சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Khan11

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 23:48

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) A%20girl1480x358
அபூ ரிள்வான்

அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்'' (அல்-குர்ஆன் 42:49,50)

ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவையும், பாகிஸ்தானையும் எடுத்துக் கொண்டால் பெண் கருவுறுந்தன்மை முறையே 2.81 மற்றும் 3.52 ஆக உள்ளன. இவைகள் குறைந்த அளவான ஒரு பெண்ணுக்கு 2.11 குழந்தைகள் என்ற அளவை விட அதிகமாக இருப்பதால் இந்நாடுகளுக்கு ஆபத்தில்லை. குடும்பக் கட்டுப்பாடு கோஷங்களான ''நாம் இருவர் நமக்கிருவர்'' மற்றும் ''ஒரு குழந்தை போதுமே!'' என்பதெல்லாம் இந்தியாவில் தற்போது மறைந்து விட்டது அல்லது மறைந்துக் கொண்டு வருகிறது.
ஆனால் சீனா மற்றும் ரஷ்ய நாடுகளில் பெண் கருவுறுந்தன்மை முறையே 1.73 மற்றும் 1.34 ஆக உள்ளன. இவைகள் குறைந்த பட்ச அளவைவிட மிகக் குறைவாக இருப்பதால் இந்நாடுகள் பயப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் சீன அரசின் ''ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை'' என்னும் குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கையால் அந்நாடு பெரும்பாதிப்பை சந்தித்திருக்கிறது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை மடடுமே பெற்றுக்கொள்ள அனுமதி என்ற கொள்கையால், ஒவ்வொரு குடும்பமும் தனக்குப் பிறகு பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

கருவுற்ற சீனப் பெண்கள், ஸ்கேன் மூலம் தன் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்துக் கொண்டவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார்கள். மாறாக பெண் குழந்தையாக இருந்தால் கருவைக் கலைத்து விடுகின்றனர். இதனால் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சமமாக இல்லாமல் ஆண் விகிதம் மட்டும் அதிகமாகி விட்டது.

1970 ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்படும் ''ஒரு குழந்தை'' குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம், பெண்கள் சதவிகிதம் குறைவதற்கு காரணமாகி விட்டது. ஒரு சமுதாயத்தில் ஆண்களைவிட பெண்கள் குறைவாக இருந்தால் அச்சமுதாயத்தில் குழந்தைப் பிறப்பும் குறைவாகவே இருக்கும்.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்னால் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ''இவ்வொரு குழந்தைச் சட்டத்தால்'' தற்சமயம் திருமண வயதை அடைந்த ஆண்களில் அநேகருக்கு பெண்கள் கிடைக்காது அல்லாடுகின்றனர். இதனால் அண்டை நாடுகளான தென் கொரியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பெண்களை மணமுடித்து தம் சீன நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர்.ஐரோப்பா கண்டத்தில் உள்ள

''ஒருங்கினைந்த ஐரோப்பா''வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்!

ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன.

தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty Re: அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 23:48

குழந்தைகளைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்

''அல்லாஹ், பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளனாவான். தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். தான் நாடுவோருக்குப் பெண்மக்களை வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் வழங்குகின்றான். தான் நாடுவோருக்கு ஆண் மக்களையும் பெண் மக்களையும் சேர்த்து வழங்குகின்றான். தான் நாடுவோரை மலடுகளாகவும் ஆக்குகின்றான். திண்ணமாக, அனைத்தையும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்டவனும் ஆவான்'' (அல்-குர்ஆன் 42:49-50)
மேற்கூறப்பட்ட இவ்வசனங்களிலிருந்து அல்லாஹ் (சுப்) ஒருவனே மக்கட்செல்வத்தைக் கொடுக்க முடியும்; மற்ற எந்த சக்தியாலும், அரசாட்சியாலும், மக்கட்தொகையை பெருக்கவோ, குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்கவோ ஒருகாலும் முடியாது.

குழந்தைகள் என்பது சீனாவில் உற்பத்தியாகும் விளையாட்டு பொம்மைகள் அல்ல! அவைகைளை கோடிக்கணக்கில் ஓரிரு தொழிட்கூடங்களில் தானியங்கி எந்திரங்களைக் கொண்டு (Robatic Machinary) தயாரித்து விடுவதற்கு! சோதனைக் குழாய் (Test Tube) குழந்தைகள் என்று கூறப்படும் சோதனைக்குழாயில் கருவுறவைக்கப்படும் கருவை திரும்ப பெண்ணின் கருப்பையில் வைத்துத்தான் குழந்தை பூரண வளர்ச்சி அடைந்ததும் பிரசவிக்கச் செய்கிறார்கள்.

செயற்கை கருப்பையை (Artificial uterus) இதுவரை எந்த விஞ்ஞானிகளாலும் உருவாக்க முடியவில்லை! உருவாக்கவும் முடியாது!! இன்னும் ஒன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். கோழி முட்டைகளை இன்குபேட்டரில் (Incubator) வைத்து விரைவாகவே குஞ்சுப்பொறிக்க வைப்பதைப்போல கருப்பையில் கருவளர்ச்சியை வேகப்படுத்தி ஒன்பது மாதத்திற்கு முன்பாக 7 மாதத்திலேயோ அல்லது 5 மாதத்திலேயோ குழந்தையை முழுவளர்ச்சி அடைவித்து பிரசவிக்க வைக்க ஒருகாலும் முடியாது!
எனவே குழந்தைகள் பிறப்பதை அதிகரிக்க வழி ஒன்றே ஒன்றுதான்! அதுவே இயற்கையான வழி! நம் முன்னோர்களால் காலம் காலமாகக் காட்டப்பட்ட வழி! இஸ்லாம் காட்டும் வழியும் அதுதான். வயது வந்த ஆண் பெண் இருபாலரும் திருமணம் முடித்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தான். எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் வரம்பு எதுவும் விதிக்கவில்லை.

இப்பொழுதுள்ள நடைமுறைப்படி, ஒருவரது பொருளாதார வசதிக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் தகுந்தவாறு தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதிலும் வெளியில் வேலைக்குப் போகும் பெண்கள் குறைவாகவே ஓரிரு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கின்றனர். பெண்கள் நாட்பட்டுத் திருமணம் செய்து கொள்வதும் குறைவாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கு ஒருகாரணம்.

இறைவன் தன் திருமறையில் அஷ்ஷூரா அத்தியாயத்தில் குழந்தைகளை தான் நாடுவோருக்கு கொடுப்பதாக கூறும் இடங்களில் ''பெண் குழந்தைகளைக் கொடுப்பேன்; ஆண் குழந்தைகளைக் கொடுப்பேன்; இரண்டையும் கலந்துக் கொடுப்பேன், என்கிறான். இதில் உபயோகிக்கப்படும் அரபிச் சொற்களை பார்க்கும் பொழுது ஒரு உண்மை பளிச்சிடும்.

அரபி இலக்கணத்தில் ஒன்றைக் (Singular) குறிக்க ஒரு சொல்லும், இரண்டைக் (Dual) குறிக்க மற்றொரு சொல்லும், மூன்றையும் அதற்கு மேல் உள்ளவற்றைக் குறிக்க பிரிதொரு சொல்லும் பயன்படுத்தப் படுகின்றன. குர்ஆனில், இந்த வசனத்தில் பயன்படுத்தப்படும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான சொற்கள் மூன்றையோ அல்லது அதற்கு மேல் உள்ளவைகளையோ குறிக்கும் பன்மைச் சொற்கள்ஆகும். இதன் மூலம் சூசகமாக மூன்று குழந்தைகளையோ அல்லது அதற்கு மேலேயோ பெற்றுக்கொள்வதைத்தான் இறைவன் விரும்புகின்றான் என்று கூட நாம் பொருள் கொள்ளலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஒரு பெண் தன் கருவுறுங்காலத்தில் (15 முதல் 44 வயது வரை) குறைந்தபட்சமாக 2.11 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் நீடித்து வாழும் என்பது விஞ்ஞானிகளின் முடிவு. இவ்வெண் 2.11 யை முழு எண்ணாக மாற்றினால் 3 குழந்தைகள் ஆகும். ஆக, ஒரு பெண் முன்று அல்லது அதற்கு மேல் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் தான் அச்சமுதாயம் (அல்லது நாடு) வளரும்; அபிவிருத்தியடையும்.

இதில் ஆண் குழந்தையாகப் பெறவேண்டுமா? அல்லது பெண் குழந்தையாகப் பெறவேண்டுமா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. இறைவன் தனது திட்டப்படி ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுப்பான். குழந்தை இறப்பு (Infant Martality) விகிதம் அதிகம் உள்ள நாடுகளிலும், போர் மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்படும் நாடுகளிலும் உள்ள மக்கள் குழந்தைப் பிறப்பு விகிதத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் அங்குள்ள பெண்கள் நான்கோ அதற்கு மேலுமோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty Re: அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 23:49

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (2)

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) 1480x357

அபூ ரிள்வான்

திருமணம் செய்து அதிகமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஒன்றே மனிதவளத்தை அதிகரிக்க வழி. அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வல்ல அல்லாஹ் கொடுக்கின்ற அருட்கொடைகளில் மிகச்சிறந்த அருட்கொடையாகிய குழந்தைகளை அதிகமாகப் பெற்றுக்கொள்ளுதலே இறைவனின் உவப்பிற்கு உகந்தவழியாகும். அல்லாஹ், தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

''பெண்கள், ஆண்மக்கள், பெருவாரியான தங்கம் மற்றும் வெள்ளிக்குவியல்கள், கண்கவர் குதிரைகள், கால்நடைகள், வேளான் நிலங்கள் உள்ளிட்ட ஆசைப்பொருள்களை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும்) இவ்வுலக வாழ்வின் (அற்பமான) வசதிகளே. (ஆனால்), அழகிய உறைவிடம் அல்லாஹ்விடமே உள்ளது'' (அல்-குர்ஆன் 3:14)

இவ்வசனத்தில் முதன்முதலில் பெண்மக்களையே வாழ்க்கையில் மனிதர்களுக்கு கவர்ச்சியாக, அழகாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறான். அதிலும் பெண்கள் என்று பன்மையில் கூறுகிறான். அடுத்து ஆண்மக்களைப் பெறுவதும் மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறான். ஆண்மக்கள் மூலம் தன் சந்ததிகளை உலகில் பெருக்குவதற்கு ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றான்.

ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, ''நான் அழகும் குடும்பப்பாரம்பரியமும் உள்ள ஒரு பெண்ணைக் கண்டேன். ஆனால் அவளுக்கு குழந்தைப் பேறு இல்லை. அவளை நான் மணந்து கொள்ளலாமா?'' என்று கேட்டார். இவ்வாறு அவர் பலமுறை கேட்டும் நபியவர்கள் வேண்டாம் என்று தடுத்தார்கள். பின்பு கூறினார்கள்: ''குழந்தைப்பேறு அதிகமுள்ள பாசமிக்க பெண்ணை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஏனெனில் மறுமை நாளில் எல்லாச்சமுதாயத்தாரிலும் நீங்களே அதிக எண்ணிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்''. (அறிவிப்பாளர்: மஅதில் பின் யசார் ரளியல்லாஹு அன்ஹு, நூல் அபூதாவுத், நஸயீ)

இந்நபிமொழியிலிருந்து குழந்தை பேறுள்ள விதவைப்பெண்ணையோ அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணையோ அல்லது குழந்தைப் பேறு அதிகம் உள்ள தாயின் மகளான கன்னிப்பெண்ணையோ மணந்து கொள்ளுதல் சிறந்ததாகும்.

நபிமார்கள் பலரும் பலதாரமணம் செய்தவர்களாகவும, அதிகமாக குழந்தைகள் பெற்றவர்களாகவும் இருந்தார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty Re: அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 23:50

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சில பயனுள்ள குறிப்புகள்

ஆண்களுக்கு:

1) திருமணத்தை தள்ளிப்போடாதீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது 25 வது வயதில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை முதல் திருமணம் செய்தது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. ஆக இளமையில் திருமணம் செய்வது குழந்தைகள் அதிகமாய் பெற வழிவகுக்கும்.
2) திருமணத்திற்கு பின்பு குழந்தைப் பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடாதீர்கள். எவ்வளவு வருடங்கள் தள்ளிப்போடுகறீர்களோ அவ்வளவுக்கு குழந்தைகள் குறைவாக பிறக்கக்கூடும். மேலும் இளம் வயதில் குழந்தைப் பேறுவதே அக்குழந்தையை நன்கு வளர்க்க பாடுபடமுடியும்.

3) குடும்பக்கட்டுப்பாடு என்ற ஆண்மை நீக்கம் அறவே செய்து கொள்ளாதீர்கள். இப்படி நிரந்தர ஆண்மை நீக்கம் செய்து கொள்ள இஸ்லாத்தில் அனுமதியில்லை. ஒரு குழந்தைக்கும் மற்றொரு குழந்தைக்கும் இடையே, முன்பு நாம் குறிப்பிட்டபடி குறைந்தபட்சமாக மூன்று ஆண்டுகள் இருந்தாலே போதுமானது. அச்சமயங்களில் தற்காலிக கருத்தடை சாதனங்களை உபயோகிக்கலாம்.
4) நமது இந்திய திருநாட்டில் முன்பு இருந்ததைப்போல குடும்பக்கட்டுப்பாட்டை அரசாங்கம் இப்போது வலியுறுத்தவில்லை. ஏனெனில் மனிதவளம் இந்தியாவில் அதிகம் இருப்பதால் தான் இந்தியாவின் வளர்ச்சி முன்னைவிட அதிகமாய் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்து கொண்டுவிட்டார்கள். தற்பொழுது எல்லாக் குடும்பங்களுக்கும் அரசாங்கமே மருத்துவக் காப்பீடு (medical insurance ) அளிப்பதன் மூலம் குழந்தைகள் இறப்பு விகிதத்தையும் (infant martality) குறைக்கவும், பொது மக்களின் சுகாதார நல்வாழ்வுக்கு வழிசெய்யவும் முயற்சிக்கிறார்கள்.

5) நீங்கள் இரண்டாம் மனைவியை திருமணம் செய்ய விரும்பினால், முதல் மனைவியின் சம்மதத்தை கேட்க முயற்சிக்காதீர்கள். நூற்றில் ஒருபெண்கூட, தான் முதல் மனைவியாய் இருக்கும் பட்சத்தில் தனது கணவன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டாள். இவ்விசயத்தில் நீங்களே தீர்மானித்து நீங்களே தான் முயற்சி செய்யவேண்டும்.
6) இரண்டு மனைவியரோ அதற்கு மேலோ உள்ளவராக இருந்தால், உங்கள் நேரத்தை எல்லா மனைவியரோடும் சமமாக பங்கிடுங்கள்.

7) குழந்தைகளிடம் பாரபட்சம் காட்டாதீர்கள். ஆண்குழந்தையாக இருப்பினும் பெண்குழந்தையாக இருப்பினும் குடும்பத்தில் எதை வாங்கினாலும் சமமாக பங்கிட்டுக் கொடுங்கள்.
8.) அதேபோல் உலக கல்வியிலும், மார்க்க கல்வியிலும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ பாரபட்சம் காட்டாதீர்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் நிறைவாக கல்வி அறிவை அளியுங்கள்.

9) இரண்டாம் திருமணம் செய்தவர், திருமணம் செய்த அன்றிலிருந்து தான் முதல் மனைவிக்கு என்ன பொருள் வாங்கினாலும் அதே பொருளை தன் இரண்டாவது மனைவிக்கும் வாங்கி கொடுக்க வேண்டும். இரண்டாவது மனைவியை திருமணம் செய்வதற்கு முன்பு முதல் மனைவிக்கு பல பொருட்களை நீங்கள் கொடுத்திருக்கலாம். அதைப்போன்று இரண்டாம் மனைவிக்கும் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. ஏனெனில் அச்சமயம் ஒரேஒரு மனைவி மட்டுமே இருந்தாள். ஆகையால் அவளுக்கு மட்டுமே கொடுத்தீர்கள்.
10) முதல் மனைவியின் இரகசியங்களை இரண்டாவது மனைவிக்கும், இரண்டாவது மனைவியின் இரகசியங்களை முதல் மனைவிக்கும் கூறாதீர்கள். இப்படி சொல்வது இஸ்லாத்தில் முழுமையாக தடைசெய்யப்பட்டிருக்கிறது.

11) இரண்டு மனைவிகள் உள்ளவர்கள், கூடியமட்டும் அவர்களை தனித்தனி வீடுகளில் குடியமர்த்துதல் நல்லது. அல்லது ஒரே வீட்டில் கீழ் வீட்டில் ஒருவரையும், மேல் வீட்டில் ஒருவரையும் வசிக்கச்செய்வது சிறந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது மனைவிமார்களுக்கு தனித்தனி குடில் அமைத்துக்கொடுத்தார்கள் என்பதை ஹதீதுகளின் மூலம் அறியலாம்.
12) உங்கள் மனைவியருக்கும், குழந்தைகளுக்கும் தூய இஸ்லாத்தை குர்ஆன் மற்றும் நபிவழி வாழ்க்கை முறையை துவக்கத்திலிருந்தே போதனை செய்யுங்கள். முதன் முதலில் நீங்களே ஒரு நல்ல எடுத்துக்காட்டாய் (role model) நபிவழியிலே வாழ்ந்து காட்டுங்கள்.

13) மனைவியருக்கு அவர்கள் கேட்கும் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுக்காதீர்கள். அவர்களுக்கு வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். வாழ்க்கைக்கு தேவையானவை எது, ஆசைப்படுவது எவை என்பதன் வித்தியாசத்தை புரியவையுங்கள். நமது தேவைகளைக் குறைத்துக்கொண்டால் அதிக குழந்தைகளைப் பெற்றாலும் மகிழ்ச்சியாக வாழலாம்.

14) குழந்தைப் பெறுவதில் மாற்றுமத கலாச்சாரத்தையோ, மேல்நாட்டுக் கலாச்சாரத்தையோ பின்பற்றி ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் போன்ற மூடத்தத்துவங்களைப் பின்பற்றாதீர்கள். உங்களால் முடிந்த அளவு அதிகமாய் குழந்தைகளைப் பெறமுயற்சி செய்யுங்கள். முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் பயன் அளிப்பதாகக் கூறுகிறான்.
15) இறுதியாக, ஒரு முஸ்லிமின் மரணத்திற்குப்பின் அவனுக்கு பயனளிக்கும் மூன்று செயல்களில் ஒன்றாக இறந்த தன் தந்தையருக்காக நல்லொழுக்கமுள்ள மகன் செய்யும் பிரார்த்தனை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். நீங்கள் அதிகமாய் குழந்தைகளைப் பெற்றால், அவர்களில் ஒரு குழந்தையாவது உங்கள் மரணத்திற்குப் பின் உங்களுக்காக பிரார்த்தனை செய்தால் அதன் பொருட்டு அல்லாஹ் (சுப்) உங்கள் பாவங்களை மன்னித்து சுவன வாழ்க்கையை அளிக்கலாம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty Re: அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 23:51

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (3)
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) L1480x350
அபூ ரிள்வான்
சிலர் கேட்கலாம், ''நான் நடுத்தர வர்க்கத்தில் (middle class) உள்ளவன் - நான் எப்படி அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்'' என்று.

சிந்தித்துப் பாருங்கள்! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் வாழ்ந்த நபித்தோழர்களும், தோழியர்களும் பெரும் வசதியிலா வாழ்ந்தார்கள்? சாப்பிட மூன்று வேளை உணவுக்கே பெரிய திண்டாட்டம்! உடுத்த மாற்று உடைகள் இல்லை!! தங்கியிருப்பதற்கு ஈச்ச ஓலையினாலான கொட்டகைத்தான் வீடுகள்! இப்படித்தான் அவர்களின் முழு வாழ்க்கையும் இருந்தது. ஆனால் அவர்களெல்லாம் அதிகமாக குழந்தைப் பெற்றுக்கொள்ளவில்லையா?

அதிகமாய் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு பெண்களுக்குத் தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல!

ஒரு முஸ்லிம் தம்பதிகளுக்கு குழந்தைப் பிறக்காமல் இருந்தால், அவர்கள் திருமணம் முடிந்து 10 வருடங்கள் வரை குழந்தைக்காக முயற்சி செய்யலாம். 10 வருடங்களுக்குப் பின்னும் குழந்தைப் பிறக்கவில்லையெனில், அல்லாஹ் தங்களுக்கு விதித்த விதியை (destiny) ஏற்றுக்கொண்டு தம்பதிகள் இருவருக்குமோ அல்லது ஆணுக்கு மட்டுமோ எந்த உடற்குறையும் இல்லாத பட்சத்தில் முதல் மனைவியே தன் கணவருக்கு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்கலாம்.

இவ்வழக்கம் பெரும்பாலான இந்திய முஸ்லிம்களிடம் இல்லையென்றே கூறத்தோன்றுகிறது. பலதாரமணம் (polygyny) இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தும், அதனால் கன்னிப்பெண்களோடு, பல விதவைப் பெண்களும், விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களும் மறுவாழ்வு பெறுவார்கள் என்ற நிலை இருந்தும், முதல் மனைவி இருக்கும்போது இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது தவறான காரியத்தைப்போல நம்சமூகத்தில் சித்தரிக்கப்படுகிறது. இதனால் முதல் மனைவி மூலம் குழந்தைப் பெறமுடியாதவர்கள் மாற்றாக இருக்கும் வழியினை முற்றும் அடைத்து விடுகிறார்கள்.
நபிமார்களில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட பலர் பலதார மணம் செய்தார்கள். நபித்தோழர்களில் பலர் பலதாரமணம் செய்தவர்களே! மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நகர் சென்ற நபித்தோழர்களுக்கு மதீனா வாழ் அன்சாரிகள் தான் இரண்டு அல்லது அதற்கு மேல் மனைவியரை மணமுடித்தவராக இருந்தால் தன் மனைவிகளில் ஒருவரை விவாகரத்து செய்து மக்காவிலிருந்து குடிபெயர்ந்த தன் சகோதர முஸ்லிமுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

இந்நற்செயல்களை நோக்கும் போது அவர்களின் எல்லையில்லா தியாக மனப்பான்மையையும், அவர்களின் பலதார வாழ்க்கை முறையையும் நாம் அறியலாம். இவர்கள் எல்லாம் தவறான காரியத்தையா செய்துவிட்டார்கள்? (அப்படிப்பட்ட தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக)அரேபிய நாடுகளில் பலதாரமணம் சர்வசாதாரணமான விசயம். அந்நாட்டுப் பெண்களும் தன் கணவன் இரண்டாம் திருமணம் செய்வதை தவறாக நினைப்பதில்லை. மாறாக தனது இல்லறக் கடமைகளில் இன்னொரு பெண்ணும் பங்குப் போட்டுக்கொண்டால் தனது பளு சற்றுக் குறையுமே என்று தான் நினைக்கிறார்கள்.

மேலும் இஸ்லாம் அனுமதித்த ஒரு செயலை தடுப்பது மிகப்பெரிய பாவம் என்றும் உணர்ந்திருக்கிறார்கள். இத்தோடு இரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பதும் அவர்களுக்குத் தெரிந்து இருக்கிறது. அரேபியாவில் ஆண்கள் தமது நண்பர்களை வாழ்த்தும் போது ''அல்லாஹ் உங்களுக்கு இன்னொரு அழகிய பெண்ணை மனைவியாகத் தருவானாக!'' என்று கூறுகின்றனர்.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே பார்ப்போம். மருத்துவபரிசோதனைகளுக்கும், கருவுறு சிகிச்சைகளுக்குப் பின்னும் ஆணுக்கு குறையிருப்பது தெரியவந்தாலும், அல்லது தம்பதிகள் இருவருக்கும் குறையிருப்பது தெரிய வந்தாலும், அத்தம்பதிகள் அனாதை குழந்தைகளையோ, தமது உறவினர்களிடமிருந்தோ மூன்றுக்கு குறையாமல் தத்து எடுத்துக்கொள்ளலாம்.

குழந்தைகளை தத்து எடுத்துக் கொள்வதற்கு இஸ்லாத்தில் பூரண அனுமதியுண்டு. அக்குழந்தைகளை மகனே என்றும் மகளே என்றும் அழைப்பதற்கும், அவர்களுக்கு சொத்தில் பெற்ற மகன் மகளுடைய பங்குகளைப்போல் பிரித்துக்கொடுப்பதற்கும் தான் அனுமதியில்லை. மேலும் தமது வளர்ப்பு குழந்தைகளுக்கு தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை (1/3) வஸீய்யத் என்னும் உயில் எழுதிவைப்பதில் எந்த தவறும் இல்லை. அவ்வளர்ப்பு பெற்றோர் உயிருடன் இருக்கும் நாட்களில் தம் வளர்ப்பு குழந்தைகளுக்கு பரிசாக எதையும் கொடுப்பதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது.

பலதாரமணம் இந்தியாவைப் பொறுத்தவரை, முக்கியமாக பெண்களால், ஒரு வெறுக்கத்தக்க காரியமாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல ஊர் ஜமாஅத்துகள், முதல் மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், இரண்டாம் திருமணத்திற்கு அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். காரணம் என்னவெனில் முதல் மனைவியின் குடும்பத்தினர் ஜமாஅத்தார்கள் மீது கோபம் அடைவார்கள் என்பதும், ஊரில் இருக்கும் இளைஞர்கள், கட்டுப்பாடற்ற முறையில் இரண்டு அல்லது மூன்று திருமணங்கள் செய்யதலைப்படுவார்கள் என்பதுதான். அப்படி ஒரு நிலைமை உருவானால் அதற்கு அடிப்படைக் காரணங்களை (root causes) ஆராயவேண்டுமேயல்லாது விளைவுகளைக் குறைக்கூறக்கூடாது. அல்லாஹ் (சுப்) அனுமதித்த பலதாரமணத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.
இஸ்லாமிய திருமணங்களில் பெண்ணுக்கு மஹர் (மணக்கொடை) கொடுத்து திருமணம் செய்ய வேண்டுமென்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. அந்த மஹரை பெண்ணே தனது தகுதிக்கும், அழகுக்கும், படிப்பிற்கும் தகுந்தவாறு பணமாகவோ அல்லது பொன்னாகவோ கேட்க அனுமதியளித்துள்ளது. ''உங்கள் மனைவியருக்கு ஒரு பொற்குவியலே மஹராகக் கொடுத்திருப்பினும் அவற்றைத் திரும்ப பெறக்கூடாது'' என்ற திருமறைவசனம் மூலம் ஒரு பொற்குவியலே திருமணத்திற்கு மஹராக ஒரு பெண்ணுக்கு அளிக்கலாம் என்று இறைவன் அனுமதித்துள்ளான்.

நிலைமை அவ்வாறிருக்க, நம் ஊர் ஜமாத்தார்கள் பெண்களின் மஹர் தொகையாக ரூபாய் 501 ம், அல்லது ரூபாய் 1001 ம் நிர்ணயம் செய்வது எவ்வகையில் நியாயம்? மஹர் நிர்ணயம் செய்யும் காரியத்தை பெண் வீட்டாரிடமும் மாப்பிள்ளை வீட்டாரிடமும் விட்டுவிடுவதும், அவர்கள் கலந்தாலோசித்து எந்தத்தொகையை மஹராக ஏற்றுக்கொள்கிறார்களோ அதையே ஜமாத்தார்களும் ஏற்றுக்கொள்ளுதல் அல்லாஹ் காட்டிய வழியில் செல்வதாக இருக்கும் அல்லவா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty Re: அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 23:51

இன்னொரு சமூகக்கொடுமை நமது முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிய புற்றுநோய் போல் காணப்படுவது பெண்வீட்டாரிடத்தில் மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வரதட்சனை தான். இவ்வரதட்சனை பணமாக மட்டும் கேட்கப்படுவதில்லை. பணமும், அதோடு சேர்த்து தங்க நகைகளும், வீட்டுச் சாமான்களும், நூற்றுக்கணக்கான நபர்களுக்கு விருந்தும், மேலும் திண்பண்டப் பொருள்களும் இவற்றில் அடங்கும். இக்கொடுமை மாற்றுமதத்தார்களிடமிருந்து முஸ்லிம்கள் இறக்குமதி செய்தது.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்பட்டிருந்தும், வரதட்சனை கொடுமையால் பெண்ணைப் பெற்றவர்கள் படும்பாடு சொல்லிமாளாது. படிக்காத பெண்களுக்கு திருமணம் செய்வதற்குதான் வரதட்சனை கொடுக்கவேண்டும் என்றிருந்த காலம்போய், மேல்படிப்பு படித்து நல்ல உத்யோகத்தில் கைநிறைய சம்பளம் வாங்கும் பெண்ணிடமே வரதட்சனை கேட்கின்ற கொடுமையை என்னவென்று கூறுவது! வரதட்சனை முஸ்லிம் சமுதாயத்தில் முற்றாக ஒழிந்தால் பெண்களுக்கு விரைவிலேயே திருமணம் ஆகி அதிக குழந்தைகள் பெற வழி ஏற்படும்.

பொதுவாக திருமணத்தின் மிகமுக்கிய அம்சம் கணவன் மனைவி இருவரும் பிரியாமல் வாழ்வது தான். இன்று தமிழக மற்றும் கேரள முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் திருமணமான பெரும்பாண்மையினர் மனைவியை தன் ஊரிலேயே விட்டுவிட்டு வெளிநாடுகளில் - வளைகுடா நாடுகளில் - பணியாற்ற செல்வது ஒரு அடிப்படை தேவையாக மாறிவிட்டது. திருமணம் ஆகி தன் மனைவியுடன் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தங்கிவிட்டு அவளை பிரிந்து வெளிநாடு செல்லும் கணவன், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை திரும்பிவருவதில்லை.

இதற்கிடையில் மனைவி கருவுற்றிருந்தால், பிள்ளை பிறந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து தான் மனைவியையும், தான் பெற்ற குழந்தையையும் நேரில் பார்க்கும் அவல நிலை நிலவுகிறது. இது இஸ்லாம் அனுமதிக்காத ஒரு வாழ்க்கை நிலைதான். இளமைக்காலங்களில் மனைவியை பிரிந்து வாழ்வதற்கு ஒரு வரம்பு உண்டு. அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மனைவியோடு சேர்ந்து வாழுதல் இன்றியமையாதது.
இதுவரையில் குடும்பங்களில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள எவ்வித வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்றும், அவ்வழிமுறைகளுக்கு தடைக்கல்லாய் இருக்கும் சமூகக்கொடுமைகளை களைவது பற்றியும் பார்த்தோம். இனி ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் இடையில் எவ்வளவு கால இடைவெளி இருக்கவேண்டுமென்பதை ஆராய்வோம்.

முதல் குழந்தை பிறந்த பிறகு அதன் பால்குடிக்கும் காலம் 24 மாதங்கள். ஆக அடுத்த குழந்தை கருவுறுவது 24 மாதங்களுக்கு தாமதப்படுத்த வேண்டும். இதுவே குர்ஆன் கூறும் வழிகாட்டுதல். ஆக ஒரு குழந்தையின் பிறப்பிற்கும், அடுத்த குழந்தையின் பிறப்பிற்கும் இடையே 2 வருடம் 9 மாதம் இடைவெளி ( அதாவது 3 வருடங்கள் முழு எண்ணாக) இருப்பது நலம்.

இக்கணக்குப்படி, ஒரு பெண் அதிகபட்சம், 8 முதல் 9 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள முடியும், அவளுடைய திருமண வயது 18 ஆகவும், மூன்றாண்டுக்கு ஒருமுறை ஒரு குழந்தை பெற்றுக்கொள்பவளாகவும் இருக்கும் பட்சத்தில்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

''இஸ்லாம் மயமாகும் ஐரோப்பா கண்டம்'' கட்டுரையிலிருந்து


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1) Empty Re: அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வோம் (1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum