சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை! Khan11

சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!

Go down

சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை! Empty சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:45

சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பங்கள் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண இராணுவத்தளபதி பொனிபஸ் பெரேரா, கிறீஸ் மனிதன் என்பது எல்லாம் வங்கிக் கொள்ளையர்களும் கொள்ளையர்களும்,மரம் கடத்துவோரும் கிளப்பி விட்டுள்ள புரளி எனவும் தெரிவித்தார்.
கிறீஸ் மனிதன் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜே குணவர்தன, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட 234 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சுகந்த திலகரட்ன உட்பட இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், சமய பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்போது சர்ச்சையையும் பீதியையும் எற்படுத்தியுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா,
மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இன்று இடம்பெற்று வரும் சம்பவங்கள் படையினருக்கு சேறு பூசும் சம்பவங்களாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் ,கொள்ளைகளில் ஈடுபட்டு வருபவர்களையும், மரங்களை கடத்தி விற்றவர்களையும் படையினர், பொலிஸார் பிடித்து வருவதால் அதனால் ஆத்திரமுற்றவர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளோம். அத்துடன் அதன் பின்னர் இங்கு 15 மேற்பட்ட ரி56 ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளோம்.
இது தொடர்பில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். மீண்டும் கலவரங்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ள முனைந்தால் மீண்டும் இந்த மாவட்டத்தில் முன்னர் நிலவிய நிலையே ஏற்படும்.
மீற்றருக்கு ஒரு சோதனைச்சாவடி ஏற்படுத்தப்படும், சுற்றிவளைப்புகள் இடம்பெறும். அரை மணித்தியாலத்திற்குள் செல்லும் பயணங்கள் இரண்டு மணித்தியாலமாகும். இதனை நீங்கள் விரும்பினால் எதனையும் செய்யலாம்.
இரண்டு அப்பாவி இளைஞர்கள் வியாபாரத்துக்கு சென்றபோது அப்பகுதி மக்களின் மதியில்லாத காரணத்தினால் கொலைசெய்யப்பட்டனர்.
இதேபோன்று பொத்துவில் பிரதேசத்திலும் பிரச்சினை வந்தது. யானை கணக்கெடுப்புக்கு சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களையும் பிடித்து அடித்தனர். அவ்வாறு செய்யமுடியுமா?.

அதனை தடுக்கச்சென்ற பொலிஸாருக்கு அடித்தார்கள். வாகனங்களுக்கு நெருப்பு வைக்கப் பார்த்தார்கள். அதன்பிறகே நாங்கள் படையினரை அனுப்பினோம். நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் கிரிஸ் மனிதர்கள் அல்ல, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்.
இந்தநிலையில் பொத்துவில் நிலைமையை அவதானிப்பதற்காக இரண்டு தாங்கிகளையும் எடுத்துக்கொண்டு சென்றபோது, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பா ரயர்கள் எரிகின்றன. பைத்தியக்காரர்கள். நான் அந்த ரயர்களை அப்புறப்படுத்தி விட்டே சென்றேன்.
இந்த சமாதானம் கிடைத்த பின்னர் ஒரு நீண்ட அபிவிருத்தியில் செல்கின்ற ஒரு மாகாணம் இந்த கிழக்கு மாகாணம்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் தோற்றகடிக்கப்பட்ட பின்னர் எமது யுத்த தாங்கிகளையும் கவச வாகனங்களையும் மூடிவைத்துள்ளோம். இயந்திரத் துப்பாக்கிகளை அறைகளில் பூட்டிவைத்துள்ளோம். எமது வீதித் தடைகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தியுள்ளோம். வீதியில் காபட் போட்டுள்ளோம்..
முன்னர் புனானையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் தற்போது வெலிக்கந்தையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு 40 நிமிடமே எடுக்கின்றது.
எனவே தற்போது உங்களுக்கு அந்தக் காலத்துக்கு செல்ல விருப்பமா? இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் நீண்ட ஒரு விடயமாக எடுத்துக் கலந்துரையாடியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்திலே ஏதாவது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதித் தடைகளை ஏற்படுத்துவேன். மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுக்கும்.
உங்கள் வாழ்நாளில் அதிக காலத்தை ரோட்டில் கழிக்கவேண்டிவரும். சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகள், வீதித் தடைகள் ஏற்படுவது உங்களுக்கு விருப்பமா?
வீட்டுக்கு வந்து படையினர் தேடுதல்களை மேற்கொள்வது உங்களுக்கு விருப்பமா?அது விருப்பமானால் ரோட்டில் போட்டு ரயர்களை எரியுங்கள் பரவாயில்லை.
இதுகளுக்கெல்லாம் சரியான ஊசி மருந்து எங்களிடம் உள்ளது. ஒரு மாதத்துக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு கிழமைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு நாளைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம்.
இதேவேளை இக்கூட்டத்தில் கிழக்கில் ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பில் கிராமங்கள் தோறும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தணிக்க விழிப்புக் குழுக்களை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இதன் பின்னணி குறித்தும் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன.
அத்துடன் தற்போது தோன்றியுள்ள நிலைமையினை கட்டுப்படுத்த இரவு வேளைகளில் படையினரை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்றும் அவர்களுடன் விழிப்புக் குழுவை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விழிப்புக் குழுவை அமைப்பது தொடர்பில் அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் படைப் பொறுப்பதிகாரிகள், பொது அமைப்புக்கள், மதப்பெரியார்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த பணிப்புகள் வழங்கப்பட்டன.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை! Empty Re: சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:46

சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை! CIMG2086
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மக்கள் கிளர்ச்சிக்கு எதிராக சவூதியில் கடும் நடவடிக்கை
» வன்முறைகளை மீண்டும் தூண்டினால் கடும் நடவடிக்கை
» எங்கள் ஆட்சி அமைந்தால் கட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: மாயாவதி மிரட்டல்
» சட்டத்தை கையிலெடுக்கும் பொதுமக்கள் மீது சட்ட நடவடிக்கை: கோத்தபாய
» தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு-நிலைமை இன்னும் மோசமாகலாம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum