சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Khan11

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

+4
kalainilaa
மீனு
நண்பன்
யாதுமானவள்
8 posters

Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Sun 24 Jul 2011 - 22:46

உலக அதிசயங்கள் ஏழு என்று சொன்னாலும் இவ்வுலகில் இன்னும் எத்தனையோ அதிசயங்கள் நிதம் தோன்றிக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்பது ஒன்றே ஒன்று தான். அதுதான் புத்தகம்.

எழுத்துக்களால் நிரப்பப்பட்டதா புத்தகங்கள்? இல்லை எழுதுபவனின் அனுபவங்களால் நிரப்பப்பட்டது.

ஒரு எழுத்தாளராக என்னுடைய பயணத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். விளையாட்டுப் பிள்ளையாய் இருந்தபோதே படிப்பில் தீவிர பற்று இருந்தது. என் அப்பாவும் அம்மாவும் புத்தகங்கள் நிறையப் படிப்பார்கள். குமுதம் ஆனந்தவிகடன், கல்கி, வண்ணத்திரை, முத்தாரம், குங்குமம், கல்கண்டு என்ற வார இதழ்கள் அத்தனையும் , முரசொலி, மாலை மலர், தினமணி என்ற செய்தித் தாள்கள் நாள்தவறாமல் எங்கள் வீட்டிற்கு வந்துவிடும்

மட்டுமல்லாது, கண்ணதாசன், வைரமுத்து, வாலி யும் பட்டுக்கோட்டை பிரபாகரன், வாசந்தி , பால குமாரன் என அத்தனை பேரின் கதைப் புத்தகங்களும் எங்கள் வீட்டு அலமாரியில். இத்தனையும் போதாது என் அம்மாவிற்கு. அதனால் இன்னும் நிறைய நாவல்கள் அப்பா புத்தகசாலையிலிருந்து கொண்டுவந்து தருவார்.

அம்மா ஹவுஸ் வைப் என்றுதான் பெயர். ஆனால் அவர் ஒரு அறிவுக் களஞ்சியம். பிள்ளைகள் எல்லோரும் பள்ளிக்குச் சென்றுவிட்ட பின் நாளேடுகளையும் வார இதழ்களையும் படித்துவிடுவார். எனக்குத் தெரிந்து ஒரு புத்தகத்தை அரை மணி நேரத்திற்குள் படித்து விடுவார். அவ்வளவு வேகம் படிப்பதில், படித்துவிட்டு அதிலிருக்கும் ஜோக்ஸ் சில சின்னச்சின்ன அறிவுத் தகவல்கள் எல்லாம் எங்களுக்குச் சொல்வார்.

அப்பா காலையிலேயே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கும்போதே அன்றைய நாளேட்டையும் அவ்வாரத்தின் ஏதாவது ஒரு புத்தகத்தையும் (அப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒரு புத்தகம் வெளிவரும்... உதாரணமாக, புதன் - குமுதம் கல்கண்டு, ஞாயிறு : துக்ளக் )வாங்கி கொண்டு வருவார். காலையில் பள்ளி செல்வதற்கு முன் காத்துக் கொண்டே இருப்போம். அவர் தெருமுனையில் வரும்போதே ஓடிச்சென்று கையிலிருந்து புத்தகத்தைப் பறித்துக்கொண்டு ஓடி ஏதாவது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து படித்துவிட்டுத்தான் வீட்டிற்கு வருவேன். ஏனென்றால் கொஞ்சம் மிஸ் ஆனாலும் புத்தகம் அக்காக்களின் கைகளுக்குச் சென்றுவிடும். என்னைப் போல் அவர்களெல்லாம் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பதால் இந்த டெக்னிக் ஐத்தான் நான் பின்பற்றுவேன். குமுதத்தில் ஆறு வித்யாசங்கள் சின்னச்சின்ன ஜோக்ஸ், பெட்டிச் செய்திகள் என எல்லாம் படித்துவிட்டு வீட்டிற்குச் சென்று புத்தகத்தை யார் கேட்கிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவேன். இப்படி வார இதழ்கள் மேல் அவ்வளவு வெறி. நான் வார இதழ்களைத்தான் தவறாது படிப்பேன்.

செய்தித் தாள்களில் நான் விரும்பி வாசிப்பது ரயில் விபத்து பஸ் விபத்து திருட்டு கொலை கொள்ளை என்பது போன்ற செய்திகளும், விளையாட்டுச் செய்திகளோடு காமிக்ஸ்.. மற்றபடி செய்தித்தாள்கள் மேல் அவ்வளவு விருப்பம் இல்லை. அதே போல் நாவல்களெல்லாம் சுத்தமாகப் படிக்கவே மாட்டேன். காரணம் முழு புத்தகம் படிக்குமளவிற்கு எனக்குப் பொறுமை கிடையாது. ஓடி விளையாடத்தான் பிடிக்கும்.

ஆனால்... கண்ணதாசன் , வைரமுத்து புத்தகங்களை என் அம்மாவும் அப்பாவும் படித்துவிட்டு அதைப்பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். என் அம்மாவும் அக்காக்களிடம் சில புத்தகங்கள் கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்வார். ஆனால் எனக்கு வார இதழ்கள் தவிர இந்தப் புத்தகங்கள் பக்கம் திரும்ப மாட் டேன். ஆனால் எப்போதாவது விளையாடவும் செல்லவில்லை என்றால் வீட்டிலும் வேறு புதிய புத்தகங்கள் இல்லையென்றால்.... கண்ணதாசன் வைரமுத்து புத்தகங்களக் கொஞ்சம் திருப்பிப் பார்ப்ப்பேன். வைரமுத்துவின் தமிழ் சமகாலத்தது என்பதால் பொதுவாகப் புரிந்துவிடும். என் அப்பாவின் ஒரு பழக்கம். அவர் ரசித்துப் படித்த வரிகளை கோடிட்டு வைத்திருப்பார்....அந்த வரிகள் படிக்கும்போது மிகவும் நன்றாக இருக்கும். உதாரணமாக...

நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்போதென்று நினைக்கிறேன். வைரமுத்துவின் கவிராஜன் கதை... பாரதியாரின் கதையை புதுக்கவிதை பாணியில் எழுதிய ஒரு அருமையான புத்தகம். அதைப் பற்றி அம்மாவும் அப்பாவும் நிறைய பேசியதைக் கேட்டிருக்கிறேன். ஒரு நாள் அந்தப் புத்தகத்தை எடுத்து சும்மா திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தால்.... ஆங்காங்கு எக்கச்சக்கமாக எழுத்துக்களின் கீழ் கோடு போட்டிருக்கிறார் அப்பா..

பாரதியின் வறுமையை
" கம்பீரத்தை அறுப்பதற்கு
வறுமைக் கரையானுக்கு
வலிமை ஏது?

பாரதி தெருவில் நடந்து செல்வார்... அப்போது எழுதி இருப்பார் வைரமுத்து...
"இந்தச் சூரியன் நடந்து சென்றால்
தெருவின் இருமருங்கிலும்
கைத்தாமரைகள் குவியும்..."

தீயை வளர்க்க
ஒரு நெய் மழை வேண்டும்" ..
.என இன்னும் என்னென்னவோ வார்த்தைகள் கோடிட்டு இருந்தது. அதையெல்லாம் படிக்கப் படிக்க மனதிற்குள் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி... ஒரு பரவசம்....ஆஹா எப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்று ஒரு ஆச்சரியம் எப்படி இந்தக் கற்பனைகள் என்று நினைப்பேன்... அதற்குப் பிறகு அலமாரியில் இருந்த எல்லா வைரமுத்து புத்தகங்களையும் (வைரமுத்து மட்டும்) புரட்டி புரட்டி வெறும் கோடிட்ட வார்த்தைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இனம் புரியாத ஈடுபாடு வைரமுத்துவின் எழுத்துக்கள் மேல் எற்பட்டுவிட்டது...அதன் பிறகு முழுக்கவிதையும் பின் முழுப் புத்தகமும் படிக்க ஆரம்பித்தேன்.

பள்ளியில் எப்போதும் பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி இதிலெல்லாம் பங்கு கொள்வேன் அப்பாதான் எழுதித் தருவார். அதை மனனம் செய்து அப்படியே எழுதி பரிசு வாங்கி விடுவேன். (ஆரம்பப்பள்ளியில் இருக்கும்போது பிளாஸ்டிக் சோப் டப்பா, பென்சில் , நோட்டுப் புத்தகங்கள், திருக்குறள் புத்தகம் இப்படி...உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்போது ஸ்டீல் தட்டு, டம்ப்ளர், கப்ஸ் இப்படி, ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் ஸோனல், டிஸ்ட்ரிக்ட் எல்லாம் போகும்போதுதான் கப் வாங்குவேன்)

நான் +1 படித்துக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் தினம் அன்று நேரு பற்றி அங்கேயே ஒரு கவிதை எழுதச் சொல்லி சொன்னார்கள். என்ன எழுதுவதென்று புரியவில்லை. ஒரு நாள் டைம் கொடுத்தாலாவது அப்பாவிடம் கேட்டு எழுதிவிடுவேன். அதற்கும் சந்தர்ப்பம் இல்லை.

திடீரென்று வைரமுத்துவின் ஒரு வரி நியாபகம் வந்தது....எந்த புத்தகம் என்று நினைவில் இல்லை...வார்த்தை மட்டும் நியாபகம் இருக்கிறது ..." அதோ ஒரு பறவை சோம்பல் முறித்துத் தன் சிறகை சோதித்துக் கொண்டிருக்கிறது" என்ற வரி நியாபகம் வந்தது.( அப்பா கோடிட்டு வைத்த வரி) உடனே எழுதிவிட்டேன்...

சோம்பலை முறித்துத் தன் சிறகை
சோதித்துக் கொள்ளும்
பறவைகளைப் போலிருந்த மக்களிடம்
இந்தியாவின் கஜானாவை
ஒப்படைத்து விட்டுச் சென்றாய்...
நீ ஒப்படைத்த கஜானா
இன்னும் காலியாகவே இருக்கிறது...
உன் புகைப்படத்தில் மட்டும்
புழுதி சேர்ந்துகொண்டே இருக்கிறது
"

முதல் பரிசு எனக்கு... சந்தோஷம் தாங்க முடியவில்லை - அப்பாவிற்கு.

விளையாட்டுக்களில் 3 மாதத்திற்கொருமுறை ஏதாவது ஒரு மீட் க்கு போ கலந்து கொள்ளும் அத்தனை EVENT களிலும் பரிசினை வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். இப்போது இலக்கியத்திலும் வாங்க ஆரம்பித்துவிட்டதால் ஏகப்பட்ட குஷி... எல்லோருக்கும். கவிதைப் போட்டி கட்டுரைப் போட்டி பேச்சுப் போட்டி இதிலும் நானே முதல்...இப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.

வைரமுத்துவின் புத்தகங்கள் எல்லாம் கவிதைகள். அதேநேரம் அம்மாவும் அப்பாவும் ஆச்சரியப்பட்டு பேசிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிஞன் கண்ணதாசன். அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகம் எடுத்துப் பார்த்தேன். என்னதான் உள்ளது என.. உரைநடையில் இருந்ததால் படிப்பதில் சிறு கடினமும் இல்லை. வெகு எளிதாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. பத்து பாகங்களும் படித்து விட்டேன். வழக்கம் போல் கோடிட்ட வார்த்தைகளைப் படித்து விட்டுத்தான் பிறகு முதலிலிருந்து படிப்பேன். இதற்குப் பின் வாலி, பின் பாரதி, பாரதி தாசன்.... என்று படிப்படியாக என் ஆர்வம் ஈடுபாடாக மாறியது... இன்று அவ்வை, காளமேகம்,பத்துப் பாட்டு எட்டுத்தொகை என்று சங்க இலக்கியங்கள் வரை அவை தொடர்கிறது.

இப்படி பள்ளி இறுதியிலும் கல்லூரியிலும் கவிதைகள் எழுதி பரிசுகள் வாங்கியிருந்தாலும் அவ்வப்போது சிறு சிறு கவிதைகள் ஏதாவது எழுதுவேன். ஆனால் திருமணத்தின் பின் என் கவிதைகளை ரசிக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ யாருமில்லாமல் முடங்கித்தான் போனது.

வாழ்க்கை என்ன நிலையானதா? சுழன்று கொண்டே அல்லவா இருக்கிறது? அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில்தான் மறுபடி எழுத ஆரம்பித்தேன். நான் குவைத்திற்கு வந்தேன். குவைத்தில் பாலைக் குயில்கள் கவிஞர்கள் சங்கத்தில் இணைந்தபின் என் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம். எல்லோரும் பாராட்ட ஆரம்பிக்க நிறைய எழுதினேன். நான் எழுதுவதை நண்பர்களுக்கு ஈ-மெயிலில் அனுப்புவேன். நன்றாக உள்ளது எனப் பாராட்டுவார்கள். அப்படி இருக்கும்போதுதான் சண்முகம் என்ற நண்பர் என் கவிதைகளை மு. மேத்தா, தென்கச்சி சுவாமிநாதன் மணவை முஸ்தபா, கவிஞர் ஜெயபாஸ்கரன் இப்படி ஒரு அருமையான இலக்கிய வட்டத்திற்கு என்னை அறிமுகப் படுத்தினார்.. கவிதைத் தொகுப்பும் வெளியிட்டேன். லதாராணி சொப்னபாரதி யாக மாறியது இப்படித்தான்.

அதேபோல் சிறுவயதில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் சமயம் ஒரு ஏழாவது எட்டாவது போலிருக்கும் அப்போது எங்கள் தெருவில் இருந்த நூலகம் மாலை 4 மணியிலிருந்து ஏழுமணி வரைதான் திறப்பார்கள். அந்த நூலகத்திற்கு எங்கள் தெருவிலுள்ள ஒரு முதியவர் (தாத்தா என்று கூப்பிடுவேன்) தினமும் செய்தித்தாள் படிக்க வேண்டும். ஆனால் அவருக்குக் கண்சரியாகத் தெரியாது. அதனால் என்னைப் படிக்கச் சொல்வார். நானும் வேகமாக ஓடிச் சென்று அய்யோ தாத்தா காத்துகிட்டிருப்பாரே என்று ஓடி பேப்பர் எடுத்து அத்தனை தலைப்புச் செய்திகளையும் வேகமாக வாசிப்பேன். அதிலிருந்து முக்கியமானவற்றை மட்டு,ம் படிக்கச் சொல்வார் தாத்தா.. அவர் கேட்பதை வேகவேகமாகப் படித்துவிட்டு(... அதற்குள் என் நண்பர்களெல்லாம் வெளியே எனக்காக காத்துக்கொண்டிருப்பார்கள்) விளையாட ஓடிவிடுவேன். இப்படி அந்தத் தாத்தா என்னை படிக்கச் சொல்லி படிக்கச் சொல்லி என் வாசிப்புத் திறமையை வளர்த்து விட்டாரோ என்று இன்றும் நினைப்பேன்.

குவைத்தில் நிறைய மேடைகள்.... என் கவிதைகள் கேட்க ஆர்வமாக இருப்பார்கள். குவைத்தில் பெரியார் நூலகப் பெரியவர் திரு. செல்லப் பெருமாள் அவர்களிடம் புத்தகங்கள் வாங்கிப் படிப்பேன். என் தமிழ் ஆர்வம் கண்டு அவர் என்னை இராவண காவியம் சொற்பொழிவு செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் அப்பொறுப்பை ஏற்று செய்து கொண்டிருக்கிறேன். பெரியார் பன்னாட்டு மையத்தின் குவைத் கிளை செயலாளராகவும் “குவைத் தமிழ்” என்ற மாத இதழில் ஆசிரியராகவும் உள்ளேன்.

இப்போது இருக்கும் யாதுமானவள் தமிழிலக்கணம் பயில வேண்டுமென வற்புறுத்தியது புலவர். திரு. சூசை மைக்கேல். என்னுடைய மானசீக குரு. என்னுடைய தமிழ் ஆர்வம் கண்டு, (ஏறக்குறைய நானொரு தமிழ்ப்பித்து) இத்தனை ஆர்வமுள்ள ஒரு தமிழ்ப்பெண்ணை நான் கண்டதே இல்லை இதற்குமுன் என்று கூறுவார். கீற்று மூலம் தான் நாங்கள் அறிமுகம். இராவண காவியத்திலும் ஏதாவது சந்தேகம் இருந்தால் ஈ-மெயில் மூலம் தெரிவிப்பேன்.அழகான விளக்கங்களுடன் அதற்கு பதில் அனுப்புவார். அவரின் வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் ஏற்றுதான் என் எழுத்துப்பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது - என் தந்தையின் ஆசியுடன்.

அன்புடன்,
யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Mon 25 Jul 2011 - 1:06; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by நண்பன் Sun 24 Jul 2011 - 23:23

வலைய தளங்களில் பெரிய கட்டுரைகள் நான் படிக்கும் போது மேல் ஒரு பந்தி கீழ் ஒரு பந்தி இப்படி மேலோட்டமாகத்தான் படிப்பேன் ஆனால் உங்கள் மனம் திறந்து நீங்கள் எழுதியவைகள் அனைத்தையும் ஒரு விரி விடாது படித்து முடித்தேன்

மிகவும் சந்தோசமாக உள்ளது மட்டுமல்லாமல் எனக்குள் ஒரு ஆர்வமும் வந்ததுள்ளது இனியாவது வாசிப்புத்திறன் வர வேண்டாமா? உங்கள் இந்த அறிவுக்கும் ஆர்வத்திற்கும் முகவரி எங்கிருந்து வந்தது என்பது இன்றுதான் தெரிந்து கொண்டேன்

நான் சாதாரணமாக பார்த்தது கேட்டது படித்தது இவைகளில் அறிந்த ஒரு உண்மை என்னவெண்றால் அம்மா என்றால் அன்புக்கு ஆதாராம் அப்பா என்றால் அறிவுக்கு ஆதாராம் ஆசியரியர் என்றால் கல்விக்கு ஆதாராம் இப்படித்தான் நான் அறிந்த உண்மை ஆனால் உங்கள் விசயத்தில் அத்தனை பேரும் உங்களுக்கு அறிவைத்தான் ஊட்டி உள்ளார்கள்.

அதற்காக நான் அன்பு இல்லாதவளா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது அப்படி இல்லை உங்கள் ஆரம்ப பள்ளி உங்கள் அறிவுக்கு போடப்பட்ட அத்திவாரம் மிக மிக அருமையாக போடப்பட்டு விட்டது இதில் ஒரு உண்மை எது வெனில் இது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் நான் சொல்லுவேன்

காரணம் இப்படி ஒரு திறமை கல்வி கலை விளையாட்டு இப்படி அனைத்து துறைகளிலும் ஒருவரால் திளங்க முடியும் என்றால் அதற்கு இறைவன் உதவி அதிகமாகவே கிடைக்க வேண்டும் அது உங்களுக்கு நிறையவே கிடைத்துள்ளது அதில் எந்த வித சந்தேகமும் இல்லை .

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடன் பேச வேண்டும் போல் உள்ளது உங்களை மகிழ்விப்பதற்காக நான் புகழ்கிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள் அக்கா உங்கள் திறமைகள் என்னை சிந்திக்க இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது

உங்கள் கட்டுரையைப் படிக்கும் போது மெய் சிலிர்த்த ஒரு விசயம் நேரு பற்றிய கவிதை எழுத சொன்ன போது நீங்கள் எழுத பட்ட பாடு எழுதிய பிறகு அதற்கு கிடைத்த பரிசு என்னை ஆடச் செய்து விட்டது மிக மிக மகிழந்தேன் உங்கள் ஞாபக சக்தியும் ஒரு வரம்தான் அக்கா

சோம்பலை முறித்துத் தன் சிறகை
சோதித்துக் கொள்ளும்
பறவைகளைப் போலிருந்த மக்களிடம்
இந்தியாவின் கஜானாவை
ஒப்படைத்து விட்டுச் சென்றாய்...
நீ ஒப்படைத்த கஜானா
இன்னும் காலியாகவே இருக்கிறது...
உன் புகைப்படத்தில் மட்டும்
புழுதி சேர்ந்துகொண்டே இருக்கிறது

:];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:

உங்கள் பள்ளி வாழ்க்கை நான் ரசித்துப்படித்தேன் அதை விட உங்கள் கலைப்பயணம் பற்றி இன்னும் ரசித்து ருசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பயணம் இன்னும் இன்னும் வெற்றிப்பாதைகளை சந்திக்க வேண்டும் என்று பிராத்தித்து வாழ்த்துகிறேன் உறவே
என்றும் உங்கள் நலம் நாடும் உறவு
நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Sun 24 Jul 2011 - 23:44

நண்பன் wrote:
உங்கள் பள்ளி வாழ்க்கை நான் ரசித்துப்படித்தேன் அதை விட உங்கள் கலைப்பயணம் பற்றி இன்னும் ரசித்து ருசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பயணம் இன்னும் இன்னும் வெற்றிப்பாதைகளை சந்திக்க வேண்டும் என்று பிராத்தித்து வாழ்த்துகிறேன் உறவே
என்றும் உங்கள் நலம் நாடும் உறவு
நன்றியுடன்
நண்பன்

மிக்க நன்றி நண்பன். நான் எழுதியதை விட அழகாக பதில் கொடுத்து உள்ளீர்கள். தங்கள் பதிலை நான் மிக மிக ரசித்துப் படித்தேன்.

அம்மா என்றால் அன்புக்கு ஆதாராம் அப்பா என்றால் அறிவுக்கு ஆதாராம் ஆசியரியர் என்றால் கல்விக்கு ஆதாராம் இப்படித்தான் நான் அறிந்த உண்மை ஆனால் உங்கள் விசயத்தில் அத்தனை பேரும் உங்களுக்கு அறிவைத்தான் ஊட்டி உள்ளார்கள்
குறிப்பாக இந்த வரிகளை மிக்க ரசித்தேன்.

மீண்டும் நன்றி நண்பன்

அன்புடன்,
யாதுமானவள்

Last edited by யாதுமானவள் on Mon 25 Jul 2011 - 0:25; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by மீனு Mon 25 Jul 2011 - 0:13

சகல கலா வல்லவன் போல் சகலகலாராணி என்றுதான் உங்களை அழைக்க வேண்டும் நண்பன் கூறியது போல் நேரு மாமாவின் கவிதை வரிகள் அருமை அக்காவின் படிக்கும் போதும் சரி வேலை செய்யும் போதும் சரி தன் திறமையை சரியாக வெளிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்

என் தமிழ் ஆர்வம் கண்டு அவர் என்னை இராவண காவியம் சொற்பொழிவு செய்ய
கேட்டுக்கொண்டதின் பேரில் அப்பொறுப்பை ஏற்று செய்து கொண்டிருக்கிறேன்.
பெரியார் பன்னாட்டு மையத்தின் குவைத் கிளை செயலாளராகவும் “குவைத் தமிழ்”
என்ற மாத இதழில் ஆசிரியராகவும் உள்ளேன்.

இந்த விசயம் இப்பதான் அறிந்தேன் நானும் உங்களுடன் சாதாரணமாக பழகிறேன் உங்கள் திறமை கண்டு வியக்கிறேன்
உங்களை இன்று முதல் எனது குருவாக ஏற்றுக்கொள்கிறேன்
நீங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்
நன்றி மீனுகா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Mon 25 Jul 2011 - 0:27

மீனு wrote:சகல கலா வல்லவன் போல் சகலகலாராணி என்றுதான் உங்களை அழைக்க வேண்டும் நண்பன் கூறியது போல் நேரு மாமாவின் கவிதை வரிகள் அருமை அக்காவின் படிக்கும் போதும் சரி வேலை செய்யும் போதும் சரி தன் திறமையை சரியாக வெளிப்படுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்

நன்றி மீனுகா

நன்றி மீனுக்குட்டி... பொறுமையாகப் படித்து அழகாகப் பின்னூட்டம் இட்டிருக்கிறாய். நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by kalainilaa Mon 25 Jul 2011 - 0:59

எனது மனசிக ஆசான் வைரமுத்து .அவரின் கவிதை ,கதை மேல் எனக்கு இன்னும் நாட்டமுண்டு.
அவரின் தமிழின் சிலம்பாட்டம் எனக்கும் புடிக்கும்.
என்னுடைய எழுத்தில் அவரின் தாக்கமும் இருக்கும் .
அவருடைய் சிலோடியான எழுத்துக்களில் நானும் கவர பட்டவன்.
திரை வுலகில் நான் காணவேண்டும் என்று ஆசை பாட்டால் அவரைத்தான் பார்ப்பேன் .
உங்களுடைய கலைவுலக,பயணம் ,கவிதையின் தாக்கம் ,பற்றி
அறிந்தேன்.இன்னும் சொல்லப்போனால் உங்கள் காலடி சுவடு,
படிக்கும் போது,தமிழகம் ஒரு நல்ல எழுத்தாளரை ,கவிஞ்சரை,
இழந்து விட்டதோ என்று எண்ணம் .மேலும் உங்கள் பணி சிறக்க,
அது உங்கள் பாணில்,பரவ வாழ்த்துக்கள்.

சுதந்திரம் என்ற மோதிரத்தை
மகத்தமா வாங்கி தந்தார்
கொடுத்த பிறகு தான்,
மோதிரத்தை அணியமுடியா
குஷ்டரோகி என்று.

சினமா ஒரு ஆயுதம்,
அதை நாம் முதுகு சொறியவே
பயன்படுத்துகிறோம்.

இதுவரை நான் வைரமுத்து வாழ்கை தடத்தில்
மேல உள்ள வரிகள் இருக்கும் .உங்கள் ,வெற்றிக் கவிதையை ,படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது .
நன்றி ,நன்றி .சேனையை மூலம் உங்கள் நட்பு கிடைத்தமைக்கு ,
பெருமைபடுகிறேன் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 9:47

இலக்கிய வாதிகளின் கதை கேட்பதில் ஆர்வமெனக்கு அதிலும் சொல்லும் விதம் விசித்திரமாகிவிட்டால் அலாதியாகிவிடும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரோல் மோடலை பின்பற்றுவார்கள் என் கலைப்பயணத்தில் சந்தித்த விசித்திரமான பெண்ணாகவே கருதுகிறேன் இலக்கியத்துறையில் இருப்பது வேறு இலக்கியத்தை சுவாசிப்பது வேறு நீங்கள் இரண்டாம்நிலை

வியக்கவைக்கும் இலக்கியப்பயணத்தில் பல விடயங்களை கற்க முடிந்தது நாமும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கத்தோன்றியது
உங்களது நட்பும் உங்களுடனான இலக்கியப்பயணமும் காலாகாலம் கல்வெட்டுக்களாய் நிலைத்துவிடுகின்றன
மகிழ்கிறேன் மனதாற பாராட்டுகிறேன் பிரார்த்திக்கிறேன் நிச்சயம் உங்கள் பின்தொடர யாசிக்கிறேன் நன்றி அக்கா :];:

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by *சம்ஸ் Mon 25 Jul 2011 - 14:05

நன்றி நன்றி நன்றி என்று எத்தனை முறை சொன்னாலும் போதாது உங்களின் திறமைக்கும் ஆற்றலுக்கும்.
தமிழில் வேறு வார்தை இருந்தால் சொல்லுங்கள் அக்காவுக்கு.

ஆள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்திருந்த
கலைப் பயணத்தின் பசுமை நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது உங்களுக்குள்ள மகிழ்ச்சி எங்களாளும் உணரமுடிகிறது.

ஒருவருக்கு ஒரு தகைமை இருப்பது வளமை உங்களுக்கோ தகமையின் மறுபெயர் யாதுமானவள் என்று
சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன் .அக்காவுக்கு பெருத்தமானதும்
அருமையானதும் அற்புதமாகவும் இருக்கிறது
அந்த பெயரை உச்சரிக்கும் போது எனக்கு உட்சாகம் பிறக்கிறது .!

தமிழென்றும் கவிதையென்றும் கதையென்றும். எதை எடுத்தாலும் அக்காவின் பெயர் சொல்லும்.
இவைக்கு மறு பெயர் யாதுமானவளே.!
உங்களுடைய திறமையை கண்டு வியந்து போகிறேன் அதைப்போல் உங்களின் உறவுகிடைத்ததை எண்ணி பெருமைப் படுகிறேன் அக்கா.

என்றும் நாம் அக்கா தம்பி என்று பாசப்பிணைப்பில் உலகில் எங்கு இருந்தாலும் எந்த
மூலையில் இருந்தாலும் இந்த உறவு தொடரே வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

பல சோதனைகளை சந்தித்து பல தடைக்கற்களைத் தாண்டி உலா வரும் சேனைக்கு தாங்கள் கிடைத்து ஒரு வரமே என்று சொன்னால் மிகையாகது.

சாதனைகளை சரித்திரமாக்கி வரலாற்றை புத்தமாக்கி அகராதியை தனக்குள் சுமந்து கொண்டு
உலாவிக்கொண்டு இருக்கும் எனதருமை அக்காவிற்கு எப்படி நன்றி சொல்லுவேன்.

தடையைகளை தகத்தெறிந்து எழுத்தினை ஆயுதமாக்கி வலையதளங்களை வரைதாள்களாக்கி தமிழை
வளர்க்க பாடு பட்டுக் கொண்டு இருக்கும் உங்களுக்கு என்றும் நன்றி
உள்ளவர்களாய் நாங்கள்.
வாழ்க தமிழ் வளர்க உங்களின் சேவை
ரசனை மிக்க பகுதியை பசுமை நினைவுகள் என்று எங்களுடன் பகிர்ந்து எங்களையும் ஊக்கபடுத்திய உங்களின் நினைவுகள் சூப்பர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by ஹம்னா Mon 25 Jul 2011 - 17:18

ரொம்ப நன்றி அக்கா! உங்கள் வேலைகளுக்கு மத்தியில் உங்களின் பசுமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து எங்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியமைக்கு.

உங்களுக்குள்தான் எத்தனை எத்தனை திறமைகள். அப்பப்பா! பசுமை நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி உங்களை விட எங்களுக்கு அதிகமாக கிடைக்கிறது.

உங்களைப் போன்று எனக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு. ஆனால் இந்த இலக்கியம் சம்மந்தமான புத்தகங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். தனி நாவல்கள்தான் படிப்பேன். ரமணி சந்திரன். பட்டுக்கோட்டை பிரபாகரன். தேவிபாலா , உஷா இவர்களின் கதைப்புத்தகம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இப்போதுதான் புரிகிறது அந்த புத்தகங்களைப் படித்ததற்க்குப் பதிலாக இலக்கியப் புத்தகங்களை படித்திருந்தால் அதற்க்கு சிலவு செய்த நேரத்தை இதற்க்கு சிலவு செய்திருந்தால் எனக்கும் இலக்கிய அறிவு கவிதை எழுதும் ஆர்வம் இதெல்லாம் வந்திருக்குமோ :) :)

நம்ம மீனு சொன்னது போன்று நீங்கள் ஒரு சகல கலா ராணிதான் அக்கா. நான் நினைத்தேன் நீங்கள் குவைத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் எகவுண்டண்ட் அல்லது வேறு ஏதாவது வேலைதான் செய்வீர்கள் என்று ஆனால் அங்கும் நீங்கள் உங்கள் தமிழ் ஆர்வத்தையே வேலையாக கொண்டுள்ளீர்கள்.

என் தமிழ் ஆர்வம் கண்டு அவர் என்னை இராவண காவியம் சொற்பொழிவு செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் அப்பொறுப்பை ஏற்று செய்து கொண்டிருக்கிறேன். பெரியார் பன்னாட்டு மையத்தின் குவைத் கிளை செயலாளராகவும் “குவைத் தமிழ்” என்ற மாத இதழில் ஆசிரியராகவும் உள்ளேன்.

இப்படி ஒரு பொறுப்பில் இருப்பதை நினைத்து எனக்கும் ரொம்ப சந்தோஷமாக உள்ளது அக்கா. ரொம்ப நன்றி அக்கா உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு.
அன்புடன் ஹம்னா.

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by ஹம்னா Mon 25 Jul 2011 - 17:24

நண்பன் wrote:வலைய தளங்களில் பெரிய கட்டுரைகள் நான் படிக்கும் போது மேல் ஒரு பந்தி கீழ் ஒரு பந்தி இப்படி மேலோட்டமாகத்தான் படிப்பேன் ஆனால் உங்கள் மனம் திறந்து நீங்கள் எழுதியவைகள் அனைத்தையும் ஒரு விரி விடாது படித்து முடித்தேன்

மிகவும் சந்தோசமாக உள்ளது மட்டுமல்லாமல் எனக்குள் ஒரு ஆர்வமும் வந்ததுள்ளது இனியாவது வாசிப்புத்திறன் வர வேண்டாமா? உங்கள் இந்த அறிவுக்கும் ஆர்வத்திற்கும் முகவரி எங்கிருந்து வந்தது என்பது இன்றுதான் தெரிந்து கொண்டேன்

நான் சாதாரணமாக பார்த்தது கேட்டது படித்தது இவைகளில் அறிந்த ஒரு உண்மை என்னவெண்றால் அம்மா என்றால் அன்புக்கு ஆதாராம் அப்பா என்றால் அறிவுக்கு ஆதாராம் ஆசியரியர் என்றால் கல்விக்கு ஆதாராம் இப்படித்தான் நான் அறிந்த உண்மை ஆனால் உங்கள் விசயத்தில் அத்தனை பேரும் உங்களுக்கு அறிவைத்தான் ஊட்டி உள்ளார்கள்.

அதற்காக நான் அன்பு இல்லாதவளா என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது அப்படி இல்லை உங்கள் ஆரம்ப பள்ளி உங்கள் அறிவுக்கு போடப்பட்ட அத்திவாரம் மிக மிக அருமையாக போடப்பட்டு விட்டது இதில் ஒரு உண்மை எது வெனில் இது இறைவன் கொடுத்த வரம் என்றுதான் நான் சொல்லுவேன்

காரணம் இப்படி ஒரு திறமை கல்வி கலை விளையாட்டு இப்படி அனைத்து துறைகளிலும் ஒருவரால் திளங்க முடியும் என்றால் அதற்கு இறைவன் உதவி அதிகமாகவே கிடைக்க வேண்டும் அது உங்களுக்கு நிறையவே கிடைத்துள்ளது அதில் எந்த வித சந்தேகமும் இல்லை .

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடன் பேச வேண்டும் போல் உள்ளது உங்களை மகிழ்விப்பதற்காக நான் புகழ்கிறேன் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள் அக்கா உங்கள் திறமைகள் என்னை சிந்திக்க இன்னும் இன்னும் கற்றுக்கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது

உங்கள் கட்டுரையைப் படிக்கும் போது மெய் சிலிர்த்த ஒரு விசயம் நேரு பற்றிய கவிதை எழுத சொன்ன போது நீங்கள் எழுத பட்ட பாடு எழுதிய பிறகு அதற்கு கிடைத்த பரிசு என்னை ஆடச் செய்து விட்டது மிக மிக மகிழந்தேன் உங்கள் ஞாபக சக்தியும் ஒரு வரம்தான் அக்கா

சோம்பலை முறித்துத் தன் சிறகை
சோதித்துக் கொள்ளும்
பறவைகளைப் போலிருந்த மக்களிடம்
இந்தியாவின் கஜானாவை
ஒப்படைத்து விட்டுச் சென்றாய்...
நீ ஒப்படைத்த கஜானா
இன்னும் காலியாகவே இருக்கிறது...
உன் புகைப்படத்தில் மட்டும்
புழுதி சேர்ந்துகொண்டே இருக்கிறது

:];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];: :];:

உங்கள் பள்ளி வாழ்க்கை நான் ரசித்துப்படித்தேன் அதை விட உங்கள் கலைப்பயணம் பற்றி இன்னும் ரசித்து ருசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பயணம் இன்னும் இன்னும் வெற்றிப்பாதைகளை சந்திக்க வேண்டும் என்று பிராத்தித்து வாழ்த்துகிறேன் உறவே
என்றும் உங்கள் நலம் நாடும் உறவு
நன்றியுடன்
நண்பன்

@. @. :) :) :)

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by *சம்ஸ் Fri 29 Jul 2011 - 0:18

சாதிக் wrote:இலக்கிய வாதிகளின் கதை கேட்பதில் ஆர்வமெனக்கு அதிலும் சொல்லும் விதம் விசித்திரமாகிவிட்டால் அலாதியாகிவிடும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரோல் மோடலை பின்பற்றுவார்கள் என் கலைப்பயணத்தில் சந்தித்த விசித்திரமான பெண்ணாகவே கருதுகிறேன் இலக்கியத்துறையில் இருப்பது வேறு இலக்கியத்தை சுவாசிப்பது வேறு நீங்கள் இரண்டாம்நிலை

வியக்கவைக்கும் இலக்கியப்பயணத்தில் பல விடயங்களை கற்க முடிந்தது நாமும் இவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கத்தோன்றியது
உங்களது நட்பும் உங்களுடனான இலக்கியப்பயணமும் காலாகாலம் கல்வெட்டுக்களாய் நிலைத்துவிடுகின்றன
மகிழ்கிறேன் மனதாற பாராட்டுகிறேன் பிரார்த்திக்கிறேன் நிச்சயம் உங்கள் பின்தொடர யாசிக்கிறேன் நன்றி அக்கா :];:

உண்மை :,”,: :,”,: @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by பாயிஸ் Thu 11 Aug 2011 - 23:48

உங்கள் மனம் கவர்ந்து எங்ளோடு பகிர்ந்தளித்த உங்கள் பசுமையான நினைவுகள்
எங்களின் மனங்களை ஈர்தது விட்டது அதனூடாக நாங்கள் கற்றுக்கொண்டதும் பலதுவாக இருக்கிறது நீங்கள் கடந்து வந்த பக்கங்கள் எங்களின் தேடலின் உணர்வை தூண்டிருக்கிறது.

மனிதர்களுக்கு ஒரு திறமை முழுமையாக கிடைப்பதே பெரிதும் அரிதாக இருக்கிறது ஆனால் தாங்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது உங்களின் தனித்திறமையை காட்டுகிறது.

உங்களின் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த பெற்றோர்கள்
வெற்றியடைந்து உங்களை அடைந்ததில் பெருமிதமும் கொள்கிறார்கள்.
நீங்கள் அவர்களுக்கு பெண்ணாகப்பிறந்ததும் பெரும் பாக்கியமே உங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் நான் கற்றுக்கொண்ட பாடமும் அதுவே.

இதில் நான் யாரை பாராட்ட நினைத்தாலும் ஒரு திறமையான இலக்கியவாதியை தந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டிருக்கிறது,

உங்களுடைய கலைப்பயணத்தில் நிங்கள் பகித்த பதவிகள் பலதாக இருந்தாலும் உங்கள் தேசம்விட்டு கடல் கடந்து சென்று பதவிகள் ஏற்பதுதான் உங்களுடைய கலை ஆர்வத்திற்கும் எழுத்துக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கிறது.

எனவே உங்கள் பயணம் தடைகள் இன்றி பயணிக்கட்டும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 2:51

பாயிஸ் wrote:உங்கள் மனம் கவர்ந்து எங்ளோடு பகிர்ந்தளித்த உங்கள் பசுமையான நினைவுகள்

மிகவும் அருமையாக விளக்கமளித்துள்ளீர்கள் பாயிஸ் வாழ்த்துக்கள் நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 16:16

kalainilaa wrote:எனது மனசிக ஆசான் வைரமுத்து .அவரின் கவிதை ,கதை மேல் எனக்கு இன்னும் நாட்டமுண்டு.
அவரின் தமிழின் சிலம்பாட்டம் எனக்கும் புடிக்கும்.
என்னுடைய எழுத்தில் அவரின் தாக்கமும் இருக்கும் .
அவருடைய் சிலோடியான எழுத்துக்களில் நானும் கவர பட்டவன்.
திரை வுலகில் நான் காணவேண்டும் என்று ஆசை பாட்டால் அவரைத்தான் பார்ப்பேன் .
உங்களுடைய கலைவுலக,பயணம் ,கவிதையின் தாக்கம் ,பற்றி
அறிந்தேன்.இன்னும் சொல்லப்போனால் உங்கள் காலடி சுவடு,
படிக்கும் போது,தமிழகம் ஒரு நல்ல எழுத்தாளரை ,கவிஞ்சரை,
இழந்து விட்டதோ என்று எண்ணம் .மேலும் உங்கள் பணி சிறக்க,
அது உங்கள் பாணில்,பரவ வாழ்த்துக்கள்.

சுதந்திரம் என்ற மோதிரத்தை
மகத்தமா வாங்கி தந்தார்
கொடுத்த பிறகு தான்,
மோதிரத்தை அணியமுடியா
குஷ்டரோகி என்று.

சினமா ஒரு ஆயுதம்,
அதை நாம் முதுகு சொறியவே
பயன்படுத்துகிறோம்.

இதுவரை நான் வைரமுத்து வாழ்கை தடத்தில்
மேல உள்ள வரிகள் இருக்கும் .உங்கள் ,வெற்றிக் கவிதையை ,படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது .
நன்றி ,நன்றி .சேனையை மூலம் உங்கள் நட்பு கிடைத்தமைக்கு ,
பெருமைபடுகிறேன் .

நன்றி !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 16:18

சாதிக் wrote:இலக்கிய வாதிகளின் கதை கேட்பதில் ஆர்வமெனக்கு அதிலும் சொல்லும் விதம் விசித்திரமாகிவிட்டால் அலாதியாகிவிடும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரோல் மோடலை பின்பற்றுவார்கள் என் கலைப்பயணத்தில் சந்தித்த விசித்திரமான பெண்ணாகவே கருதுகிறேன் இலக்கியத்துறையில் இருப்பது வேறு இலக்கியத்தை சுவாசிப்பது வேறு நீங்கள் இரண்டாம்நிலை
:];:

மிக்க நன்றி சாதிக்! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் பின்னூட்டம் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 16:31

*சம்ஸ் wrote:நன்றி நன்றி நன்றி என்று எத்தனை முறை சொன்னாலும் போதாது உங்களின் திறமைக்கும் ஆற்றலுக்கும். தமிழில் வேறு வார்தை இருந்தால் சொல்லுங்கள் அக்காவுக்கு.

ஆள் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்திருந்த
கலைப் பயணத்தின் பசுமை நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது உங்களுக்குள்ள மகிழ்ச்சி எங்களாளும் உணரமுடிகிறது.

ஒருவருக்கு ஒரு தகைமை இருப்பது வளமை உங்களுக்கோ தகமையின் மறுபெயர் யாதுமானவள் என்று
சொன்னால் மிகையாகாது என்று நினைக்கிறேன் .அக்காவுக்கு பெருத்தமானதும்
அருமையானதும் அற்புதமாகவும் இருக்கிறது அந்த பெயரை உச்சரிக்கும் போது எனக்கு உட்சாகம் பிறக்கிறது .!

தமிழென்றும் கவிதையென்றும் கதையென்றும். எதை எடுத்தாலும் அக்காவின் பெயர் சொல்லும்.
இவைக்கு மறு பெயர் யாதுமானவளே.!

உங்களுடைய திறமையை கண்டு வியந்து போகிறேன் அதைப்போல் உங்களின் உறவுகிடைத்ததை எண்ணி பெருமைப் படுகிறேன் அக்கா.

என்றும் நாம் அக்கா தம்பி என்று பாசப்பிணைப்பில் உலகில் எங்கு இருந்தாலும் எந்த
மூலையில் இருந்தாலும் இந்த உறவு தொடரே வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.

பல சோதனைகளை சந்தித்து பல தடைக்கற்களைத் தாண்டி உலா வரும் சேனைக்கு தாங்கள் கிடைத்து ஒரு வரமே என்று சொன்னால் மிகையாகது.

சாதனைகளை சரித்திரமாக்கி வரலாற்றை புத்தமாக்கி அகராதியை தனக்குள் சுமந்து கொண்டு
உலாவிக்கொண்டு இருக்கும் எனதருமை அக்காவிற்கு எப்படி நன்றி சொல்லுவேன்.

தடையைகளை தகத்தெறிந்து எழுத்தினை ஆயுதமாக்கி வலையதளங்களை வரைதாள்களாக்கி தமிழை
வளர்க்க பாடு பட்டுக் கொண்டு இருக்கும் உங்களுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாய் நாங்கள்.

வாழ்க தமிழ் வளர்க உங்களின் சேவை ரசனை மிக்க பகுதியை பசுமை நினைவுகள் என்று எங்களுடன் பகிர்ந்து எங்களையும் ஊக்கபடுத்திய உங்களின் நினைவுகள் சூப்பர்.

மிகவும் நன்றி சம்ஸ்... அழகான பின்னூட்டம் கொடுத்திருக்கிறீர்கள். இன்றுதான் எல்லோரின் பின்னூட்டங்களையும் பார்த்தேன்....

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 16:36

ஹம்னா wrote:ரொம்ப நன்றி அக்கா! உங்கள் வேலைகளுக்கு மத்தியில் உங்களின் பசுமை நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து எங்களுக்கு சந்தோசத்தை ஏற்படுத்தியமைக்கு.

உங்களுக்குள்தான் எத்தனை எத்தனை திறமைகள். அப்பப்பா! பசுமை நினைவுகளை மீட்டிப்பார்க்கும் போது உங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி உங்களை விட எங்களுக்கு அதிகமாக கிடைக்கிறது.

உங்களைப் போன்று எனக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் உண்டு. ஆனால் இந்த இலக்கியம் சம்மந்தமான புத்தகங்களுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். தனி நாவல்கள்தான் படிப்பேன். ரமணி சந்திரன். பட்டுக்கோட்டை பிரபாகரன். தேவிபாலா , உஷா இவர்களின் கதைப்புத்தகம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இப்போதுதான் புரிகிறது அந்த புத்தகங்களைப் படித்ததற்க்குப் பதிலாக இலக்கியப் புத்தகங்களை படித்திருந்தால் அதற்க்கு சிலவு செய்த நேரத்தை இதற்க்கு சிலவு செய்திருந்தால் எனக்கும் இலக்கிய அறிவு கவிதை எழுதும் ஆர்வம் இதெல்லாம் வந்திருக்குமோ :) :)

நம்ம மீனு சொன்னது போன்று நீங்கள் ஒரு சகல கலா ராணிதான் அக்கா. நான் நினைத்தேன் நீங்கள் குவைத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் எகவுண்டண்ட் அல்லது வேறு ஏதாவது வேலைதான் செய்வீர்கள் என்று ஆனால் அங்கும் நீங்கள் உங்கள் தமிழ் ஆர்வத்தையே வேலையாக கொண்டுள்ளீர்கள்.

என் தமிழ் ஆர்வம் கண்டு அவர் என்னை இராவண காவியம் சொற்பொழிவு செய்ய கேட்டுக்கொண்டதின் பேரில் அப்பொறுப்பை ஏற்று செய்து கொண்டிருக்கிறேன். பெரியார் பன்னாட்டு மையத்தின் குவைத் கிளை செயலாளராகவும் “குவைத் தமிழ்” என்ற மாத இதழில் ஆசிரியராகவும் உள்ளேன்.

இப்படி ஒரு பொறுப்பில் இருப்பதை நினைத்து எனக்கும் ரொம்ப சந்தோஷமாக உள்ளது அக்கா. ரொம்ப நன்றி அக்கா உங்கள் நினைவுகளை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு.
அன்புடன் ஹம்னா.

நான் குவைத்தில் ஒரு கம்பெனியில் Project Analyst ஆக வேலை செய்து கொண்டுதான் இருக்கிறேன். வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபின் படிக்கவும் எதாவது எழுதவும் செய்வேன்.

இத்தனை சந்தோஷமான பதில் கண்டு ஆனந்தமாக உள்ளது ஹம்னா... நன்றி... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 16:38

உங்கள் பள்ளி வாழ்க்கை நான் ரசித்துப்படித்தேன் அதை விட உங்கள் கலைப்பயணம் பற்றி இன்னும் ரசித்து ருசித்துப் படித்தேன் வாழ்த்துக்கள் அக்கா உங்கள் பயணம் இன்னும் இன்னும் வெற்றிப்பாதைகளை சந்திக்க வேண்டும் என்று பிராத்தித்து வாழ்த்துகிறேன் உறவே
என்றும் உங்கள் நலம் நாடும் உறவு
நன்றியுடன்
நண்பன்

மிக்க நன்றி நண்பன். சந்தோஷமாக உள்ளது தாங்கள் அனைவரும் என்னுடன் இத்தனை அன்போடும் இணக்கத்தோடும் இருப்பது கண்டு!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 16:41

பாயிஸ் wrote:உங்கள் மனம் கவர்ந்து எங்ளோடு பகிர்ந்தளித்த உங்கள் பசுமையான நினைவுகள்
எங்களின் மனங்களை ஈர்தது விட்டது அதனூடாக நாங்கள் கற்றுக்கொண்டதும் பலதுவாக இருக்கிறது நீங்கள் கடந்து வந்த பக்கங்கள் எங்களின் தேடலின் உணர்வை தூண்டிருக்கிறது.

மனிதர்களுக்கு ஒரு திறமை முழுமையாக கிடைப்பதே பெரிதும் அரிதாக இருக்கிறது ஆனால் தாங்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது உங்களின் தனித்திறமையை காட்டுகிறது.

உங்களின் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த பெற்றோர்கள்
வெற்றியடைந்து உங்களை அடைந்ததில் பெருமிதமும் கொள்கிறார்கள்.
நீங்கள் அவர்களுக்கு பெண்ணாகப்பிறந்ததும் பெரும் பாக்கியமே உங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் நான் கற்றுக்கொண்ட பாடமும் அதுவே.

இதில் நான் யாரை பாராட்ட நினைத்தாலும் ஒரு திறமையான இலக்கியவாதியை தந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டிருக்கிறது,

உங்களுடைய கலைப்பயணத்தில் நிங்கள் பகித்த பதவிகள் பலதாக இருந்தாலும் உங்கள் தேசம்விட்டு கடல் கடந்து சென்று பதவிகள் ஏற்பதுதான் உங்களுடைய கலை ஆர்வத்திற்கும் எழுத்துக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கிறது.

எனவே உங்கள் பயணம் தடைகள் இன்றி பயணிக்கட்டும்

மிக்க நன்றி பாயிஸ்.. உங்கள் பாராட்டிலும் வாழ்த்திலும் அகம் குளிர்ந்தேன்...

எல்லாவற்றிலும் சிறந்த திறமை இருப்பதாகச் சொல்லிவிட முடியாது... ஆனால் எல்லாத் துறைகளையும் தொட்டுப்பார்க்க வேண்டுமென்ற ஆவல் மட்டும் சிறுவயதிலிருந்து இருந்தது.... எல்லோரைப் போலவே...

எனக்குச் சந்தர்ப்பங்களும் அமைந்தது...மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், மகிவிர்க்கும் பாராட்டுக்கும்....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by ஹம்னா Thu 18 Aug 2011 - 17:21

பாயிஸ் wrote:உங்கள் மனம் கவர்ந்து எங்ளோடு பகிர்ந்தளித்த உங்கள் பசுமையான நினைவுகள்
எங்களின் மனங்களை ஈர்தது விட்டது அதனூடாக நாங்கள் கற்றுக்கொண்டதும் பலதுவாக இருக்கிறது நீங்கள் கடந்து வந்த பக்கங்கள் எங்களின் தேடலின் உணர்வை தூண்டிருக்கிறது.

மனிதர்களுக்கு ஒரு திறமை முழுமையாக கிடைப்பதே பெரிதும் அரிதாக இருக்கிறது ஆனால் தாங்கள் பல துறைகளிலும் சிறந்து விளங்குவது உங்களின் தனித்திறமையை காட்டுகிறது.

உங்களின் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த பெற்றோர்கள்
வெற்றியடைந்து உங்களை அடைந்ததில் பெருமிதமும் கொள்கிறார்கள்.
நீங்கள் அவர்களுக்கு பெண்ணாகப்பிறந்ததும் பெரும் பாக்கியமே உங்களின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டதில் நான் கற்றுக்கொண்ட பாடமும் அதுவே.

இதில் நான் யாரை பாராட்ட நினைத்தாலும் ஒரு திறமையான இலக்கியவாதியை தந்த காலத்துக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டிருக்கிறது,

உங்களுடைய கலைப்பயணத்தில் நிங்கள் பகித்த பதவிகள் பலதாக இருந்தாலும் உங்கள் தேசம்விட்டு கடல் கடந்து சென்று பதவிகள் ஏற்பதுதான் உங்களுடைய கலை ஆர்வத்திற்கும் எழுத்துக்கும் கிடைத்த வெற்றியாக இருக்கிறது.

எனவே உங்கள் பயணம் தடைகள் இன்றி பயணிக்கட்டும்

@. @. @.
:) :) :) :) :) :) :) :)

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்) Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - என் கலையுலகப் பயணம்(யாதுமானவள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum