சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

கார்த்திகை விளக்கீடு Khan11

கார்த்திகை விளக்கீடு

4 posters

Go down

கார்த்திகை விளக்கீடு Empty கார்த்திகை விளக்கீடு

Post by *சம்ஸ் Sun 11 Jan 2015 - 20:58

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை வழிபாடு

கார்த்திகை மாதம்

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை நாள்
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

கார்த்திகை விளக்கீடு 775px-Earthenware_Essaar
மதுரையில் கார்த்திகை மாதத்தில் விற்பனைக்கு தெருவில் கிடத்தப்பட்டிருக்கும் கார்த்திகை விளக்குகள்

கார்த்திகை விழா
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து “சொக்கப்பானை”க்கு[1] அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

ஐதீகம்
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
கார்த்திகை விளக்கீடு 800px-Kaarthigai_a_festival_in_India
வீடுகளில் சுடரும் கார்த்திகை விளக்கு

விரத முறை
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

வீடுகளை அலங்கரிக்கும் முறை
பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரம்
கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
கார்த்திகை விளக்கீடு Pleiades_large
கார்த்திகை நட்சத்திரத்தின் புகைப்படத் தோற்றம்

சங்கநூல்களில் கார்த்திகை
கார்த்திகை மாலை-விளக்கு
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன்.
அவன் மகள் தித்தன்.

அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)
இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. 

கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.

அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும். 

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம். 
சூடாமணி நிகண்டு

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்

தெறுகால்,
தேள்,
விருச்சிகம்
கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள்
அங்கி
அளக்கர்
அளகு
அறுவாய்
ஆரல்
இறால்
எரிநாள்
நாவிதன்

மேலும் பார்க்க
en:Krittika
கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)

Last edited by *சம்ஸ் on Mon 12 Jan 2015 - 20:34; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 14:52

திரியை நிர்வாகத்தில் நகர்த்தி இருக்கேன். 

திரியை பதிந்த அட்மின் சார்   பதிவுகள் சரியாய் உள்ளதா எனவும்.  போதிய இடைவெளி உள்ளதா எனவும்  எல்லாம் சரியா எனவும் ஒரு தடவை முன் பார்வை பார்த்து சரிபார்க்கும் படி தயவுடன் வேண்டுகோள் வைக்கின்றேன். 

பதிவுகளை  திரித்திட்டிருக்க இனியும் என்னால் முடியல்ல.

 நான் சேனைக்கு வராட்டாலும் சேனை தொடந்து அழகான நிதானமாக இயங்கணும் தொடரணும். அதற்காக இந்த சுட்டிக்கட்டலும் கொட்டி திருத்தலும் அவசியாமாவதால்  தாங்கள் கோபம் கொண்டாலும் என்  திருத்தல் தொடரும் என மிக மிக தாழ்மையுடன் அறிவிக்கின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 15:01

ஹை சம்ஸ் மாட்டிக்கிட்டாரா.... ஹா ஹா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:04

பானுஷபானா wrote:ஹை சம்ஸ் மாட்டிக்கிட்டாரா.... ஹா ஹா.

உங்களுக்கு இப்ப என்ன? உங்க தம்பி மாட்டிக்கிட்டதில் இத்தனை சந்தோஷமா?

பாவம் சார்! நல்ல அக்கா, நல்ல தம்பி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 15:06

Nisha wrote:
பானுஷபானா wrote:ஹை சம்ஸ் மாட்டிக்கிட்டாரா.... ஹா ஹா.

உங்களுக்கு இப்ப என்ன? உங்க தம்பி மாட்டிக்கிட்டதில் இத்தனை சந்தோஷமா?

பாவம் சார்! நல்ல அக்கா, நல்ல தம்பி.

எல்லாருக்கும் வழிகாட்டியாய் இருப்பவர் இப்படி தப்பு செய்யலாமா????????

அக்கா தம்பினா இப்படி சில்மிஷம் இருக்கத் தானே செய்யும் சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:08

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:ஹை சம்ஸ் மாட்டிக்கிட்டாரா.... ஹா ஹா.

உங்களுக்கு இப்ப என்ன? உங்க தம்பி மாட்டிக்கிட்டதில் இத்தனை சந்தோஷமா?

பாவம் சார்! நல்ல அக்கா, நல்ல தம்பி.

எல்லாருக்கும் வழிகாட்டியாய் இருப்பவர் இப்படி தப்பு செய்யலாமா????????

அக்கா தம்பினா இப்படி சில்மிஷம் இருக்கத் தானே செய்யும் சிரிப்பு வருது

இதை சரியாக புரிந்து கொண்டால் கவலை வராது, கோபம் வராது,    எப்படி புரிந்து கொள்வார் என பார்ப்போம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 15:13

எங்க தம்பிய என்னனு நினைச்சிங்க . நிஜமாவே தப்பா எடுத்துக்கமாட்டார். குழந்தை போல சரி அக்க்கா என சொல்வார் பாருங்க மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 15:23

பானுஷபானா wrote:எங்க தம்பிய என்னனு நினைச்சிங்க . நிஜமாவே தப்பா எடுத்துக்கமாட்டார். குழந்தை போல சரி அக்க்கா என சொல்வார் பாருங்க மகிழ்ச்சி

நம்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன் பானுவோய்!  நம்பிட்டேன்!

கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் இன்று முதல் உதிக்க கட்டளை இடுகின்றேன் .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by பானுஷபானா Mon 12 Jan 2015 - 15:44

ம்ம்ம் நாளை முதல் மேற்கில் சூரியன் உதிக்கனும் சொல்லிட்டேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by சுறா Mon 12 Jan 2015 - 19:28

நானும் இந்த விசயத்தில் கெடுபிடியான ஆள் தான்  சுட்டுத்தள்ளு.!!

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by *சம்ஸ் Mon 12 Jan 2015 - 20:05

Nisha wrote:திரியை நிர்வாகத்தில் நகர்த்தி இருக்கேன். 

திரியை பதிந்த அட்மின் சார்   பதிவுகள் சரியாய் உள்ளதா எனவும்.  போதிய இடைவெளி உள்ளதா எனவும்  எல்லாம் சரியா எனவும் ஒரு தடவை முன் பார்வை பார்த்து சரிபார்க்கும் படி தயவுடன் வேண்டுகோள் வைக்கின்றேன். 

பதிவுகளை  திரித்திட்டிருக்க இனியும் என்னால் முடியல்ல.

 நான் சேனைக்கு வராட்டாலும் சேனை தொடந்து அழகான நிதானமாக இயங்கணும் தொடரணும். அதற்காக இந்த சுட்டிக்கட்டலும் கொட்டி திருத்தலும் அவசியாமாவதால்  தாங்கள் கோபம் கொண்டாலும் என்  திருத்தல் தொடரும் என மிக மிக தாழ்மையுடன் அறிவிக்கின்றேன்.

நன்றி மேடம் உங்களின் சுட்டிக்காட்டலுக்கு நானும் அதை சரிபார்த்துதான் பதிந்தேன் அதற்க்கிடையில் இப்படி இருந்ததை சரியாக கவனிக்கவில்லை அதற்காக நான் செய்யதது தப்பில்லை என்று சொல்லவில்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 20:34

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களில் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.

கார்த்திகை வழிபாடு

கார்த்திகை மாதம்

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை நாள்
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

கார்த்திகை விளக்கீடு 775px-Earthenware_Essaar
மதுரையில் கார்த்திகை மாதத்தில் விற்பனைக்கு தெருவில் கிடத்தப்பட்டிருக்கும் கார்த்திகை விளக்குகள்

கார்த்திகை விழா
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து “சொக்கப்பானை”க்கு[1] அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

ஐதீகம்
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.
கார்த்திகை விளக்கீடு 800px-Kaarthigai_a_festival_in_India
வீடுகளில் சுடரும் கார்த்திகை விளக்கு

விரத முறை
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

வீடுகளை அலங்கரிக்கும் முறை
பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

கார்த்திகை நட்சத்திரம்
கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.
கார்த்திகை விளக்கீடு Pleiades_large
கார்த்திகை நட்சத்திரத்தின் புகைப்படத் தோற்றம்

சங்கநூல்களில் கார்த்திகை
கார்த்திகை மாலை-விளக்கு
வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன்.
அவன் மகள் தித்தன்.

அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)
இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. 

கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.
கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.

அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும். 

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.
எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம். 
சூடாமணி நிகண்டு

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்

தெறுகால்,
தேள்,
விருச்சிகம்
கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள்
அங்கி
அளக்கர்
அளகு
அறுவாய்
ஆரல்
இறால்
எரிநாள்
நாவிதன்

மேலும் பார்க்க
en:Krittika
கார்த்திகை (நாள்மீன் கூட்டம்)

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 20:41

உங்கள் புரிதலுக்காக நான் திருத்தி இட்டிருக்கும் பதிவை பாருங்கள். 

விக்கிமீடியா கட்டுரையை அப்படியே  தொகுத்து இட்டிருக்கின்றார்கள்.  விக்கிமீடியா கட்டுரையில் தகவல் உசாத்துணைக்காக இலக்கங்கள் இடுவார்கள். அதையும் சேர்த்து இங்கே பதியணும் என்பதே இல்லை!

அப்புறம்  காபபி பேஸ்ட் பதிவுகளை  switch editor mode  ல் விட்டு மார்க் செய்திட்டு   Remove text Formating கிளிக் செய்தால்  சேனைபக்கத்துக்குரிய செட்டிக்குக்கான எழுத்துருவாகி விடும். 

அதன் பின் போல்ட் செய்வது எனினும்,  இடைவெளி விடுவது எனினும் கவனித்து செட் செய்திட்டால் பெரிய பதிவுகளும்  பார்க்கும் போது அழகாய் படிக்கும் சுவாரஷ்யம் தரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Nisha Mon 12 Jan 2015 - 20:44

இது தனிப்பட்ட மதத்தவர்  கொண்டாடும் விழா என்பதால் தமிழர் நாகரிகத்தில் சேராது. 

இந்து மதத்தில் பதிய வேண்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by *சம்ஸ் Mon 12 Jan 2015 - 20:55

நன்றி மேடம் சிறந்த சுட்டிக்காட்டலுக்கு  சலூட்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கார்த்திகை விளக்கீடு Empty Re: கார்த்திகை விளக்கீடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum