சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 7
by rammalar Today at 8:37 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 10:45 am

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 9:57 am

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 9:48 am

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Today at 12:36 am

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Today at 12:33 am

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Today at 12:31 am

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Today at 12:28 am

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 11:43 pm

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 9:10 pm

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 9:06 pm

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 12:56 pm

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 12:24 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 12:04 pm

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue Jun 04, 2024 12:08 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue Jun 04, 2024 12:01 pm

» பல்சுவை - 7
by rammalar Tue Jun 04, 2024 8:47 am

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue Jun 04, 2024 8:24 am

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue Jun 04, 2024 8:09 am

» பல்சுவை - 6
by rammalar Mon Jun 03, 2024 4:56 pm

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon Jun 03, 2024 10:05 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon Jun 03, 2024 9:03 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon Jun 03, 2024 9:00 am

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon Jun 03, 2024 8:58 am

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon Jun 03, 2024 8:49 am

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Mon Jun 03, 2024 1:00 am

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Mon Jun 03, 2024 12:52 am

» பல்சுவை - 5
by rammalar Mon Jun 03, 2024 12:38 am

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun Jun 02, 2024 11:23 pm

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun Jun 02, 2024 7:27 pm

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun Jun 02, 2024 7:25 pm

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun Jun 02, 2024 11:14 am

» தெய்வங்கள்!
by rammalar Sun Jun 02, 2024 10:56 am

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun Jun 02, 2024 9:23 am

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun Jun 02, 2024 9:15 am

மனதில் உறுதியிருந்தால்...!   Khan11

மனதில் உறுதியிருந்தால்...!

Go down

மனதில் உறுதியிருந்தால்...!   Empty மனதில் உறுதியிருந்தால்...!

Post by ராகவா Sun Feb 09, 2014 5:07 pm

மனதில் உறுதியிருந்தால்...!   15

""யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்...'' என்ற பாடல் வரிகளுக்கு உதாரணமாக வாழ்கிறார் மாற்றுத் திறனாளியான தேவிகா. வடசென்னை கன்னிகாபுரம் பகுதிவாழ் மக்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார் இவர். அவரைப் பற்றி விசாரித்ததும் சிறு புன்னகையுடன் தொடர்கிறார்...
""நான் பிறந்த ஒரு வருடத்தில் எனக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதில் என் கால்கள் செயலற்றுப் போனதால் என்னால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எங்கு செல்ல வேண்டுமானாலும், என்னை யாராவது தூக்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும். தினமும் கணினி மையத்திற்குக் கூட என் தந்தைதான் சைக்கிளில் தூக்கி உட்கார வைத்து அழைத்துச் செல்வார். மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கும்படி பிறந்துவிட்டேனே என்று எனக்குள் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பேன். என் பெற்றோர்களுக்குப் பிறகு எனக்கென்று யார் இருக்கிறார்கள்? என்ற பயமும் இருக்கும். ஆனால் இப்போது என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என் பெற்றோரை உட்கார வைத்து என்னால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையும் தைரியமும்
பிறந்திருக்கிறது.
வடசென்னையில் உள்ள விவேகானந்தர் அறக்கட்டளையைச் சார்ந்த அம்பேத்கர் கணினி மையத்தில் ஆசிரியராக இருக்கிறேன். எனக்கு 23 வயதாகிறது. பத்தாவது வரை படித்திருக்கிறேன். அப்பா ரவி கூலித் தொழிலாளி, அம்மா கன்னியம்மா கார்ப்ரேஷனில் வேலை பார்க்கிறார். ஓர் அக்காவும், தங்கையும் இருக்கிறார்கள். அக்காவிற்கு பிறகு, தங்கையும் திருமணமாகிச் சென்றதால் என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஆளில்லாமல் போனது. மூன்று சக்கர வாகனம் ஒன்று வைத்திருந்தேன். அதுவும் உடைந்து போய்விட்டது. மீண்டும் சைக்கிள் வாங்கித் தர அப்பாவுக்கு போதிய வருமானம் இல்லை. அதனால் மேற்கொண்டு பள்ளிக்குச் சென்று படிக்க முடியாமல் வீட்டில் இருந்தேன்.
அந்த நேரத்தில்தான் எங்கள் பகுதியில் இலவசக் கணினி மையம் தொடங்கப்பட்டிருப்பதாக என் தோழி சொன்னாள். அங்கு சென்று கணினி கற்றுக் கொள்ளும்படி என்னை வற்புறுத்தினாள். அவளுடைய தூண்டுதலினால் என் தந்தையிடம் என்னை அங்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டேன். அங்கு சென்றதும், என் ஆர்வத்தைப் பார்த்து அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியோடு எனக்கு கணினி கற்றுக் கொடுத்தார்கள். வீட்டிலேயே முடங்கிக் கிடந்த எனக்கு அது பெரும் ஆறுதலாக இருந்தது. மிகவும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டதால் மிக விரைவில் கணினியை நன்கு கற்றுக் கொண்டேன். தற்போது அதே மையத்தில் பத்து ஏழைக் குழந்தைகளுக்கு நான் கணினி கற்றுத் தருகிறேன். அதுபோல நான் அரசுப்பள்ளியில் படித்திருந்தாலும் ஆங்கிலம் எனக்கு நன்றாக வரும்.
அதனால் மையத்திற்கு டியூசனுக்கு வரும் ஏழைப் பிள்ளைகளுக்கு ஆங்கிலமும் கற்றுத் தருகிறேன். நான் ஆசிரியராக இருப்பதைப் பார்த்துவிட்டு, தற்போது எங்கள் பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள், சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்ப்பவர்கள், கணினி மையம் வைத்து நடத்திவருபவர்கள் சிலரும் எங்கள் மையத்திற்கு ஆசிரியர்களாக வந்திருக்கிறார்கள்.
எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், எங்கும், எதிலும் கணினி மயம் ஆகிவருவதால் கீழ்த்தட்டு மக்களுக்குக் கணினியின் பயன்பாடுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். மாதவ் சிங் என்பவர் இந்த அறக்கட்டளையின் பிரஸிடெண்ட்டாக இருக்கிறார். எங்கள் பகுதியில் ரவி என்பவர் இன்சார்ஜாக இருக்கிறார்.
இந்தப் பகுதியில் முதன் முதலாக கணினி மையம் துவங்கி தற்போது இதன் சுற்றுவட்டாரங்களைச் சுற்றி 9 கிளைகளாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த 9 கிளைகளுக்கும் அம்பேத்கர், நேதாஜி, பாரதியார் இப்படி தேசத்தலைவர்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். இந்த மூன்று வருடத்தில் 3000 பிள்ளைகளுக்குக் கணினி கற்றுத் தந்து சான்றிதழ்களும் வழங்கியிருக்கிறார்கள்.
இங்கு கணினி கற்றுக் கொண்ட மாணவர்கள் தற்போது நல்ல வேலையிலும் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கு ஆசிரியராகவும் இருக்கிறார்கள். என்னோடு சேர்த்து 150 ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இங்கு கணினியைத் தவிர ஏழை மாணவர்களுக்கு டியூசன் சொல்லித் தருகிறார்கள், பரத நாட்டியம் சொல்லித் தருகிறார்கள்,
தற்போது கூடுதலாக தையல் பயிற்சியும் துவங்கியிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் முறையாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இலவசமாகக் கற்றுத் தருகிறார்கள்.
வாழ்வதற்கும், சாதிப்பதற்கும் ஊனம் ஒரு தடையில்லை என்பதை இப்போது புரிந்து கொண்டேன். மனதில் உறுதியிருந்தால், கடின உழைப்பிருந்தால் யார் வேண்டுமானாலும் தடைகளைத் தகர்த்தெறிந்து ஜெயித்துக் காட்டலாம்'' என்றார்.
-ஸ்ரீதேவி குமரேசன்.
படங்கள் : அண்ணாமலை.
நன்றி:ஞாயிறுமணி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum