சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Khan11

பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்..

2 posters

Go down

பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Empty பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்..

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 12:32

பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Firefox5-resize

தற்போது வெளியாகியுள்ள பயர்பொக்ஸ் 5 பிரவுசர் இணைய உலகில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
பயர்பொக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது.
பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டாவிட்டாலும் மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
மற்ற பயர்பொக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன.
பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால் இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.
ஆனாலும் பல புரோகிராம்கள் இணைந்த செயல் கொண்டுள்ளன. ஏற்கனவே இருந்த பலவற்றையும், புதியதாக வெளியான சில ஆட் ஆன் தொகுப்புகளையும் இயக்கிப் பார்த்து அவற்றின் திறன் மற்றும் தரும் வசதிகளின் அடிப்படையில் கீழ்க்காணும் ஐந்து புரோகிராம்கள் தரப்பட்டுள்ளன.
இவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில் எளிதாகக் கணணியிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.
1. கூகுள் ஷார்ட்கட்ஸ்(googleshortcuts): என்ன தான் பயர்பொக்ஸ் பிரவுசரை(குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும் நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.
அந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை பயர்பொக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.
இதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பொக்ஸில் கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி:https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-shortcuts-all-google-se/
2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மொனிட்டரில் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை நிறுவியவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால் சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.
அந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
3. லாஸ்ட் பாஸ்(Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல கடவுச்சொல் மேனேஜராக மட்டுமின்றி பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் கடவுச்சொல்கள் அனைத்தும் ஓன்லைனில் தனி ஒரு வாணலியில் பாதுகாக்கப்படுகிறது. இதனால் அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கணணிகளிலும் பயன்படுத்தப்படலாம்.
இதனால் நாம் ஏதேனும் ஓர் இடத்தில் கடவுச்சொல்லை எழுதி வைத்திட வேண்டியதில்லை அல்லது ஒரே கடவுச்சொல்லை திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை. ஓன்லைனில் பாதுகாக்கப்படும் நம் கடவுச்சொல்லை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.
இதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.
4. கூலிரிஸ்(Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும் பொட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரிமாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது.http://www.cooliris.com/desktop/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.
இந்த ஆட் ஆன் புரோகிராம் யூடியூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற பொட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால் இது பழைய கணணிகளில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கணணியில் சிறப்பாக இயங்குகிறது.
5. ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட்(Asteroids Bookmarklet): இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.
ஸ்பேஸ் பாரினைத் தட்டினால் லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கணணியில் நிறுவச் செய்திட வேண்டாம்.
இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://erkie.github.com/
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Empty Re: பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 27 Jul 2011 - 12:34

அருமையான பகிர்வு தற்போது நான் தரவிறக்கம் செய்து பாவிக்கிறேன்


பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Empty Re: பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்..

Post by ஜிப்ரியா Wed 27 Jul 2011 - 12:44

சாதிக் wrote:அருமையான பகிர்வு தற்போது நான் தரவிறக்கம் செய்து பாவிக்கிறேன்

தரவிறக்கம் செய்துடீங்களா? எல்லா விஷயத்திலும் ரொம்ப வேகமா தான் இருக்கீங்க..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பயர்பொக்ஸ் 5  பதிப்பின் சிறப்பம்சங்கள்.. Empty Re: பயர்பொக்ஸ் 5 பதிப்பின் சிறப்பம்சங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum