Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
விஞ்ஞானி எட்வர்ட் வால்டர் மௌண்டர்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
விஞ்ஞானி எட்வர்ட் வால்டர் மௌண்டர்
எட்வர்ட் வால்டர் மௌண்டர் (Edword walter maunder) சூரியனின் மேம்பட்ட பணியை ஆய்வு செய்வதில் புகழ் பெற்றவர். சூரியனின் மேற்பகுதியில் கறுப்பு நிழல் எனப்படும் &lsquoBlack dot’ இருப்பதை ஆய்வு செய்தவர். சிலகாலம் கருநிழல் சூரியனில் காணப்படவில்லை என்ற உண்மையை எடுத்துக் கூறியவர். அக்காலம் இவர் பெயராலே ‘மௌண்டர் மினிமம்’ (Maunder minimum) என்று அழைக்கப்படுகிறது.
மௌண்டர் 12-4-1851 - ல் இங்கிலாந்திலுள்ள லண்டன் நகரில் பிறந்தார். வெஸ்லியன் சங்கத்தின் மந்திரியாக இவரது தந்தை விளங்கினார். இவருக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. லண்டனிலுள்ள அரசர் கல்லூரியில் பயின்றாலும் இவர் ஒரு பட்டதாரி ஆகவில்லை. ஆனாலும், இவர் படிக்க நிதி உதவி செய்த லண்டன் வங்கி இவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டது. மௌண்டருக்கு இதில் விருப்பம் இல்லை. 1873 - ல் மௌண்டர் ராயல் அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் அரசு வானவியல் ஆய்வுக் கூடத்தில் வண்ணப்பட்டை ஆய்வுக் கருவி உதவியாளராக (Spectroscopic Assistant) பணியில் சேர்ந்துக் கொண்டார். இதுவே அவருக்கு ஏற்றப் பணியாக இருந்தது.
வானவியல் நிலையத்தில் மௌண்டருக்கு சூரியனை படமெடுப்பதும், சூரியனிலுள்ள கறுப்பு நிழல் புள்ளிகளை அளவெடுப்பதும், சூரியன் மையக் கோட்டின் மேலும் கீழும் அவை வேறுபடுவதைக் குறிப்பதும் பணியாக இருந்தது. 11 வருடங்கள் கொண்ட சூரிய சுற்று காலம் முழுமைக்கும் மௌண்டர் சூரியனைக் கண்காணிக்க பணிக்கப்பட்டிருந்தார்.
இவர் பணியாற்றிய ஆய்வகத்தில் 1890 ல் ஆனி ஸ்காட் டில் ரசல் (Annie Scot Dill Russell) என்பவர் பணியில் சேர்ந்தார். இவர் காம்பிரிட்ஜில் ஜிர்ட்டன் கல்லூரியில் கணிதம் கற்றவர். ‘பெண் கம்யூட்டர்’ என்று அழைக்கப்படும் விதத்தில் இவரது பணியிருந்தது. இவர் மௌண்டருடன் இணைந்து பணியாற்றினார்.
மௌண்டருக்கு 1875 - ல் திருமணமாகி ஐந்து குழந்தைகளும் இருந்தனர். ஆனாலும், உடன் பணியாற்றிய ஆனியை 1895 - ல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து பணிபுரிந்து சூரியனின் கறுப்பு நிழல்கள் வண்ணத்து பூச்சி வடிவில் இருப்பதைக் கண்டுபிடித்து 1904 - ல் அதனை வெளியிட்டார்.
ஆய்வகத்திலிருந்த பழைய ஆவணங்களை எடுத்து ஆராய்ந்தபோது 1400 முதல் 1510 வரை சூரியனில் கருநிழல் புள்ளிகள் மிகக்குறைவாக இருப்பதைக் கண்டுபிடித்தார். அவரது கண்டுபிடிப்பு மௌண்டர் மினிமம் என்று அவர் பெயராலே தற்போது வழங்கப்படுகிறது.
மௌண்டர் செவ்வாய் கிரகத்தை பற்றியும் ஆய்வு செய்தார். வெப்பம் இல்லாததாலும், சமநிலையற்ற காற்று உள்ளதாலும் மனிதன் பூமியைபோல் அங்கு வாழ முடியாது என்று தெரிவித்தார். அவரது எல்லா ஆய்வையும் அவரது துணைவியார் ஆனி ஸ்காட் டிலுடன் சேர்ந்தே செய்தார்.
மௌண்டர் எல்லா வானவியல் ஆய்வாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட பிரிட்டீஸ் வானியல் ஆய்வாளர் சங்கத்தைத் (British Astronomical Association) துவக்கி நடத்தினார். வானவியலில் ஆர்வமுள்ள அனைவரும் இதில் சேர விரும்பினர். குறிப்பாக, தாழ்ந்த நிலையில் உள்ளவர்களும், பெண்களும் இதில் உறுப்பினராக வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தார். 21-3-1928 - ல் இயற்கையெய்தினார்.
இவரது காலத்துக்குப் பிறகு அவரது மனைவி ஆனி மௌண்டர் 1947 வரை இந்தச் சங்கத்தை நடத்தினார். மௌண்டரின் அண்ணன் தாமஸ் பிரைட் மௌண்டர் (1841 - 1935) இந்த சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவராக இருந்ததோடு ஆரம்பம் முதல் 38 ஆண்டுகள் அதன் செயலாளராக இருந்தார். மௌண்டர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|