சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

உலகின் முதலாவது பெண் பிரதமர்! Khan11

உலகின் முதலாவது பெண் பிரதமர்!

4 posters

Go down

உலகின் முதலாவது பெண் பிரதமர்! Empty உலகின் முதலாவது பெண் பிரதமர்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 17:38

இலங்கைப் பெண்மணியான சிறிமாவோ பண்டாரநாயக்கா உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இவர் 1916 ஏப்ரல் 17 இல் ரத்தினபுரி நகரில் ஒரு செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தார். 1940 இல் இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவரான எஸ்.டப்ளிவ். ஆர்.டி. பண்டாரநாயக்காவை மணந்த பின் பொதுப் பணிகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்.


1956 -ல் இலங்கையின் பிரதமரான அவரது கணவர், 1959 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டு உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமைக்கு உரியவரானார்.

இவர் மிக நீண்ட காலமாக இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்துவந்துள்ளதோடு, 1960-65, 1970-77, 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் மூன்றுமுறை இலங்கையின் பிரதமராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய உள்நாட்டு அரசியல் கொள்கைகள் மிகத் தீவிரமானவை. தன் கணவரின் தீவிரத் தேசியவாதப் போக்கினை இவர் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தார். வங்கி, காப்புறுதி முதலான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் தேசியமயப்படுத்தினார். அதுவரை காலமும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கிவந்த பள்ளிக்கூடங்களை எல்லாம் 1961 இல் அரசுடைமையாக்கி, தேசிய பாடசாலைகளாக மாற்றியமைத்தார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் சரியாக ஒரு வருடத்தில் இவர், நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்நடத்தினார். இவர் தன்னுடைய கணவரின் வழியைப் பின்பற்றி ஆட்சி மொழியாக இருந்த ஆங்கிலத்தைப் புறந்தள்ளிவிட்டு சிங்கள மொழியை ஆட்சி மொழியாகப் பிரகடனம் செய்தார். இவருடைய இந்தத் தீர்மானம் இலங்கையின் சிறுபான்மைத் தமிழ்-முஸ்லிம் மக்களுடைய பெரும் அதிருப்திக்கு ஆளானது. அது மட்டுமன்றி, முதலாளித்துவப் பொருளாதார முறைமையை மறுதலித்து தேசிய உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் மூடிய பொருளாதார முறைமையினை அமுல்நடாத்தினார். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் நட்பை இழந்தார். அதே சமயம், சீனா, சோவியத் யூனியன் முதலான நாடுகளுடனான தனது நட்பை வளர்த்துக்கொண்டார்.

இவர் தனது அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பாகப் பல்வேறு கடும் விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர் கொண்டுள்ளார். எனினும், அவற்றையெல்லாம் கண்டு சற்றும் பின்னடையாத இரும்புப் பெண்மணியாக இவர் இருந்துவந்துள்ளார். அறிந்தோ அறியாமலோ இலங்கையில் சுமார் மூன்று தசாப்தத்துக்கும் மேலாக இடம்பெற்ற கோரமான இனவாத யுத்தத்துக்கான பின்புலத்தைக் கட்டமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்பது கசப்பான வரலாற்று உண்மையாகும். எனினும், எப்போதும் எல்லாவற்றுக்கும் வெளிநாடுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிராமல் இலங்கையின் தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி இலங்கையை ஒரு தன்னிறைவுள்ள நாடாக மாற்றுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் முழுமையான பயனைப் பெற்றுத்தருமுன் ஆட்சி மாறியமை துரதிருஷ்டவசமானதே. மிக நீண்டகாலம் இலங்கை அரசியலில் பங்குகொண்ட சிறிமா 2000, அக்டோபர் 10 ஆம் திகதி காலமானார்.

இலங்கை அரசியலில் ஒரு சகாப்தம் என்று கூறத்தக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரியான சிறிமாவோ பண்டார நாயக்காவின் மகளான சந்திரிக்கா குமாரனதுங்கவே பிற்காலத்தில் இலங்கையின் மூன்றாவது ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உலகின் முதலாவது பெண் பிரதமர்! Empty Re: உலகின் முதலாவது பெண் பிரதமர்!

Post by முனாஸ் சுலைமான் Tue 12 Jul 2011 - 17:54

இவருடைய உள்நாட்டு அரசியல் கொள்கைகள் மிகத் தீவிரமானவை. தன் கணவரின் தீவிரத் தேசியவாதப் போக்கினை இவர் தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தார். வங்கி, காப்புறுதி முதலான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளையும் தேசியமயப்படுத்தினார். அதுவரை காலமும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் இயங்கிவந்த பள்ளிக்கூடங்களை எல்லாம் 1961 இல் அரசுடைமையாக்கி, தேசிய பாடசாலைகளாக மாற்றியமைத்தார்.
இலங்கை அரசியலில் இதுவரை முஸ்லீங்களுக்கென்று ஒன்றுமில்லை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உலகின் முதலாவது பெண் பிரதமர்! Empty Re: உலகின் முதலாவது பெண் பிரதமர்!

Post by ஹம்னா Tue 12 Jul 2011 - 18:29

சிறந்த பதிவுக்கு நன்றி:!+: ##*


உலகின் முதலாவது பெண் பிரதமர்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உலகின் முதலாவது பெண் பிரதமர்! Empty Re: உலகின் முதலாவது பெண் பிரதமர்!

Post by kalainilaa Tue 12 Jul 2011 - 19:37

##* :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலகின் முதலாவது பெண் பிரதமர்! Empty Re: உலகின் முதலாவது பெண் பிரதமர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum