சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

மிஃராஜ் விண்ணுலக பயணம் Khan11

மிஃராஜ் விண்ணுலக பயணம்

Go down

மிஃராஜ் விண்ணுலக பயணம் Empty மிஃராஜ் விண்ணுலக பயணம்

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 10:02

மி/ராஜ் ’ விண்ணுலக பயணம்
நுபுவ்வத்தின் 10ம் வருடம் ரஜப் மாதம் பிறை 27ல் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி விண்ணுலகம் சென்று பல அற்புதங்கள் கண்டு மீண்ட அதிசய நிகழ்வு மிஃராஜ் எனப்படுகின்றது. இந்நிகழ்ச்சியை அல்லாஹுதஆலா திருக்குர்ஆனிலே “தனது அடியாரை இரவில் மஸ்ஜிதுல் நபவியில் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து விண்ணுலகுக்கு அனுப்பிய இறைவன் தனது ஆதாரங்களைக் காட்ட இந்த ஏற்பாட்டை செய்தான் (17:1) எனக் கூறுகின்றது.

பயணத்தில் ஏழு வானங்களிலுமுள்ள நபிமார்களை சந்தித்தார்கள். சுவர்க்கம், நரகம் போன்றதை கண்களால் கண்டார்கள். மக்கள் உலகில் செய்யக்கூடிய நன்மை தீமைகளுக்குரிய பிரதி பவனை அங்கு நேரடியாகக் கண்டார்கள்.

விண்ணுலக யாத்திரையின் போது இறைவனால் நபிகளாருக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அது திறவுகோல். தொழுகை என்னும் திறவுகோல். இத்திறவு கோளால், சுவர்ணலோகத்தைத் திறந்து கொண்டு உள்ளே செல்லுமாறு, நபிகளாருக்கும் அவர்களின் உம்மத்துக்கும் ஒரு அன்புக்கட்டளை விடுக்கப்பட்டது. “கலிமா சொன்னதும் தொழுகை கட்டாயக் கடமையாக்கப்பட்டு விட்டது” தொழுகை வறுமையை அகற்றும். தொழுகையாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

தொழும் வீட்டில் பக்கத்து ஏற்படும். தொழாத வீட்டில் பரக்கத்து எடுபட்டுவிடாது. அவன் இறைவனின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உட்படுகின்றான். சரியான நேரத்துக்குத் தொழுவது செயல்களில் சிறந்தது என இறைவனிடத்தில் கணிக்கப்படுகின்றது. ஆரம்ப தக்பீருடன் தொடர்ந்து 40 நாட்கள் இமாம் ஜமாஅத்துடன் தொழுபவர் நயவஞ்சகத்தனத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்.

இறைவனுடன் நெருங்கிய உறவாட தொழுகை வாய்ப்பளிக்கின்றது. ஒரு அடியான் ஸ¤ஜூதில் இருக்கும்போது இறைவன் மிக நெருக்கமாக உள்ளான். அப்போது அவன் கேட்கும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும். தொழாதவர்களுக்கு இஸ்லாத்தில் எவ்வித பங்குமில்லை. ஜும்ஆ நாளன்று குளிப்பதால் பாவங்கள் அழிந்து விடுகின்றன.

போன்றன நபிகளாரின் வாக்கு. இத்தகைய வாக்கும் போக்கும் அவர்கள் உலகம் முடியும் வரையுள்ள அவ்வளவு மக்களுக்கும் இறுதித் தூதராக அனுப்பப்பட்டுள்ளார் என்பதாகும். ஆகவே உலகம் முடியும் வரை முறியடிக்க முடியாத ஒரு சாதனையை அல்லாஹ் நபி (ஸல்) அவர்கள் மூலம் ஏற்படுத்தினான்.

நபி (ஸல்) அவர்களது வாழ்வில் மிஃராஜ் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆனால் அவர்களின் வாழ்வு வாழ்வாக இருக்கவில்லை. வாழ்க்கையில் ஒரு பாரிய பொறுப்பு சுமத்தப்பட்டிருந்தது. தனது வாழ்க்கையை அல்லாஹ்வுக்காகவும் தனது உம்மத்துக்காகவும் வேண்டி அர்ப்பணித்தார்கள்.

நுவுவ்வத்தின் 11ம் ஆண்டு மதீனா வாசிகளுடன் அகபா ஒப்பந்தம் செய்தனர். நுபுவ்வத்தின் 12ம் ஆண்டு 2ம் அகபா ஒப்பந்தம் செய்தனர். நுபுவ்வத்தின் 13ம் ஆண்டு மதீனா சென்றனர். மதீனா மக்கள் உதவிக்கரம் நீட்டினர். இவைகள் அவர்களது வாழ்வில் ஏற்பட்ட வசந்தங்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றார்கள். இதனை மக்கள் நம்பவில்லை. ஹிஜ்ரி 6ம் ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் அரேபியாவைச் சுற்றியிருந்த அரசர்களுக்கு இஸ்லாத்துக்கு வரும்படி கடிதம் எழுதினார்கள். ரேமானியப் பேரரசன் ஹிர்கீலுக்கும் கடிதம் கிடைக்கின்றது.

அரசன் முஹம்மது நபியைப் பற்றி வியாபார நிமித்தமாக மக்காவில் இருந்து வந்த அப்போது இஸ்லாத்தை ஏற்காத அபூஸ¤பியான் எனும் வர்த்தகத் தலைவனை அழைத்து விசாரித்தார். அபூஸ¤பியான் நபிகளாரைப்பற்றி எல்லாவற்றையும் கூறி முடித்த பிறகு கடைசியாக ஒன்றை சொல்கின்றார். “முஹம்மது கூறுகின்றார் கஃபதுள்ளாவில் இருந்து உங்களுடைய இப்புனிதத்தலமான பைத்துல் முகத்தஸ¤க்கு ஒரு நாள் இரவில் வந்து விட்டுப் போனதாக” அக்காலத்தில் மக்காவில் இருந்து பைதுல் முகத்தஸ¤க்குப் போக 7 நாட்கள், வர 7 நாட்கள் ஒட்டகப்பயணம்”.

அப்போது அரச அவையில் இருந்த பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலின் காவலாளி, அவர் பெயர் ‘பத்ரீக் ஈலியா’ அவர் முன்னே வந்து ‘அரசே! நான் ஒருநாள் இரவு பைதுல் முகத்தஸ் பள்ளிவாசலின் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு அதன் முன் கதவை மாத்திரம் மூட எவ்வளவோ முயற்சி செய்தும் மூட முடியவில்லை. அது மிக இலகுவாக மூடக்கூடிய கதவு. எனவே அவ்விடத்தில் இருந்த அனைவரையும் அழைத்து வந்து கதவை மூட முயற்சித்தோம்.

முடியவில்லை, கட்டடம் இடிந்து விழுந்தாலும் கதவை மூட முடியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். ஆகவே இரவானபடியால் அன்று நான் கதவை அப்படியே திறந்து வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விட்டேன். அடுத்த நாள் காலையிலேயே எழுந்து வந்து பார்த்த போது எல்லாமே ஒரு புதுமையாகக் காட்சியளித்தது.

பள்ளிவாசலின் முன் இருந்த பெரிய கற் தூணில் புதிதாக ஒரு துவாரம் இடப்பட்டிருந்தது. அதில் ஏதோ ஒரு பிராணி கட்டிவைக்கப்பட்டிருந்த அறிகுறி தென்பட்டது. இரவு அங்கு யாரோ வந்து சென்றிருக்கின்றார்கள். அங்கு நடந்துள்ள அதிசயங்களைப் பார்த்தால் அநேகமாக அங்கு வந்து சென்றது முஹம்மதுவாகத்தான் இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.” என்று கூறினார். (ஆதாரம்: தப்kர் இப்னு கதீர்)

நபி (ஸல்) அவர்களின் வெளிப் பாதுகாப்பாளராக இருந்த பாட்டனார் அபூதாலிப் அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். அதே ஆண்டு வீட்டின் பாதுகாலராக இருந்த மனைவி அன்னை கதீஜா (ரலி) அவர்களும் இறையடியெய்தி விட்டார்கள். எனவே நபிகளாருக்கு உள்ளூரிலே ஒரு பாதுகாப்பற்ற தன்மை ஏற்பட்டது. ஆகவே அவர்கள் பக்கத்திலுள்ள தாயிப் நகருக்குப் போய் குடியேறினர்.

ஆனால் அங்கும் சொல்லடியும், கல்லடியும் பட்டது. எனவே சோகத்துடன் திரும்ப மக்காவுக்கே வந்துவிட்டனர். அவர்களின் கவலையை மறப்பதற்கு மிஃராஜ் பயணம் ஏற்பாடாகி இருக்கலாம். பயணம் தரும் சுகமும், புது அனுபவங்களும் கவலையை மறக்கடிக்கலாம் அல்லவா!

ஸெய்யித் உகைல்
மெளலானா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum