சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

இல்லாளே இனியவளே..! Khan11

இல்லாளே இனியவளே..!

Go down

இல்லாளே இனியவளே..! Empty இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:18

உனது பட்டுப் பாதங்கள் இந்தப் பூமியில் தவழ்ந்து திரியும் நாட்கள் வரைக்கும், என்னால் இன்னொருத்தியை நினைத்துப் பார்க்கவே இயலாது" என்று அப்பொழுது நான் கூறியது முதல் இன்று வரைக்கும் எங்களுடைய உறவு பசுமையாகவே நீடித்திருக்கின்றது என்றும் அந்தப் பெரியவர் தனது இளமையின் இரகசியத்தைக் கூறினார்.

இந்தத் தள்ளாத வயதிலும் அந்த மனிதருடைய அர்பணிப்பான மணவாழ்க்கை தான் என்ன..! இது போன்றதொரு மணஉறவுகள் காணக் கிடைக்காத அரிதானதொன்றாக ஆகி விட்டது.

நிச்சயமாக.., நம்மிடம் ஏகப்பட்ட குறைகளை வைத்துக் கொண்டு.., மனைவியரிடத்தில் மட்டும் எப்படி அப்படிப்பட்டதொரு உயர்ந்த பண்பாட்டை எதிர்பார்க்க முடியும்.

மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.., அவள் கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும், மாதவிடாய் அல்லது பிரசவத்திற்குப் பின் உள்ள தீட்டு உள்ள காலங்களிலும் அவளது மனநிலையில் ஒருவித இறுக்கம் ஏற்படுகின்றது, அந்த இறுக்கம் அவளது குணாதிசயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அது போது அவள் ஆத்ம ரீதியானதொரு ஆதரவை கணவனிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியவளாக இருக்கின்றாள்.

அவனுக்கு நான் எந்தளவு உரிமை உடையவள், மதிப்பு மிக்கவள், இன்னும் அவனது வாழ்க்கைக்கு தான் எந்தளவு முக்கியத்துவமுடையவளாக இருக்கின்றேன் என்பதை தன் கணவன் உணர வேண்டும் என்று அவளது மனது ஏங்குகின்றது. ]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:19

நீங்கள் என்றும் இளமையாகவே காட்சி தர!

அந்த மனிதருக்கு கிட்டத்தட்ட எண்பது வயதிருக்கும். ஆனால் அவரிடம் இன்னும் இளமையின் தோற்றம் எஞ்சியிருந்தது.
மிகவும் உற்சாகமாக, வலுவான நிலையில்.., அந்த வயதிலும் அந்தப் படிகளில் அவர் ஏறிக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி நானறிவேன். அவரது இந்த இளமையின் இரகசியம் என்னவாக இருக்கும் என்பதை நான் அறிய வந்த போது :

அவருக்கு திருமணம் நடைபெற்ற பொழுது அவரது வயது முப்பது இருக்கும் என்று தனது திருமண நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இதுவரைக்கும் நான் எனது மனைவியை கோபத்தில் திட்டியதுமில்லை, அவளும் என்னைக் கடிந்து கொண்டதுமில்லை. எனக்குத் தலைவலி என்று வைத்துக் கொள்ளுங்களேன்.., நான் தூங்கும் வரைக்கும் அவளது மனது ஓயாது.., அவளும் தூங்க மாட்டாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்றார்.

பின்பு உணர்ச்சிவசப்பட்டவராக, ''வீட்டிற்குத் தேவையான சின்னதொரு பொருள் வாங்குவதாக இருந்தாலும், அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு கடைத்தெருவுக்குச் செல்வேன், அவளில்லாமல் நான் வெளியில் போவது அரிது. அதாவது, நாங்கள் என்றுமே புதுமணத் தம்பதிகளைப் போலவே.""

அவளுக்கு ஒருமுறை மருத்துவ ரண சிகிச்சை செய்து கொண்ட பொழுது, இனி அவளால் கருத்தரிக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது, அப்பொழுது அவளைப் பார்த்து.., ஒரு குழந்தையை விட எனக்கு நீ மிகவும் மேலானவள் என்று நான் அவளிடம் கூறினேன்.

'உனது பட்டுப் பாதங்கள் இந்தப் பூமியில் தவழ்ந்து திரியும் நாட்கள் வரைக்கும், என்னால் இன்னொருத்தியை நினைத்துப் பார்க்கவே இயலாது" என்று அப்பொழுது நான் கூறியது முதல் இன்று வரைக்கும் எங்களுடைய உறவு பசுமையாகவே நீடித்திருக்கின்றது என்றும் அந்தப் பெரியவர் தனது இளமையின் இரகசியத்தைக் கூறினார்.

இந்தத் தள்ளாத வயதிலும் அந்த மனிதருடைய அர்பணிப்பான மணவாழ்க்கை தான் என்ன..! இது போன்றதொரு மணஉறவுகள் காணக் கிடைக்காத அரிதானதொன்றாக ஆகி விட்டது.

நிச்சயமாக.., நம்மிடம் ஏகப்பட்ட குறைகளை வைத்துக் கொண்டு.., மனைவியரிடத்தில் மட்டும் எப்படி அப்படிப்பட்டதொரு உயர்ந்த பண்பாட்டை எதிர்பார்க்க முடியும்.

திருமணம் என்பது அன்பும் காதலும் கலந்தது. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் :

இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்;. (அல்குர்ஆன் - அர் ரூம் : 21)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:19

ஒவ்வொரு தம்பதியும் ஒருவர் மற்றவரில் பாதியே..

மிகப் பெரும் நீதிபதியான அபூ ராபிஆ அவர்களது மனைவி இறந்த பொழுது, அவர் தனது மனைவியை அடக்கத்தளத்திற்கு தானே சுமந்து சென்றார், மண்ணறையினுள் இறங்கி சுத்தமான முறையில் தனது மனைவியை நல்லடக்கம் செய்தார். இருப்பினும், அவர் வீட்டிற்குத் திரும்பி வந்த போது, மிகவும் சோகத்தைச் சுமந்தவராக கண்ணீர் மல்க இறைவனிடத்தில் முறையிடலானார்: இப்பொழுது.., எனது வீடும் கூட இறந்து விட்டது போலவே காட்சியளிக்கின்றது. வீட்டினுள் வாழும் பெண்களாலேயே இல்லமும் கூட உயிர்ப்புடன் இருக்கும் என்று கூறினார்.

திருமண பந்தமும் அதன் உறவும் இரு மணங்களின் சங்கமத்தால் மிகவும் உறுதியாக வளர்வதோடு, அதுவே இணைபிரியா வாழ்விற்கு உரமிடுவதாகவும் அமைந்து விடுகின்றது. வாழ்நாளின் ஒவ்வொரு துளிகளிலும் மனிதன் பிரச்னைகளைச் சந்தித்த வண்ணமே இருக்கின்றான், அது போலவே மணவாழ்விலும் பிரச்னைகள் எழலாம், எழக் கூடும், ஆனால் அத்தகைய பிரச்னைகள் உறவுகளை முறிக்கும் அளவிற்குச் சென்று விடக் கூடாது. ஏன்.., இது போன்ற ஊடல்கள் தான் இறுக்கமான கூடல்களையும் விளைவித்து விடுகின்றன..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:20

உண்மையிலேயே பிரச்னைகள் எங்கே இருந்து ஆரம்பமாகின்றன?

ஒருவர் மற்றவரைப் பற்றி புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்படாமையினாலேயே பிரச்னைகள் தோன்றுகின்றன. சில சமயங்களில் ஒருவர் தன்னைப் பற்றியே கூட சரியான முறையில் அறிந்து வைத்திருப்பதில்லை. ஒருவரது இயலாமை என்பது திருமண பந்தத்திற்கு அப்புறமும் தொடருகின்றது, ஆனால் அது மாற்றப்பட்டிருக்க வேண்டும். அநேகமானவர்கள் தங்களது பழக்க வழக்கங்கள் என்பது மாற்றத்திற்குள்ளாக்க முடியாதது என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். உண்மையில், உறவுகள் நிலைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பிச் செயல்படுவதில்லை, அதற்காக அவர்கள் உழைப்பதில்லை.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு சட்ட விதிமுறைகள் உண்டு. அதனைப் போலவே திருமணம் என்ற இந்த இல்லற வாழ்விற்கும் சில சட்ட திட்டங்கள் உள்ளன. அதனைப் பின்பற்றும் பொழுது இல்லறம் என்றுமே நல்லறமே..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:21

இல்லறத்தை நல்லறமாக்க சில வழிமுறைகள்

திருமண உறவு பாழாவதற்கும், இன்னும் மரணத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய காரணியாகவும் ஒரு சில தம்பதியினருக்கு ஆகி விடுகின்றது, அவ்வாறான நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு திருமண உறவை எப்பொழுதும் பூத்துக் குலுங்கும் நந்தவனமாக நிலைத்திருக்கச் செய்ய வேண்டியதும், அதற்காக இரு மனங்களும் உழைக்க வேண்டியதும் அவசியம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:21

அதற்காக கணவனும், மனைவியும் பங்களிப்புச் செய்ய வேண்டியது என்னவென்றால்..

1. ஒருவர் மற்றவரிடம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் போதும் அல்லது பேசும் பொழுது நேர்மறையான சொற்களையே உபயோகிக்க வேண்டும், பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளல் வேண்டும். இன்னும் ஒருவர் மற்றவருக்கு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

கணவன் மனைவியிடத்தில்..,''எனக்கு இன்னுமொரு முறை இளமை வழங்கப்படுமெனில்.., உன்னையல்லாள் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொட மாட்டேன்"" என்று கூறிப் பாருங்கள்.., நிச்சயமாக, அவளும் இது போன்றதொரு காதல் வரிகளை பதிலாகத் தரக் கூடியவளாக இருப்பாள்.

நீங்கள் அன்பாக உதிர்க்கும் ஒவ்வொரு துளி வார்த்தையும், உறவுக்கு உரம் போடுபவைகளாகும். குறிப்பாக பெண்களிடத்தில் இனிப்பாகப் பேசும் பொழுது, அவர்களது இதயங்கள் கிளர்ச்சி அடைகின்றன.

கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு சிறு சிறு விஷயங்களில் கூட உதவிகரமாக இருக்க வேண்டும். ஒரு கணவர் வீட்டிற்குள் நுழைகின்ற பொழுது மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றாள் எனில், விலகி நிற்கும் போர்வையை அவளுக்குப் போர்த்தி விடுவது கூட அன்பின் வெளிப்பாடு தான்.

அலுவலக வேலைகளுக்கிடையே வீட்டிற்கு ஒரு போன் செய்து.., எப்படி நலமா.. என்ற சிறிய விசாரிப்புகள்.. அதன் மூலம் ஓ.., கணவன் எப்பொழுதும் நம் நினைவுடன் தான் இருக்கின்றான் என்றதொரு உணர்வூட்டுதல் வேண்டும்.

அவள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்றாள்.., அவளே அறியாத நிலையில் இருந்தாலும் கூட அவளது நெற்றியில் ஒரு சிறியதொரு முத்தம் கூட.., அவளைச் சற்றுச் சிந்திக்க வைக்கும். இருப்பினும், அவள் அயர்ந்த உறக்கத்தில் இருந்தாலும் கூட.., தொடு உணர்வுகள் என்பது இருக்கத் தான் செய்யும், அது உறவுகளை நினைவுபடுத்தும்.., வலுப்படுத்தும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:21

2. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக.., புகாரீ என்ற நபி மொழித் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டிருக்குமொரு நபிமொழியில்.., 'அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட" என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

மனைவிக்குத் தேவையான செலவினங்களை கணவன் பார்த்து பார்த்து கவனித்துச் செய்ய வேண்டும். அல்லது இன்ன காரணத்திற்காக நான் இதனை உனக்குப் பரிசளிக்கின்றேன் என்று நீங்கள் அவர்களுக்குக் கூறுதல் வேண்டும். இதுவே இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது குடும்ப வாழ்வில் கடைபிடித்ததொரு நற்பழக்கமாகும்.

இதற்கு அவரவர் மனநிலையைப் பொறுத்த அளவில் பயன்படுத்துதல் நல்லது. ஆண்களைப் பொறுத்தவரை அவர்களிடம் காணப்படும் குறைபாடுகளை சிறு சிறு அன்பு வெளிப்பாடுகள் மூலமாக பெண்கள் எடுத்துக் காண்பிக்க வேண்டும், ஒருமுறை தன்னைப் பற்றிய நல்ல எண்ணங்களை நீங்கள் சுமந்து கொண்டிருப்பதை அவன் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டால், தன்னிடம் உள்ள குறைபாடுகள் தான் மனையாளை சற்று எட்ட வைத்திருக்கின்றதோ என்று அவன் நினைக்கத் தோன்றும், பின்னாளில் அவனது உள்ளமே அவனைச் சுட ஆரம்பிக்கும். அதுவே, அவனைத் திருத்துவதற்குமான வழிமுறையாகவும் ஆகிவிடும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:22

3. அடுத்ததாக, கணவனும் மனைவியும் இருவரும் சற்று ஓய்வாக அமர்ந்து பேசுவதற்கான நேரங்களை ஒதுக்க வேண்டும். கடந்து போன வாழ்க்கையை மலரும் நினைவுகளாக நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நாட்களை நினைத்துப் பார்த்து, அன்று தான் சந்தித்தவர்கள் போல தங்களது உள்ளங்களை புத்தும் புதிதாக எப்பொழுதுமே வைத்துக் கொள்ள வேண்டும். வருங்காலத் திட்டங்கள், நோக்கங்கள் மற்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் நடந்து கொண்டிருக்கும் நல்ல விஷயங்கள் பற்றியும், தங்களிடையே உள்ள கெட்ட விஷயங்கள் பற்றியும் கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். தங்களைச் சுற்றியுள்ள பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது பற்றியும் தீர்மானம் செய்ய வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:22

4. இருவருக்கிடையிலும் உள்ள தூரங்கள் விலகி நெருக்கங்கள் அதிகரிக்க வேண்டும். அதாவது, இன்பமான நேரங்களில் மட்டுமல்ல.., அனைத்து நேரங்களிலும்.., அதாவது நீங்கள் வரவேற்பறையினில் அமர்ந்திருக்கின்றீர்கள்.., அவளிடமிருந்து விலகி அமராதீர்கள். தெருவில் நடந்து செல்கின்றீர்கள், நெருக்கத்தைக் குறைத்து நடந்து செல்லுங்கள். ஆனால் இன்றோ தனது மனைவியுடன் பொது இடங்களில் நடந்து செல்வதைக் கௌரவக் குறைச்சலாக சிலர் எண்ணிக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம். அவ்வாறான நடைமுறைகள் நெருக்கத்தை குறைக்காது, மனரீதியான தூரத்தையே அதிகப்படுத்தும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:22

5. ஆத்ம ரீதியான ஆதரவு என்றும் உங்களிடமிருந்து கிடைக்கும் என்ற உறுதி அல்லது நம்பிக்கை அவளுக்கு இருக்க வேண்டும். மனைவி கர்ப்பிணியாக இருக்கின்றாள், அல்லது மாதாந்திர இரத்தப் போக்குடையவளாக இருக்கும் பொழுது.., உளவியல் ரீதியானதொரு ஆதரவிற்காக அவளது உள்ளம் ஏங்க ஆரம்பிக்கின்றது. அவளது எண்ண ஓட்டத்தை நீங்கள் உணர வேண்டும் என்று அவள் எதிர்பார்க்கின்றாள்.

மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.., அவள் கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும், மாதவிடாய் அல்லது பிரசவத்திற்குப் பின் உள்ள தீட்டு உள்ள காலங்களிலும் அவளது மனநிலையில் ஒருவித இறுக்கம் ஏற்படுகின்றது, அந்த இறுக்கம் அவளது குணாதிசயங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அது போது அவள் ஆத்ம ரீதியானதொரு ஆதரவை கணவனிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியவளாக இருக்கின்றாள்.

அவனுக்கு நான் எந்தளவு உரிமை உடையவள், மதிப்பு மிக்கவள், இன்னும் அவனது வாழ்க்கைக்கு தான் எந்தளவு முக்கியத்துவமுடையவளாக இருக்கின்றேன் என்பதை தன் கணவன் உணர வேண்டும் என்று அவளது மனது ஏங்குகின்றது.

இதே போல கணவன் நோய் வாய்ப்பட முடியும் அல்லது ஒரு மிகப் பெரிய பிரச்னையில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவனது அந்தப் பிரச்னைக்குரிய தீர்வுக்கு வழிகள் என்ன என்பது பற்றி அவள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமணங்களும் தங்களது இல்வாழ்வு நீடித்து இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள் எனில், ஒருவர் மற்றவருக்கு ஆதரவானர்கள் என்பதை பரஸ்பரம் உணர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:23

6. சில சிறுசிறு பரிசுப் பொருட்கள் கூட அன்பின் வெளிப்பாடுகள். பரிசுப் பொருட்களை ஒருவர் மற்றவருக்கு கொடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அதாவது சில சமயங்களில் அதற்கான சிறப்பு நாட்களுக்காகக் காத்திருக்க வேண்டும் என்றில்லாமல்.., ஆச்சரியமூட்டும் வகையில் அந்த பரிசளிப்புகள் அமைய வேண்டும். நல்ல பரிசுப் பொருட்கள் என்றுமே நினைவுகளை பசுமையாக வைத்திருக்க உதவும். அவ்வாறான பொருட்கள் விலையுயர்ந்ததாகவே இருக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் அவளது மனதுக்குப் பிடித்த ஒன்றாக இருக்க வேண்டும், என்றுமே அவள் அதனை மறக்கக் கூடாததாகவும் அமைந்து விட வேண்டும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:23

7. தங்களுக்கிடையே எவ்வளவு சகிப்புத் தன்மையுடன் இருக்கின்றோம் என்பதை ஒருவர் மற்றவருக்கு உணர்த்துகின்ற வேளைகளில் உணர்த்திக் காட்ட வேண்டும். உங்களது மனைவி ஒரு சிறு தவறைச் செய்துவிட்டாள், அதனை மன்னித்து விடுங்கள்.., இன்னும் அதனை எப்பொழுதும் திரும்ப நினைவுபடுத்திக் கொண்டிராதீர்கள். அமைதி காப்பது கூட சில வேளைகளில்.., அற்புதமான குணமாக ஆகி விடும்.

என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்க மாட்டார். (புகாரீ)

அதாவது, அவரைப் பொறுத்த அளவில் அவர் தாராளமானவராகவும், சகிப்புத் தன்மை மிக்கவராகவும் இருந்திருக்கின்றார். தனது செல்வம் தவறிப் போனதன் காரணமாக மிகப் பெரும் பிரளயத்தை வீட்டில் உருவாக்க மாட்டார். தனது வீட்டினருக்காக ஒன்றைக் கொண்டு வந்தார் எனில், பின்னர் அது பற்றி 'அது எங்கே" என்று வினவ மாட்டார். தவறிழைக்கப்பட்டதற்காக அதனை ஒரு மிகப் பெரிய பிரச்னையாக பூதகரமானதாக ஆக்காதவர், வீட்டினுள் அவர் சகிப்புத்தன்மை மிக்கவராகவே தன்னை இனங் காட்டிக் கொண்டவராக இருப்பார்.

பிறரது குறையைப் பார்க்கும் பொழுது உணர்ச்சி வசப்படுவது, தன்னுடைய குறையைக் கண்டு கண்டு கொள்ளாமல் இருப்பது, ஒருவரது நல்ல தன்மைகளைக் கெடுத்து விடும். அவரைப் பற்றிய மனோநிலையையும் மாற்றி விடும்.

அதாவது, ''தன் முதுகில் உள்ள அழுக்கு தனக்குத் தெரியாது"" என்பதைப் போல.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by நண்பன் Fri 24 Jun 2011 - 14:24

8. குழந்தை வளர்ப்பு, வேலை, பயணம், செலவினங்கள் மற்றும் குடும்பப் பிரச்னைகள் போன்றவற்றில் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பரம் சரியான புரிந்துணர்வுகள் இருந்தாக வேண்டும். அவ்வாறில்லை எனில் திருமண உறவுகள் பாதிக்கப்படலாம்.

9. கணவனும் மனைவியும் தங்களது உறவுகள் உயிர்ப்புடன் இருப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டே இருக்க வேண்டும். இன்றைக்கு இல்லற உறவுகளை நல்லுறவுகளாக்குவது எப்படி என்பது குறித்த நூல்கள், கேஸட்டுகள் விற்பனையில் உள்ளன. இன்னும் இஸ்லாமிய ரீதியில் குடும்ப அமைப்பைக் கட்டமைப்பது எப்படி என்பது குறித்த நூல்கள் உள்ளன, அறிஞர்கள் பேசிய ஒலி ஒளி நாடாக்கள் கிடைக்கின்றன. அவற்றை வாசித்து, பார்த்து புதிய புதிய கருத்துக்களை தங்களுக்குள் வளர்த்துக் கொண்டு, இல்லற வாழ்வை நல்லறமாக்க முயற்சித்தல் வேண்டும்.

ஓய்வெடுப்பதாக இருக்கட்டும், சாப்பாட்டு மேசையில் அமர்வதாக இருக்கட்டும், சிற்றுண்டிகள் உண்பதாக இருக்கட்டும், இன்னும் வீட்டு அலங்காரங்கள், சுத்தம் செய்தல் போன்ற அனைத்து நேரங்களிலும் கணவனுக்காக மனைவி காத்திருப்பதும், மனைவிக்காக கணவன் காத்திருப்பதும், வேலைகளைப் பகிர்ந்து கொள்வதும் இல்லற உறவை மேலும் வலுப்படுத்தும். இதுவே உறவுகள் வலுப்படுவதற்கான உன்னத வழிகளாகும். நம்முடைய இணையத்தளத்தில் இது குறித்த ஏராளமான கட்டுரைகள் மற்றும் சில நூல்கள் உள்ளன. பார்வையிடவும்.

10. இன்றைய சமூகத்தில் பிறருடன் நம்மை ஒப்பிட்டு, அவர்களைப் போலவே நாமும் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை.., குறிப்பாக பெண்களிடத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக குடும்பங்களில் பல்வேறு பிரச்னைகள் தோன்றுகின்றன. அவ்வாறு பிறருடன் நம்மை ஒப்பிடும் பொழுது, நம்மை விட வசதியில் குறைவானவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இறைவன் அவர்களைவிட நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளானே என்று அவனுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும்.

'உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்ற கவிதை வரிகளுக்கேற்ப ''நமக்குக் கீழே இருப்பவர்களைப் பார்க்க வேண்டும், நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்க்கக் கூடாது. எனவே அதன் மூலம் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளை அற்பமானதாக நினைத்து விடும் பாவத்திலிருந்து விலகிக் கொள்ள முடியும்.

இன்னும் சிலர் தங்களது கணவன்மார்களைப் பற்றி பிறர் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக கணவனிடம் இல்லாத தன்மைகளைப் பற்றி சிலாகித்துப் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். இதுவும் தவறானதே.

எப்பொழுதுமே நாணயத்தின் இரு பக்கங்களையும் பார்க்க வேண்டும். அதுவே ஒருவரைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய சிறந்த வழி முறையாக இருக்கும். சிலர், மனிதர்களின் மறுபக்கத்தினை அறியாமல் உடனே அவரைப் பற்றியதொரு முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். இதுவும் தவறானது.

எப்பொழுதுமே இக்கரையில் இருப்பவருக்கு அக்கரையில் இருப்பது பசுமையானதாகவே தெரியும். அது ஒரு கானல் நீர் போன்று. நுணுகி ஆராயும் பொழுது நம்முடைய வாழ்வே சிறந்தது என்ற நிலைக்கு வந்து விடுவோம். எனவே தான் நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாம் நிம்மதியடைந்து கொள்ள வேண்டும். பிறரைப் பார்த்து நாம் ஏங்குவது வாழ்க்கையைக் கசப்பானதாக மாற்றி விடும்.

மேற்கண்ட நல்லுரைகளை உங்களுடைய வாழ்வில் செயல்படுத்திப் பாருங்கள். நீங்களும் என்றுமே இளமையாகவே காட்சி தருவீர்கள். இன்ஷா அல்லாஹ்..!

நன்றி நிடுர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இல்லாளே இனியவளே..! Empty Re: இல்லாளே இனியவளே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum