சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

காடுகள் Khan11

காடுகள்

2 posters

Go down

காடுகள் Empty காடுகள்

Post by *சம்ஸ் Sun 10 Feb 2013 - 8:30


காடுகள்



இயற்கையின் அருட்கொடை களில் காடுகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. “மனிதனின்
தலையீடின்றி அப்பிரதேசத்தில் நிலவும் வெப்பநிலை மழைவீழ்ச்சிக்கேற்ப தாமாகவே வளரும்
தாவரங்கள் இயற்கை தாவரங்கள் எனப்படும்.
உலகின் மொத்த நிலப்பரப்பில் 29% காடுகளாகவே காணப்படுகிறது. மனித தேவைகளில் மிக
முக்கியமான இடத்தை வகிக்கும் காட்டு வளங்கள் ஆரம்பத்தில் எரிபொருளாகவும் இன்று
அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாகவும் மாறிவிட்டது. இன்று பெரும்பாலான காடுகள்
அழிக்கப்பட்டு வருகிறது. இன்றைய உலகில் பெரும்பாலான இயற்கை அனர்த்தங்களுக்கு மிக
முக்கிய காரணம் காடுகளை அழிக்கின்றமையே ஆகும். இன்று உலகின் மிகப்பெரிய காடுகளான,
அமேசன், கொங்கோ காடுகள் நகராக்க செயற்பாடுகள் காரணமாக பாரிய அழிவினை
எதிர்நோக்கிக்கொண்டுள்ளது. ஆகவே புவியின் நிலைப்பேற்றுக்கு உதவும் காடுகளை
பேணிக்காக்க வேண்டியது ஆறறிவு கொண்ட மனிதர்களின் கடமை என்றால் அது மிகையாகாது.


ஆர். லுஷாந்தினி

புனித தோமையார் பெண்கள் பாடசாலை,

மாத்தளை.
காடுகள் Chil-heading
காடுகள் Snake-1 காடுகள் Snake



* கல்பகாஸ் தீவில் வசிக்கும் உடும்பு வகை முட்கள் அடங்கிய கள்ளிச் செடிகளையே உணவாக
உட்கொள்கின்றன.

காடுகள் Hubas* நீரில் வசிக்கும் பாம்பினங்களில் மிக விஷமுள்ளது வாளைக்கடியன், இதன் வால்
தட்டையாக இருப்பதால் நீரில் நீந்தப் பயன்படுகிறது. ஆறும் கடலும் கூடும் இடங்களில்
இது அதிகளவில் காணப்படுகிறது. மீன்களை உணவாகக் கொள்கிறது.
* உலகிலேயே மிகப் பெரிய கரையான் புற்று ரொடிiயாவில் உள்ளது. இதன் உயரம் 12 மீற்றர்.
இதில் உள்ள மணலின் எடை 11.750 டன் இதன் வயது சுமார் 700 ஆண்டுகள்.

* நிக்கோபார் தீவுகளில் வாழும் “சோம்பன்” என்ற பழங்குடியினர், தங்களது உணவில்
உப்பைச் சேர்ப்பதில்லை. அதற்குப் பதிலாக கடல் நீரையே உபயோகித்துக் கொள்கின்றனர்.



நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்





அது ஒரு புகழ் பெற்ற பாடசாலை பாண்டியன் என்ற கோடிஸ்வர மாணவன் எப்போதும் கெட்ட
நண்பர்களுடனேயே சேர்ந்து திரிவான். தானே பெரியவன் என்று நினைக்கும் அவன் முழு
பாடசாலையே தன் கட்டுப்பாட்டில் இருப்பது போல் நடந்து கொள்வான். அவனிடம் பணம்
இருப்பதால் தான் அவனுடன் அனைவரும் பழகுகின்றனர். என்பதை அவன் விளங்கிக்
கொள்ளவில்லை.
அவனுக்கு யார் நல்லவன்? யார் கெட்டவன் என்பது தெரியவில்லை. எப்போதும்
கெட்டவர்களுடன் சேர்ந்து நல்லவர்களை ஏளனப் படுத்துவான். அவனுக்கு மூர்த்தி என்ற
நல்ல நண்பன் இருந்தான். மூர்த்திதான் அவனை நண்பனாக மதிக்கின்றான். ஆனால், பாண்டியனோ
அவனை நண்பனாக ஏற்றுக்கொள்வதில்லை. அவனை மதிப்பதும் இல்லை. இதனால் மூர்த்தியின்
உள்ளம் மிகவும் வேதனைப்பட்டது. எனினும் அவனை வெறுக்கவில்லை மூர்த்தி அவனை
நல்லவனாக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான்
பாண்டியனுடைய அப்பாவுக்கு வியாபாரத்தில் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.
பாண்டியனுக்கோ பெரும் அதிர்ச்சி.
என்னசெய்வது என்றே புரியவில்லை ஒன்றுமே புரியவில்லை. கண்ணைக்கட்டி காட்டில்விட்டது
போல் தடுமாறினான். சோர்ந்த நிலையில் பாடசாலைக்கு செல்வான். அவனை ஒருவரும்
நெருங்கவில்லை. எங்கே என் நண்பர்கள் எனத் தேடினான். யாருமே அவனிடம் பேசவில்லை.
ஆனால், மூர்த்தியோ அவனிடம் ஓடி வந்து கதைத்தான். பாண்டியன் தன் கதையைக் கூறி
அழுதான். மூர்த்தி அவனுடன் பாண்டியன் வீட்டுக்குச் சென்றான்.
மூர்த்தி பாண்டியனைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று நல்ல வசதிகளை அவனுக்கு
செய்து கொடுத்தான். பாண்டியன் ‘நல்ல நண்பனை ஆபத்தில் உணர்ந்து’கொண்டு மூர்த்தியிடம்
மன்னிப்பு கோரினான். மூர்த்தி பாண்டியனை மன்னித்தான் அன்று முதல் இருவரும்
இணைபிரியாத நண்பர்களாகினர்.


ஏ. ஆர். எம். ரஸ்மி,

தரம்-09கி,

ப/ வெளிமடை மு.ம.வி. வெளிமடை.



கதைக்கு முன்




‘ஒரே ஒரு ஊரிலே.... என்று கதை சொல்லும் வாழ்க்கை மரபு, மனிதம் தோன்றிய காலம் முதலே,
உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கிறது. குழந்தைகள் வீட்டிலே பெரியோர்களிடம்
கதைகள் கேட்டு நடப்பதும், அவர்கள் கதைகள் சொல்லிச் சொல்லி, அவர்களைத் தூங்க
வைப்பதும், காலந்தோறும் நடந்தே வந்திருக்கிறது. தாய்மார்கள் கூறிய கதைகளைக் கேட்டு,
வீரர்களாகவும் சான்றோர்களாகவும் வளர்ந்த வரலாறு உண்டு.
காடுகள் Pothமக்கள் வாழ்க்கையில், கதை ஒரு மையப் புள்ளியாக அமைகிறது. கதைகளே அன்றும் இன்றும்
மக்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. ‘கதையாம் கதையாம் காரணமாம்’ என்று பாடி
விளையாடுவதை நாட்டுப்புறங்களில் நாளையும் காணலாம். கதைக்காய்க் கதை சொல்லி, பின்னர்
கருத்துக்காய்க் கதை சொல்ல, காலப்போக்கில், கருத்துக் காணாமல் போய்விட, கற்பனையே
மிஞ்சி நின்று, பின்னர், புராணங்களாலே வாழ்க்கை இறுகிப் போன நிலை. முதலில், மக்கள்
இனக்குழுக்களாகக் கூட்டமாய் வாழ்ந்த காலங்களில், ஒன்று கூடி வேலை செய்த நேரங்களில்,
பொழுதுபோக்க, வேலைச் சுமையை இறக்க, பாட்டுப் பாடினர். தொடர்ந்து கதைகள் சொல்லிக்
கொண்டனர். அவர்களின் வாழ்வே, சமூக வாழ்வின் நிகழ்வுகளே, கதைகளாக உருவாயின. அந்த
மக்களே, கதைகளின் படைப்பாளர்களாகவும் இருந்தனர். உலகத்திற்கு ஒளியாக விளங்கியவர்கள்
எல்லாம், கதைகள் வழியே ஒளி ஏற்ற முற்பட்டனர். கதை தானே என்று ஒதுக்கிவிட முடியாத
நிலையில், கலைகள் எல்லாமே, கதைகளைச் சுற்றித்தான் பின்னப்படுகின்றன.
மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலங்களில், உயிரினங்களோடு ஒன்றி வாழ்ந்தனர்.
உயர்திணை, அஃறிணை என்று உறுப்பினர்களாக உலா வந்தனர். அவ்வழியேதான், ‘காக்கா’ ஒரு
பாட்டுப்பாடு, என்று நரி காக்கையை ஏமாற்ற முயன்ற கதை பிறந்தது.
அந்தப் படைப்பாளிகள் உயிரினங்களோடு உறவாடினர். அவற்றின் மொழியைப் புரிந்து
கொண்டனர். வாழ்நிலையை அறிந்துகொண்டனர். அதனால், இயற்கையைச் சுற்றியே கதைகள்
படைத்தனர். பின்னர், கதைகள் இலக்கியங்களாக, வளம்பெற்ற காலங்களில், மக்களின்
உணர்வுகளைப் பதிவு செய்யும் கலைகளாக வளர்ந்தன. இன்னும் காவியப் படைப்புகளுக்குத்
தளம் அமைத்துக் கொடுத்தன.
இன்றும், நாட்டுப்புறங்களில் கதை சொல்லி மகிழும் பழக்கம் இருக்கிறது. அப்படி,
மக்களே படைத்து, மக்களுக்காக, மக்களால் சொல்லப்படும் நாட்டுப்புறக்கதைகள் ஏராளம்!
அவர்கள் சொல்லும் கதைகளில், காகம் பேசும், கழுதை பேசும், மலர்கள் பேசும், மரங்கள்
பேசும், இப்படி இயற்கை முழுமையும் பேசும், மனிதனும் அவற்றோடு பேசுவான்.
ஆனால், எல்லாப் பேச்சிலும் ஒரு செய்தி - ஒரே நோக்கம் வெளிப்படும். அது, மானிட
மாண்பு! மானுட அன்பு!
அது, மந்திரமாக தந்திரமாக, வஞ்சனையாக, வாஞ்சையாக, கோபமாக, தாபமாக, பண்பாக, பகட்டாக,
நகைச்சுவையாக, நக்கலாக, அவர்கள் மொழியில் வெளியாகிக் கதைகளாகும். மொழி வாழும் காலம்
வாழும்.
அப்படிச் சில கதைகள், இங்கே பதியமாகி இருக்கின்றன.
எண்பதுகளில், தமிழகத்தில், மக்களிடையே அயல் புலத்தின், திங்கள், ஆண்டு இதழ்கள்
ஏராளமாய்ப் புழங்கின. இரு நாட்டு நட்புறவு அமைப்புகள், அவற்றைக் கொண்டுவந்து,
தமிழர் தம் இல்லங்களில் சேர்த்தன. சிறப்பாக, சோவியத் நாடு, சீனா, ஜப்பான்,
அமெரிக்கா, ஆபிரிக்க நாடுகள், இலங்கை மற்றும் சில நாடுகள் இந்த வரிசையில் வரும்.

அப்படிப் பார்க்கப்பட்ட நாட்டுப்புறச் சிறு துணுக்குகள், என் சிந்தனையில் கையும்
காலும் முளைத்து, கதைகளாக உருவாகி, உலக மொழிகளின் நாட்டுப்புறக்கதைகளாக உலா
வருகின்றன.
என்னை எழுதத் தூண்டும், அன்பு மருத்துவர் பெரி. பெரியசாமி டாக்டர் அவர்கள்,
தேவகோட்டை பாரதி தமிழ்ச் சங்க, க.இ.பெருமன்றத் தலைவர் கவிஞர் அனுஷம்,
பாலசுப்பிரமணியம் அவர்கள், மாணவர்கள் இரா.மணிமேகலை, இரா.மணிமாறன். இவர்களை எண்ணி
மகிழ்கிறேன்.
என்றும், எமது எழுத்துக்கு ஊற்றம் தந்து, நூலாக ஏற்றம் தரும் கவிதா பப்ளிகேஷன்
அதிபரும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் மேனாள்
தலைவருமான மதிப்புறு திரு சேது. சொக்கலிங்கம் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.’

ம. அருள்சாமி




நிலவில் கால் பதித்த கரடிக் குட்டி





கரடிகளும் கனவு காண்கின்றன மக்களைப் போலவே. கனவுகளில் விருப்பமும் கொள்கின்றன.
ஒவ்வொரு கரடியும் அதற்குரிய வகையில் கனவில் திளைக்கும். ஒருநாள் ஒரு கரடிக் குட்டி,
விண் வெளியில் பறந்து, வெண்ணிலவில் கால் பதிப்பதாகக் கனவு கண்டது. ஆனால், பாவம் அது
ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்தது. அங்கே வானூர்தி பறக்கும் ஒலி கூடக் கேட்டதில்லை.
விண்வெளி ஓடம் செல்லும் ஒலியா கேட்கப் போகிறது. அப்படி ஓர் ஓடத்தை அது பார்த்ததே
இல்லை. எனினும், கரடிக்குட்டி விண்வெளியில் பயணம் செய்வது பற்றிக் கனவு கண்டு
கொண்டே இருந்தது.
கரடி வாழும் அந்தக் காட்டில், கரடிகள் படிப்பதற்கென்று ஒரு பள்ளிக்கூடம் கூட
இருக்கிறது. எனினும், அந்தப் பள்ளிக்கூடத்திற்குச் சென்று படிக்க வேண்டும் என்ற
எண்ணம் அந்தக் கரடிக் குட்டிக்கு என்றும் ஏற்பட்டதே இல்லை. அது கரடிப் பள்ளிக்
கூடத்தை எட்டிக் கூடப் பார்த்ததில்லை. மழைக்குக்கூட அதில் ஒதுங்கியதில்லை. அது,
கரடிப் பள்ளிக் கூடத்திற்குப் போகாததால், அதற்குப் படிப்பு வாசனையும் இல்லை. பொது
அறிவு யோசனையும் இல்லை. அதனால், தனது விண் வெளிச் செலவு பற்றிய கனவு காணும் அறிவைப்
புரிந்து கொள்ளும் வாய்ப்பும் அதற்குச் சிறிதும் இல்லை, அது பள்ளிக்கூடத்திற்குப்
போகாததால், அது ஒரு குறையும் இல்லை. கனவு காண்பதற்குப் படிப்புத் தேவையும் இல்லை.
சிறப்பாக, நிலவிற்குச் சென்று, அங்கு கால் பதிப்பது பற்றிக் கனவு காண்பதற்குக்
கல்வி அறிவு சிறிதும் தேவை இல்லை, என்ற முடிவில், கரடிக்குட்டி இருந்தது.
படிக்காமலேயே வாழ்க்கை நடத்த முடியும் என்றும் எண்ணியது.
இவ்வாறிருக்க, ஒருநாள் கரடிக்குட்டி காட்டின் வழியே உலாவச் சென்று கொண்டிருந்தது.
முதலில், மரங்களும் புதர்களும் மண்டிக்கிடக்கும் காட்டுப்பகுதியில், பாதை
தெரியாமல், அலைந்து கொண்டிருந்தது.
நீண்ட நேரம் அலைந்து திரிந்து, ஒருவழியாக ஒரு பாதையைக் கண்டுபிடித்தது. அந்தப்
பாதையின் வழியாக நடந்துகொண்டிருந்தது. அந்தப் பாதை ஒரு சிறிய ஏரியில் கரடியைக்
கொண்டுபோய்ச் சேர்த்தது. அதனால், கரடிக்குட்டி அந்த ஏரிக்கரையில் நடந்துசென்று
கொண்டிருந்தது. திடீரென, காலடியில் ஒரு நிலவு இருப்பதுபோல கரடிக்குட்டிக்குத்
தோன்றியது. அது, ஆச்சரியத்துடனும் ஆனந்தத்துடனும் அந்த நிலவை உற்று உற்றுப்
பார்த்தது. அந்த நிலவு, அதன் வலப்பக்கத்தில் இருப்பதாகக் கரடிக்குட்டிக்குத்
தோன்றியது. அதன் காலடியின் அருகே வலப்பக்கத்தில், அந்த நிலவு காணப்பட்டது.
கரடிக்குட்டி திகைத்து நின்று, வியப்பால் கத்தியது. மகிழ்ச்சியில், கரடிக்கத்தாகக்
கத்தியது. இவ்வாறு, உறுமல் குரலில் பெருங்கத்தாகக் கத்தியது. ‘கடைசியாக, இப்பொழுது,
நான் நிலவில்
காலடி வைக்கப் போகிறேன்; நிலவில்
இறங்கப் போகிறேன்’
எப்படி இருந்தாலும், அது ஓர் உண்மையை எண்ணிப்பார்க்க நினைக்கவே இல்லை. அதற்குத்
தெரியவும் இல்லை. அது பற்றிக் கடுகளவும் கருத்தில் கொள்ளவுமில்லை. ஒரு நிலவு
ஏரியின் தண்ணீரில் பிம்பமாக இருக்கிறது. அதே நிலவு வானத்தில் மிதக்கிறது.
இயல்பாகவே, கரடிக்குட்டிக்கு மிக அருகில், ஏரியில் இருக்கும் பிம்ப நிலவை அது
பார்த்து விட்டது. அதையே உண்மை நிலவு என்று கருதிவிட்டது. அதுதான்
கரடிக்குட்டியால், சென்று கால்பதிக்க இயன்றதாக இருக்கிறது. வானத்து நிலவை அது
பார்க்கவே இல்லை.
கரடிக்குட்டி முதலில் ஏரியின் கரையில் தனது கால்களை அழுத்தமாகப் பதித்துக் கொண்டது.
பின்னர், தண்ணீருக்குள் குதித்தது, அது, தண்ணீரில் மிதக்கும் நிலவின் ஒரு
விளிம்பில் வசதியாக அமர்ந்து கொண்டது. இப்பொழுது, கரடிக் குட்டியின் மகிழ்ச்சிக்கு
எல்லையே இல்லை. தண்ணீர் அதன் கழுத்துப் பகுதி வரை வந்து விட்டது. எனினும்,
கரடிக்குட்டி அதைப் பொருட்படுத்தவே இல்லை. காட்டில் வாழும் எல்லா விலங்கினங்களிலும்
நிலவில் கால் பதிக்கும் வாய்ப்பு, தனக்கு மட்டும் கிடைத்ததை எண்ணி எண்ணிப்
பெருமைப்பட்டுக் கொண்டது.
இவ்வேளையில், அன்றில் பறவை ஒன்று, அவ்வழியாகப் பறந்துகொண்டிருந்தது. கீழே, ஏரியில்
தண்ணீருக்குள் கரடிக்குட்டி கிடப்பதைப் பார்த்து விட்டது. ஏரியில், தண்ணீரில்
கரடிக் குட்டி ஒன்று கிடப்பதைப் பார்த்ததும், அது இவ்வாறு எண்ணிக் கொண்டது.
‘கரடிக் குட்டியின் கால்களில் காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அது எப்படியோ தனது
கால்களை முறித்துக் கொண்டிருக்க வேண்டும். அதனால் அது தண்ணீரில் விழுந்து
கிடக்கிறது. அதனால் கரடிக்குட்டியால் எழவும் முடியவில்லை நடக்கவும் முடியவில்லை’

‘கரடிக்குட்டியே, எழுந்திருக்க முயற்சி செய்! எழுந்து கரைக்கு வா!’ அன்றில் பறவை
இவ்வாறு பாடிக் கொண்டே, கரடிக்குட்டியை எழுந்து கரைக்கு வருமாறு
உற்சாகப்படுத்தியது.
இவ்வாறு, பாடிக்கொண்டு, பக்கத்தில் உள்ள செடியின் கிளையில் சென்று அமர்ந்து
கொண்டது. “தேவைப்பட்டால், காட்டில் நம்முடன் வாழும் யாரையாவது துணைக்கு
அழைக்கிறேன்; அவர்கள் ஏரியில் குதித்து தண்ணீரிலிருந்து உன்னை மீட்டு வெளியில்
கொண்டு வருவார்கள்” என்று பேசியது.
அன்றில் பறவையின் யோசனையைக் கேட்ட கரடிக்குட்டி அதற்கேயுரிய அலட்சிய புத்தியில்
சிரித்தது. அது, இவ்வாறு எண்ணிக்கொண்டது.
‘ஒரு வேளை அன்றில் பறவை என்னை முட்டாளாக்க முயற்சிக்கலாம், என்னை இறக்கி விட்டு
விட்டு, அன்றில் பறவை பறந்து வந்து, நிலவில் நானிருக்கும் இடத்தில் அமர்ந்து
கொள்ளலாம். காட்டில் உள்ளவர்களிடம், தான் தான் நிலவில் முதலில் இறங்கியதாகப்
பீற்றிக் கொள்ளலாம். அதற்கான சூழ்ச்சியாகவும் இது இருக்கலாம்!’
அதனால், கரடிக்குட்டி ஒன்றும் பதில் பேசவில்லை. கண்ணைச் சிமிட்டிக் கொண்டு அமைதியாக
இருந்தது. மேட்டிமையுடன்.
அன்றில் பறவை வெகு நேரம் கரடிக் குட்டியுடன் வாதம் புரிந்தது. ‘நீண்ட நேரம்
தண்ணீருக்குள் இருந்தால், தடிமன் பிடித்துவிடும்’ என்று, மீண்டும் மீண்டும்
சொல்லிப் பார்த்தது. ஆனால், கரடிக்குட்டியோ, இதற்கெல்லாம் செவி சாய்க்கவில்லை.
அடம்பிடித்தது. கரடி முகத்துடன் இறுக்கமாக இருந்தது.
பின்னர், கரடிக்குட்டி மிகவும் முயன்று கரையில் ஏறிக்கொண்டது. அது, ‘நிலவிலிருந்து
மீண்டும் தான் வசிக்கும் இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தது’ என்று நினைவு கூர
முடியவில்லை. ஆனால், அது சந்திக்கும் வன நண்பர்களிடம் ஒன்றை மட்டும் சொல்ல
மறக்கவில்லை. ‘நிலவிற்குப் பயணம் செய்தேன், அங்கு தங்கியிருந்தேன்’ என்ற தனது
சாதனையை மட்டும் சொல்ல மறக்கவில்லை. தான் சந்திக்கும் கரடிச் சொந்தங்களிடம் அதைச்
சொல்லிச் சொல்லிப் பெருமை பாராட்டிக்கொண்டது. கரடிக்குட்டி நிலவில் கால்பதித்த
அனுபவத்தை இவ்வாறு சொல்லிக்கொண்டது. ‘நிலவில் எங்கும் ஈரமாக இருக்கிறது.
குளிர்ச்சியாகவும் இருக்கிறது. நிலவு முழுமையும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கிறது.
அங்கே இருக்கும் அன்றில் பறவைகளும், இங்கே நமது பூமியில் இருப்பதைப் போலவே,
தோன்றுகின்றன, பறக்கின்றன, பாடுகின்றன’
பார்க்கும் வனம் வாழ் நண்பர்களிடமெல்லாம், இவ்வாறு வாய் மூடாது தொண தொணத்துக்
கொண்டே கரடிக்குட்டி பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தது. நீண்டகாலம் கடந்து,
இப்பொழுது கூட கரடிக்குட்டி இவ்வாறு நினைத்துக் கொண்டுதானிருக்கிறது. ‘பள்ளிக்கூடம்
போகாமலே, பாடங்கள் படிக்காமலே, தேர்வுகள் எழுதாமலே, தேர்ச்சியும் பெறாமலே, நாம்
நினைத்ததைச் சாதிக்க முடியும். தன்னறிவையும், கற்பனை வளத்தையும், வளர்த்துக்
கொண்டால் - பயன்படுத்திக்கொண்டால்’
தொடரும்.........


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காடுகள் Empty Re: காடுகள்

Post by *சம்ஸ் Sun 10 Feb 2013 - 8:34


காடுகள் Art--tag




காடுகள் Child-art-1 காடுகள் Child-art-2
காடுகள் Child-art-3
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காடுகள் Empty Re: காடுகள்

Post by ராகவா Sun 10 Feb 2013 - 13:23

காடுகள் 2737039178 காடுகள் 331844 காடுகள் 331844 காடுகள் 331844
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காடுகள் Empty Re: காடுகள்

Post by *சம்ஸ் Sun 10 Feb 2013 - 16:28

அச்சலா wrote:காடுகள் 2737039178 காடுகள் 331844 காடுகள் 331844 காடுகள் 331844
நன்றி )((


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காடுகள் Empty Re: காடுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum