சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Khan11

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

+3
நண்பன்
எந்திரன்
*சம்ஸ்
7 posters

Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by *சம்ஸ் Mon 6 May 2013 - 7:53

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Ae7ba056-87de-4702-a2bf-e3fd248f8f59_S_secvpf
சென்னை, மே.6-

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?.

பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது.

விவசாயிகள் உழவர் சந்தைகளிலே தங்கள் பொருட்களை வைத்து விற்பதற்கு வாடகை கிடையாது. தராசு எடைக் கற்களைக் கூட அரசே இலவசமாக வாங்கி வழங்கும்.

14-11-1999 அன்றுதான் முதன்முதலாக இத்திட்டம் மதுரை மூதூரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளன்றே 4,500 கிலோ காய்கறிகள் 115 விவசாயிகள் மூலம் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் பிற்பகல் 4 மணி அளவிலேயே விற்கப்பட்டுவிட்டன. 4 ஆயிரம் பொதுமக்கள் நேரடியாக வந்து அந்தக் காய்கறிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்கள்.

100-வது உழவர் சந்தை 14-11-2000 அன்று காஞ்சீபுரம் மாவட்டம் பல்லவபுரத்திலே திறந்து வைக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 100 உழவர் சந்தைகள் திறந்து வைக்கப்பட்டன என்ற ஒன்றில் இருந்தே அந்தத் திட்டத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த உழவர் சந்தைகள் திட்டத்தைத்தான் தற்போது இந்த ஆட்சியினர் மீண்டும் தொடங்கிட முடிவு செய்துள்ளார்கள்.

கேள்வி:- காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடுவதற்கு காவிரித் தாய் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாதான் காரணம் என்று பாராட்டு விழா எல்லாம் நடைபெற்றதே, காவிரித் தண்ணீர் வந்து விட்டதா?.

பதில்:- காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு விடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான், நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு ஏன் இன்னும் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை, உடனே அதனை வெளியிட வேண்டுமென்று ஆணையிட்டு, அதன்படி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டால், காவிரி நதி மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை மத்திய அரசு நியமிக்க வேண்டும். அதுபற்றி நமது முதல்-அமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டு, அதை நாளேடுகளிலும் வெளியிட்டார். உடனடியாக மத்திய அரசு பதில் எழுதாததால், அந்தக் குழுக்களை அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசிடம் அதுபற்றி விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில்தான் மத்திய அரசின் நீர் வளத்துறை மந்திரி ஹரீஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி நதி மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை உருவாக்குவது தொடர்பாக மத்திய சட்டத்துறையின் கருத்தை, மத்திய நீர் வளத்துறை கோரியுள்ளது. இந்த விவரத்தை சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.

இந்த நிலையில் கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 5-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவடையும் வரை காவிரி அமைப்புகள் தொடர்பான நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, மத்திய நீர்வளத்துறை நிறுத்தி வைத்துள்ளது. மத்திய சட்டத் துறையின் கருத்துக் கிடைத்ததும், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் நிலையைத் தெரிவித்து அதன் அறிவுரை கோரப்படும். சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதற்குத்தக்கபடி மத்திய அரசு செயல்படும் என்று கூறியிருக்கிறார்.

அதன்படி மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் கருத்துக்களைத் தெரிவித்து தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டுமென்று தி.மு.க. சார்பில் நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மாலைமலர்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by எந்திரன் Mon 6 May 2013 - 8:00

:# :# அம்மாவடின் ஆட்சியில் அண்ணா பேசுகிறார் :()
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by நண்பன் Mon 6 May 2013 - 8:18

எந்திரன் wrote: :# :# அம்மாவடின் ஆட்சியில் அண்ணா பேசுகிறார் :()
யார் என்ன சொன்னாலும் நாட்டுக்கும் மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் :#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by rammalar Mon 6 May 2013 - 8:29

கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறது,
என்பதைப் பொறுத்தும் உள்ளது..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by ஜனநாயகன் Mon 6 May 2013 - 9:23

போ தாத்தா.நீ எப்பவுமே இப்டித்தான்.காலம் கடந்து காமெடி பண்ணிகிட்டே இருக்க.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by பானுஷபானா Mon 6 May 2013 - 10:24

ஜனநாயகன் wrote:போ தாத்தா.நீ எப்பவுமே இப்டித்தான்.காலம் கடந்து காமெடி பண்ணிகிட்டே இருக்க.

அவருகும் காலன் கூப்பிடுற வயசாச்சுல அதான் விடுங்க ஜன்நாயகன் :” :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by நண்பன் Mon 6 May 2013 - 13:42

ஜனநாயகன் wrote:போ தாத்தா.நீ எப்பவுமே இப்டித்தான்.காலம் கடந்து காமெடி பண்ணிகிட்டே இருக்க.
:” :”

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by Muthumohamed Mon 6 May 2013 - 16:25

அரசியல் வாதி என்றால் ஏதாவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்

இது எழுதப்படாத நியதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல் Empty Re: தமிழக மக்களுக்கு விரைவில் காவிரிநீர் கிடைக்க உதவிட வேண்டும்: மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச அரிசி முறைகேடு அரசுக்கு வலியுறுத்தல்
» வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் உரிய இழப்பீடு தர வேண்டும்- சிபிஎம்
» நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் - மகள் வலியுறுத்தல்
» சமச்சீர் பாடப் புத்தகங்களை 5ம் திகதிக்குள் அனுப்ப வேண்டும் தமிழக அரசுக்கு கால அவகாசம் அளித்து உயர்நீ
» தமிழக அரசுக்கு மீண்டும் கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum