சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வாலிபாலில் ஸ்டாராக விளங்கும் சூஸன்! Khan11

வாலிபாலில் ஸ்டாராக விளங்கும் சூஸன்!

Go down

வாலிபாலில் ஸ்டாராக விளங்கும் சூஸன்! Empty வாலிபாலில் ஸ்டாராக விளங்கும் சூஸன்!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 25 Jul 2011 - 12:05

வாலிபாலில் ஸ்டாராக விளங்கும் சூஸன்! Susan%20Fathima-jpg-1059
சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம்... வியர்க்க விறுவிறுக்க... பறந்து பறந்து பந்தை ஆக்ரோஷத்தோடு அடிக்கிறார் சூஸன் பாத்திமா.

'வாலிபால் விளையாட்டில் எங்கள் கல்லூரியின் ஸ்டார்' என்று கல்லூரி முதல்வர் முதல் மாணவியர் வரை கொண்டாடும் சூஸன் வளர்ந்து வரும் வாலிபால் வீராங்கனை.

தேசிய அளவில் பல சாதனைகளை படைத்து வரும் சூஸன்... போட்டின்னு மைதானத்துக்குள் இறங்கிட்டா... 'தடதட'ன்னு கலக்குற அதிரடி ஆல்ரவுண்டர்.

'ஹாய்... ஐயாம் சூஸன்...' என்று அறிமுகமாகிற சூஸனின் பேச்சு ரொம்பவே சாப்ட்! அவரிடம் பேசியபோது,

"என்னோட பெரியப்பா, அப்பா ஆகியோர் வாலிபால் வீரர்கள். அவர்கள் செய்யும் பயிற்சியைப் பார்த்தும், அவர்களோடு விளையாடியும் எனக்கும் ஆர்வம் அதிகமானது. வாலிபால் விளையாடுவதற்கு முன்பு பள்ளியில் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது... வாலிபால் விளையாட ஆரம்பித்தபின்னர், டென்னிஸை விட்டுவிட்டு, முழுவதுமாக வாலிபால் விளையாட்டில் கவனம் செலுத்தி கடந்த ஐந்து வருடத்தில் தேசிய வீராங்கனையாக மாறிவிட்டேன்" என்று அமைதியாக பேச ஆரம்பிக்கிறார் சூஸன். இவருடைய தங்கை யாஸ்மினும் வாலிபால் வீராங்கனை.

மேலும் கூறுகையில், "வாலிபால் விளையாட்டில் எனக்கு அட்டாக் பாணிதான் ரொம்ப பிடிக்கும். அந்த பாணியில்தான் விளையாடுவேன். அதில் ஹை பாஸ் நன்றாக பண்ணுவேன்.

கடந்த ஏழு வருடங்களாக தமிழக அணியில் இடம் பெற்றுள்ளேன். ஏழு முறை தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளேன். இதுவரை மொத்தம் நூறு போட்டிகளில் பங்கேற்று, எழுபதுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளேன்.

கடந்த வருடம் கோவையில் நடந்த சீனியர் மாநில சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதை மறக்க முடியாது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற பின்னர் என்னை பயிற்சியாளர்கள் பாராட்டுவார்கள். அந்த பாராட்டுதான் எனக்கு உற்சாக டானிக்!" என்று நெகிழ்கிறார் சூஸன்.

இவருக்கு வாலிபால் தவிர, டென்னிஸ், ஷட்டில், நீளம் தாண்டுதல், எறிகுண்டு ஆகிய விளையாட்டிலும் ஆர்வம். டென்னிஸ் விளையாட்டில் மாநில அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்.

உங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய திருப்பமாக எதை குறிப்பிடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு சூஸன் பதிலளிக்கும்போது, "தொடக்கத்தில் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமாக இருந்தேன். மாநில அளவில் பரிசுகள் வென்று வந்தாலும், குடும்பத்தினரைப் பார்த்து வாலிபால் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தினேன்.

அப்படி மாறியதால், இன்றைக்கு தேசிய வாலிபால் வீராங்கனையாக புகழ் பெற்றுள்ளேன். இது எனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பமாக கருதுகிறேன்.

சின்ன வயதில் விளையாட்டு வீராங்கனையாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது நடந்து விட்டது. அடுத்து எம்.பி.ஏ., படித்து வேலைக்கு செல்லவேண்டும். அதோடு ரெயில்வே துறைக்காக விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன்.

என்னுடைய இத்தனை வெற்றிக்கு முக்கிய காரணம் எனது கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத் மற்றும் பயிற்சியாளர்கள்தான். இவர்களுடைய ஆதரவும், ஊக்கமும் எனது வெற்றிக்கான முக்கிய காரணிகள்" என்று நன்றி கூறுகிறார் சூஸன்.

எந்த வேலை இருந்தாலும் தினமும் அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணிவரையும் பயிற்சி எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தொடக்கத்தில் இருந்தே சூஸனுக்கு வாலிபால் பயிற்சி அளித்து, வழிகாட்டியாக இருக்கும் முகமத் ஜின்னா கூறுகையில், "கடந்த ஐந்து வருடத்தில் கல்லூரியில் படித்துக் கொண்டே தேசிய அளவில் சாதனை செய்து வருகிறார் சூஸன். இவரிடம் வாலிபால் விளையாட்டுக்குரிய அனைத்து தகுதிகளும் உள்ளன என்றாலும், ஸ்ட்ரோக் செய்வதை சீரமைத்தால் சிறப்பாக உயர்ந்த நிலைக்கு வருவார். விரைவில் இந்திய அணியில் இடம் பெறுவார் சூஸன்" என்கிறார் பெருமிதத்துடன்...

பெர்சனல்...

படிப்பு: சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் பி.காம்.

பெற்றோர்: அப்பா அஜீஸ் இ.எஸ்.ஐ.யில் அதிகாரியாக இருக்கிறார். அம்மா ரபியா இல்லத்தரசி. இரண்டு தங்கைகள் உள்ளனர்.

ரோல்மாடல்: எனக்கு சின்ன வயதில் இருந்து வாலிபால் பயிற்சி அளித்து வரும் எனது பெரியப்பா முகமத் ஜின்னா.

பொழுதுபோக்கு: புத்தகம், நாவல்கள் படிப்பேன். பாட்டு கேட்பேன்.

பிடித்த நிறம்: கறுப்பு, நீலம்.

பிடித்த உணவு: நாண், பனீர்.

பிடித்த உடை: குர்தீஸ்.

பிடித்த நாடு: ஆஸ்திரேலியா.

பிடித்த விளையாட்டு: ஷட்டில்.

பிடித்த விளையாட்டு வீரர்: நடால்.

பிடித்த வீராங்கனை: செரீனா வில்லியம்ஸ்.

யாரை சந்திக்க ஆசை: பிரேசில் நாட்டைச் சேர்ந்த வாலிபால் அணியினரை சந்திக்க ஆசை.

மறக்க முடியாத அறிவுரை: "போட்டியின்போது எப்போதும் பயப்படாதே... உன்னிடம் திறமை இருக்கு... தைரியமாக விளையாடினால் கண்டிப்பாக வெற்றிதான்" என்று பயிற்சியாளர்கள் அடிக்கடி கூறுவார்கள். விளையாடும்போது அந்த அறிவுரையை மனதில் நிறுத்திக்கொள்வேன்.

திருத்திக்கொள்ள நினைக்கும் விஷயம்: சில நேரங்களில் என் மீதே எனக்கு தன்னம்பிக்கை குறையும். அதை மாற்றிக் கொண்டால் இன்னும் ஜொலிப்பேன்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக விளங்கும் எலும்புகள்!
» BJP க்கும் ராஜபக்க்ஷேக்கும் உறவுப் பாலமாக விளங்கும் ஷர்மிளா..?
» இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக விளங்கும்-ஜெ
» மருந்தை விட இரட்டிப்பு மடங்கு சிறந்து விளங்கும் உணவுகள்
» காதலில் “கில்லாடி”களாக விளங்கும் பறவைகள்: சுவாரஸ்ய தகவல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum