள் செய்த பயன் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் .அதைத்தான் நாம் செய்வதில்லையே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 18:28

jasmin wrote:யோகாஷனத்தைப் பற்றி இவ்வளவு அருமையாக விளக்கும் ஹம்னா .. நம் தொழுகையில் எல்லா ஆசனங்களின் அம்சங்களும் அடங்கி விடுகின்றன என்பது தெரியுமா...

நபி அவர்கள் சொல்லித்தந்த முறையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் ஒரு நாளில் ஐந்து முறை குளித்து ஐம்பது ஆசனங்கள் செய்த பயன் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் .அதைத்தான் நாம் செய்வதில்லையே
அப்படி இல்லையப்பா ஐவேளையும் தொழுதுகொண்டுதான் இருக்கிறேன்.

யோகாசனம் ( சலபாசனம் ) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by முனாஸ் சுலைமான் Mon 1 Aug 2011 - 18:30

உண்மையில் இது தொழுகையில் உள்ள அனைத்தும் யோகாதான்
எனவே தொழுதால் போதும் நன்றி ஹம்னா

:here:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by ஹம்னா Mon 1 Aug 2011 - 19:30

நன்றி உறவே :];: :];:

யோகாசனம் ( சலபாசனம் ) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 21:04

ஹம்னா wrote:
jasmin wrote:யோகாஷனத்தைப் பற்றி இவ்வளவு அருமையாக விளக்கும் ஹம்னா .. நம் தொழுகையில் எல்லா ஆசனங்களின் அம்சங்களும் அடங்கி விடுகின்றன என்பது தெரியுமா...

நபி அவர்கள் சொல்லித்தந்த முறையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் ஒரு நாளில் ஐந்து முறை குளித்து ஐம்பது ஆசனங்கள் செய்த பயன் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் .அதைத்தான் நாம் செய்வதில்லையே
அப்படி இல்லையப்பா ஐவேளையும் தொழுதுகொண்டுதான் இருக்கிறேன்.
:#: :#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by *சம்ஸ் Mon 1 Aug 2011 - 22:48

நண்பன் wrote:

இது என்ன சிரிப்பு பாஸ் சொன்னது என்ன புரிகிறதா உங்களுக்கு தொழுங்கள் அதை நன்றாக செய்தால் நன்று. :!#:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by நண்பன் Mon 1 Aug 2011 - 23:22

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
jasmin wrote:யோகாஷனத்தைப் பற்றி இவ்வளவு அருமையாக விளக்கும் ஹம்னா .. நம் தொழுகையில் எல்லா ஆசனங்களின் அம்சங்களும் அடங்கி விடுகின்றன என்பது தெரியுமா...

நபி அவர்கள் சொல்லித்தந்த முறையில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றினால் ஒரு நாளில் ஐந்து முறை குளித்து ஐம்பது ஆசனங்கள் செய்த பயன் உங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் கிடைக்கும் .அதைத்தான் நாம் செய்வதில்லையே
அப்படி இல்லையப்பா ஐவேளையும் தொழுதுகொண்டுதான் இருக்கிறேன்.
:#: :#:

இது என்ன சிரிப்பு பாஸ் சொன்னது என்ன புரிகிறதா உங்களுக்கு தொழுங்கள் அதை நன்றாக செய்தால் நன்று. :!#:
:cheers: :cheers: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

யோகாசனம் ( சலபாசனம் ) Empty Re: யோகாசனம் ( சலபாசனம் )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum