சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

விஞ்ஞானி சலீம் அலி Khan11

விஞ்ஞானி சலீம் அலி

2 posters

Go down

விஞ்ஞானி சலீம் அலி Empty விஞ்ஞானி சலீம் அலி

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 14:59

“காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடியதின் மூலம் பறவை இனங்களின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்திய மகாகவி பாரதி வாழ்ந்த சமகாலத்தில் பம்பாயில் வாழ்ந்த பறவையியல் ஆர்வலரான சலீம் அலி என்று அழைக்கப்பட்ட “சலீம் மொய்சுத்தன் அப்துல் அலி” என்பர், இந்திய பறவைகளை பற்றி செய்த ஆராய்ச்சிகளுக்காக மூன்று கவுரவ டாக்டர் பட்டங்களையும், இந்திய அரசின் உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதையும் பெற்றார்.

1896 - ஆம் ஆண்டு நவம்பர் 12 - ஆம் தேதி மும்பையில் ஒரு எளிய குடும்பத்தில் பத்தாவது மகனாகப் பிறந்தார். இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து தன் மாமாவால் வளர்க்கப்பட்டார்.

சலீம் அலி பதினோரு வயது சிறுவனாக இருந்தபோது தனக்கு அன்பளிப்பாக கிடைத்த விளையாட்டு துப்பாக்கியால் விந்தையாக தெரிந்த குருவி ஒன்றை சுட்டு வீழ்த்தினார். அதை உன்னிப்பாக கவனித்த போதும் அவரால் அதை இனம் காண முடியவில்லை. எனவே, அதை எடுத்துக்கொண்டு பம்பாயில் இயங்கிவந்த ‘பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்திற்குச் சென்றார். அப்பொழுது அச்சங்கத்தின் செயலராக இருந்த வால்டர் மல்லார்டு என்பவர் அது சாதாரணக் குருவி அல்ல என்றும், மஞ்சட் கழுத்துக் குருவி என்றும் விளக்கினார்.

அதைக் கேட்டு "அட! பறவையில் கூட இத்தனை ஜாதிகளா? " என்று வியந்த சலீம் அலி அன்றிலிருந்து பறவைகளின் பழக்கவழக்கங்கள், சுற்றுச் சூழல் இயல்புகள், நடவடிக்கைகள் பற்றி அறியும் ஆவல் கொண்டார். தொடர்ந்து பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்க ஊழியராகச் செயல்பட்டார்.

1913 - ஆம் ஆண்டு மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்து பம்பாய் தூய சவேரியார் கல்லூரியில் சேர்ந்தார். தொடர்ந்து படிப்பில் நாட்டம் இல்லாததாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேறு பணிகளில் ஈடுபடலானார்.

அப்போது அவரது மனம் பறவைகளைச் சுற்றியே சிறகடித்தது. பர்மா, மலேசியா ஆகிய இடங்களில் தென்பட்ட புதுப் புது விதமான பறவை மாதிரிகள், இறகுகள், தூவல்கள் ஆகியவற்றை சேகரிக்கத் துவங்கினார். பறவைகள் குறித்து முறையாக அறிந்து கொள்ள உரிய நூல்கள் இல்லாத காலம் அது. அதை நினைத்து வருந்திய சலீம் அலி பிறகு தாமே சேகரித்த மாதிரிகளைக் கொண்டு குறிப்புகளை உருவாக்கிக் கொண்டார்.

இவரது ஆர்வத்தை உள் நாட்டில் எவரும் கண்டு கொள்ளாததால் ஜெர்மனியின் பெர்லினிலிருந்த உயிரியல் பேராசிரியர் எர்வின் ஸ்ட்ரெஸ்மான் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். பின் 1927 - ஆம் ஆண்டு தன்னுடன் பர்மிய பறவை இனங்கள் பலவற்றையும் எடுத்துக் கொண்டு பெர்லினுக்கு சென்றார். அங்கு சலீமின் ஆராய்ச்சிக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார் ஸ்ட்ரெஸ்மான்.

1930 - ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் 1932 - ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மற்றும் கொச்சி பறவைகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை “கேரளப் பறவைகள்” (The Birds of Kerala) என்ற அரிய நூலாக வெளியிட்டார். பின் இம்பீரியல் ஆய்வு குழுமத்திற்கு (Imperial Agricultural Research Council) பறவையியல் ஆய்வுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார்.

வெளிநாட்டுப் பறவைகள் குறித்து ஆராய்வதில் ஆர்வம் காட்டாத அவர் நம் நாட்டு பறவைகள் குறித்து அறிந்துக் கொள்ளவே நிறைய இருக்கிறது என்று கருதினார். நீண்ட காலம் ‘பம்பாய் வரலாற்று சங்கத் தலைவராக பணிபுரிந்த போது பறவையியலுக்காக (Ornithology) பத்திரிகை ஒன்றை நடத்தினார். 1942 - ஆம் ஆண்டு “இந்தியப் பறவைகள்” (The Book of Indian Birds) என்னும் அரிய நூலை எழுதி வெளியிட்டார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பின் பண்டித ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட நட்புறவின் தொடர்ச்சியாக தேசிய அளவில் பறவைகள் சரணாலயங்கள் அமைக்க இவர் ஆற்றியத் தொண்டு மகத்தானது.

“கண்டுப்பிடிப்பு என்பது வெறும் புதுமைகள் நிகழ்த்துவதில் இல்லை. அந்தத் துறை பற்றி முற்றிலும் அறிந்து கொள்ள முனையும் எத்தனிப்பே, முக்கியமானது” என்பது கண்டுப்பிடிப்பைக் குறித்து இவர் கொண்டிருந்த கொள்கை ஆகும்.

1948 - ஆம் ஆண்டு பேராசிரியர் எஸ். தில்லான் ரிப்லீயுடன் இணைந்து சர்வதேச அளவிலான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தீட்டினார்.

1955 - ஆம் ஆண்டு இவரது சிங்கப்பூர் நண்பர் லோக் தாவோவின் பொருள் உதவியுடன் மேற்கொண்ட ஆய்வின் பயனாக “சிக்கிம் பறவைகள்” (Birds of Sikim) என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1974 - ஆம் ஆண்டு “இந்தியா மற்றும் பாகிஸ்தான் பறவைகள் பற்றிய கையேடு” (Handbook of Birds of India and Pakistan) என்ற பத்து மாபெருந்தொகுதிகள் இவரது சீரிய முயற்சியால் நூலாக வெளிவந்தது.

தன்னார்வத்தினால் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய இவருக்கு மேற்கூறிய விருதுகளும், ஜே. பால் கெயிட்டி வனவிலங்கு பாதுகாப்பு விருதும், தேசிய பறவை பேராசிரியர் விருது எனப் பல பாராட்டுகள் தேடி வந்தன.

1987 - ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த இந்திய மாமேதை இவ்வுலகை விட்டு பிரிந்தார். ஆனால் “ஒரு குருவியின் வீழ்வு” (The fall of a saprrow) என்ற அவரின் சுயசரிதை மூலம் இந்திய இளைஞர்களுக்கு பல அரிய உண்மைகளைக் கூறிவருகிறார்.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விஞ்ஞானி சலீம் அலி Empty Re: விஞ்ஞானி சலீம் அலி

Post by kalainilaa Fri 15 Jul 2011 - 15:50

##* அரிய செய்திகளை அறிய தந்த தோழருக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum