சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Khan11

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

2 posters

Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 17:33

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Benito-Mussolini
உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகளில், ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

1922 முதல் 21 ஆண்டு காலம் ஆத்தாலியின் பயங்கரமான சர்வாதிகாரியாக விளங்கிய அவர் ஹிட்லரின் நண்பர்.

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வதற்கு 2 நாட்களுக்கு முன்னால், முசோலினி புரட்சிக் காரர்களால் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த முறை, சாதாரணமானது அல்ல.

எல்லோரக்கும் சிம்ம சொப்பன மாக இருந்த இந்த சர்வாதிகாரி யையும், அவருடைய காதலியையும் சுட்டுக் கொன்று, பிணங்களை விளக்குக் கம்பம் ஒன்றில் தலை கீழாகத் தொங்க விட்டனர்.

தொழிலாளியின் மகன்
இத்தாலியில், இரும்புப் பட்டறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி பிறந்தவர், முசோலினி, தாயார் பள்ளி ஆசிரியை.

அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்தவந்தது முசோலினியின் தந்தை, மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலர வண்டும். என்ற கருத்துடையவர் தன் இரும்புப் பட்டறைக்கு வருகிறவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார்.

அதனால், முசோலினிக்கும் இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்ததும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆங்கிலம் முதலிய மொழிகளையும்
கற்றிந்த அவர், பேச்சாற்றலும். எழுத்தாற்றலும் மிக்கவர்.

ஆசிரியர் தொழிலை விட்டு, சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றினார். பிறகு, கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரானார். பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபப்பை உண்டாக்கின. ஒரு கட்டுரைக்காக, அவருக்கு ஒராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் இருந்து விடுதலை யானபோது, பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர்.

மறுநாளே, அவந்தி ஊன்ற புரட்சிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பொறுப்பொற்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 17:34


உலகப் போர்
இந்த நிலையில் 1914-ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் மூண்டது. முசோலினி ராணுவத்தில் சேர்ந்தார். (இதே ஆண்டில்தான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

போரில் முசோலினி படுகாயம் அடைந்து, ஊருக்குத் திரும்பினார்.

1919-ல் உலகப்போர் முடிந்தது போரில் இத்தாலியர் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள் மேலும் 10 லட்சம் பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்து, எங்கு பார்த்ாலும் பசியும் பட்டினியும் தாண்டவ மாடின.நாட்டில் கலகங்கள் மூண்டன.

இந்தச் சூழ்நிலையில் 1920-ல் பாசிஸ்ட் கட்சியை முசோலினி தொடங்கினார். 1921-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியைப் படிக்கமுடியா. விட்டாலும் 30 இடங்களைக் கைப்பற்றியது முசோலினி பெரும் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

எதிர்க் கட்சித் தலைவரான முசோலினி, பாரளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேசச் சொற் பொழிவுகள், ஆளும் கட்சியினருக்கு அச்சமூட்டின. பாராளுமன்றத்தை அமைதியாக நடத்த விடாமல் கலாட்டா செய்து கொண்டிரந்தார். முசோலினி.

அதுமட்டுமல்ல ஊர் ஊராகச் சென்று பொதுக் கூட்டங்கள் நடத்தி, உணர்ச்சி ததும்பப் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டி விட்டர்.

ரவுடிகள் சாம்ராஜ்யம்
மக்கள் தன் பேச்சில் மயங்கிக் கிடக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட முசோலினி, ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி, அரசு அலுவலகங்களைக் கைப்பற்றும்படி தன் கட்சியினருக்குக் கட்டளையிட்டார்.

அதன்படி அவர் கட்சியினர் ரவுடிகளையும், அழைத்துக்கொண்டு, பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவலகங்களைத் தாக்கிவர்கள். ஊழீயர்களை விரட்டி விட்டு, அலுவகங்களையும், கஜானாக்களையும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

1922 அக்டோபரில், முசோலியின் கருஞ்சட்டைப் படை இத்தாலியின் தலைநகரைப் பிடிக்கத் திரண்டு சென்றது.

நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், அமைச்சாவையை ராஜினாமா, செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டார். மந்திரிசபை பதவி விலகியதும், ஆட்சிப் பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 17:34



அடக்கு முறை
ஆட்சிக்கு வந்த முசோலினி, இத்தாலியின் முன்னேற்றத்திற்காக, நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன். இதை எதிர்ப்பவர்களை அடியோடு ஒழித்து விடுவேன் என்று அறிவித்தார்.

எதிர்க் கட்சிகளைத் தடை செய்தார். பத்திரிகை சுந்திரத்ததை நசுக்கினார். தன்னை எதிர்த்தவர்ளை நாடு கடத்தினார்.

அது மட்டுமல்ல தன் எதிரிகளைச் சிரச்சேதம் செய்யும்படி (தலைகளைத் துண்டிக்கும்படி) உத்தரவிட்டார். மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு சிரச்சேதம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் மேல்!

இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி, மக்களைக் கவரப் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு யந்திரக் கலப்பைகள் வழங்கினார். அதனால் உணவு உற்பத்தி பெருகியது.

வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டன. டஐதஙதுவ வசதிகள் பெருகின.

இதனால், முசோலினியை மக்கள் ஆதரித்தனர்.

நிலைமை தனக்குச் சாதகமாக இருந்ததால், பொதுத் தேர்தலை நடத்தினார். முசோலினி அதில் அவர் கட்சி மகத்தான வெற்றி பெற்றது.

அதன்பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் நானே எடுத்துக் கொண்டார்.

1922-ம் ஆண்டு முதல், இத்தாலியின் மாபெரும் சர்வாதி காரியாக முசோலினி விளங்கினார்.
ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. HitlerMussolini
1933-ல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லர், முசோலினியின் நண்பரானார். 1934-ல் வெனீஸ் நகருக்குச் சென்று, முசோலினியைச் சந்தித்துப் பேசினார் ஹிட்லர்.

அதைத் தொடர்ந்து, இத்தாலி ராணுவத்தைப் பலப்படுத்தவும் அயுதத் தொழிற் சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 17:35



அழகியுடன் காதல்
இந்த நிலையில், அரசாங்க விருந்து ஒன்றில் கிளாரா என்ற அழகியை முசோலினி சந்தித்தார். அவள் அழகில் மனதைப் பறி கொடுத்தார். ஏற்கனவே திருமணம் ஆன முசோலினி, கிளாராவை மப்படியும் அடைந்தே தீருவது என்று தீர்மானித்தார்.

கிளாரா, விமானப்படை அதிகாரி ஒருவரை மணந்து விவாகரத்து பெற்றவள். இரண்டாண்டுகளாகத் தனியாக வாழ்தாள்.

தனது வசீகரப் பேச்சால் கிளாராவைக் கவர்ந்த முசோலினி, அவளைத் தன் ஆசைத் நாயகியாக்கிக் கொண்டார்.

பொதுவாக பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளும் முசோலினி, கிளாரா விடம் மட்டும் மிக அன்போடு நடந்து கெண்டார். உண்மை யாகவே அவளை நேசித்தார் என்று, வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இரண்டாம் உலகப் போர்
1939-ல் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர்.

முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும், முசோலினிக்குமு தோல்விகள் எற்பட்டன.

ஆதனால் இத்தாலி மக்களிடம் செல்வாக்கு இழந்தார். முசோலினி அவரைப் பாசிஸ்ட் கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து. வீட்டுக் காவலில் வைத்தது.

முசோலினியைக் காப்பாற்ற விரும்பிய ஹிட்லர், தனது உளவுப்படையை அனுப்பினார். உளவுப்படையினர் முசோலினியை மீட்டர்


வடக்கு இத்தாலியில், முசோலினிக்கு ஒரளவு ஆதரவு இருந்தது, தன் மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு சென்ற முசோலினி, ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டாார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 17:36


புரட்சி இயக்கம்
அப்போது, இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சி இயக்கம் தொன்றியது இத்தாலி முழுவதும் புரட்சிக் காரர்கள் கலவரத்தில் ஈடு பட்டனர்.

புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட முசோலினி தன் மனைவியுடனும், காதலியுடனும் அண்டை நாடான சுவிட்கர்லாந்துக்கு தப்பி ஒட முடிவு செய்தார்.

இரண்டு ராணு லாரிகளில் தனது இரண்டு குடும்பத் தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.


படுகொலை

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Mussolini1b
ஆனால், வழியிலேயே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள்.

இதை கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு, லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர்.

முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்ட தால், அவள் புரட்சிக்காரர்களின் கண்ணில் படவில்லை.

இது நடந்தது 1945-ம் ஆண்டு ஏப்ரல் 27-ந் தேதி.

அன்று, டோங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவையும் அடைத்து வைக்கப் பட்டனர். மறுநாள் அவர்களை
புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர்.

மலைப் பகுதியிலிருந்து கீழே இறங்கியதும், காரை நிறுத்தினார்கள்.முசோலினியையும், காதல் கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.

கீழே இறங்கியதும், இருவரையும் நடுரோட்டில் நிற்க வைத்தார்கள் தங்களைச் சுடப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று, முதலில் எனனைச் சுடுங்கள் என்றாள்.

இயந்திரத் துப்பாக்கிகாளல் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, ரத்தவெள்ளததில் மிதந்தன.

முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்குகொண்டு சென்றார்கள். அங்கு விளக்குக் கம்பத்தில் தலை கீழாகத் தொங்க விட்டார்கள்.

அன்று மாலை, உடல்கள் கீழே இறக்கப்பட்டு, அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டு போகப்பட்டு, புதைக்கப்பட்டன.

புதைப்பதற்கு முன், குற்ற இயல் ஆராய்ச்சி நிபுணர்கள் வந்து, முசோலினியின் மண்டை ஒட்டைப் பிளந்து, அவருடைய மூளையை எடுத்துச் சென்று விட்டார்கள், ஆராய்ச்சி செய்வதற்காக!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 17:39

அருமையான பகிர்வு நண்பன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 17:42

யாதுமானவள் wrote:அருமையான பகிர்வு நண்பன்
மேடம் இந்த பதிவை போட வைத்தது உங்கள் நகைச்சுவைதான் மேடம் நன்றி உங்களுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி. Empty Re: ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர் முசோலினி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum