சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

விஞ்ஞானி ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத் Khan11

விஞ்ஞானி ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத்

Go down

விஞ்ஞானி ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத் Empty விஞ்ஞானி ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எட்வர்ட் லெமாத்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 15:17

லெமாத்ரே 1894 - ஆம் ஆண்டு ஜூலை 17 - ஆம் நாள் பெல்ஜியம் நாட்டில் பிறந்தார். தனது 17 - வது வயதில் லிவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் மேற்கல்வியை ஆரம்பித்தார். 1914 - ல் முதல் உலகப்போர் ஏற்பட்டது. இதனால், படிப்பை நிறுத்திவிட்டு பெல்ஜியம் ராணுவத்தில் சேர்ந்தார். போர் முடிவுற்றபோது ராணுவம் இவருக்கு சிலுவை அடையாளமிட்ட வெற்றிப் பரிசை வழங்கியது.

போர் முடிவுற்றபின் குருமடத்தில் சேர்ந்து பாதிரியார் ஆனார். 1923 காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று வானவியல் மாணவராகச் சேர்ந்தார். இந்த சமயத்தில் இங்கிலாந்தின் மிகப் பெரிய வானவியல் அறிஞரான ஆர்தர் எடிங்டன் உடன் சேர்ந்து பணியாற்றினார். அப்போது பிரபஞ்சத்தின் அமைப்பு, பிறப்பு பற்றியும், எண்களைப் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். ஹார்வர்ட் கல்லூரி வானவியல் கூடத்தில் ஆய்வு செய்து வந்த ஹார்லோ சாப்ளி (Harlow Shapley) உடன் ஆய்வுகளை மேற்கொண்டார். அங்கு நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் காணும் நெபுலா (Nebula) என்னும் முகில் போன்ற நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

1925 - ல் பெல்ஜியத்திற்கு திரும்பி வந்து லுவான் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றினார். இந்த சமயத்தில் தாம் ஆராய்ந்தவற்றை 1927 -ல் புத்தகமாக வெளியிட்டார். நெபுலாக்கள் விரிவடைவதை மையமாக வைத்து எழுதியிருந்தார். இது பிரபஞ்சம் விரிவடைதலை பற்றிய புதிய சிந்தனையை உலகுக்கு அளித்தது.

பிறந்த நாள் என்பது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் இருப்பது நமக்கு தெரியும். இந்த பிரபஞ்சம் ஒரு நாள் தோன்றியிருக்க வேண்டும். அதற்கும் ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகிறோம். இந்த எண்ணம் ஒரு கத்தோலிக்க பாதிரியாருக்கு ஏற்பட்டது. அவர் அதையே எண்ணி எண்ணி புதிய கொள்கையை உருவாக்கினார். (Big Bang Theory)

அறிவியல் மேதை ஐன்ஸ்டின் லெமாத்ரேயின் கணிதவியல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பாராட்டினார். ஆர்தர் எட்டிங்டன் 1930 - ல் இந்த புத்தகத்தை இங்கிலாந்து அரசின் வானவியல் சங்க மாதாந்திர அறிக்கையில் பாராட்டி எழுதினார். பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய அறிவுப்பூர்வமான தீர்வை அளிப்பதாக கூறினார். இயற்கையில் ஏற்பட்ட அணுவெடிப்பாக பிரபஞ்சம் தோன்றியது என்ற கருத்தை லெமாத்ரே பெருவெடிப்பு கொள்கையாக வெளியிட்டார். சர். பிரடரிக் ஹாயில் பிரபஞ்சம் முட்டையிலிருந்து பிறந்தது என்று கிண்டல் செய்தார். ஏனெனில் அவரது கொள்கை வேறாக இருந்தது.

1934 - ல் இவருக்கு பெல்ஜியம் நாட்டில் விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படும் உயரிய பரிசு வழங்கப்பட்டது. 1960 - ல் போப் 23 வது அருளப்பர் (Pope John XXIII) இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் இவரை உறுப்பினராக நியமித்தார். உலக அளவில் பல்வேறு பரிசுகளையும் கௌரவங்களையும் பெற்றார். கணிதத்திலும் சிறந்து விளங்கினார். கணிப்பொறி முதன் முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டபோது, அதில் தனது கவனத்தைச் செலுத்தி அதிலும் சாதனைகள் புரிந்தார். இந்த பெரும் வெடிப்புக் கொள்கைகளை உலகுக்கு அளித்த லெமாத்ரே பாதிரியார் 1966 ஜூன் 20 - ஆம் தேதி காலமானார்.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum