சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

விஞ்ஞானி டைக்கோ பிராஹே Khan11

விஞ்ஞானி டைக்கோ பிராஹே

Go down

விஞ்ஞானி டைக்கோ பிராஹே Empty விஞ்ஞானி டைக்கோ பிராஹே

Post by நேசமுடன் ஹாசிம் Fri 15 Jul 2011 - 15:59

பதினாறாம் நூற்றாண்டு டென்மார்க் தேசத்தின் கவர்னராக இருந்தவர் பிராஹே. இவர் தனது தம்பியான ஜொயர்கென் என்பவருக்கு 1540 - ல் ஒரு வாக்கு கொடுத்திருந்தார். அது ஒரு விசித்திரமான வாக்குறுதி. தனக்கு ஒரு மகன் பிறந்தால் அவனை தம்பிக்கு தத்துத்தருவேன் என்பது அது. 1546 - ல் பிராஹேக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பிராஹே வாக்குறுதியை மறந்துவிட்டார். 1550 - ல் இரண்டாவது ஒரு மகன் பிறந்தான். டென்மார்க் மன்னர் இரண்டாம் பெர்டினாண்டின் நீச்சல் பயிற்சியாளராக இருந்த பிராஹே தம்பி ஜொயர்கென் அண்ணனின் முதல் குழந்தையைக் கடத்தி கொண்டு போய்விட்டான். கடத்தப்பட்ட அந்த குழந்தைதான் டைக்கோ பிராஹே (Tycho Brahe).

டைக்கோவிற்கு தனிமை நிறைந்த வாழ்வு. கல்வி கற்க வாய்ப்பு கிடைக்கவில்லை. எட்டு வயதிருக்கும்போது வளர்ப்புத்தந்தை ஜொயர்கென் அரசரை குளிர்ந்த கடலில் குதித்து காப்பாற்றியபோது ஏற்பட்ட நிமோனியா நோய்க்கு பலியாகி போனார். ஜொயர்கென் செல்வந்தனாய் இருந்ததால் டைக்கோவின் உயர்வுக்கு அச்செல்வம் பயன்பட்டது. தனிமையில் பெரும் பொழுதை களிக்க வேண்டியதிருந்தபோது டைக்கோ வானத்து கோள்களையும், நட்சத்திரங்களையும் நண்பனாக மாற்றிக் கொண்டார். டைக்கோவுக்கு ஒரு பழக்கம் இருந்தது. வானத்தின் மாற்றங்களை, கோள்களின் அசைவுகளை குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம். 1563 - ல் சனி கிரகமும், வியாழன் கிரகமும் அருகே காட்சியளித்த அதிசய நிகழ்வை பதிவு செய்தார்.

டைக்கோ ஆசைப்பட்டு படித்தது வழக்கறிஞர் தொழிலுக்கு. ஆனாலும், அவருக்கு வானவியல் மீது தீராத ஈடுபாடு இருந்தது.

1562 - ல் டைக்கோவின் வானவியல் ஆய்வு பயணம் துவங்கியது. 1576 வரை பயணம் தொடர்ந்தது. ஜெர்மனி சென்று அங்குள்ள லிபிளிக்‚(LEIPZIG). விட்டன்பெர்க் (Witten berg) மற்றும் ரோஸ்டாக் பல்கலைக்கழகங்களில் படித்தார். அங்கேயே பணிபுரிந்தார். பேஸ்லி (Basle) அக்ஸ்பெர்க் (Augsburg) மற்றும் கேசல் (Kassel) போன்ற அறிஞர்களோடு இணைந்து பணிபுரிந்தார். 1566 - ல் ரோஸ்டாக்கில் ஒரு விருந்தில் கலந்து கொண்ட போது நடந்த விபத்தில் தனது மூக்கை உடைத்துக் கொண்டார். எனவே, செயற்கை மூக்கைப் பொருத்திக் கொண்டார்.

1572 - ஆம் வருடம் நவம்பர் மாதம் 11 - ஆம் நாள் டைக்கோவின் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். நள்ளிரவு நேரம் மொட்டை மாடிக்குச் சென்ற டைக்கோ வெகுநேரம் ஆகியும் கீழே இறங்கவில்லையே என்று பயந்துபோய் அவரது வேலையாள் தயங்கியபடியே மாடிக்கு வந்தான் அங்கே டைக்கோ ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தார். அதுவரை யாரும் கண்டிராத அதிசயத்தைக் கண்டு டைக்கோ துள்ளி குதித்துக் கொண்டிருந்தார். ஆம்! அன்றுதான் சூப்பர் நோவா என்று அழைக்கப்படும் நட்சத்திரத்தை டைக்கோ முதன்முதல் கண்டு களிப்படைந்தார். வெள்ளியை விடவும் அதிக ஒளியுள்ள அந்த நட்சத்திரம் பூமியை விட்டு வெகு தொலைவில் எங்கோ இருக்க வேண்டும் என்று டைக்கோ எண்ணினார்.

டைக்கோ தனது புதிய நட்சத்திரக் (STELLA NOVA) கண்டுபிடிப்பை 1573 - ல் புத்தகமாக வெளியிட்டார். அது அவருக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. அரிஸ்டாட்டிலின் மாற்றமற்ற நிலையான வானம் கொள்கையை இப்புத்தகம் தகர்த்தெறிந்தது. டைக்கோ உற்சாகத்தோடு பணிபுரிந்தார். பல்கலைக்கழகங்கள் அவரை உரையாற்ற அழைத்தன.

டைக்கோ தனது ஆராய்ச்சியைத் தொடர நிலையான வானவியல் ஆய்வகத்தை (Observatory) அமைக்க எண்ணினார். டென்மார்க்கின் மன்னரான இரண்டாம் ஃபிரடரிக் (Fredrik-II) அவருக்கு உதவ முன்வந்தார். வென் (Hven) என்கின்ற குட்டித்தீவை டைக்கோவுக்கு அளித்து அதில் ஆய்வகத்தை அமைக்க பொருள் உதவியும் செய்தார். 8-8-1576 - ல் டைக்கோ பிரமாண்டமான ஒரு ஆய்வகத்தை அமைத்தார். அது யுரானிபோர்க் (Uraniborg) என்று அழைக்கப்பட்டது. தனிமையான தீவு என்பதால் டைக்கோவின் ஆய்வுக்கு அது ஏற்ற இடமாக இருந்தது. எண்ணற்ற உதவியாளர்களும், மாணவர்களும் அவருக்குக் கிடைத்தார்கள். அவரது ஆய்வு வெகு விமர்சையாக நடந்தது. 12 வருடங்கள் அவரது பணி தங்குதடையின்றி நடந்தது. 1588 - ல் அவருக்கு சோதனை ஆரம்பித்தது.

ஆதரித்து வந்த மன்னர் இரண்டாம் ஃபிரடரிக் மரணமடையவே, நான்காவது கிறிஸ்டியன் (Christian-IV) டென்மார்க்கின் புதியமன்னராக 1597 - ல் பதவி ஏற்றார். டைக்கோவுக்கு இவர் கொடுத்த தொல்லைக்கு அளவேயில்லை. எனவே, டைக்கோ வென் தீவைவிட்டு ஓடவேண்டி வந்தது. பல இடங்களுக்கு ஓடினார். இறுதியில் 1599 - ல் ப்ராக் (Prog) நகருக்கு அருகில் குடியேறினார். அங்கு வானவியல் பார்வைக் கூடத்தை அமைத்துக் கொண்டார். மறுபடியும் துவக்கத்திலிருந்து தனது பணியை ஆரம்பிக்க வேண்டியது வந்தது. அப்போது 1600 - ல் வானவியல் ஆய்வாளர் டைக்கோவுக்கு ஒரு ஆத்மார்த்த சீடன் கிடைத்தான்.

கோள்களின் பாதையைக் கண்டறிய பெரும் முயற்சி செய்த டைக்கோ ஒரு வருடத்திற்கு 365 1/4 நாட்கள் என்பதை முதல்முதலாக கண்டறிந்து வெளியிட்டார். அவரின் கண்டுபிடிப்புகளைவிட மேலானது அவர் தனக்கு உதவியாளராக பிற்காலத்தில் வானவியலின் பேரரசனாக விளங்கிய ஜொகன்ஸ் கெப்ளர் (Johannes Kepler) ஐ நியமித்தது தான். தளர்ந்து போயிருந்த டைக்கோ தனது ஆத்மார்த்த சீடனிடமே தனது அனைத்து பொறுப்புகளையும், ஆய்வுக் கூடத்தையும் ஒப்படைத்துவிட்டு மறு ஆண்டே (1601 - ல்) காலமானார்.

இவர் எழுதிய (De Magnete) காந்தத்தின் மேல் என்ற நூல் 1600 - ல் வெளியான போது இவர் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவியது. இவரது முடிவுபெறாத கண்டுபிடிப்புகள் 1651 - ல் மாற்று உலகத்தின் புதிய தத்துவம் என்ற பெயரில் புத்தகமாக இவரது சகோதரர் முறைகொண்ட ஒருவரால் வெளியிடப்பட்டது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum