சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Khan11

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

4 posters

Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:15

ஒரு பெண் முழுமை பெறுவது தாயானப் பின் தான். உங்களுக்குள் ஒரு உயிர் வாழும் போது அதில் கிடைக்கும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களின் கர்ப்பக்காலம் மிகவும் சந்தோஷமாகவும் மறக்க முடியாதவையாகவும் இருக்கும்.

தாய்மை என்ற ஒரு உயர்ந்த அந்தஸ்தை தரும் தன் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் எண்ணுவார்கள். மேலும் பிறக்க போகும் தன் குழந்தை சிறந்த குழந்தையாக விளங்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும் அல்லவா? அப்படியானால் குழந்தை கருவில் இருக்கும் போதே அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுங்கள். ஏனெனில் சிறிய தவறு கூட, கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். எனவே பிறக்க போகும் குழந்தை நல்ல ஆரோக்கியத்தோடு பிறக்க சில சிறந்த 20 வழிகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்களேன்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:16

சந்தோஷமாக இருங்கள்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721481-1-pregnantwoman

குழந்தையின் சந்தோஷம், தாயின் சந்தோஷத்தோடு நேரடி தொடர்பில் உள்ளது. அதனால் எப்பொழுதும் தாயானவள் சந்தோஷமாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தை வளத்தோடு இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:17

மன அழுத்தத்தை தவிர்க்கவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721500-2

மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுத்து மன அழுத்தம் தரும் விஷயங்களிடம் இருந்து தள்ளி இருக்கவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:18

சத்துள்ள உணவை உட்கொள்ளவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721519-3

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:19

சரிவிகித உணவை உட்கொள்ளவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721583-food111-600

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:20

அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721606-5

தண்ணீர் முக்கியமான மற்றொரு ஊட்டச்சத்து. அதனுடைய முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்கவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:21

பரிந்துரைக்காத மருந்துகளை தவிர்க்கவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721624-6

கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடக்கூடாது. எப்போதும் ஒரு மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும். அது ஒரு சாதாரண வலி நிவாரணியாக இருந்தாலும் கூட.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:22

நடைப்பயிற்சி அவசியம்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721639-7-walking

நடை போன்ற மெல்லிய உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மையை விளைவிக்கும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஒரு முறை ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:23

புகைப்பிடிக்கக் கூடாது

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721681-smoking1111-600

குழந்தையின் நன்மைக்காக, எந்த ஒரு தருணத்திலும் புகைப்பிடிக்கக் கூடாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:24

மது அருந்தக் கூடாது

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721709-9-pregnantwomen

மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். அது சாதாரண சம்பெயின் அல்லது ஒயினாக இருந்தாலும் கூட, குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் எந்த ஒரு மது வகையையும் பருகக்கூடாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:25

காஃப்பைன் உட்கொள்ளும் அளவில் கவனம்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721728-10

தேவை அதிக அளவு காஃப்பைன் உட்கொள்வதால், குழந்தைக்கு பிரச்சனை ஏற்படும். அதனால் கர்ப்பக் காலத்தில் அதிக அளவு காபி குடிக்க வேண்டாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:26

குழந்தையுடன் பந்தத்தை ஏற்படுத்தவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721746-11

கருவில் இருக்கும் குழந்தையுடன் பேசுவது, தாலாட்டு பாடுவது போன்றவற்றை செய்வது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:27

மிதமான வெயிலில் செல்லவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721762-12

சிறிதளவு வெயிலில் காலையும், மாலையும் சென்றால் தேவையான அளவு வைட்டமின் டி கிடைக்கும். அதனால் தேவையான அளவு கால்சியம் கிடைக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு, முக்கியமாக எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:28

போதிய இடைவெளியில் மருத்துவரை அணுகவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721776-13

மருத்துவரை சந்திப்பதை நிறுத்தக்கூடாது. சீரான இடைவெளியில் மருத்துவரை சந்தித்து, குழந்தையின் ஆரோக்கியத்தை சோதித்து பார்ப்பது மிகவும் முக்கியம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:29

சரியான நிலையில் தூங்கவும்



பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721791-14

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு பக்கமாக ஒருசாய்ந்து படுப்பதே நல்லது. குப்பறப் படுத்தால், அது குழந்தையை காயப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும் குழந்தைக்கு அது அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே மகப்பேறு காலத்தில் பயன்படுத்தும் தலையணையை வாங்கி, ஒழுங்கான நிலையில் தூங்குங்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:30

உண்ணும் முன் பொருளில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படிக்கவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721817-15

சந்தையில் உள்ள பல பொருட்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் பயன்படுத்தக் கூடாது. மேலும் எந்த ஒரு பொருட்களை சாப்பிடும் முன்னும், அதில் ஒட்டியிருக்கும் லேபிளை கவனமாக படித்து வாங்கி சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:30

சுத்தமாக இருக்கவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721832-16

சுத்தமாக இருந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். தாயானவள் ஆரோக்கியத்தோடு இருந்தால், குழந்தையும் நல்ல உடல் நலத்தோடு இருக்கும். அதுவே தாய் நோய்வாய்ப்பட்டால், அது குழந்தையையும் பாதித்துவிடும். சில சமயங்களில் ஆபத்தை கூட விளைவிக்கும். அதனால் கர்ப்பிணிகள் உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:31

பச்சை காய்கறிகளை சாப்பிடவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721847-17-greenvegetables

குழந்தையின் உடல் நலத்திற்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமான ஒன்று. ஊட்டச்சத்து உள்ள அனைத்து உணவுகளையும் உண்டாலும், அதிக அளவில் பச்சை காய்கறிகளையும் உண்ண வேண்டும். அது போதிய அளவு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலத்தை உடம்பில் சேர்க்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:32

கடின வேலையில் ஈடுபடக்கூடாது

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721869-18

பலமான பொருட்களை தூக்கவோ அல்லது உடம்பை வருத்தி செய்யும் கடினமான வேலைகளையோ கண்டிப்பாக செய்யக்கூடாது. அது குழந்தையை வெகுவாக பாதிக்கும். எனவே மருத்துவரிடம் என்ன மாதிரியான வேலைகளை செய்யலாம் என்றும், செய்யக்கூடாது என்றும் கேட்டு தெரிந்து கொள்ளவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:33

நல்லதையே யோசிக்கவும்

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721884-19

எப்போதும் நல்லதையே பற்றி யோசிக்க வேண்டும். மேலும் எந்நேரமும் சந்தோஷமாகவும், எதிலும் நேர்மறையாகவும் இருக்க வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by ahmad78 Tue 28 May 2013 - 16:34

சூடான நீரில் குளிக்க கூடாது

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 28-1369721900-20

குளிக்கும் போது தண்ணீரின் வெப்ப நிலையில் எப்போதும் கவனம் இருக்க வேண்டும். அதிக சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதை தாங்கும் சக்தி குழந்தைக்கு இருக்காது. அதனால் வெதுவெதுப்பாக இருக்கும் நீரிலேயே குளிக்க வேண்டும்.

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது, குழந்தையின் ஆரோக்கியத்தை நல்ல படியாக வைத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://tamil.boldsky.com/pregnancy-parenting/pre-natal/2013/20-ways-make-your-unborn-baby-healthy-003282.html#slide183807


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by *சம்ஸ் Tue 28 May 2013 - 21:56

சிறந்த மருத்துவ பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by Muthumohamed Tue 28 May 2013 - 21:59

*சம்ஸ் wrote:சிறந்த மருத்துவ பகிர்விற்கு நன்றி

@. @. @. @. @.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by rammalar Wed 29 May 2013 - 4:53

கருவுற்றது முதல் பிள்ளைப்பேறு வரை
கடைப்பிடிக்க வேண்டியவை பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24145
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!! Empty Re: பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்தோடு பிறப்பதற்கான வழிகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum