சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 2:49 pm

» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm

» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am

» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm

கடலில் மேயும் பசுக்கள். Khan11

கடலில் மேயும் பசுக்கள்.

Go down

கடலில் மேயும் பசுக்கள். Empty கடலில் மேயும் பசுக்கள்.

Post by ஹம்னா Sun Dec 26, 2010 9:52 pm

கடலில் மேயும் பசுக்கள். New-seacow_10444_600x450
டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை பற்றி தெரிந்துள்ள நாம், தமிழக கடற்பகுதியில் வாழும் மற்றுமொரு அரிய கடல்வாழ் பாலூட்டியான கடல் பசுக்களை பற்றி அதிகம் அறிந்துகொள்ளவில்லை என்றே சொல்லலாம். இதற்கு காரணம் டால்பின்கள் மற்றும் திமிங்கலங்களை போல இல்லாமல் கடல் பசுக்கள் மனிதர்களுக்கு சாதாரணமாக தென்படுவதில்லை. ஆங்கிலத்தில் டுகோங் (ஈஞிகீச்ஙூகீ) என்று அழைக்கபடும். இவை தமிழகத்தில் கோடியக்கரை முதல் தூத்துக்குடி வரை உள்ள ஆழம் குறைந்த கடல் பகுதியில் காணபடுகின்றன. மீனவர்கள் இதை `ஆவுரியா’ என்று அழைக்கின்றார்கள். இவை வேகமாக நீந்தத் தெரியாத அப்பாவிகள்.



கடல் பசுக்களுக்கும்- டால்பின்களுக்கு இடையே உள்ள முக்கிய வித்தியாசம் முதுகு துடுப்பாகும். டால்பின்களுக்கு இருப்பதுபோல் கடல் பசுக்களுக்கு முதுகு துடுப்புகள் இல்லை. இவை கடலின் மேற்பரப்பில் டால்பின்களை போல் டைவ் அடிபதில்லை. மூக்கை மட்டும் வெளியே நீட்டி காற்றை சுவாசிக்கின்றன. எனவே எளிதில் மீனவர்களின் கண்களுக்கு கூட கடல் பசுக்கள் தட்டுபடுவதில்லை. குணத்திலும் டால்பின்களை விட மிகவும் சாதுவான தன்மை கொண்டவை. இவற்றின் உடல் பழுப்பு வண்ணத்தில், சுமார் மூன்று மீட்டர் நீளம் வரை இருக்கும். உலகின் சுமார் 40-க்கும் மேற்பட்ட வெப்பமண்டல நாடுகளில் கடல் பசுக்கள் வாழ்வதாக ஆராய்ச்சி முலம் தெரியவந்துள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால், கடலில் இருக்கும் பாலூட்டி வகைகளிலேயே தாவரங்களை மட்டுமே உண்ணக்கூடிய முழு வெஜிடேரியன் கடல் பசுக்கள் தான்.


நம் ஊரில் மாடுகள் மேய்வது போல், கடல் பசுக்கள் கடல் அடியில் வளரும் புல்வகை களை மேய்ந்து கொண்டிருக்கும். குறிப்பாக, கடல் புற்களின் வேர்களில் அதிக அளவு ஊட்டச் சத்துக்கள் இருப்பதால், அவற்றை வேருடன் பிடுங்கி அப்படியே சாப்பிடுவதில் கடல் பசுக்கம் கில்லாடிகள். கடந்த வருடம், தாய்லாந்து கடற்பகுதியில் கடலுக்கு அடியில் பயணிக்கும்போது கடல் பசுக்கள் மேய்ந்த தடங்களை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது.
`நம் ஊரில் வயலில் மாடுமேய்ந்த தடத்தை பார்பதை போலவே இருகின்றதே’ என்று எண்ணி வியந்தேன். எனக்கு தாய்லாந்தில் உள்ள `திராங்’ என்ற ஊருக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆச்சரியமான செய்தி என்னவென்றால், அங்கு உள்ள நகரின் முக்கியமான பகுதியில், அரசியல் தலைவர்களுக்கு சிலை வைப்பது போல கடல்பசுக் களுக்கு சிலை வைக்கபட்டுள்ளது. அந்த நகரின் நினைவாக ஏதாவது பொருட்கள் வாங்க சென்றால் கடல்பசுக்களின் சிறிய பொம்மைகளையே விதவிதமாகத் தருகிறார்கள். அங்குள்ள மக்களிடம் கடல் பசுக்களை பற்றிய விழிப்புணர்வும், அவற்றை பாதுக்காக்க வேண்டும் என்ற எண்ணமும் நிறைய இருக்கிறது.

ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

கடலில் மேயும் பசுக்கள். Empty Re: கடலில் மேயும் பசுக்கள்.

Post by ஹம்னா Sun Dec 26, 2010 9:57 pm

கடல் பசுக்கள் மனிதர்களை போலவே நீண்ட ஆயுள் கொண்டவை. அவற்றின் பற்களில் உள்ள வளையங்களை கொண்டு வயதை கணிக்க முடியும். உதாரணமாக, ஒரு பெண் கடல் பசுவின் பல்லை ஆய்வு செய்தபோது, அதன் வயது 73 என்று தெரிந்திருக்கிறது. பத்து முதல் பதினைந்து வயதிற்கு பிறகே இவை குட்டி போடும் பருவத்தை அடைகின்றன. குட்டிகள் பொதுவாக 13 மாதங்கள் தாயின் வயிற்றில் வளர்கின்றன.


ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே போடும் கடல் பசுக்கள் அடுத்தடுத்த குட்டிகளை போட 3 முதல் 7 வருடம் வரை எடுத்து கொள்கின்றன. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கடல் பசுக்கம் வேகமாக தங்கள் இனத்தை பெருக்குவதில்லை. இந்த இயல்பான குணமே இவற்றின் அழிவுக்கும் காரணமாக அமைந்து விட்டது. சுற்றுசூழல் மாசுபாடு, வேட்டை யாடுதல் போன்ற மனித நடவடிக்கைகளால் வேகமாக அழிந்து வரும் கடல் பசுக்கள், அதற்கு ஈடான வேகத்தில் இனபெருக்கம் செய்வதில்லை. எனவே உலக இயற்கை வளங்களை பாதுகாக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு , கடல் பசுக்களை அழியும் தருவாயில் உள்ள விலங்குகளின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்திய அரசும் கடல் பசுக்களை வேட்டையாடுவதையோ, உணவுக்காக அதன் இறைச்சியை விற்பதையோ தடை செய்துள்ளது.

கடல் பசுக்களின் இறைச்சி அசைவ பிரியர்களுக்கு பிடித்ததாக இருப்பதால், இந்தியா உட்பட சுமார் 31 நாடுகளில் இவை பல காலமாகவே வேட்டையாடபட்டு வருகின் றன. நம் பகுதி மீனவர்கள் பொதுவாக கடல் பசுக்களை வேட்டையாடச் செல்வதில்லை. ஆனால் மீன்களுக்காக கடலில் போடபடும் வலைகளில் சில சமயம் கடல் பசுக்கள் வந்து சிக்கி கொள்ளும்போது அவை பிடிக்கபடு கின்றன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத் தி, தமிழக கடற்பகுதியில் கடல் பசுக்கள் வாழும் இடங்கள் பாதுகாக்க வேண்டும். மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதி முழுவதும் ஏற்கனவே பாதுகாக்க பட்டுள்ளது. அதை போல பாக் ஜலசந்தி (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை) பகுதிகளில் உள்ள கடற்பசுக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




கடலில் மேயும் பசுக்கள். X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum