சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:20

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Khan11

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

2 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:04

First topic message reminder :

ஸுஹ்ரி அறிவித்தார்.
உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.
இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் "இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.
(இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.
Volume :1 Book :9
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:09

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சூரிய(னி)ன் (ஒளி) என்னுடைய அறையில் விழுந்து கொண்டிருக்கும்போது நிழல் என் அறையைவிட்டும் உயராதபோது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுதார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:09

ஸய்யார் இப்னு ஸலாமா கூறினார்.
நானும் என்னுடைய தந்தையும் அபூ பர்ஸா(ரலி) அவர்களிடம் சென்றோம். 'கடமையான தொழுகையை நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள்?' என்று என் தந்தை கேட்டார். நீங்கள் முதல் தொழுகை என்று கூறக்கூடிய நண்பகல் தொழுகையை (நடுவானிலிருந்து) சூரியன் சாயும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். எங்களில் ஒருவர் (அஸர் தொழுதுவிட்டு) மதீனாவின் கடைக் கோடியிலுள்ள தம் இடத்திற்குத் திரும்பும்போது சூரியன் உயிருடன் (ஒளி குன்றாமல்) இருந்து கொண்டிருக்கும்' என்றார்கள் மக்ரிப் பற்றி அபூ பர்ஸா(ரலி) கூறியதை நான் மறந்துவிட்டேன். 'கடைசித் தொழுகை என்று நீங்கள் குறிப்பிடக் கூடிய இஷாவைப் பிற்படுத்துவதை விரும்புபவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தனர். இஷாவுக்குப் இப்னு பேசிக் கொண்டிருப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர். அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதி நபி(ஸல்) அவர்ள வைகறைத் தொழுகையைத் தொழுது முடிக்கும்போது ஒருவர் தம் அருகில் அமர்ந்திருப்பவரை அறிந்து கொள்ள முடியும்' என அபூ பர்ஸா(ரலி) கூறினார்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:09

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் அஸர் தொழுதுவிட்டு,மதீனாவிலுள்ள (குபா-பகுதியில் இருந்த) பனூ அம்ர் இப்னு அவ்வு குலத்தாரிடம் சென்றால் அவர்கள் அஸர் தொழுது கொண்டிருப்பதைக் காண்போம்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:09

அபூ உமாமா அறிவித்தார்.
நாங்கள் உமர்பின் அப்துல அஸீஸுடன் லுஹர் தொழுதோம். பின்னர் (அங்கிருந்து) புறப்பட்டு அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்றபோது அவர்கள் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம். என் தந்தையின் உடன் பிறந்தவரே! இப்போது நீங்கள் தொழுதது என்ன தொழுகை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'அஸர் தொழுகை! நபி(ஸல்) அவர்களுடன் இவ்வாறே நாங்கள் தொழுபவர்களாக இருந்தோம்' என்றார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:09

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும். சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து நான்கு மைல் அல்லது கிட்டததட்ட அந்த அளவு தூரத்தில் அமைந்திருந்தன.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் அஸர் தொழுது முடித்த பின் எங்களில் 'குபா' என்ற இடத்திற்குச் செல்பவர்கள் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யாருக்கு அஸர் தொழுகை தவறிவிட்டதோ அவன் குடும்பமும் சொத்துக்களும் அழிக்கப் பட்டவனைப்போன்று இருக்கிறான்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

அபுல் மலீஹ் அறிவித்தார்.
மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், 'அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் 'அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்' என்று குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

ஜரீர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் முழு நிலவுள்ள இரவில் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் முழு நிலவை நோக்கி 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் நிச்சயமாக உங்களுடைய இறைவனைக் காண்பீர்கள்! சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்!" என்று கூறிவிட்டு, 'சூரியன் உதிக்கும் முன்னரும் மறையும் முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைத் துதிப்பீராக!" (திருக்குர்ஆன் 50:39) என்ற இறைவசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேரத்து வானவர்களும் பகல் நேரத்து வானவாக்ளும் தொடர்ந்து உங்களிடம் ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருப்பார்கள். பஜ்ருத் தொழுகையிலும் அஸர் தொழுகையிலும் இரண்டு சாராரும் சந்திக்கின்றனர். பின்னர் உங்களுடன் இரவு தங்கியவர்கள் மேலேறிச் செல்கின்றனர். 'என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?' என்று அவர்களிடம் இறைவன் இது பற்றி தெரிந்து கொண்டே விசாரிப்பான். 'அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களிடம் சென்றோம். அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போதே அவர்களைவிட்டுவிட்டு வருகிறோம்" என்று அவர்கள் விடையளிப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

சூரியன் மறைவதற்கு முன் அஸர் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப் படுத்தட்டும்! ஸுப்ஹுத் தொழுகையில் ஒரு ஸஜ்தாவை (ஒரு ரக்அத்தை) சூரியன் உதிக்கு முன் அடைந்தால் அவர் தம் தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளட்டும்!'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:10

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்ந்து அஸரிலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் போன்றதேயாகும். தவ்ராத்திற்குரியவர்கள் தவ்ராத் வழங்கப்பட்டார்கள். நடுப்பகல் வரை அவர்கள் வேலை செய்து ஓய்ந்தார்கள். (ஒவ்வொருவரும்) ஒவ்வொரு 'கீராத்' கூலி கொடுக்கப்பட்டார்கள். பின்னர் இஞ்ஜீல் உடையவர்கள் இஞ்ஜீல் வழங்கப்பட்டார்கள். அவர்கள் (நண்பகலிலிருந்து) அஸர் வரை வேலை அவர்களும் ஓய்ந்தார்கள். அவர்களும் ஒவ்வொரு 'கீராத்' கூலி வழங்கப்பட்டார்கள். பின்னர் நாம் குர்ஆன் வழங்கப்பட்டோம். (அஸரிலிருந்து) சூரியன் மறையும் வரை நாம் வேலை செய்தோம். இரண்டிரண்டு 'கீராத்' வழங்கப்பட்டோம்.
'எங்கள் இறைவா! இவர்களுக்கு மாத்திரம் இரண்டிரண்டு 'கீராத்'கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு 'கீராத்' வழங்கி இருக்கிறாய். நாங்கள் அவர்களை விடவும் அதிக அளவு அமல் செய்திருக்கிறோமே! என்று இரண்டு வேதக்காரர்களும் கேட்பார்கள். அதற்கு இறைவன் 'உங்களின் கூலியில் எதையும் நான் குறைத்திருக்கிறேனா?' என்று கேட்பான். அவர்கள் 'இல்லை' என்பர். 'அது என்னுடைய அருட்கொடை! நான் விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவேன்' என்று இறைவன் விடையளிப்பான்.
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: கீராத்' என்பது உஹது மலையளவு தங்கம் என்று வேறு ஹதீஸ்களில் விளக்கம் கூறப்படுகிறது.)
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:11

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யூதர்கள், கிறித்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்குரிய உவமையாவது. கீழ்காணும் உவமையைப் போன்றதாகும். ஒருவர் ஒரு கூட்டத்தினரை (காலையிலிருந்து) இரவு வரை வேலை செய்ய வேண்டும் என்று வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் நண்பகல் வரை வேலை செய்துவிட்டு, 'எங்களுக்கு உம்முடைய கூலி தேவையில்லை என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் மற்றும் ஒரு கூட்டத்தினரைக் கூலிக்கு அமர்த்தி இந்த எஞ்சிய நாளின் கூலியை) நான் முன்பு கூறியவாறு தருகிறேன்' என்றார். அவர்கள் அஸர் தொழுகையின் நேரம் வரை வேலை செய்தார்கள். 'நாங்கள் செய்த வேலை உமக்கே இருக்கட்டும்! (கூலி எதுவும் எங்களுக்குத் தேவையில்லை) என்றனர். இதன் பின்னர் மற்றொரு கூட்டத்தினரை அவர் கூலிக்கு அமர்த்தினார். அவர்கள் அந்த நாளின் எஞ்சிய பகுதியில் சூரியன் மறையும் வரை வேலை செய்தனர். அந்த இரண்டு கூட்டத்தினரின் கூலியையும் அவர்கள் பெற்றார்கள்."
என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:11

ராபிவு இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களுடன் மஃரிபைத் தொழுதுவிட்டு எங்களல் ஒருவர் திரும்பி அம்பு எய்தால் அவர் அம்பு விழும் இடத்தைப் பார்க்க முடியும். (அதாவது அந்த அளவு வெளிச்சம் இருக்கும்.)
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:11

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்.
"நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் லுஹர் தொழுவார்கள. சூரியன் தெளிவாக இருக்கும்போது அஸர் தொழுவார்கள். சூரியன் மறைந்ததும் மக்ரிப் தொழுவார்கள். இஷாவை சில நேரம் முன்னேரத்திலும் சில நேரம் பின்னேரத்திலும் தொழுவார்கள். அதாவது மக்கள் ஒன்று சேர்ந்துவிட்டால் முற்படுத்துவார்கள். மக்கள் வருவதற்கு தாமதமானால் தாமதப் படுத்துவார்கள். ஸுப்ஹைக் காலை வெளிச்சம் வருவதற்கு முன்னால் தொழுபவர்களாக இருந்தனர்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:11

ஸலமா(ரலி) அறிவித்தார்.
சூரியன் அடிவானத்தில் மறைந்ததும் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுபவர்களாக இருந்தோம்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:11

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
(மக்ரிப் இஷாவை) ஏழு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் (லுஹர் அஸரை) எட்டு ரக்அத்களாக ஒரே நேரத்திலும் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:12

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மக்ரிப் தொழுகையை இஷா (இரவுத் தொழுகை) என நாட்டுப்புற அரபிய்கள் குறிப்பிடுகின்றனர். நீங்கள் மக்ரிப் எனக் கூறும் விஷயத்தில் உங்களை அவர்கள் வென்று விட வேண்டாம்.."
என அப்துல்லாஹ் அல்முஸ்னீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:12

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
நபி(ஸல்) அவர்கள், மக்களால் 'அதமா' எனக் கூறப்பட்டு வந்த இஷாத் தொழுகையை எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்து எங்களை நோக்கி 'இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பூமியின் மேற்பரப்பில் இருக்கும் எவரும் இந்த இரவிலிருந்து நூறாவது ஆண்டின் துவக்கத்தில் வாழ மாட்டார்கள்' எனக் குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:12

முஹம்மத் இப்னு அம்ர் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் தொழுகை பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் லுஹர்த் தொழுகையை நண்பகலிலும் அஸர்த் தொழுகையைச் சூரியன் ஒளி வீசிக் கொண்டிருக்கும் போதும் மக்ரிப் தொழுகையைச் சூரியன் மறைந்தவுடனும் தொழுவார்கள். மக்கள் கூடிவிட்டால் இஷாவை முன்னேரத்திலும் மக்கள் குறைவாக இருந்தால் தாமதப் படுத்தியும் தொழுவார்கள். ஸுப்ஹை இருளில் தொழுவார்கள்' என விடையளித்தார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:12

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இஸ்லாம் நன்கு பரவுவதற்கு முன்னர் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவு இஷாவைப் பிற்படுத்தினார்கள். 'பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்' என உமர்(ரலி) தெரிவிக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வரவில்லை. அதன்பின்னர் வந்து பள்ளியிலுள்ளவர்களை நோக்கி 'இப்பூமியிலுள்ளவர்களில் உங்களைத் தவிர வேறு எவரும் இதை எதிர்பார்த்துக் காத்திருக்கவில்லை" என்றார்கள்.
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:12

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
நானும் என்னுடன் கப்பலில் வந்த என் தோழர்களும் 'புத்ஹான்' எனும் தோட்டத்தில் தங்கினோம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்தனர். ஒவ்வொரு இரவும் இஷாத் தொழுகைக்கு எங்களில் ஒரு (சிறு) கூட்டத்தினர் முறை வைத்து நபி(ஸல்) அவர்களிடம் செல்பவர்களாக இருந்தோம். நானும் என் தோழர்களும் (எங்கள் முறையின் போது) நபி(ஸல்) அவர்களைச் சந்தித்தோம். அவர்கள் தங்களின் காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் நள்ளிரவு நேரம் வரும் வரை இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். பின்னர் புறப்பட்டு வந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் வந்திருந்தோரை நோக்கி 'அப்டியே இருங்கள்! இந்த நேரத்தில் உங்களைத் தவிர வேறு எவரும் தொழவில்லை. இது அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருட்கொடைகளில் ஒன்றாகும்' எனக் குறிப்பிட்டார்கள். நபி(ஸல்) அவாகளிடமிருந்து இதைக் கேட்டதனால் நாங்கள் மகிழ்வுற்றோம்.

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:13

அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்."
Volume :1 Book :9

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை  - Page 2 Empty Re: தொழுகை நேரங்கள் பற்றி புகாரி ஹதீஸில் குறிப்பிட்டிருப்பவை

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 15:13

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இஷாவைத் தாமதப் படுத்தினார்கள். 'சிறுவர்களும் பெண்களும் உறங்கிவிட்டனர்; தொழுகை நடத்த வாருங்கள்!என்று உமர்(ரலி) அழைக்கும் வரை நபி(ஸல்) அவர்கள் வரவில்லை. பிறகு வந்து 'உங்களைத் தவிர இப்பூமியிலுள்ளவர்களில் வேறு எவரும் இந்தத் தொழுகைக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை' எனக்குறிப்பிட்டார்கள். அன்றைய தினத்தில் மதீனாவைத் தவிர வேறு எங்கும் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருக்கவில்லை. செம்மேகம் மறைந்தது முதல் இரவின் மூன்று பாகத்தில் முந்திய பகுதி முடியும் வரை இஷாத் தொழுபவர்களாக இருந்தனர்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum