சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

அனுபவ மொழிகள்  Khan11

அனுபவ மொழிகள்

4 posters

Go down

அனுபவ மொழிகள்  Empty அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:31


இருக்கும் இடத்தில் இந்த நொடியில்
இன்புற்றிரு – இதுவே வாழ்க்கை!

இங்கர்சால்

——————————

நீண்ட நாட்கள் வாழ எல்லோருக்கும் ஆசை
ஆனால் நன்றாக வாழவேண்டும் என்பது
ஒரு சிலரின் ஆசை

சின்மயானந்தா

——————————–

நரைச்ச தலை பெருமிதம் தரும் கிரீடம்!

பழமொழி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:32

1.கர்வம் வெற்றியின் புதைசேறு! – சார்லஸ் லாம்ப்
2.அறிவு கண்களில் தெரியும்; அன்பு முகத்தில் தெரியும்! – லாங்ஃபெல்லோ
3.நம்பிக்கையும் மகிழ்ச்சியுமே உண்மையான
செல்வம்! – ஹியூம்

4.நீ வாயைத்த திறக்கும்போது உள்ளத்தைத் திறக்கிறாய்; எனவே கவனமாக இரு! – யங்
5.அதிக வேலையாக அலைபவர்களுக்கு கண்ணீர் விட நேரமில்லை! – பைரன்
6.நம்பிக்கை உடையவர்களே வெற்றி அடைய முடியும்! – வர்கீஸ்
7.சிக்கல்கள்தான் மிகப் பெரிய சாதனைகளையும் மிக உறுதியான வெற்றிகளையும்
உருவாக்குகின்றது! – கென்னடி

8.எந்த வேலையும் இழிவல்ல; இழிவு என்பது சோம்பல்தான்! – விட்மன்
9.மாற்று வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு விவேகம் என்று பெயர்! – பால் எல்ட்ரிட்ஸ்
10.துயரத்துக்கு ஒரே மாற்று மருந்து சாதனைதான்! – ஜார்ஜ் ஹென்றிலீவ்ஸ்

-தொகுப்பு: விசாகன், திருநெல்வேலி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:33

வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
அது நடந்து முடிந்து விட்டது. அதைப்போல் வாழ்வைக் கண்டும்
அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை.
ஏனெனில் அது தவிர்க்க முடியாதது. அது எப்போது
வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச
வேண்டும்?

”நான் பிறக்கும்போது எந்தக் கவலையையும்
சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை
சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை.
அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன்,”
என்று எண்ணுங்கள்.

மென்சியஸ் என்னும் சீடன் தன குருவான கன்பூசியசிடம்,
‘இறந்த பிறகு என்ன நடக்கும்?’ என்று கேட்டான். அதற்கு அவர்,
”இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில்
படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம்.
இப்போது ஏன் நீ அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்?”
என்றார்.

– ஓஷோ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:33

பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி
_ வில்சன் மிஸ்னர்.

பெண்ணின் முகம் எனது புத்தகம் – பைரன்

காற்றை விடக் கடும் வேகம் கொண்டது பெண்களின் எண்ணம்
_ ஷேக்ஸ்பியர்.

பெண் மனம் பெறும் அறிவுக்கு ஏற்பவே மனிதனின்
அறிவும் வளர்ச்சியுடையதாயிருக்கும் – ஷெரிடன்

பெண் எந்தக் காற்றிலும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாணலைப்
போன்றவள். ஆனால், பெரும்புயலிலும் அவள் ஒடிந்து விழ மாட்டாள்
_ வேட்லி.

பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு
சுபீட்சம் அடையாது _ நேரு.

உலகின் பெரும் புதிர்களுள் ஒன்று பெண்- ஷேக்ஸ்பியர்

பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது.
ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது
_ லார்ட் பைரன்.

பொய்மை கோழைத்தனம், கீழ்க்குணம் ஆகிய மூன்றுமே பெண்கள்
பெரிதும் வெறுப்பவை _ ஷேக்ஸ்பியர்.

பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு
பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத்
தெய்வங்களாக்குகிறது _ ஷேக்ஸ்பியர்.

பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்தலே குடும்ப இன்பத்தின்
அடிப்படை _ லாண்டர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:35

உத்தம மனைவியைப் பெறுவதற்குரிய ஒரே வழி …
---------------

எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ
அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் _ மகாபாரதம்

தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு
_ ஒளவையார்

பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்
_ தேசிக விநாயகம் பிள்ளை.

ஒரு பெண்ணின் உள்ளமாகிய கடலில் இரக்கம், தியாகம்,கற்பு,
காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் _பெஸ்லிங்

கொஞ்சம் கொஞ்சமாக சுவைக்க வேண்டிய பேரீச்சம்பழம்
போன்றவர்கள் பெண்கள்.
நறுக்கென்று கடித்தால் கொட்டை பல்லை உடைத்துவிடும்
-காண்டேகர்

உத்தம மனைவியைப் பெறுவதற்குரிய ஒரே வழி
உத்தமக் கணவனாக இருப்பதுதான்.
-பர்க்கர்

வனப்புடைய பெண் ஒரு மணி,
நற்பண்பு வாய்ந்த பெண் ஒரு மணிக்குவியல் – ராபர்ட் ஸதே

அழகு பெண்களுக்குத் தற்பெருமையை தந்து விடுகிறது
– ஷேக்ஸ்பியர்

அழகியின் கண்ணீர் அவளது புன்னகையை விடக்
கவர்ச்சிகரமானது – தோமஸ் காம்பெல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:36

பெண்ணுக்கு அழகு நாணம்…
-------------

நிலத்துக்கு அழகு நெல்லும் கரும்பும்,
குளத்துக்கு அழகு தாமரை
பெண்ணுக்கு அழகு நாணம்
ஆணுக்கு அழகு தான் செய்யும் நல்ல செயல்கள்.

-விளம்பி நாகனார்

————————————–

உலகின் புதுமைப் புதிர்களுள் ஒன்று பெண்.

-கெர்மின்

—————————————

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெண்மையின்
அன்புச் சின்னமாகும்!

குகப்ரியை

—————————————-

பெண்கள் பேசுவது ஆச்சரியமில்லை, அவர்கள்
அமைதி
ஆக இருப்பதுதான் ஆச்சரியம்!

கன்டோல்

——————————————

காதல் என்பதில் காமம் இருப்பினும், காமம்
என்பதில் துளியும் காதல் இல்லை!

நாமக்கல் கவிஞர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 24 Dec 2015 - 12:37

தமிழ் பழமொழிகளும் விளக்கமும்:
----------------
“கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!”

அறிந்தது: நாயை பார்த்தால் கையில் கல் இல்லை அதே, கையில் கல் இருந்தால் நாயைக் காணோம்!

அறியாதது: “கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்”. என்பது தான் உண்மையான பழமொழி. இங்கு நாயகன் என்பது கடவுள்.இதன் பொருள் கல்லால் ஆன ஒரு இறைவன் சிலையை பார்க்கும் போது, அதை கல்லாக பார்த்தால் அங்கே கடவுள் இல்லை, கடவுளாக பார்த்தால் கல் இல்லை.

“வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!”

அறிந்தது:வர வர மாமியார் கழுதை போல ஆனார்.

அறியாதது: இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது. கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள காய்.(ஊமத்தங்காய்). இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத் தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய் ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.

“ஆறிலும் சாவு நூறிலும் சாவு”

அறிந்தது: ஆறு வயதிலும் சாவு நூறு வயதிலும் சாவு.

அறியாதது: மகாபாரதத்தில் குந்தி தேவி கர்ணனை பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ளுமாறு வேண்டினாள். அதற்கு கர்ணன் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் (5+1=6 பேர்) ஆறு பேருடன் அல்லது கௌரவர்கள் (100 பேர்கள்) நூறு பேருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது உறுதி என்றான்.

“களவும் கற்று மற”

அறிந்தது: திருடுவதை கற்று கொண்டு பின்னர் மறந்து விட வேண்டும்.

அறியாதது: இந்த பழமொழியில் “கற்று” என்பது “கத்து” என்று வர வேண்டும். கத்து என்றால் பொய் என்று அர்த்தம். களவு என்றால் திருட்டு. திருட்டையும் பொய்யையும் மறக்க வேண்டும்.

“ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்”.

அறிந்தது: ஆயிரம் பேரை கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் ஆகின்றான்.

அறியாதது: இதில் “வேரை” என்பது பேச்சு வழக்கில் “பேரை” என்றும் “கண்டால்” என்பது “கொன்றால்” (ஆயிரம் வேரை கண்டால் அரை வைத்தியன்) என்றும் ஆகி விட்டது. ஆயிரம் வேரை கண்டால் அரை வைத்தியன் என்று பொருள் (வேர் என்பது மூலிகை செடிகளின் வேரைக் குறிக்கும் – உதாரணம்: கீழாநெல்லிச் செடியின் வேர்)

“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்”

அறிந்தது: ஒரு கல்யாணத்தை நடத்த ஆயிரம் பொய்களை சொல்லலாம்.

அறியாதது: திருமணத்தின் போது ஆயிரம் முறையாவது போய் (சென்று) சொல்லி புரிய வைத்து திருமணத்தை நடத்த வேண்டும். ‘போய்’ என்பது பேச்சு வழக்கில் ‘பொய்’ என்று மாறி விட்டது.

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.

அறிந்தது: அடித்தால்தான் காரியம் நடக்கும்.

அறியாதது: இதில் அடி என்பது இறைவனின் அடி ஆகும். இறைவனின் அடி நமக்கு உதவுவது போல வேறு யாரும் உதவ மாட்டார்கள்.

பந்திக்கு முந்து..படைக்கு பிந்து…

அறிந்தது : விருந்தில் பந்திக்கு முதலில் செல்ல வேண்டும். சண்டை என்றால் பின் வாங்க வேண்டும்.

அறியாதது: உண்ணும் பொழுது கை முன் செல்கிறது. அதே போரில் சண்டையிடும் போது முதுகில் உள்ள ஆயுதங்களை எடுக்க கை பின்னால் செல்கிறது. இதுவே அர்த்தம்.

இதுதான் பழமொழிகளின் உண்மையான அர்த்தம். ஆனால் நாம் காலப்போக்கில் நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றி விட்டோம். இது போல் இன்னும் பல நல்ல தமிழ் பழமொழிகளுக்கு நாம் தவறான அர்த்தம் கொண்டு உள்ளோம். நம் பிழைகளை திருத்தி கொண்டு மற்றவர்களுக்கும் தமிழ் பழமொழிகளின் பெருமையை உணர்த்துவோம்.

–அண்ணாமலை கண்ணப்பன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 24 Dec 2015 - 13:50

அவசியமான அறிவார்ந்த பதிவு அண்ணா மிக்க நன்றி


அனுபவ மொழிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by நண்பன் Sat 26 Dec 2015 - 16:46

கவிப்புயல் இனியவன் wrote:
இருக்கும் இடத்தில் இந்த நொடியில்
இன்புற்றிரு – இதுவே வாழ்க்கை!

இங்கர்சால்

——————————

நீண்ட நாட்கள் வாழ எல்லோருக்கும் ஆசை
ஆனால் நன்றாக வாழவேண்டும் என்பது
ஒரு சிலரின் ஆசை

சின்மயானந்தா

——————————–

நரைச்ச தலை பெருமிதம் தரும் கிரீடம்!

பழமொழி
சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by நண்பன் Sat 26 Dec 2015 - 16:48

அதிக வேலையாக அலைபவர்களுக்கு கண்ணீர் விட நேரமில்லை!
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by rammalar Tue 29 Dec 2015 - 19:38

அனைத்தும் ....அனுபவ மொழிகள்  3838410834
-
அனுபவ மொழிகள்  Images?q=tbn:ANd9GcR5cLtHeogcSWXGCf6NXIVYQIma46Ffk8OPhEw7Ph9AAEN23_9v
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அனுபவ மொழிகள்  Empty Re: அனுபவ மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum