சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Khan11

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:26

காது வலி என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் அது பெரிய தொந்தரவாக இருக்கும். அதனால் தான் குழந்தைகளுக்கு காது வலி ஏற்படும் போது உடனடி சிகிச்சைக்காக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளை தான் கிருமிகளும், சளியும் வேகமாக தாக்கும். அதே போல் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டு இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு தான் பெரும்பாலும் காது வலி ஏற்படுகிறது.
 
காது வலி ஒரே சீராக, தொடர்ச்சியாக இருக்கும் அல்லது அதிகரிக்கலாம் அல்லது படிப்படியாக குறையலாம். இந்த வலி வலிமையாக இருக்கலாம், லேசாக இருக்கலாம், எரிச்சல் தன்மையுடன் இருக்கலாம் அல்லது துடிக்க வைக்கும் அளவிலும் இருக்கலாம். இந்த வலியை குறைக்க நாம் பல வீட்டு சிகிச்சைகளையே பின்பற்றலாம். நீங்கள் மருத்துவரை சந்தித்து அவர் சரியான மருந்தை பரிந்துரைக்கும் வரை வலி குறைந்து விடாது தானே! அதனால் அது வரை சிறந்த வீட்டு சிகிச்சைகளை நாம் பின்பற்றலாம். தொற்று அல்லது அழற்சி போன்ற பொதுவான அறிகுறிகளை நீக்கவும் இந்த எளிய வீட்டு சிகிச்சைகள் உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:28

வெதுவெதுப்பான ஒத்தடம்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499569-1mumps
வெதுவெதுப்பான ஒத்தடம் காது வலியை குறைக்க பெரிதும் உதவும்.
• அதன் வெப்பம் நிவாரணத்தை அளிக்கும்
• வீக்கம் இருந்தால் வற்றி விடும்
• சளியினால் ஏற்பட்டுள்ள காது வலி என்றால், அந்த வலியை குறைக்க உதவும்.
 
------------------------------

வீட்டிலேயே வலிக்கான மருந்துகளை வைத்திருத்தல்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499575-2asprin 

உங்களால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல முடியாத போது, அதற்கேற்ப வழியும் அதிகமாக இருக்கும் போது, இதனை பின்பற்றுங்கள்.
• ஐப்ரூஃபன் எடுத்துக் கொள்ளுங்கள்.
• ஆஸ்பிரின் அல்லது அசிடாமினோபென் எடுத்துக் கொள்ளுங்கள்.
இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்த மருந்துகளை கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு ஏதாவது ஒரு மருந்தை கொடுப்பதற்கு முன் மருத்துவரை சந்திப்பது சிறந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:29

ஆலிவ் எண்ணெய்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499581-3olive 

வெதுவெதுப்பான ஆலிவ் எண்ணெய் காது வலிக்கு பெரிய மாயங்களை நிகழ்த்தும் என்பது அறியப்பட்ட ஒன்றே.
• ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கவும்.
• குறுகிய வாயை கொண்ட ஒரு சுத்தமான குப்பியில் அதனை அடைக்கவும்.
• அதிலிருந்து சில சொட்டுக்களை பாதிக்கப்பட்ட காதில் ஊற்றவும்.
• உள்ளே சென்ற எண்ணெய் வெளியே வராமல் பார்த்துக் கொண்டால், அது அதன் வேலையை திறம்பட முடித்து விடும்.
-------------------------

மூக்கை சுத்தப்படுத்துங்கள்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499587-4image11
உங்களுக்கு மூக்கடைப்பும் காது வழியும் சேர்ந்து இருந்தால், அது சளியினால் இருக்கலாம். மூக்கை சுத்தப்படுத்தினால், கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும்.
• சுவாச பாதையில் இடைஞ்சல் இல்லையென்றால் காதில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும்.
• இது வலியை குறைக்க உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:30

வெங்காயத்தின் பயன்பாடு

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499593-5onion
அழற்சியில் இருந்து விடுபட நீங்கள் வெங்காயத்தை ஒரு பேஸ்ட்டாக பயன்படுத்தலாம். வீக்கத்தால் உங்களுக்கு காது வலி ஏற்பட்டிருந்தால்,
• வெங்காய பொடி மற்றும் தண்ணீரை கொண்டு பேஸ்ட் செய்யவும்.
• இந்த பேஸ்ட்டை காதின் வெளிப்பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
--------------------

பூண்டு மற்றும் முல்லைன் பூ

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499599-6garlic 

உங்களிடம் ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் கீழ்கூறிய சேர்க்கையை பயன்படுத்தலாம்.
• பூண்டு எண்ணெய் மற்றும் முல்லைன் எண்ணெயின் கலவை
• நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடவும் அழற்சியை குறைக்கவும் இந்த கலவை உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:31

லாவெண்டர் எண்ணெய்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499605-7lavender-jpg
உங்களுக்கு வெளிப்புற காதுகளில் எரிச்சல் இருந்தால்,
• வெளிப்புற காதுகளில் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி மெதுவாக தடவவும்.
• இது மென்மையாக ஒத்தனம் கொடுப்பதை போல் இருக்கும். இதனை நாள் முழுவதும் செய்யலாம்.
---------------------------

காதை வேகமாக அசைப்பது

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499611-8ear-pain
கீழ்கூறிய வகையில் காதை வேகமாக அசைத்தால், குழந்தைகளுக்கு சற்று நிவாரணியாக அது அமையும்:
• கொட்டாவி விடுதல் அல்லது காதை வேகமாக அசைத்தால், காது இணைப்புக் குழலில் உள்ள அழுத்தம் நீங்கும்.
• அழுத்தம் நீங்குவதால், தேங்கியிருந்த நீர் வெளியேறும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:32

ஆவியும் யூகலிப்டஸ் தைலமும்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499617-9oil
மூக்கு குழாய்கள் மற்றும் காதுகளில் சேர்ந்திருக்கும் நீரை வெளியேற்ற
• நீரை கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றுங்கள்.
• ஆவி பறக்கும் இந்த தண்ணீரை சுவாசித்து, அடைப்பட்டிருக்கும் நீரை இந்த எண்ணெய் வெளியேற்ற உதவும்.
--------------------------

வைட்டமின் உட்கொள்ளுதலை அதிகரித்தல்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499623-10pills3-jpg
சளியினால் காதில் வலி ஏற்படுத்தால், உங்களின் உணவில் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
• வைட்டமின் ஏ
• வைட்டமின் சி
• வைட்டமின் ஈ
இதன் விளைவுகள் மறைமுகமாக இருந்தாலும் கூட, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுவடையச் செய்யும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by ahmad78 Thu 18 Sep 2014 - 14:33

தாடை பயிற்சிகள்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499630-11facial-exercise2
காதுகளின் வாயை திறப்பதற்கு கீழ்கூறிய எளிய படிகளை நீங்கள் பின்பற்றலாம்.
• மேலும் கீழுமாக தாடைகளை வேகமாக ஆட்டவும்.
• இதனை தினமும் செய்தால், அடைபட்டிருக்கும் காதின் வாய் திறந்து விடும்.
---------------------

காதில் எதையும் திணிப்பதை தவிர்க்கவும்

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! 12-1410499636-12aear-pain
காதில் கீழ்கூறிய எதையும் திணிக்க முயற்சி செய்யாதீர்கள்.
• கூர்மையான பொருட்கள்
• பஞ்சுருண்டை
• அழுக்கை நுழைய விடுதல்
உங்களுக்கு காதில் வலி உள்ளதா? அப்படி வலி இருந்து அதற்கு எப்படி தீர்வு காண்பது என தெரியவில்லையா? அப்படியானால் மேற்கூறிய எளிய சிகிச்சைகளைப் பின்பற்றலாம்.
 
 
http://tamil.boldsky.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!! Empty Re: காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum