சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Khan11

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம்

4 posters

Go down

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Empty சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம்

Post by gud boy Sat 17 Sep 2011 - 19:49

சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அசாரூதீன் மகன் அயாஸுதீன் மரணம் அடைந்த செய்தி நம்மை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் மட்டுமல்ல அவருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற உறவினர் மகனும் மரணமடைந்துவிட்டார்.

1000சிசி திறன் கொண்ட சூப்பர் பைக்கில் அதிவேகமாக சென்றதால்தான் அவர் விபத்தில் சிக்க நேரிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகமாக பைக் ஓட்டாதே என்று அயாஸுதீன் உடற்கல்வி ஆசிரியர்கள் பல முறை எச்சரித்தும் அவர் காதில் வாங்கி கொள்ளாததால் இதுபோன்ற கோர விபத்தில் சிக்கியுள்ளார்.

ஆனால், இளைஞர்கள் நினைத்தால் இதுபோன்ற சாலை விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பதே நமது எண்ணம். சமீபகாலமாக இந்தியாவில் 1,000 சிசி திறன் கொண்ட பைக்குகளை விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதற்கேற்ப, சூப்பர் பைக்குகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கு ஏற்ற சாலை வசதிகளோ, பயிற்சி மையங்களோ நம் நாட்டில் இல்லை என்பது முக்கிய காரணம்.

மேலும், சாதாரண ரக பைக்குகளை ஓட்டுவதற்கும், சூப்பர் பைக்குகளை ஓட்டுவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், அதை சூப்பர் பைக் வாங்குபவர்கள் புரிந்துகொள்ளததால்தான் இதுபோன்று விபத்துக்களில் சிக்கி உயிரை விலையாக கொடுத்து விடுகின்றனர்.

இருப்பினும், இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்.

சூப்பர் பைக்குகள் மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த எஞ்சின்களுடன் வருகின்றன. இந்த பைக்குகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கே முறையான பயிற்சி கண்டிப்பாக தேவை.

எனவே, சூப்பர் பைக் வாங்குவதற்கு முன் உரிய பயிற்சி மையத்தில் சூப்பர் பைக் டிரைவிங் செய்வது குறித்த ஆலோசனைகளையும், நேரடி பயிற்சியையும் பெற்ற பின் சூப்பர் பைக் வாங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

பிரத்யேகமாக உருவாக்கப்படும் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையிலேயே சூப்பர் பைக்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அவற்றை குண்டும குழியும் நிறைந்த நம்மூர் சாலைகளில் ஓட்டும்போது மிகமிக கவனமாக இருக்கவேண்டும்.

முக்கியமாக சூப்பர் பைக்கில் ஒருவர் மட்டுமே செல்லும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. சூப்பர் பைக்குகளின் பின் இருக்கைகள் அளவில் சிறியதாகவும், கூடுதல் உயரத்துடன் இருப்பதால் பைக் ஓட்டும்போது முழு பேலன்ஸ் கிடைக்காது.

சூப்பர் பைக் ஓட்டும்போது தரமான ஹெல்மெட்டுகளை அணிந்து செல்வது கூடுதல் பாதுகாப்பு. சாலை ஓரத்தில் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை வாங்கி அணிந்து செல்ல வேண்டாம்.

பல லட்சம் கொடுத்து வாங்கிய சூப்பர் பைக்கை கட்டை வண்டி மாதிரி ஓட்டுவதற்கா வாங்குகிறோம் என்பது காதில் விழுகிறது. கண்டிப்பாக வேகமாக ஓட்டலாம். அந்த பைக்கின் முழு கட்டுப்பாட்டை தெரிந்து கொண்ட பின்னர் சாலை நிலைமை அனுசரித்து ஓட்டினால் இதுபோன்ற விபத்துக்களை நிச்சயம் தவிர்க்கலாம்.

குறிப்பாக, சூப்பர் பைக்கை வேகமாக ஓட்டுவது எளிது, அதை உடனடியாகவும், சரியான இடத்திலும் நிறுத்துவது கடினம் என்பதை பிரபல பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியிருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

மேலும், சாதாரண பைக்குகள் மற்றும் வாகனங்களுக்கு லைசென்ஸ் வழங்குவது போல் அல்லாமல் சிறப்பு பயிற்சி பெறுவர்களுக்கு மட்டுமே சூப்பர் வாங்குவதற்கும், ஓட்டுவதற்கும் லைசென்ஸ் வழங்கவேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

இவை எல்லாவற்றையும் விட சூப்பர் பைக் ஓட்டும்போது மிகுந்த கவனத்தோடும், மனக்கட்டுப்பாட்டோடும பாதுகாப்பாக ஓட்ட பழகிக்கொள்வது மிக அவசியம். இதனால், பைக் ஓட்டுபவருக்கு மட்டுமல்ல எதிரில் வரும வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது. இவற்றை கடைபிடித்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்படாது என்ற நமது எண்ணம் திண்ணமாகும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Empty Re: சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம்

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 22:23

கட்டுரையில் படிப்பினை உள்ளது நண்பா நானும்தான் சில நேரம் மட்டுமே நீங்கள்சொன்ன கவனம் பிறகு அதை மறந்து வேகமாகவே ஓடுகிறோம்.

ஆனால், இளைஞர்கள் நினைத்தால் இதுபோன்ற சாலை விபத்துக்களை நிச்சயம் தவிர்க்க முடியும் என்பதே நமது எண்ணம்.
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Empty Re: சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம்

Post by கலைவேந்தன் Sun 18 Sep 2011 - 0:18

அருமையான அறிவுரை.. அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

- 125 சி சி பைக் காரன்
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Empty Re: சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 5:56

கண்டிப்பாக கவனத்துடன் இருத்தல் அவசியம் வேகத்துடன் விவேகமும் இருந்தால் மாத்திரமே எம்மை நாம் சுதாகரித்துக் கொள்லாம்

இறைவன் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்
அவசியமான கட்டுரைப் பகிர்வு நன்றி


சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம் Empty Re: சாலை விபத்தில் அசாரூதீன் மகன் மரணம்: கற்றுத் தரும் பாடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum