சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பதற்றக் கோளாறுகள் Khan11

பதற்றக் கோளாறுகள்

2 posters

Go down

பதற்றக் கோளாறுகள் Empty பதற்றக் கோளாறுகள்

Post by ahmad78 Thu 16 Jul 2015 - 12:08

டாக்டர் சித்ரா அரவிந்த்
பதற்றக் கோளாறுகள் Ht3717
குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் பதற்றக் கோளாறுகளில் பல வகைகள் உள்ளன. பிரிவு குறித்த பதற்றக் கோளாறு, பொதுக் கவலைக் கோளாறு, சமூக அச்சம் ஆகிய 3 வகைகளை சென்ற இதழில் அறிந்தோம். இன்னும் இரு வகைகள் இந்த இதழில்...

4. தெரிவு மொழியற்ற நிலை (Selective Mutism)


பொதுவாக நன்றாக பேச தெரிந்த குழந்தைகள், பரிச்சயமற்ற சூழ்நிலைகளில் யாரிடமும் பேசாமலிருக்கக்கூடும். இது ஒரு மாதத்துக்கு மேலும் நீடித்து பள்ளிப் படிப்பையும் பாதித்தால், அது தெரிவு மொழியற்ற நிலையாக இருக்கலாம். இவர்கள் பேசுவது குறித்த கவலை மற்றும் பயத்தினால், பதற்றம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளில், பேசுவதைத் தவிர்த்து விடுவார்கள். 

சில குழந்தைகள் பெற்றோர் தவிர பிறரிடத்தில் அறவே பேச மாட்டார்கள். பேச வேண்டிய கட்டாயமிருக்கும் சந்தர்ப்பத்தில், தலையை கீழே குனிந்து, வெட்கப்பட்டு, அந்த இடத்திலிருந்து செல்ல எத்தனிப்பார்கள். வேறு வழியின்றி பேச வேண்டுமெனில், சைகையினால் மட்டுமே பேசுவார்கள் / மெல்ல கிசுகிசுப்பார்கள்.

பள்ளி செல்ல ஆரம்பிக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் ஆரம்பிக்கலாம். பொதுவாக வகுப்பறையில் ஆசிரியர்களால் இந்த மனநலப் பிரச்னை கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்களில், இது தானாகவே சரியாகிவிடக் கூடும். பல வேளைகளில், வளர்ந்த பின்னரும் அறிகுறிகள் நீடித்து, அது சமூக பதற்றக் கோளாறாக உருவெடுக்கும் வாய்ப்பும் அதிகமாகிறது.

5. பீதிக் கோளாறு (Panic Disorder)


பதற்றக் கோளாறுகளில் தீவிரமான ஒரு வகைதான் பீதிக் கோளாறு. குழந்தைகளைக் காட்டிலும் டீன் ஏஜ் வயதினரையே (15-19), இது பெரும்பாலும் தாக்குகிறது. இதன் அறிகுறிகள் கிட்டத்தட்ட நெஞ்சுவலியைப் போலவே உணரப்படும். பேனிக் தாக்கத்தை (Panic Attack) தவிர்த்து, பிற நேரங்களில் பெரும்பாலும் இவர்கள் பதற்றமாக இருக்க மாட்டார்கள். இந்த தாக்குதல் சில நொடியிலிருந்து பல மணிநேரம் கூட நீடிக்கக்கூடும். 

வாழ்க்கையில் ஏதேனும் மன உளைச்சல் தரும் சம்பவம் நேர்ந்தால், அது பேனிக் தாக்குதலை ஏற்படுத்தக்கூடும். பல நேரங்களில் காரணத்துடனும் சில நேரங்களில் எவ்வித காரணங்கள் இன்றியும் இது ஒருவரைத் தாக்கலாம். இதன் அறிகுறிகள் பொதுக் கவலைக் கோளாறைப் போலவே இருப்பினும், அதைக் காட்டிலும் மிகத் தீவிரமாகவும், திடீரெனவும், எதிர்பாராத வேளைகளிலும் பாதிக்கப்பட்டவரைத் தாக்கும்.

அறிகுறிகள்?


1.    மூச்சு விடுவதில் சிரமம்
2.    அதிக இதய துடிப்பு
3.    நடுக்கம் / மயக்க நிலை
4.    தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போன்ற ஓர் உணர்வு
5.    இறந்து போய் விடுவோம் பைத்தியம் பிடித்துவிட்டது என்கிற உணர்வு.


இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் / டீன் ஏஜ் குழந்தைகள் பேனிக் தாக்குதல் வந்துவிடுமோ என்ற பயத்திலேயே சில நேரங்களில் பள்ளிக்கு செல்வதை தவிர்த்து விடுவார்கள். சிலர் வீட்டை விட்டு வெளியே சென்றால் ஏதேனும் தங்களுக்கு ஆகி விடுமென வெளியே செல்வதையும் தவிர்த்து விடுவார்கள் (Agoraphobia). குறைந்தது ஒரு மாத காலமாக, அடிக்கடி எதிர்பாராத பேனிக் தாக்கம் ஏற்படுவதோடு, ‘திரும்பவும் பேனிக் தாக்குதல் வந்துவிடுமோ, அப்படி வந்தால் என்ன ஆகுமோ’ என்ற பயம் தொடர்ந்தால், அது பீதிக் கோளாறாக இருக்கலாம். 

பல நேரங்களில் பேனிக் தாக்குதலை, நெஞ்சு வலியென தவறாக புரிந்து கொள்வதும் உண்டு. பல மருத்துவர்களிடம் சென்று பல டெஸ்ட்டுகள் எடுத்து உடலுக்கு எதுவுமில்லை எனத் தெரிந்து கொண்ட பின்னரே, இது ஒரு மனநலப் பிரச்னை என்பதை உணர்கிறார்கள். எதையோ பார்த்து குழந்தை பயந்து விட்டது என எண்ணி மந்திரிப்பவர்களும் / கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு.

காரணி?

பல விஷயங்கள் பதற்றக் கோளாறு ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றன.

1.     மரபணு
2.     மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள்
3.     மனஉளைச்சல் ஏற்படுத்தும் வாழ்க்கை சூழல்...
           பிரியமானவர்களின் மறைவு
          பெற்றோரின் விவாகரத்து
          புது இடம் பெயருதல்
           சிறுவயதில் உடல் ரீதியாகவோ / உணர்வு ரீதியாகவோ / பாலியல் ரீதியாகவோ துன்புறுத்தப்படுதல் (Child Abuse)
           ஆபத்தான சூழ்நிலையில் வளர்தல்
4.    கற்றுக்கொண்ட செயல்பாடுகள் (எ-டு: பயந்த சுபாவமுள்ள பெற்றோர்).


குடும்பத்தில் யாரேனும் பதற்றப்படுகிறவராக இருப்பின், குழந்தை அவரைப் போலவே பயப்பட கற்றுக் கொள்கிறது. பெற்றோரின் வளர்ப்பு முறையும் ஒரு காரணமாக அமைகிறது. ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்ப்பது, தங்கள் எதிர்பார்ப்பைக் குழந்தை மீது திணித்து, கண்டிப்புடன் வளர்ப்பது, ‘இந்த உலகமே ஆபத்தானது... உஷாராக இருக்க வேண்டும்’ என 
பயமுறுத்தி வளர்ப்பது போன்றவற்றாலும் குழந்தைகளுக்குப் பதற்றக் கோளாறு ஏற்படலாம்.

சிகிச்சை?


குழந்தைக்கு மேலே பார்த்த அறிகுறிகளை வைத்து ஏதேனும் பதற்ற வகைக் கோளாறு இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால் உடனடியாக தேர்ச்சி பெற்ற உளவியல் நிபுணரிடத்தில் (Clinical Psychologist) அழைத்துச் சென்று காட்டுவது அவசியம். நல்ல வேளையாக, இவ்விதப் பிரச்னைகளுக்கு உளவியலில் தீர்வுகள் உண்டு. பொதுவாக, 5-10 ஆண்டுகள் இந்தப் பிரச்னையால் அவதியுற்ற பின்பே சிகிச்சை பெற வருகிறார்கள். இது வெளிப்படையாக பிறருக்குத் தெரியாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

உளவியல் நிபுணர் சில ஆய்வுகளுக்குப் பின்னர் எந்த வகை பதற்றக் கோளாறு என்பதை அறிந்து குழந்தைக்கு ஏற்ற சிகிச்சையை வடிவமைத்து, உதவி செய்வார். அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy), அமைதிப்படுத்தும் சிகிச்சை (Relaxation Therapy) போன்ற சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. பிரச்னையை சமாளிக்கும் திறன்களைக் கற்றுக் கொடுத்து, உதவியும் ஆலோசனையும் வழங்கப்படுகின்றன. இதனால், பதற்றம் ஏற்படுத்தும் சூழ்நிலையில் வேறு விதமாக யோசிக்கவும் செயல்படவும் இவர்கள் கற்றுக் கொண்டு, பதற்றத்தைச் சமாளிக்க தெரிந்து கொள்வார்கள்.

பெற்றோரின் கவனத்துக்கு..
.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு பதற்றக் கோளாறு இருப்பது தெரிய வந்தால், அவர்களின் நிலைமைையப் புரிந்து கொண்டு, உதவியாக இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகளிடம் வெளிப்படையாக அவர்களின் அறிகுறிகள் குறித்துப் பேசி, எப்படி அது அவர்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.தங்கள் குழந்தை சிகிச்சை மேற்கொண்டு, சமாளிக்க கற்றுக் கொள்ளும் வரை, பெற்றோர் பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது மிகவும் நல்லது. குழந்தையை ஊக்கு வித்து, தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். இதன் மூலம், விரைவிலேயே, குழந்தை தன்னுடைய பதற்றத்தைச் சமாளித்து, எதிர்காலத்தை தன்னம்பிக்கையுடனும் அமைதியாகவும் எதிர்நோக்க கற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு ஏற்படும் மனசுழற்சி மனநோய் (Obsessive-Compulsive Disorder) குறித்து அடுத்த இதழில்  பார்ப்போம்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3727


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பதற்றக் கோளாறுகள் Empty Re: பதற்றக் கோளாறுகள்

Post by சே.குமார் Thu 16 Jul 2015 - 14:10

நல்ல கட்டுரை.
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum