சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல். Khan11

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்.

2 posters

Go down

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல். Empty புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்.

Post by *சம்ஸ் Tue 14 Dec 2010 - 6:31

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல். Large_145403

மேட்டூர் : மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நிறைவடையாத நிலையில், குறித்தபடி வரும் 2011 மார்ச் இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை உள்ளது. இதனால், கோடைக்கால மின்பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூரில் 3,550 கோடி ரூபாய் செலவில், புதிதாக 600 மெகாவாட் அனல்மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இதில், ஜூன் 24, 2011ம் ஆண்டு, மின் உற்பத்தி துவங்கி, செப்., 24, 2011ல் மின் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது. தற்போது, மேட்டூர் அனல்மின் நிலையம் கட்டுமான பணியில், 2,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா போன்ற வடமாநில தொழிலாளர்களே அதிகம் உள்ளனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென, மேட்டூர் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் தொழிற்சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில், கட்டுமான பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது. மின் நிலையத்திற்கு காவிரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவதற்காக, பாலம் கட்டும் பணி முடியவில்லை. கூலிங் டவர், பாய்லர் சர்வீஸ் ஸ்டேஷன், நிலக்கரி எடுத்து வருவதற்கான கன்வேயர் பெல்ட் அமைக்கும் பணி, நிலக்கரியை தூளாக்கும் டர்பன்கள் அமைக்கும் பணி, அனல்மின் நிலைய வளாகத்தில் ரோடு போடும் பணி என, எந்த ஒரு பணியும் முற்றுபெறவில்லை. பணி முடிந்து மின் உற்பத்தி துவங்க, இன்னமும் ஆறு மாதங்களுக்கு மேலாக வாய்ப்புள்ளது. பணி முடிய பல மாதங்கள் இருப்பதால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

கடந்த அக்., 14ம் தேதி, புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியதாவது: மேட்டூர் புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணியை துரிதப்படுத்தி, வரும் மார்ச் 2011க்குள் மின் உற்பத்தி துவங்க வேண்டும் என, பொறியாளர்களிடம் கூறியுள்ளோம். கோடைக்காலத்தில் தமிழகத்தில் மின் தேவை, மேலும் 3,000 மெகாவாட் அதிகரிக்கும். வரும் 2011 மார்ச் இறுதிக்குள், மேட்டூரில் 600 மெகாவாட், எண்ணூரில் 600 மெகாவாட், வள்ளூரில் 500 மெகாவாட் என, புதிய அனல்மின் நிலையங்கள் உற்பத்தி துவங்குவதன் மூலமும், நீர்மின் நிலையங்கள் மூலமும் 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். 2,000 மெகாவாட் மின்சாரம், வெளிமாநிலம் அல்லது மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்வதன் மூலம், கோடைக்காலத்தில் கூடுதலாக தேவைப்படும் 3,000 மெகாவாட் மின்தேவை பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார். ஆனால், மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில், மார்ச் 31க்குள் மின் உற்பத்தியை துவங்குவதற்கான சாத்தியம் குறைவாக இருப்பதால், கோடை காலத்தில் 3,000 மெகாவாட் மின் பற்றாக்குறையை சமாளிப்பதில், வாரியத்திற்கு நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல். Empty Re: புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல்.

Post by ஹம்னா Tue 14 Dec 2010 - 12:39

:?: :?:


புதிய அனல்மின் நிலைய கட்டுமான பணி தாமதம் : கோடை மின் பற்றாக்குறையை சமாளிப்பதில் சிக்கல். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum