சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Khan11

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

4 posters

Go down

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Empty இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:49

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Gouva
நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.

கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.

தற்போது கொய்யாப்பழ சீசன் என்பதால் அதிக அளவில் கொய்யாப்பழம் வந்து குவிந்துள்ளன.

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியதாவது:-

மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம்.

இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம். நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும். கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.

கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன.

கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.

ொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.

இவ்வாறு டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார். கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் கொய்யாப்பழங்கள் கொய்யாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 100 டன்¢ கொய்யாப்பழங்கள் கர்நாடகம் மற்றும் விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வருகிறது.

இவற்றில் கர்நாடக கொய்யா பழங்கள் முதல் தரமாக கருதப்படுகிறது. இவை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழங்கள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதில் பெரிதாக இருக்கும் பழங்கள் ரூ.11-க்கு விற்கப்படுகிறது.

இப்பழங்களை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் மற்ற பழங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கோயம்பேடு வணிக வளாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.




உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Empty Re: இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 23:50

யோக முத்திரைகள்

நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.
கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.
காது நன்கு கேட்க!
காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த (shunya) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!
மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.
இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!
இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங் (ling) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.
நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு (apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....
வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.
இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான (vyana) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.


ஆரோக்கியம் உங்கள் விரல்களில்!

முத்ரா என்ற வடமொழிச் சொல்லிற்கு ‘குறியீட்டு வெளிப்பாடு’ என்று பொருள் கூறலாம். தமிழில் ‘முத்திரை’ என்று கூறுவர். பழங்கால இந்தியாவில் இக்குறியீடுகள் சிற்பங்கள் மூலமாகவும், நாட்டியத்தின் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் வெளியிட முடியாத உணர்வுகள் கூட முத்திரைகள் மூலம் வெளிப்பட்டன.

சொலவடை ஒன்றைக் கேட்டிருப்போம். ‘ஐந்து விரலும் ஒரே மாதிரி இருக்கா!’ இல்லைதான். வடிவத்திலும் சரி, அவற்றின் குணத்திலும் சரி.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஐந்திற்கும் தனித் தனி சிறப்புகள் இருக்கின்றன. கை விரல்கள் ஐந்தும் பஞ்சபூதங்களின் பிரதிநிதிகளாகக் கருதப்படுகின்றன.

கட்டை விரல் - நெருப்பு
ஆள்காட்டி விரல் - காற்று
நடுவிரல் - ஆகாயம்
மோதிர விரல் - நிலம்
சுண்டு விரல் - நீர்

சரி, எதற்கு இந்த பீடிகை தெரியுமா?
குறிப்பிட்ட விரல்களை இணைத்து செய்யும் முத்திரைகள் மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதனை விளக்கவே இந்தக் கட்டுரை. முத்திரைகள் மிகுந்த சக்தி பெற்றவை. எனவே, இவற்றைத் தக்க முறைப்படி பயிற்சி செய்து வந்தால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.
நோயைப் போக்கி ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சில முத்திரைகளைப் பற்றி பார்க்கலாம்.

முக்கியமான குறிப்பு :

1. ஞான முத்திரை
ஞானம் என்பது அறிவைக் குறிக்கும்.

செய்முறை:
உங்களுடைய ஆள்காட்டி விரலின் நுனி, கட்டை விரலின் நுனியைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நன்றாக விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:
இம்முத்திரை அறிவு வளத்தை மேம்படுத்தும். கட்டை விரலின் நுனியில் உள்ள பல முக்கிய சுரப்பிகள், உங்கள் ஆள்காட்டி விரலால் அழுத்தி விடுவதனால் செயல்படத் தொடங்கி விடும்.

நேர அளவு:
இம்முத்திரையைச் செய்ய குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. இதனை நீங்கள் உட்கார்ந்திருக்கும்போதோ, நடக்கும்போதோ, படுத்திருக்கும்போதோஎப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், உங்கள் தேவைக்குத் தக்கவாறு செய்யலாம்.

நன்மைகள்:
உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
உங்கள் மூளையைக் கூர்மையாக்கும்.
உங்கள் கவனத்தை அதிகரிக்கும்.
இதை நீங்கள் தினந்தோறும் செய்து வந்தால் தூக்கமின்மை குறைவதோடு மனநோய் மற்றும் மனச்சோர்வு குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

2. பிரித்வி முத்திரை
பிரித்வி என்பது பூமியைக் குறிக்கும்.

செய்முறை:
உங்களுடைய மோதிர விரலின் நுனியால், கட்டை விரலின் நுனியைத் தொடுங்கள். மற்ற மூன்று விரல்களும் விரிந்து நேராக இருக்க வேண்டும்.

சிறப்பம்சம்:
உடல் பலவீனத்தைக் குறைக்கும்.

நேர அளவு :
இதற்கும் குறிப்பிட்ட நேர அளவு கிடையாது. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நன்மைகள் :
உங்கள் தோலின் நிறத்தில் பளபளப்பையும் மினுமினுப்பையும் ஏற்படுத்தும். உங்கள் உடலை சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கச் செய்யும். நீங்கள் ஒல்லியாக இருந்தால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கச் செய்யும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Empty Re: இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

Post by நண்பன் Tue 21 Dec 2010 - 14:10

:”@: :”@: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Empty Re: இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

Post by ஹனி Tue 21 Dec 2010 - 17:39

:”@: :”@:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Empty Re: இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

Post by ஹம்னா Tue 21 Dec 2010 - 18:06

:];: :];:


இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்   Empty Re: இதயநோய்- தலைவலியை குணமாக்கும்: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கொய்யாப்பழம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum