சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அம்மாவுக்கு ஓர் கடிதம்! Khan11

அம்மாவுக்கு ஓர் கடிதம்!

2 posters

Go down

அம்மாவுக்கு ஓர் கடிதம்! Empty அம்மாவுக்கு ஓர் கடிதம்!

Post by kalainilaa Mon 15 Aug 2011 - 5:24

அம்மா இன்றும் கொடும் துர்-கனவு கண்டு எழுந்து விட்டேன். என் இதயம் ஈட்டியால் குத்தியது போல் வலிக்கின்றது. நான் என்ன தவறு செய்தேன். உன்னை மறக்க நினைக்கும் தோறும் நினைவுகளில் தினம் வந்து என்னை சாவடிக்கின்றாய். அதன் காரணம் தான் என்னால் உணர இயலவில்லை . 2 வயதில் 4 வயது குழந்தையாக வளர்க்கப்பட்டேன். 14 வயது வந்த போது நீ என்னை 20 வயது மங்கை ஆக்கினாய், திருமணம் வழியாக ஒவ்வொரு தாயும் சுகமாக வாழ அனுப்பும் போது நீயோ என்னை போரிட அனுப்பினாய். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து உன் கண் அசைவில் தானே நான் சிந்தித்தேன், இருந்தேன், நடந்தேன், வளர்ந்தேன். உன் முன் கோபத்தால் தேவையற்று தண்டித்து விட்டு தேவைக் கதிகமான பாசத்தால் நீ அருகில் வரும் போது நான் எல்லாம் மறந்தேன். ஆனால் அதுவெல்லாம் இன்று என்னை இப்படி வதைத்து சாம்பலாக்கவா ?
நீ சுந்தரம் டெய்லரிடம் ஒரு மாபெரும் டிசைனர் போல் எனக்கென துன்னிய சிவப்பு நிற கவுண் இட்டு முதலாம் வகுப்புக்கிற்க்கு சென்றது நினைவு வருகின்றது. உன் பிரிவை தாங்காது பள்ளி திரும்பி வீடு வந்து நீ பூட்டி இட்ட அரை வாசல் கதவில் பிடித்து தொங்கி அழுததும் நினைவு வருகின்றது. பின்பு நீ வாங்கி கொடுத்த எனக்கு பிடித்த தின் பண்டம் போண்டாவை அல்லது பண் ரொட்டியை வாங்கி தின்று விட்டு நீ எனக்கு முகம் கழுகி பவுடர் இட்டு, பொட்டு,பூ வைத்து முத்தம் இட்டு அனுப்பும் பள்ளி நாட்கள் மட்டுமல்ல; 10ஆம் வகுப்பு வரையிலும் இரட்டை சடை பிண்ணி, சோற்றை வாயில் ஊட்டி விடும் நாட்களும் தான் நினைவில் வந்து மறைகின்றது. தேவை இல்லாத இடத்தில் சிரித்தேன், பேசினேன் என்று உன்னிடம் திட்டு வாங்கி அழுத்ததும் நினைவில் உள்ளது.
முதல் முதலாக உயர்நிலை- பள்ளி படிப்புக்கு என உன்னை பிரிந்த நாட்கள் ஓடி வருகின்றது என் நினைவில். வாரம் 7 நாட்களும் உனக்கு நான் கடிதம் எழுதினேனே, அந்த கடித எழுத்து என் மகன் பிறக்கும் மட்டும் என்னை தொடர்ந்த்து வந்தது. நீயும் நானும் தாய்- சேயா, தோழிகளா என்று நம் உறவுகள் பொறாமைப் படும் மட்டும் நீ அன்பை பொழிந்து வளர்த்தாய். ஆனால் விடுதியில் இருக்கும் போது ஒரு கடிதம் வழியாக “உனக்கு மாப்பிள்ளை முடிவெடுத்துள்ளோம் தட்டும் மாற்றி விட்டோம் இனி எங்கள் வாக்கை காப்பாற்றுவது உன் விருப்பம்” என்று நீ கொடுத்த சுதந்திரவும் நினைவில் இருக்கின்றது.
கல்யாண பந்தலில் அனுப்பும்போது கூட நீ என்னை வேட்டைக்கு என்பது போல் உன் பணம் நகை பறி போகின்றது என்று அழுது சாபம் இட்டு அனுப்பி விட்டாய். நான் ஏதும் மறுபேச்சு கேட்டேனா? "என்னை மறந்தால் நீ விளங்க மாட்டாய்" என்று உன் அன்பு மிகுதியால் நீ ஆசிர்வதித்த வார்த்தைகள் தான் என் நெஞ்சில் இப்போது மிதக்கின்றது . அந்த சாபத்திற்க்கு ஆளாகும் நாள் என் வாழ்வில் ஒரு போதும் வராது என்று நான் நினைத்தது இன்று பொய்யாகி விட்டதே என்று தான் இன்று பரிதபிக்கின்றேன்.
எனக்கு கிடைத்த வாழ்க்கையில் சிறப்பாக ஓட நான் துடித்து கொண்டிருக்கின்றேன். இன்றும் உன்னை கட்டி பிடித்து அம்மா என்று உன் அருகில் வர ஆசிக்கின்றேன் நீயும் மக்களே என்று அழைத்து முத்தமிடுவாய் என்று நினைப்பது உண்டு. ஆனால் நீ என்னை காணும் போது உன் கணவருக்கு இப்போது வருமானம் எவ்வளவு, உனக்கு வேலை கிடைத்து விட்டதா என்ற கேள்வி மட்டும் தான் வரும் என்பதும் எனக்கு தெரியும்.

தம்பி வெளியூரில் சென்று படிக்க மாட்டேன் என்ற போது என் படிப்பையையும் சேர்த்து மட்டுப்படுத்தியதும், நம் குடும்ப சொத்தை காப்பாற்ற என்னை அடி மாடு போல் விற்றதும் கூட இப்போது தான் புரிந்து வருகின்றது. இனி உன்னிடம் வந்து மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் என்ன தவறு நான் செய்தேன் என்று நான் கேட்டு கொண்டே இருக்கின்றேன் தற்போது.

திருமணம் என்ற பெயரில் கடலுக்கும் பேய்க்கும் நடுவில் கொண்டு விட்டு விட்டு நீயும் சேர்ந்து வேடிக்கை பார்க்கின்றாய். என்னை வைத்து தாய் பாலில் விஷம் கலந்து விட்டது என்று சொல்ல வைத்தாய். தாய் பாசத்திலும் வேஷம் உண்டு என்று என்னை நம்ப வைத்தாய். எனக்கு என்று ஒரு உலகம் தந்தாயா? உன் கையிலும், கண்ணிலும் வளர்ந்த என்னால் யாரிடமும் நட்பு பேணி பழகவும் தெரியவில்லை. எனக்கு சுற்றும் உன்னை தவிற வேறு உலகம் ஏன் தரவில்லை நீ. இன்றும் சுற்றும் முற்றும் யாரும் இல்லாத உலகில் நான் என்னுடன் கதைத்து கொண்டே இருக்கின்றேன், தூக்கத்திலும் எனக்கு நிம்மதி தருகின்றாயா? அழுது விழிக்கின்றேன் என் கனவில் கூட எனக்கு நீ விடுதலை தரவில்லை! 300 கி.மீ உன்னை விட்டு பிரிந்து வரும் போது தனிமையில் அழுது புலன்பினேன் இன்றோ 3000 கி.மீ உன்னை விட்டு போய் விட மாட்டேனா என்று துடிக்கின்றேன்.

அப்பா சொன்னார்கள் உனக்கு பிடிக்காத அத்தை வீட்டிற்க்கு சென்றது தான் கோபம் என்று நான் வந்ததோ 3 வருடம் கடந்து உனக்கு ஒவ்வொரு முறை நான் வரும் போதும் ஒவ்வொரு அத்தையுடன் ஊடலில் இருப்பாய். நான் என்ன பிழை செய்தேன் அவர்களிடம் பேசக் கூடாது என்று. அடுத்த முறை நான் வரும் போது நீ இந்த அத்தையிடம் கூடலிலும் இன்னொரு அத்தையிடம் ஊடலிலும் இருப்பாய் என்றும் எனக்கு தெரியும். எனக்கு யாரும் சத்திருவுமில்லை உற்றவர்களும் இல்லை என்றும் தெரியும். இதற்க்கு என அப்பாவையும் என்னிடம் கதைக்க கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உண்டு. அல்லது இந்த காரணம் சொல்லி உன் மகனுக்கு அப்பா சொத்தை முழுதுமாக சேர்க்கும் வேலையின் இதுவும் ஒரு சதி வேலையா?

இன்றும் உன் பெருமைக்காகவும் உன் ஆசைக்குமாக தான் வாழ்கின்றேன். நீ ஆசைப்படுவது போல் கழுத்து, காது, கை நிறைய நகை அணிந்து என் பங்களாவில் இருந்து என் காரில் உன்னை பார்க்க வருகின்றேன், என் மக்களே என்று ஓடி வருவாயா என்று நான் பார்க்க வேண்டும். அன்றாவது நம் உறவினர்கள் வீட்டிற்க்கு அழைத்து செல்வாயா, நம் கோயில் திருவிழா சப்பரம் காண தான் அழைத்து செல்வாயா?



இது எல்லாம் காலம் செய்த கோலமா அல்லது என் ஜென்ம பாபமா ஒன்றும் விளங்கவில்லை எனக்கு. உனக்கு புரிந்தால் என்னை போல் ஒரு கடைசி கடிதாசு எழுதி தெருவித்து விடு அம்மா! இதை விட நான் பிறந்த போதே அழகு இல்லை என்று கம்பிளிக்குள் ஒளித்து வைத்திருந்த போதே கொன்றிருக்கலாம் தானே.

ஒரு துளி கூட நிம்மதியான தூக்கம் இல்லை எனக்கு! நீ வளர்த்த உன் மகிமையா அல்லது என் எல்லா இழப்பிலும் நான் உன்னை தேடுகின்றேனா? என் மனசாட்சிக்கு ஒரே ஒரு கவலை நீ என்னை விட்டு முன்னே போய் நான் உன் சாபத்தில் வாழ்வதை விட, நீ வந்து மக்களே என்று விடும் ஒரு சொட்டு கண்ணீரில் என் ஆன்ம சாந்தி அடைய வேண்டும் என்பது தான்.

(என்னிடம் தன் கவலையை பகிர்ந்த என் உயிர் தோழிக்கும் அவர் அம்மாவுக்கும் இந்த கடிதம் சமர்ப்பணம்!!! )

நன்றி !
ஜோஸபின் கதைக்கிறேன்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அம்மாவுக்கு ஓர் கடிதம்! Empty Re: அம்மாவுக்கு ஓர் கடிதம்!

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 6:05

மிகவும் வேதனையளிக்கிறது. இப்படியும் எத்தனையோ தாய் இவ்வுலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். தாய்ப்பாசம் வேஷமான வேதனை எத்தனயோ பேர் வாழ்க்கையில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. வெறும் பகட்டுக்காகவும், பணத்திற்காகவும் பெற்ற பெண்ணின் விருப்பமின்றி அவளுக்கு பணக்கார மாப்பிள்ளைக்கு கலியாணம் செய்து வைத்து அப்பெண்ணை நரகக் குழிக்குள் தள்ளி விடும் அவலம் எங்கும் எப்போதும் நம் கலாச்சாரம் என்ற பெயரில் நடந்து கொண்டுதான் இருக்கிறது....

இது உண்மை நிலையென்றால்.... அப் பெண் தாய்ப்பாசத்திற்கு ஏங்கி, "மகளே" என ஒருமுறை தன தாய் கூப்பிடவேண்டுமேன்பதர்க்காக தன் உயிர் மாய்ப்பது சரியல்ல... "

தாயைத் தலைமுழுகிவிட்டு தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக திட மனதுடன் வாழவேண்டும்....

வாழ்த்துக்கள் ...! பகிர்ந்த கலை நிலாவுக்கும் ...வாழ்த்துக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum