சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Khan11

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

3 posters

Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:11

அனைவரும் கண்டிப்பாக படிக்கவும் படிப்பினை உள்ளது

அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!

[ எனது அன்புக் கணவரே! பெண் பிள்ளைகள் அல்லாஹ்வின் அருளும், அவனது பரிசுப் பொருளுமாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா? உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று!

அவர்கள்தான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவர்க்கத்திலே உங்களை சேர்ப்பித்து அவர்களுக்கும், உங்களுக்கும் இரு விரல் இடை வெளிதான் இருக்கும் என்றளவுக்கு பதவிகளை உயர்த்துவார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா?
''எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள'' என்கின்ற நபிமொழியை எப்படி மறந்தீர்கள்?

கொஞ்சம் சிந்தியுங்கள்! நமது பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு அதில் இரக்கம் நிரம்பியுள்ளது! எவ்வளவு கள்ளங் கபடமற்ற தூய்மையான மனது!

இதை இன்னும் இளகுவாக நீங்கள் புரிந்து கொள்வதாயின், நீங்கள் நோய் வாய்ப்பட்டு கட்டில் படுக்கையாக கிடந்த போது எவ்வளவு அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்?

சிந்தித்தீர்களா? உங்களது தேவைகளையும் நிறைவு செய்து, உங்களுக்கு எவ்வளவு அழகாக பணிவிடை செய்தார்கள்? என்பதை!

வீட்டுப் பணிகளில் எனக்கு எப்படி பக்க பலமாக உதவுகிறார்கள்? என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

அவர்களது கல்வித் திறமையையும், அவர்களது வெட்க உணர்வையும் ஹிஜாப் அணிவதில் அவர்களது ஆர்வத்தையும் பார்த்தீர்களா?

உங்களுக்கு எவ்வளவு வெட்கப்பட்டு அவர்கள் வழங்கும் மரியாதையைப் பார்க்க வில்லையா? ]
ِبسم الله الرحمن الرحيم

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்

எனது அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக!
எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).

எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன.

என்னை நம்புங்கள்! நான் எப்படி இதை எழுதுவது? நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை அடைந்த பின்னரும என்னால் எப்படி எனது உளக்குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். இது ஏனென்று உங்களுக்கு தெரியுமா? நாமிருவரும் ஓருடலும் ஈருயிருமாக அல்லவா இருந்தோம்? எதற்காக நமது வாழ்வு இப்படியான ஒரு அவல நிலையை அடைந்தது?

நமது வாழ்க்கையை வழப்படுத்த வேண்டிய சுபிட்சத்தை நாம் ஏன் இழந்தோம், நாமிருவரையும் பிரித்து வைப்பதில ஷைத்தான் வெற்றி பெற்றுவிட்டான். 'உனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறிய உனது மனைவி எந்தப்பயனும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்க கார ணமாக இருந்து விட்டாள்' என்று உங்களை நம்பவைத்து விட்டான் அந்த ஷைத்தான்.

உங்களது இரண்டாவது வாரிசான பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க நான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? அப்போதே நான் நினைத்தேன் இது பெண் குழந்தை என்பதற்காகத் தான் நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. ஒரு பெண் அந்த நேரத்தில் படும் வேதனையை நீங்கள் நன்றாக அறிந்திருந்தும் என்னை ஆறுதல் படுத்துவதற்காவது நீஙகள் வரவில்லை. ஒவ்வொரு மனைவியும் அந்த நேரத்தில் கணவனின் வருகையை எதிர்பார்ப்பாள். ஆனால் அந்தப்பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை அது என்னை பெரிதும் பாதித்த ஒரு விஷயமாகும்.

நான் உங்களிடம் மனம் வருந்திய போது நான் நினைத்திருக்க வில்லை நாம் இன்றைக்கு வாழும் நெருக்கடி மிக்க வாழ்க்கைக்கு இது தான் ஆரம்பம் என்று! என்றாலும் பின்னர் நீங்கள் இதை எண்ணி வருந்தினீர்கள். எனது உணர்வை புரிந்து கொண்டீர்கள. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

நமக்கு அல்லாஹ் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பாக்கியமாக தந்த போது நான் அவமானத்தையும், இளிவையும், பரிகசிப்பையும் தவிர வேறு எதையும் பெறவில்லை. நீங்கள் ஒரு நாள் சொன்னீர்கள் உனக்கு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கத்தான் தெரியும் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு இந்த வீட்டில் எந்த உரிமையுமில்லை என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தில் ஈட்டியால் குத்திய வார்த்தைகளாகும். அந்த வார்த்தைகளை நீங்கள் மறந்திருந்தாலும் எனது உள்ளத்தை விட்டு அவைகள் மறைந்து விடவில்லை. என்னைப் பெற்றெடுத்த எனது அன்பு தந்தை மரணிக்கும் வரை நோயிலே இருந்தார். அவரை இறுதி வரையிலும் பார்க்க விடாமல் என்னை தடுத்தீர்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty Re: பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:11

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Img_12

என் அன்புக் கணவரே! உங்களுக்கு ஏன் இந்த கல் மனம்? உங்களின் இந்தக் கோபத்தையும் அடக்கு முறையையும் என்னால் தாங்க முடியுமா என்ன?

எனது அன்புக் கணவரான உங்களின் மேலான கவனத்திற்கு நான் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்த போது அது ஆண் குழந்தை இல்லை என்ற உடன் உங்களை விட அதிகம் நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் அது பெண் குழந்தை என்பதற்காகவோ அல்லது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறைகாண வேண்டும் என்பதற்காகவோ அல்ல! மாறாக உங்கள் மீது எனக்குள்ள இரக்கத்தினாலும் உங்களின் உணர்வைப் புரிந்துகொண்டதாலும், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவும் தான். இதனை நீங்கள் என்னை சொல்லாலும், செயலாலும் நோவினை செய்த போதெல்லாம் நான் பொறுமை காத்ததன் மூலம் நீங்கள் மிக தெளிவாக புரிந்திருப்பீர்கள்.

உண்மையில் என்னை நம்புங்கள்! நான் ஏதோ ஒரு பாவம் செய்தவிட்டேனோ தவறிழைத்து விட்டேனோ என்றெல்லாம் எண்ணினேன். சில வேளை உங்களது கவலைக்கும் மன உளைச்சலுக்கும் நான் தான் காரணமோ, என்னை நம்புங்கள்! ஆண் பிள்ளை பெற்றெடுக்க வேண்டுமென்ற உங்களின் கனவுக்கு நான் தான் தடைக்கல்லாக அமைந்து விட்டேனோ என்று கூட நான் எண்ணியதுண்டு. உங்களது உணர்வு இப்படி ஆனதனால் உங்களது உரிமை விடயத்தில் நான் ஒரு பாவியாகி விட்டேனா என்று எண்ணிய சந்தர்ப்பங்களும் உண்டு.

எனது அன்பான கணவரே! விஷயம் நீங்கள் எண்ணுவது போன்றுமல்ல, நான் அதற்குக் காரணமும் அல்ல. இவை அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடும். அவனின் விருப்பமும் அவனது களா கத்ருமாகும். எதற்காக நீங்கள் மூன்று பெண் பிள்ளைகளின் தந்தை என்றால் அது அல்லாஹ்வின் ஏற்பாடு என்பதை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை?

சில நேரம் இதற்கெல்லாம் நீங்கள் கூட காரணமாக இருக்கலாமல்லவா? அல்லது ஆணையோ பெண்ணையோ பெற்றெடுக்க முடியாத மலடனாகவோ அல்லது மூளை குறைபாட்டுடனோ, அல்லது அங்கவீனமான பிள்ளைகளையோ தந்திருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அல்லது ஆண் பிள்ளைகளைத்தான் தந்த பின்னர் அப்பிள்ளைகள் பெற்றோருக்கு நோவினை செய்கின்ற கேடு கெட்ட பாவிப்பிள்ளைகளாக அவர்கள் ஆகிவிட்டால் என்ன செய்வீர்கள்? அதிக மனிதர்கள் இவை அனைத்தையும் அனுபவிக்க அல்லாஹ் உங்களுக்கு தந்திருக்கும் இம்மகத்தான அருட்கொடைக்கு ஏன் அவனை புகழக்கூடாது?

இந்த அருளுக்கு ஏன் நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தக்கூடாது? அல்லாஹ் அவனது திருமறையில்,

'வானம் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றைப் படைக்கிறான் (ஆகவே) அவன் நாடியவர்களுக்கு பெண்மக்களை அன்பளிப்புச் செய்கிறான் அவன் நாடியவர்களுக்கு ஆண் மக்களை அன்பளிப்புச் செய்கிறான். அல்லது ஆண் மக்களையும் பெண்மக்களையும் கலந்தே கொடுக்கிறான். அன்றியும் அவன் நாடியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். நிச்சயகாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியதைச் செய்ய ஆற்றலுடையவன்)'. (அஷ்ஷுரா-49.50).

நிச்சயமாக பெண் பிள்ளைகள் அல்லாஹ் அருளிய மிகப்பெரும் கொடை! யார் அப்பெண் பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கிறார்களோ அல்லாஹ் அவர் மீது அருள் புரிகிறான் என்று நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லவில்லையா?

(தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை பரிசளிக்கிறான்) என்றால் பெண் மட்டுமே என்றும் (தான் நாடியவர்களுக்கு ஆண் மக்களை பரிசளிக்கிறான்) என்றால் ஆண் மட்டுமே(அல்லது ஆண் பெண் இருவரையும் என்றால்) சிலருக்கு ஆண் பெண் இரு சாராரையும் கலந்தும் என்றும் (தான் நாடினால் மலடாக்குவான் என்றால்) அவர்கள் யாரையுமே பெற முடியாதவர்களாக்கி விடுவான் என்பது கருதாதாகும்.

நிச்சயமாக அறிந்தவன் சக்திபெற்றவன் என்றால்) அனைத்தையும்) அறிந்தவன் யாவற்றையும் செய்பவன் அவனேயாவான்.



எனது அன்புக்குரிய கணவரே! எந்த சக்தியுமற்ற எதையுமே செய்ய முடியாத மிகவும் பலவீனமான என் மீது ஏன் இவ்வளவு கோபத்தை கொட்டுகிறீர்கள்?

எதற்காக பெண் பிள்ளைகளினால் எந்த மரியாதையையும் அடைய முடியாது என்று எண்ணி அவர்களை வெறுத்தொதுக்கிய (ஜாஹிலிய்யா) அறியாமை கால மக்களுக்கு ஒப்பாகிறீர்கள்?

அப்பெண்கள் அவமானத்தையும் இழிவையும் தருவார்கள் என்று எண்ணினார்கள். அல்லாஹ் அவனது திருமறையில் (இன்னும் அவர்களில் ஒருவன் பெண் குழந்தை (பிறந்திருப்பது) கொண்டு நன்மாரயங் கூறப்பட்டால். கோபத்தை அடக்கி விழுங்கியவனாக அவன் இருக்க. அவன் முகம் (துக்கத்தால்) கறுத்தாக ஆகி விடுகிறது.) அந்நஹ்ல்-58.59.
எனது அன்பு கணவரே! அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்த அறியாமைக்கால (ஜாஹிலிய்யா) மக்களுக்கு ஒப்பாகுவதை நீங்கள் விரும்புகிறீர்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty Re: பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:12

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Muslim0children70

நபி மொழிகளில் (சுன்னாவில்) பெண் மக்களின் சிறப்பு:
நல்ல (சாலிகான) மனிதர்களுடன் சுவர்க்கத்திலே கொண்டு போய் உங்களைச் சேர்ப்பிப்பதற்கு காரணமான பெண் பிள்ளைகளை ஏன் வெறுக்கின்றீர்கள்? ஆம் அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் வெட்க உணர்வு மிக்கவர்களாகவும் கட்டிக்காத்து அழகிய (இஸ்லாமிய) முன்மாதிரி மிக்க பயிற்ச்சி வழங்கினால் நல்ல மனிதர்களுடன் சுவர்க்கம் செல்ல முடியும் என்பதை பின்வரும் நபி மொழிகள் உணர்த்துவதை நீங்கள் அறியத் தவறிவிட்டீர்கள்.

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் ஒரு பெண் தனது இரு பெண் பிள்ளைகளுடன் அவர்களுக்கு எதையாவது (உண்ணக்) கொடுக்குமாறு கேட்டவளாக வந்தாள். ஆனால் ஒரு பேரிச்சம் பழத்தை தவிர வேறு ஏதும் என்னிடத்தில் இருக்கவில்லை. அதை அவளிடத்தில் கொடுத்தேன். அவள் அதில் எதனையும் தான் எடுத்துக் கொள்ளாமல் அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்தாள். பின்னர் அப்பெண் அங்கிருந்து சென்றதன் பின்னர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்தார்கள். இச்செய்தி பற்றி அவர்களுக்கு சொன்ன போது சொன்னார்கள்
எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் வரும் கஷ்டத்தை (அப்பெற்றேர்) பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள' (அறிவிப்பவர்; ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஆதாரம் புஹாரி, முஸ்லிம்).இமாம் திர்மிதியின் ஒரு அறிவிப்பில்,

'எவருக்கு அல்லாஹ் பெண் பிள்ளைகளைக் கொடுத்து அவர்களால் (அப்பெற்றேர்) சோதிக்கப்படும் போது அதை பொறுத்துக் கொண்டால் அப்பெண் பிள்ளைகள் அவர்களுக்கு நரகத்தின் திரையாக இருப்பார்கள்'
மேலும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்: ஒரு ஏழைப் பெண் இரண்டு பெண் பிள்ளைகளுடன் என்னிடத்தில் வந்தாள். அவர்களுக்கு மூன்று பேரீத்தம் பழத்தை நான் உண்ணக் கொடுத்த போது இரண்டு பிள்ளைகளுக்கும் அத்தாய் ஒவ்வென்றாக கொடுத்தாள். (தாய்) மூன்றாவதை உண்ண தனது வாயின் பால் உயர்திய போது அதனையும் அவ்விரு பிள்ளைகளும் கேட்டார்கள், அதை இரு பகுதியாக ஆக்கி இருவருக்கும் கொடுத்து விட்டாள். இது என்னை பெரிதும் ஆச்சரியப்படுத்தியது. இச்செய்தியை நபிகளாரிடத்தில் நான் சொன்ன போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நிச்சயமாக 'அப்பெண்ணுக்கு சுவர்க்கம் கடமையாகிவிட்டது. அப்பெண் பிள்ளைகள் மூலமாக (அத்தாய்) நரகத்திலிருந்து விடுதலை பெற்று விட்டாள் எனறார்கள்.' (ஆதாரம் முஸ்லிம்).

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் 'யார் ஒருவர் இரண்டு அடிமைப் பெண்களை அவர்கள் பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கின்றார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று, தனது இரண்டு விரல்களையும் ஒன்றாக இணைத்துக் காட்டினார்கள' அறிவிப்பவர் (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு,ஆதாரம் முஸ்லிம்).

இமாம் திர்மிதிக்குரிய ஓர் அறிவிப்பில்' எவரொருவர் இரண்டு அடிமைப் பெண்களை பக்குவம் அடையும் வரை பாதுகாக்து பராமரிக்கிறார்களோ அவரும் நானும் சுவர்க்கத்தில் இப்படி என்று தனது ஆட்காட்டி விரலையும், நடு விரலையும் ஒன்றாக சேர்த்து காட்டினார்கள்.' இதை இமாம் அல்பானி (ரஹ்) ஸஹீஹான தரத்தையுடைய ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.
'எவரொருவர் தனக்கு இரண்டு பிள்ளைகளிருந்து அவர்களுடன் நல்ல முறையில் நடந்து அவரும் (தந்தையும்) இரு பிள்ளைகளுடனும் அன்பாகப் பழகி பிள்ளைகளும் தந்தையுடன் அன்பாகப் பழகினால் அவ்விரு பெண் பிள்ளைகளும் அவரை சுவர்க்கத்திலே நுழைவித்து விடுவார்கள்' என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, (இப்னு மாஜாஹ், ஹாகிம்,) இமாம் முன்திர் அவர்கள் ஸஹீஹ் என்கிறார்கள்.

'எவருக்கு மூன்று பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லது இரண்டு பிள்ளைகளோ அல்லது இரண்டு சகோதரிகளோ இருந்து அவர்களுடன் அன்புடன் நடந்தால் அந்த பெண்பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் அம்மனிதரை சுவர்க்கத்தில் சேர்த்து விடுகிறான்'. (அறிவிப்பவர்: அபூஸஈதுல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, (ஆதாரம் திர்;மிதி). இதை இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஸஹீஹ் என்கிறார்கள். '

'எவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் இருந்து அவர்களை அன்பு காட்டி அடைக்கலம் கொடுத்து பொறுப்புடன் நடத்துவாரோ அவருக்கு சுவர்க்கம் வாஜிபாகி விட்டது' என்று நபிகளார் சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் இரண்டு பெண் மக்கள் இருந்தாலுமா? ஆம் இரண்டு இருந்தாலும் என்றார்கள் தோழர்கள கேட்டார்கள் ஒரு பிள்ளை இருந்தாலும் என்று சிலர் கூறுகிறார்களே! என்ற உடன் ஆம் ஒன்று இருந்தாலும் அவருக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்றார்கள் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அஹ்மத். இதை இமாம் அல்பானி ரஹ்மதுல்லாஹி அலைஹி இன்னும் சிலர் ஸஹீஹ் என்கின்றார்கள்.
எனது அன்புக் கணவரே! பெண் பிள்ளைகள் அல்லாஹ்வின் அருளும், அவனது பரிசுப் பொருளுமாகும் என்பதை நீங்கள் அறிய மாட்டீரா? உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் உங்களை சுவர்க்கத்திலே நுழைவித்து நரகத்திலிருந்தும் தூரமாக்கி விடுவார்கள் என்று.அவர்கள் தான் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சுவர்க்கத்திலே உங்களை சேர்ப்பித்து அவர்களுக்கும், உங்களுக்கும் இரு விரல் இடை வெளிதான் இருக்கும் என்றளவுக்கு பதவிகளை உயர்த்துவார்கள் என்ற செய்தி உங்களுக்கு தெரியாதா?

கொஞ்சம் சிந்தியுங்கள்! எமது பிள்ளைகளின் பிஞ்சு உள்ளத்தை எவ்வளவு அதில் இரக்கம் நிரம்பியுள்ளது! எவ்வளவு கள்ளங் கபடமற்ற தூய்மையான மனது!!?

இதை இன்னும் இளகுவாக நீங்கள் புரிந்து கொள்வதாயின், நீங்கள் நோய் வாய்ப்பட்டு கட்டில் படுக்கையாக கிடந்த போது எவ்வளவு அவர்கள் கண்ணீர் வடித்தார்கள்?

சிந்தித்தீர்களா?

உங்களது தேவைகளையும் நிறைவு செய்து, உங்களுக்கு எவ்வளவு அழகாக பணிவிடை செய்தார்கள்? என்பதை.

வீட்டுப் பணிகளில் எனக்கு எப்படி பக்க பலமாக உதவுகிறார்கள்? என்று நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா?

அவர்களது கல்வித் திறமையையும், அவர்களது வெட்க உணர்வையும் ஹிஜாப் அணிவதில் அவர்களது ஆர்வத்தையும் பார்த்தீர்களா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty Re: பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 23:13

உங்களுக்கு எவ்வளவு வெட்க்கப்பட்டு அவர்கள் வழங்கும் மரியாதையைப் பார்க்க வில்லையா?
எனது அன்புக் கணவரே! இந்த நேரத்திலே பெண் பிள்ளைகள் விடயத்தில் முன்னோர்கள் (ஸலபுஸ்ஸாலிஹீன்) என்ன கூறி இருக்கிறார்கள் என்பதை ஞாபகமூட்ட விரும்புகிறேன.

வாதிலா பின் அஸ்க்கஃ என்ற நபித் தோழர் சொன்னார் 'யார் ஆண்களைவிட பெண்களை முதல் கரை சேர்க்கிறார்களோ அல்லாஹ் அவர்களுக்கு பெண்களை முதல் கொடுப்பான்

ஸாலிஹ் பின் அஹ்மத் பின் ஹன்பல் தனக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்தால் சொல்லுவார்கள் 'நபிமார்களில் அதிகமானவர்கள் பெண் பிள்ளைக்குத் தந்தையாக இருந்தார்கள்.

யாஃகூப் பின் புக்த்தான் (ரஹ்) கூறுகிறார்கள் : 'எனக்கு ஏழு பெண் பிள்ளைகள் பிறந்தார்கள். எனக்கு (என் மனைவிக்கு) ஒவ்வொரு முறையும் பெண் பிள்ளை பிறக்கும் போது என்னிடத்தில் அஹ்மத் இப்னு ஹன்பல் வந்து கூறுவார்கள், 'யுஸுபின் தந்தையே! நபிமார்களில் அதிகமானவர்கள் பெண் பிள்ளைக்குத் தான் தந்தையாக இருந்தார்கள்'. நான் எதிர் பாராத சிறப்புகளெல்லாம் பெண் பிள்ளைகள் விடயத்தில் அடைந்தேன.

முஹமத் பின் ஐஃபர் என்பவர் கூறும் போது, 'பெண் பிள்ளைகள் (அல்ஹஸனாத்து) நன்மைகள்யை சம்பாதிக்க வைக்கிறவர்கள் என்றும் ஆண் மக்கள் அருள்கள் (நிஃமத்) என்றும்
அதாவது பெண் மக்கள அல் ஹஸனாத்தும் ஆண்மக்கள் அல்லாஹ் இடத்தில் கேள்வி கணக்குரியவர்கள் ( நிஃமத்துக்கள்) என்றும் சொன்னார்கள்.

ஓரு காட்டரபிப் பெண் தானொரு பிள்ளை பெற்ற போது இப்படிப் பாடினாள்:

ஏன் எனக்கோர் அடிமை இல்லை

எனது வீடு பெருக்கி எனக்கு தனிமை போக்குவாள்

எனக்கு தலை வாந்து முடிசூட்டுவாள்

எனது முந்தானையை தரி செய்வாள்

அவளுக்கு எட்டு வயதாகும் போது

அவளை வலகரம் பிடித்து நான் கொடுப்பேன்

அவளுக்கு மர்வானையோ அல்லது முஅவியாவையோ மணம்முடித்து நான் கொடுப்பேன்

மதிக்க முடியா மஹர்தொகையை அவள் பெறுவாள்.

இன்னொருவர் பாடும்போது:

என் பிள்ளை நான் நுகரும் ரோஸா மலராகும்;

நானும் அவள் அன்னையும் அவளுக்கே அர்ப்பணம்

ழூலம் ஆன் பின் அவ்ஸ் என்பவர் தனக்கு எட்டுப் பெண் பிள்ளைகள் என்றும் ஆண் பிள்ளைகளை விட அவர்கள் தனக்கு உவப்புக்குரியவர்கள் என்றார்கள்.

ஒரு கவிஞன் ஒருவருக்கு பெண் பிள்ளை பிறந்த போது,

அப்பெண் பிள்ளை மூலம் அல்லாஹ் உங்களுக்கு (பரக்கத்) அருள் செய்தான். அப்பெண்ணை (அல்லாஹ்) உங்களுக்கு அழகு படுத்திக் கொடுத்தான்.(அல்லாஹ்). அதிக நன்மையை அவர்கள் மூலம் ஏற்படுத்தினான். அவர்களை வெறுத்து விடாதீர்கள் அவர்கள் (எதிர்காலத) தாய்மார்கள். உங்கள் சகோதரிகள். அவர்கள் தான் சாச்சி(மார்)கள்; அவர்கள் மாமி(மார்)கள்; அவர்கள் தான் (மறுமையின்) நிரந்தர நல்லமல்கள்; ஒரு சுதந்திர மனிதன் அவனது பல சந்தோஷங்களின் பின் நிம்மதி இழந்து விடுகிறான். ஒருஅடிமை பல இன்னலுக்குப் பின் வாழ்க்கையில் நிம்மதி அடைகிறான்.

இறுதியாக எனது அன்பான கணவருக்கு நீங்கள் அல்லாஹ்வின் அருளில் இருந்து தூரமாவதை விட்டும் எச்சரிக்கை செய்கிறேன். மாறாக அல்லாஹ்வின் பால் ஒதுங்கி விடுமாறு கேட்கிறேன். அவனது அன்பின் பால் சாய்ந்துவிடுங்கள். அல்லாஹ்விடம் அஞ்சிக் கெஞ்சி துஆ கேடபவர்களின் துஆவை கேட்கவும் உங்களது துஆவுக்கு அல்லாஹ் பதில் அளிப்பான். நீங்கள் நம்பிக்கை இழந்திருக்கும் அவனது அருளில் உங்களுக்கு அருள் புரிவான். அவன் கூறுகிறான்,

(மேலும் (நபீயே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக,) நிச்சயமாக நான் , (வர்களுக்கு ) மிக ச்சமீபமாகவே இருக்கிறேன். அழைப்பவரின் அழைப்புக்கு- அவர் என்னை அழைத்தால் நான் பதில் அழிப்பேன்., ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் எனக்கு பதில் அளிக்கவும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும்.(அல்பகரா,186)

எல்லாம் வல்ல அல்லாஹ் ஸாலிஹான பிள்ளைகளை அருளி, பெண் பிள்ளைகள் மூலமாக அல்லாஹ் நமக்கு கண் குளிர்ச்சியை தருவானாக!

வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

இப்படிக்கு உங்களது இஃலாஸான மனைவி.

பின் குறிப்பு : ஆண், பெண் குழந்தை உருவாகுவதற்கு காரணம் ஆணின் உயிரணுவே! பெண்ணின் சினை முட்டையல்ல! எனவே ஒரு பெண் பெண் குழந்தையைப் பெற்றெடுக்க அவளுடைய கணவனே காரணமாயிருக்க மனைவியை குறை கூறுவது அறவீனமன்றோ!

'Jazaakallaahu khairan' மௌலவி அஸ்ஹர் ஸீலானி, சுவனத் தென்றல் இணையம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty Re: பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by Atchaya Wed 6 Jul 2011 - 4:01

பெண்களே இவ்வுலகின் கண்கள். ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty Re: பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 7:09

சரியாகச்சொன்னீர்கள் ஐயா

நன்றி கட்டுரைப்பகிர்வுக்கு நண்பன் :];:


பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்பிள்ளை என்றால் இளக்காரமா? Empty Re: பெண்பிள்ளை என்றால் இளக்காரமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum