சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? Khan11

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

2 posters

Go down

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? Empty முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

Post by gud boy Tue 14 Jun 2011 - 19:05

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?



1) இன்றைய தேவை ஓர் இஸ்லாமிய எழுச்சி.



ஆம் டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு,காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி.


2) அத்தகைய மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மலர ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை இஸ்லாத்தில் முழுமையாக நுழைத்திட வேண்டும்.



நாம் மேலே சுட்டிக்காட்டியுள்ள நிபந்தனைகள் அடிப்படையில், பெயரளவில் முஸ்லிம் என்று இல்லாமல் இஸ்லாத்தின் கடமைகளையும், சட்டதிட்டங்களையும் தெளிவாக விளங்கி செயல்படக்கூடிய முன்மாதிரி முஸ்லிமாக முதலில் நீங்கள் இருக்க வேண்டும். இஸ்லாத்தின் 5 முக்கியக் கடமைகளான சாட்சிபகர்தல், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்றவற்றில் மிகுந்த பேணிக்கையுடன் நடந்து காட்டவேண்டும். ஒரு முஸ்லிமின் அடிப்படை அம்சங்களான உண்மை, நேர்மை, பணிவு, நன்னடத்தை, வாக்குறுதி மீறாமை போன்ற நற்பண்புகளின் உறைவிடமாக நீங்கள் திகழவேண்டும். இந்திய மண்ணில் இஸ்லாம் வேரூண்டக் காரணமாக அமைந்தவைகளுள் ஒன்று நம்மக்களிடம் அன்றைய அரபுமுஸ்லிம் வணிகர்கள் நடந்து காட்டிய நேர்மையான நன்னடத்தைகள் என்பதையும் கவனத்தில் கொள்க.

3) உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும்.



பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய ஷைத்தானிய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம். அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

4) இஸ்லாமிய குடும்ப உறவுகள் மேம்படவேண்டும். சிறுசிறு கருத்துவேறுபாடுகள், பிரச்சனைகளால் பல முஸ்லிம் குடும்பங்களுக்குள் பல பிரிவினைகள் ஏற்பட்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதுபோல அத்தகைய பிளவுகள் அனைத்திற்கும் முதற்காரணமாக இருப்பது, மறுமைக்கான பரிசோதனைக் கூடமான அற்ப உலக வாழ்க்கையில் நமக்கு ஏற்பட்டுள்ள பற்றுதலே. சுயநலமாகவும், அகங்காரமாகவும், பழிவாங்கும் எண்ணத்துடனும் வாழ்ந்திருந்து இறுதியில் நாம் எதைக் கொண்டு செல்லப்போகிறோம்? என்பதை ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம். தனிப்பட்ட விரோதங்கள்தாம் நாளடைவில் குடும்பப் பிரச்சனைகளாக வலுக்கிறது. நம் குடும்ப உறவுகளை முறித்து, பல பிளவுகளை நமக்குள் ஏற்படுத்தி அவற்றையே ஒரு இயக்கப்பிளவாக, ஒரு சமுதாயத்தின் பிளவாக மாற்றி, நம்மை கோழைகளாக ஆக்கிவிடுவது கெட்ட ஷைத்தானுடைய (இப்லீஸ் - லூசிஃபருடைய) வேளைதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனவே முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமைக்கான வித்து உங்கள் குடும்பத்திலிருந்து ஊன்றப்பட வேண்டும்.

5) உங்கள் குடும்பம் ஒரு உள்ளரங்கு இஸ்லாமியப் பல்கலைக்கழகமாக மாறிடவேண்டும்.



உங்கள் பெற்றோர்கள், மனைவியர் மற்றும் குழந்தைகள் உட்பட உங்கள் குடும்பத்தார்கள், உங்கள் பொறுப்பிலுள்ளோர் என்று அனைவருக்கும் ஷைத்தானுடைய, இலுமனாட்டிகளுடைய சூழ்ச்சிகளை விளக்கவேண்டும். மேலும் அவர்களையும் தூய இஸ்லாத்தின் கோட்பாடுகளால் வார்த்தெடுத்து இஸ்லாம் என்னும் சத்தியமார்க்கத்தில் இறுகிப் பிணைத்திடவேண்டும். ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, குளியல் அறை, சமையல் அறை என்பன எவ்வாறு அவசியமோ அது போல ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்களாவது கொண்ட ஒரு இஸ்லாமிய நூலகம் அவசியம் இருக்க வேண்டும். உங்கள் வீட்டிற்குள் வரும் வருகையாளர் இஸ்லாத்தின் அம்சங்களில் எதையாவது ஒன்றை கற்று அறிந்தவராக உங்கள் வீட்டைவிட்டு திரும்பிச்செல்ல வேண்டும்.

6) முஸ்லிம்கள் பயனுள்ள கல்வி பெறவேண்டும். கல்வி கற்பதை இஸ்லாம் வலியுறுத்தும் அளவிற்கு வேறு எந்த மார்க்கமும் வலியுறுத்தவில்லை. உலக கல்வி வேறு, மார்க்கக் கல்வி வேறு என்று கல்வி இருகூறாக பிரிக்கப்பட்டுள்ளதின் பின்னனியில் யூதசூழ்ச்சிகள் இருப்பதையும், மார்க்கக் கல்வியோடு கூடிய உலக கல்விதான் உங்களுக்கு பயனளிக்கும் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்ளுங்கள். கல்வி கற்பதை நம் மார்க்கம் கடமையாக்கியுள்ளதை உணர்ந்து நீங்களும், உங்கள் குடும்பமும் அத்தகைய இருகல்விகளையும் ஒருங்கே பெற முயலுங்கள். பிரித்து வைக்கப்பட்டுள்ள இருகல்விமுறையை ஒன்றிணைக்கவும், இதைப்பற்றிய விழிப்புணர்வை நீங்கள் வாழும் பகுதியில் ஏற்படுத்திடவும் பாடுபடவேண்டும். உலக ஊடகங்கள் பொரும்பாலும் இஸ்லாத்திற்கெதிரான நச்சுக்கருத்துக்களை வெளியிடுவதையும், பொய்களைப் பரப்புவதையுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவைகளை பிரித்தறிந்து உண்மையை விளங்கும் அளவிற்கு அறிவாற்றல் பெற்றவராக நீங்கள் திகழவேண்டும். ஊடகங்களில் வெளியிடப்படும் இஸ்லாத்திற்கெதிரான விஷயங்களை உணர்ச்சிப் பூர்வமாக அணுகிடாமல் அவற்றை அறிவுப்பூர்வமாக அணுகி உண்மை நிலையை உலகிற்கு தெளிவுபடுத்த வேண்டும்.

7) வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் இஸ்லாத்தையே முன்னிலைப் படுத்துங்கள்.



உங்களின் வேலைப்பளுக்கலோ, நீங்கள் வாழும் சுற்றுச்சூழலோ, அல்லது நீங்கள் வகிக்கும் பதவிகளோ நீங்கள் இறைவிசுவாசியாக வாழ்வதற்கும், மேற்காணும் நல்ல விஷயங்களை செயல்படுத்துவதற்கும் தடையாக இருப்பின் அத்தகைய நிலையைவிட்டு தெளிவான திட்டமிடலுடன் விரைவாக மீட்சிபெற முயலுங்கள். உங்கள் ஈமானை பலஹீனப்படுத்தி மறுமையை மறக்கடித்திடும் அளவுக்குள்ள பொருளீட்டலோ, வேலைப்பளுவோ, பதவிகளோ அல்லது சுற்றுச்சூழலோ அபாயகரமானது, அவசியமற்றது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். நான் மிகவும் வேலைப்பளு மிக்கவன், இஸ்லாமிய அறிவில் பலஹீனமானவன் என்பன போன்ற தாழ்வு மனப்பான்மையான, போலியான மாயையை விட்டொழித்து தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வின் அனைத்து விஷயங்களிலும் இஸ்லாத்தை முன்னிலைப்படுத்திட உறுதிகொள்ளுங்கள்.

இவ்வாக்கத்தில், நீங்கள், உங்களின், உங்களுடைய போன்ற முன்னிலை வாசகங்கள் எங்களையும் சேர்த்தே குறிக்கும். எனவே அவற்றை நாம், நமது, நம்முடைய என்ற பொருளில் புரிந்துகொள்ளவும். இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ள விஷயங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க முன்வரும் நன்மக்களாக நம் யாவரையும் ஆக்கிஅருள்வதற்கு வல்ல அல்லாஹ் போதுமானவன். ஷைத்தானிய இலுமனாட்டிகளின் சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற்ற முஸ்லிம்களாக நாம் அனைவரும் வாழ்ந்திட பிராத்தனைகளுடன் வாழ்த்தி முடிக்கிறோம்.

... எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)

எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? Empty Re: முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

Post by நண்பன் Tue 14 Jun 2011 - 22:08

விரிவான ஒரு கட்டுரை
நாளை மறுமைக்காக நாம் நமது குடும்பம் குழந்தைகள் உறவுகள் என்ன என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது உறவே நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum